privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பிட்டுப்பட தியேட்டர்களில் தேசிய கீதம் - கொல்கத்தா வழிகாட்டுகிறது !

பிட்டுப்பட தியேட்டர்களில் தேசிய கீதம் – கொல்கத்தா வழிகாட்டுகிறது !

-

“தேசிய கீதம் ஒருவருக்குள் உத்திரவாதமான தேசபக்த உணர்வையும் தேசிய உணர்வையும் புகட்டும். எனவே தேசிய கீதம் ஒலிக்கும் போது அதற்கு மரியாதையும் கவுரவத்தையும் கட்டாயம் வழங்க வேண்டும்” என்றது உச்சநீதிமன்றம். திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி போபாலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் தொடுத்த பொதுநல வpseudo patriotism 1ழக்கின் தீர்ப்பில் இவ்வாறு கூறியது உச்சநீதிமன்றம்.

திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கச் செய்ய வேண்டுமென்றும், அது சமயம் திரையில் தேசியக் கொடி காட்டப்பட வேண்டுமென்றும், பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென்றும், வெளியிலிருப்பவர்கள் உள்ளே நுழைந்தோ அரங்கினுள் இருப்பவர்கள் வெளியேறியோ தேசபக்திக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்கும் விதமாக கதவுகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும், “இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் தாம் ஒரு தேசத்தில் வாழ்கிறோம் என்பதையும், தேசிய கீதத்திற்கு மரியாதை காட்ட வேண்டிய கடமைக்கு தாம் கட்டுப்பட்டவர்கள் என்பதையும், தேசிய கீதம் என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான தேசபக்தியின் குறியீடு என்பதையும், அது உள்ளார்ந்த தேசிய பண்பு என்பதையும் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தேசமக்களின் வாயைப் பிளந்து தொண்டை வரை புனலைச் சொருகி தேசபக்தியைப் புகட்டி ஒரு எழுச்சியை உண்டாக்க வேண்டுமென்கிற உச்சநீதிமன்றத்தின் லட்சிய வெறியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் கொல்கத்தாவின் பிட்டுப்பட திரையரங்குகளுக்கு சரியாகப் புரியவில்லை என்பது தான் சோகம். “இங்கே வரும் பெரும்பாலானவர்கள் ஏழைகள். அவர்கள் ஓய்ந்த நேரத்தில் கேளிக்கைக்காக பிட்டுப்படம் பார்த்து ரசிக்கலாம் என வருகிறார்கள். சேரிகளில் இருந்து “பத்தாங்கிளாஸ் பாஸ்” படம் பார்க்க வருகிறவர்களிடம் தேசியகீதத்திற்கு மரியாதையை எப்படித் தான் எதிர்பார்ப்பது?” என்கிறா கொல்கத்தாவின் ரீகல் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் எஸ்.கே ஜா.

நடுத்தர வர்க்கத்தினரும், படித்தவர்களும் இணையத்திலேயே பிட்டுப்படங்களைப் பார்த்து விடுவதால் தேசிய கீத அவஸ்தையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதை தேசபக்தியின் ஒட்டுமொத்த டீலர்களான சங்பரிவார் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் ஒரு பொதுநல வழக்கைப் போட்டால் ஆபாச இணையதளங்களுக்கும் இதே போன்ற உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உச்சநீதிமன்றம் ஆவண செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேறெந்த எழுச்சியை விடவும் தேசபக்த எழுச்சி முக்கியமானதாயிற்றே?

“எங்களிடம் இருப்பதே மொத்தம் 11 ஊழியர்கள் தான். மற்ற வேலையை எல்லாம் அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க வந்தவர்களிடம் எழுந்து நிற்குமாறு கேட்பது சாத்தியமில்லை” என்கிறார் ஜா. ”ஆயிரம் பேருக்கும் மேல் படம் பார்க்க வரும் நிலையில் நாங்கள் போய் எழுந்து நிற்கச் சொன்னால் மக்கள் ஆத்திரத்தில் ஏசுவார்கள். இதற்கு ஒரே தீர்வு போலீசை அழைத்து வந்து கடமையை ஆற்றச் செய்வது தான்” என்கிறார் அந்த திரையரங்கின் மேலாளர் டாக்டர் எஸ்.ஏ. பெரோஸி

“எனது தேசத்தை நான் நேசிக்கிறேன். ஆனால் நான் இந்தப் படத்தை வேறு ஒரு தேவைக்காக பார்க்க வந்திருக்கிறேன். தேசியவாத சிந்தனையை ஏன் யாரோ ஒருவர் என்மேல் திணிக்க வேண்டும்? எனது தேசத்தை நான் நேசிக்கிறேன் – அதை பிட்டுப்படம் பார்க்க வந்த நேரத்தில் எல்லாம் நான் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என்கிறார் பிட்டுப்பட ரசிகர் ஒருவர்.

என்ன தான் ஆச்சு நம் தேசத்துக்கு?pseudo patriotism கிழக்கிந்திய கொல்கத்தா ரசிகர்களின் துன்பங்கள் ஒருபக்கமென்றால் தென்கோடி மலையாளிகளின் சிக்கல் வேறுவிதமானது. டிசம்பர் 9ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது. உலகத் திரைப்பட ரசிகர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் இதுவரை இந்நிகழ்ச்சியின் போது திட்டமிடப்பட்டுள்ள திரையிடல் நிகழ்ச்சிகளுக்காக பதிவு செய்துள்ளனர். பல்வேறு திரைகளில் படங்கள் திரையிட்டாலும், ஒரே நாளில் ஒரு குறிப்பிட்ட திரையில் தொடர்ந்து படங்கள் காட்டப்படும். ரசிகர்களும் இந்த நாட்களில் தொடர்ந்து படங்களாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு படம் துவங்கும் போதும் தேசபக்தியை எழுச்சியடையச் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கலை நீதிமன்றத்திடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். எப்படியும் நாள் முழுவதும் திரைப்படங்களைப் பார்க்கவிருக்கிறார்கள் என்பதால் ஒட்டுமொத்தமாக காலையில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து விட்டால் அடுத்த நாள் காலை வரை தேசபக்த சார்ஜ் இறங்காது என்பது மலையாளிகளின் யோசனை. வெகுண்டெழுந்த நீதிமன்றம், ஒவ்வொரு முறை படம் முடிந்தவுடன் சார்ஜ் இறங்கிவிடும் வாய்ப்பை முன்யூகித்து அந்த யோசனையை மறுத்துள்ளது.

ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து உட்கார்வது தூக்கத்தைக் கலைக்கும் அருமருந்து என்பதைக் கணக்கில் கொண்டு உலகப்பட ரசிகர்கள் மனதைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, மாற்றுத்திறனாளிகளின் நிலைமையையும் தாயுள்ளத்தோடு பரிசீலித்துள்ள நீதிமன்றம், அவர்களுக்கும் தேசபக்தியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. என்றாலும், எழுந்து நிற்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தேசிய கீதம் ஒலிக்கும் போது எந்த வகையான செய்கைகளின் மூலம் தமது தேசபக்தியை வெளிப்படுத்துவது என்று மத்திய அரசு ஆராய்ச்சி செய்து பத்து நாட்களுக்குள் கண்டுபிடித்து அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

அம்பானிக்கும் அதானிக்கும் சேவை புரிந்து டயர்டாகியுள்ள மத்திய அரசுக்கு இந்த ஆராய்ச்சி கொஞ்சம் ஆறுதலாகவும், இடைக்கால கேளிக்கையாகவும் இருக்கும் என்பதால் நிச்சயம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

பிட்டுப்பட ரசிகர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும். சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போதே பிட்டுப்படங்களை பார்க்கும் அளவுக்கு கலா ரசிகர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கி கலைச்சேவை புரிந்த கட்சி பாரதிய ஜனதா என்பது அனைவரும் அறிந்தது தான். எனவே பிட்டுப்படம் பார்க்க திரையரங்கு வரும் ரசிகர்கள் எந்த மாதிரியான செய்கைகளின் மூலம் தங்களின் தேசபக்தியை நிரூபிப்பது என்பதையும் திருவாளர் மோடியின் அரசு ஆராய்ச்சி செய்து விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

அடுத்து என்ன, கழிவறையும் படுக்கையறையும் தான் பாக்கி. அங்கேயும் தேசபக்தியை எப்படியாவது நுழைத்து நிலைநாட்டி விட்டால் நமது நாடு வல்லரசாவதை டொனால்டு ட்ரம்பே நினைத்தாலும் தடுக்க முடியாது.

பாரத் மாதா கீ ஜே

ஜெய்ஹிந்த்