முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்தர்மபுரி : டியூசன் போர்வையில் வன்புணர்ச்சி செய்த சிவக்குமார் !

தர்மபுரி : டியூசன் போர்வையில் வன்புணர்ச்சி செய்த சிவக்குமார் !

-

ன்றைய சமானிய மக்களின் கனவு எதிர்பார்ப்புகள் எல்லாம் அரசு வேலை, மாத சம்பளமும் ,சொகுசு வாழ்க்கையுமே இன்றைக்கு இலக்காக மாறிவிட்டது. இந்த கனவு வாழ்க்கைக்காக ஏங்கும் ஏழை பெற்றோர்களை சுண்டி இழுக்கும் வகையில் விளம்பரங்களை  செய்யும் பள்ளி, கல்லூரி விளம்பரங்களை நாம் பார்க்க முடியும். இந்த அவசர வாழ்க்கையின்  தேவையை பெற போராடும் சாமனிய மக்கள் தங்களால் முடிந்த அளவு முயற்சிக்கின்றனர். அரசு பள்ளியில் படித்தாலும் தனியார் டியூசனுக்கு சென்றாவது மதிப்பெண் அதிகமாக பெற்றுவிட வேண்டும் என எதிர்பார்த்து ஏழைப் பெற்றோர்கள் செயல்படுகின்றனர்.

ஆனால் அதுவே பிள்ளைகளுக்கு பாதிப்பாக மாறிவிட்டால்  அதனை எதிர்த்து போராடாமல் ஒதுங்கி நிற்கின்றனர், அல்லது பெயர் வெளிவர கூடாது என்று பார்க்கின்றனர். அதற்கு காரணம் சமூக ரீதியானது என்று சிந்திப்பதில்லை. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுக்காவில் கடந்த  4 ஆண்டுகளுக்கு முன் டியூசன் சென்டராக தொடங்கினார், பாலக்கோடு பகுதியை சார்ந்த சிவக்குமார் என்பவர். பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ஏழை மாணவ மாணவிகள் படித்து வந்தனர்.  தருமபுரியில் ஒரு டியூசன் சென்டரும் தொடங்கினார் சிவக்குமார். 2014-ம் ஆண்டு படிக்க வந்த ஒரு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் படமும் பித்துள்ளார் வக்கிரம் பிடித்த சிவக்குமார். தற்போது பலாத்காரம் செய்த மாணவியின் வீடியோ காட்சியை தனது நண்பர்களுக்கு பகிர்ந்து, மீண்டும் அந்த மாணவியை மிரட்டி தனக்கு பனியவைக்கவும் கொடூரமாக முயற்சித்துள்ளார் இந்த பொறுக்கி சிவக்குமார்.

பாதித்த மாணவி ஒருவர் கடந்த 4-ம்தேதி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தள்ளார். இந்த புகார் அடிப்படையில் விசாரித்த போது 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை தனியாக பாடம் நடத்துவதாக கூறி தனிமையில் அழைத்து, டீ குளிர்பானங்களில் மயக்க மருந்து கொடுத்து சீரழித்துள்ளார் கயவனாக சிவக்குமார். இதுபோக தனது கூட்டாளிகளான ஈஸ்வரன், மற்றொரு செல்போன்கடை நடத்தி வரும் சிவக்குமார் உட்பட மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நிர்வணமாக ஆக்கி எடுத்த வீடியோக்களை காட்டி தனது பாலியல் வெறிக்கு, மூவரும் கூட்டாக செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை எழுதகூட முடியாத அளவுக்கு கேவலமாக நடந்துள்ளனர், இதனால் இதனை இத்தோடு சுருக்கி கொள்கிறேன்.

இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட சிவக்குமார் யார் தெரியுமா ? கடந்த சட்டமன்ற தேர்தல்போது பாலக்கோடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நின்ற வெங்கடேசனின் உடன் பிறந்த சகோதரன். ‘அண்ணன்’ சீமானோடு நெருக்கமாக போட்டோ எடுத்து அதனை வளைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த கேடி சிவக்குமார். சிவக்குமாரை யாரோ ஒருவர் அண்ணன் சீமானோடு புகைப்படம் எடுத்து விட்டார் என்று நாம் தமிழர் கட்சி தப்பிக்க முடியாது. ஏனெனில் பொறுக்கி சிவக்குமாரின் அண்ணனே நாம் தமிழரின் வேட்பாளர் என்பதோடு ஒரு முக்கிய பிரகமுகரும் கூட. இத்தகைய ஓட்டுப் பொறுக்கும் கட்சியின் வட்டாரத் தளபதிகள் அனைவரும் தமது கட்சி செல்வாக்கை வைத்து இது போன்ற தவறுகளை செய்யும் குற்றவாளிகளை தப்ப விடுகின்றனர். குற்றம் செய்வோரும் இப்படி கட்சி செல்வாக்கை கேடாக பயன்படுத்துகின்றனர்.

தமிழன் என்றே ஒரே தகுதி இருந்தால் போதும் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர் ஆகிவிடலாம் என்பதால் சிவக்குமாரும் அண்ணனோடு சேர்ந்து வளர்ந்து வரும் ‘தலைவராக’ தன்னை நினைத்துக் கொள்கிறார்.

Screenshot_2016-12-21-16-23-19-34

மேலும் கடந்த ஆண்டு இதே பாலக்கோடு நகரத்தில் சிவராஜ் என்ற கந்துவட்டிகாரன், ஏழை பெண்களுக்கு கடன் கொடுத்து அந்த கடனை கட்ட முடியாத பெண்களை தனது தோட்டத்து வீட்டிற்கு வரவழைத்து வலுகட்டாயமாக பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். இதனை ரகசியமாக படம் பிடித்து தனது பாலியல் இட்சைக்கு வரவேண்டும் என வலுகட்டாயமாக படத்தை காட்டி பல பெண்களை  மிரட்டி பணிய வைத்திருக்கிறார். இப்படி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடூரமான சிவராஜ். குண்டர் சட்டத்தில் உள்ளே அடைத்தாலும் தற்போது வெளியில் வந்து நல்லவன் போல் இதே பாலக்கோட்டில் வலம்வருகிறார்.

இன்றைக்கு பெரும்பான்மையான சம்பவங்கள் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை வைத்து மிரட்டி பணிய வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக காதலிக்க மறுக்கும் பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக இனையத்தில் விடுவது போன்ற செய்திகள் வெளிவந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாடம் பத்திரிகைகளில் வருகிறது. பத்திரிகைகளோ அவற்றை பாலியல் வேட்கையைத் தூண்டும் விதமாகவும், ஒரு குற்றம் என்ற பார்வையை மறைத்தும் எழுதுகின்றன. இந்த சம்பவங்கள் ஏன் நடக்கின்றது, என்னதான் காரணம் ?

பண்பாட்டு சீரழிவு, நுகர்வு வெறி, போதை, சினிமா, என இளைஞர்களை சீரழித்து வரும் இந்த சமூகத்தில் இணையமும், குறுக்கு வழியில் சம்பாதிப்பதும் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக பிள்ளைகளை சமூக நெறியுடன் வளர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தும், நினைத்ததை நிறைவேற்றவும் செய்கின்றனர் பெற்றோர். தனியார் பள்ளி-கல்லூரிகளில், டியூசன் சென்டரில் ஆண்டு விழா என்ற பெயரில், ஆபாச படாலுக்கு நடனமாடுவதும், அதனை பெற்றோர்களே கைத்தட்டி ரசிப்பதும்தான் இன்றைய உன்மையான நிலை. இது தவறில்லை என கருதுகின்றனர். அத்தோடு பக்தர்கள் நடத்தம் அனேக கோவில் திருவிழாக்களில் காமவெறி-அரை நிர்வாண ஆட்டங்கள் இன்று ஊருக்கு ஊர் நடந்து வருகின்றது. இதனை எதிர்த்து பெற்றோர்களும் மக்களும் போராடுவதில்லை.  இங்கு தான் இந்த சீரழிவின் தொடக்கம் இருக்கிறது என்பதை பெற்றோர்கள் அறிவதில்லை.

இன்று நாம் விரும்பவிட்டாலும் இந்த சீரழிவு கலாச்சாரம் அன்றாடம் டிவியிலும், செல்போனிலும் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.  கடந்த 2015-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை மறந்திருக்க மாட்டோம். காதலிக்க மறுத்த காரணத்தால் வினுப்ரியா என்ற பெண்னை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் விட்டான் ஒரு கொடூரன். இதனை இணையத்தில் இருந்து நீக்க சைபர் கிரைம் போலிசை நாடினார்,  வினுப்ரியாவின் தந்தை. இணையத்தில் வெளியிட்ட கொடூரனை விட மோசமாகக நடந்து கொண்டது போலிசு. மார்ஃபிங் படத்தை நீக்க லஞ்சமாக புதிய செல்போனை கேட்டனர். அதனையும் வாங்கி கொடுத்தனர். அப்போதுகூட அந்த மார்பிங் படத்தை அகற்றவில்லை. இதனால் மனமுடைந்து போன வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டார். இன்னும் எத்தனை பேர்தான் சாக வேண்டும்? இதனை இனியும் அனுமதிக்க போகிறோமா ?

போலிசும், நீதி மன்றமும், அரசு உயர் அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது இவர்களிடத்திலேயே நீதி கேட்பது, தண்டிப்பது என்பது கொஞ்சமும் சாத்தியமில்லை. இன்று இந்த செய்தியை சுவாரசியமாக எழுதும் பத்திரிகைகளுக்கு விற்பனை கூடும் அவ்வளவுதான்.  இதுதான் நீதிமன்றங்களிலும், போலீசார் மத்தியிலும் நடக்கிறது. நீதிமன்றம், சட்டம் என்பது இந்த குற்றவாளிகளை தண்டிக்காது மாறாக பாதுகாக்கும். நாட்டை சீரழிக்கின்ற கலாச்சார சீரழிவை உற்பத்தி செய்து வருகின்ற நுகர்வுவெறி, போதை, சினிமா கழிச்சடைகளை ஒழித்துக்கட்ட போராட முன்வர வேண்டும். சமூகத்தில் வலம்வரும் இந்த நச்சு பாம்புகளை தண்டிக்கிற அதிகாரத்தை நாம் கையிலெடுக்க வேண்டும்.  புதிய புரட்சிகர பண்பாட்டை வளர்தெடுக்க வேண்டும். இதுதான் ஒரே தீர்வு.

தோழர் . கோபிநாத். வட்டார செயலர்
விவசாயிகள் விடுதலை முன்னணி
பென்னாகரம் வட்டம : 9943312467.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க