Sunday, March 26, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

-

13-ம் ஆண்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ! மதுரை கருத்தரங்கம்

பொது சிவில் சட்டம்- கருப்புப் பணஒழிப்பு: இசுலாமியர்கள், சொந்த நாட்டு
மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல் !

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 13-ம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 18-12-2016 அன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தோழர் வாஞ்சிநாதன் தலைமை உரையில் “பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஒரு அரசாணை மூலம் மோடி அதை மீறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாராளுமன்ற சட்டம் மூலமே சாத்தியம் என்றே ரிசர்வ் வங்கி சட்டம் சொல்கிறது. இப்போது மோடி பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவில்லை.

தோழர். வாஞ்சிநாதன்
தோழர். வாஞ்சிநாதன்

ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை மற்றும் தொழில் செய்யும் உரிமை அடிப்படை உரிமை {19(1)(g)} வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவையில் மட்டும் 50,000 நகைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சென்னையில் கட்டுமானத் தொழிலில் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர். இன்னும் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோய் வாழ முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்லும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மோடியின் அறிவிப்பால் 150-க்கும் மேலானோர் இறந்துள்ளனர். இது சரத்து21- வாழ்வுரிமையை மீறிய செயல்.

மேலும் நமது நேர்மையான உழைப்பில் கிடைத்த பணம் வங்கியில் முடங்கியுள்ளது. இது அரசியல் சட்டம் சரத்து 300-அ-ன் கீழ் நமது சொத்து. இச்சொத்தை மோடி எப்படி முடக்க முடியும்? நாம் வங்கியின் வாடிக்கையாளர்கள், நமக்கும் வங்கிக்குமான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி நம்மிடம் அளித்துள்ள உறுதிமொழியும் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாம் நட்டஈடு கோர முடியும். தருவார்களா? யார் பொறுப்பு?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

”கருப்புப் பண ஒழிப்பு : சொந்த நாட்டு மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல்“ பற்றி மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் பவணந்தி வேம்புலு சிறப்புரையாற்றினார்.

“ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவேன் என்று மோடி சொல்கிறார். கருப்புப் பணம் என்றால் என்ன? மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் சம்பாதிப்பவர்கள் அதற்கு வரி கட்ட வேண்டும். வணிகர்கள் விற்கும் பொருளுக்கு வரி கட்ட வேண்டும். இப்படி பல்வேறு வகைகளிலே அரசுக்கு செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பதன் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இன்னும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கிறது. விலைவாசி ஏறுகிறது. இன்னும் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்புப் பணம் 80 லட்சம் கோடி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது.

PRPC Madurai (3)
பேராசிரியர். பவணந்தி வேம்புலு

கொஞ்சம் காலம் முன்பாக நமது கிராமங்களிலே பண்டமாற்று முறை இருந்தது. ஒருவரிடம் இருக்கும் உற்பத்திப் பொருளை வேறு ஒருவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள பொருளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள். இங்கே பணப் பரிவர்த்தனை இல்லை. பொருளைப் பதுக்கி வைத்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே அது கடினமானது. ஆனால் பணப் பரிவர்த்தனை வந்த பின்பு கரன்சியைப் பதுக்கிவைப்பது சுலபமாகிவிட்டது. பணப் பரிவர்த்தனையின் காரணமாகத்தான் கருப்புப் பணம் உருவானது. பண்டமாற்று முறை ஒழிந்து போய் ரூபாய் நோட்டு வந்த பின்பு அதுவே பொருளாதாரத்தின் அடிபடையாக மாறிவிட்டது.

மக்கள் அனைவரிடமும் பணத்தை தாராளமாகப் புழங்கவிட்டு திடீரென்று ஒரு சில மணி நேரத்தில் செல்லாது என்று அறிவித்தால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்கள் எப்படி இந்த மாற்றத்தை எதிர்கொள்வார்கள்? அவர்களது சிறுவாட்டுச் சேமிப்பு கருப்புப் பணமாகுமா? செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் அல்லல் படுவதற்கு யார் காரணம்? இந்தியாவில் 40% கிராமங்களில் வங்கிகள் இல்லை. இருந்தாலும் படிக்காதவர்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது. இவர்களை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறச் சொன்னால் எவ்வாறு முடியும்? எளிய மக்களிடம் உள்ள சேமிப்பைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடி ஹிட்லரைப் போல செயல்படுகிறார். ஹிட்லர் ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். மோடியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் பிரதமர் ஆகியுள்ளர். ஹிட்லர் உருவாகுவதற்கு வெய்மர் குடியரசு அடிப்படையாக இருந்ததைப் போல மோடியின் ஆட்சிக்கு மன்மோகனின் ஆட்சி அடிப்படையாக இருந்தது. மக்கள் நல அரசு என்ற அடிப்படையே
தகர்க்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகிவிட்டது.

மோடி இதைத் தன்னுடைய மிகப் பெரிய சாதனையாகப் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இது மோடி தன் சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய துல்லியமான அரசியல், பொருளாதாரத் தாக்குதல். இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தை தோற்கடித்ததைப் போல இந்தக் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும் தோற்கடிக்க வேண்டும் “ என்று பேராசிரியர் பவணந்தி வேம்புலு பேசினார்.

“பொது சிவில் சட்டம் : அனைத்து இந்துக்களுக்குமே பொதுவான சட்டம் சாத்தியமா ?” என்பது பற்றி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு சிறப்புரையற்றினார்.

“இரண்டு தலைப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது தான். இட்லருடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நம் நாட்டுக்கும் தொடர்பு உள்ளது. மோடி இட்லராக முயல்கிறார். நாம் அனுமதிக்கவில்லை. ஜெர்மனியின் துயரங்களுக்குக் காரணம் யூதர்கள் என்றார் இட்லர். ஐன்ஸ்டீன் ஜெர்மனியை விட்டு ஓடிப்போனார். இந்தியாவின் துயரம் முசுலீம்கள் என்கிறார் மோடி. இந்துக்கள் மனத்தில் இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார் மோடி.

அம்பேத்கர் அவர்கள் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்  என்று விரும்பினார். எல்லா சட்டமும் இங்கே பொதுவானதாகத் தான் இருக்கிறது. ஆனால் தனி நபர் சட்டம் பற்றித் தான் இங்கே விவாதம். தனி நபர் சட்டம் மதத்துக்கு மதம் மட்டுமல்ல சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடுகிறது. அரசியல் சட்டத்தின் உட்பிரிவாக வழிகாட்டு நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. பல சட்டங்களிலே வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படாமலும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லுகின்ற வகையிலும் உள்ளன. அரசியல் சட்டம் பிரிவு 44 அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 45 –வது பிரிவு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்று கால நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஆட்சி மாறி 66 ஆண்டுகளுக்குப் பின்பும் இதுவரை அமல் படுத்தப்படவில்லை. சர்க்கரைக் கிண்ணம் என்கிற கியூபா  நாட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கே தனியுடமை இயல்பாகவே உயர்வு தாழ்வை  உருவாக்கிவிடுகிறது.

தோழர் தியாகு
தோழர் தியாகு

இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய பல்வேறு கலவரங்களிலே முஸ்லீம்கள் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன்கூட சிறைக்குச் செல்லவில்லை. கிரிமினல் சட்டங்கள் எல்லோருக்கும் பொது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அம்பேத்கர் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் (HINDU CODE BILL) கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியை காந்தியார், படேல், திலகர், பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்றவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட நேரு பின்னர் அமைதியாக இருந்துவிட்டார். அது போலத் தான் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்தையும் தடுத்துவிட்டார்கள்.

அம்பேத்கர் அரசியல் சட்டத்தை விரும்பித் தலைமையேற்று எழுதவில்லை. எழுதவைக்கப்பட்டதாகச் சொன்னார். குறைந்தபட்சம் இடஒதுக்கீடு பாதுகாப்பு அம்சங்களைக் கருதிதான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனவே இந்துத்துவ தலைவர்கள் யாரை எவ்வாறு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள். காந்தியாரைக் கொலை செய்த கோட்சே ஏன் கொலை செய்தேன் என்று சொல்லும்போது காந்தி மக்களிடம் இருந்த சிறை அச்சத்தைப் போக்கிவிட்டார். மக்கள் கட்டுப்பாடுகளை மீறப் பழகிவிட்டனர். இது ஆபத்தான விளைவுகளை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிடும். இது தேச துரோகம் என்று சொன்னான்.

தனி நபர் சட்டத்தில் மாற்றம் வேண்டும். சென்னை மாகாண சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை முத்து லட்சுமி ரெட்டி அம்மையார் முன்மொழிந்த போது அதை காங்கிரஸ் கட்சி சத்திய மூர்த்தி எதிர்த்தார். மத உரிமைகளில் அரசியல் தலையிட முடியாது என்றார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் இருந்துவிட்டார்கள். இனிமேல் வேண்டுமானால் உங்கள் குலப் பெண்களை தேவ தாசிகளாக இருக்கச் சொல்லுங்கள் என்று கடுமையாகச் சாடினார் ரெட்டி. சட்டம் நிறைவேறியது.

பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் என்றான் வள்ளுவன். ஆனால் இங்கே சாதிக்கு ஒரு நீதி, நடைமுறை உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொள்கிறது. பெண்ணுரிமை பிரச்சினையிலும் அவ்வாறுதான். எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்குவதை நியாயப்படுத்துகிறது. இசுலாமியர்களிடமும் அது உள்ளது. பெண்களுக்கான சம உரிமையும் சேர்ந்ததே சமூக நியதி. ஆணாதிக்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளது. ஆணவக் கொலைகளின் நோக்கம் என்ன? அக மண முறையைப் பாதுகாப்பதுதான். வரதட்சணைப் பழக்கம் எல்லா சாதிகளிடமும் கிடையாது. ஆனால் உயர் சாதிகளிடம் உள்ளது. இதைப் பார்த்து மற்ற சாதிகளும் பழகிக் கொள்கிறார்கள். இசுலாமிய சமூகத்தில் வரதட்சணை தடை செயப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அது நடைமுறையில் உள்ளது. சிசுக்கொலை மேல் சாதிகளில் இல்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இருக்கிறது. இடை நிலைச் சாதிகளிடம் இருக்கிறது. அகமண முறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். பல பெண் குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் கொடுமை நிகழ்கிறது. இந்தப் பழக்க வழக்கங்கள் எல்லா சட்டங்களையும் மீறி நடக்கிறது.

பொது சிவில் சட்டம் என்று மோடி சொல்வது அப்பட்டமான நாடகம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக பொது இந்துச் சட்டம் கொண்டுவர வேண்டும். சாதிக்கு ஒரு மரபு இருப்பதை, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். முசுலீம்கள் சிறுபான்மை என்றால் இங்கே சிறுபான்மை என்று யாரும் இல்லை. ஆதிக்கச் சாதிகளில் பார்ப்பான் ஆகச் சிறுபான்மை. அவன் தான் சமூகவிதிகளை வகுத்துள்ளான். கருவறைக்குள் ஒரு சாதி. பிரகாரத்தில் ஒரு சாதி. வெளியே ஒரு சாதி என்று இந்துக்களையே இனம் பிரித்து வைத்தவன் யார்? இந்து என்று ஒரு மதமே இல்லை என்று வரலாறு மெய்ப்பிக்கிறது. அனைவரும் இந்து என்றால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டியது தானே முதல் தேவை? ஆனால் இசுலாமியர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் இசுலாமியர்களுக்கான தனி நபர் சட்டங்களைக் காட்டி பொது சிவில் சட்டம் என்று சங்கப் பரிவாரங்கள் கூப்பாடு போடுகின்றன.

இந்து சனாதனவாதிகளைப் போலவே முஸ்லீம் அடிப்படைவாதிகளும் உள்ளனர். பிற மதங்களிலும் இந்த பிற்போக்குத்தனங்கள் உள்ளன. அது கட்டாயம் களையப் பட வேண்டும். இசுலாமிய சமூகத்தில் பெண் கல்வி மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடுபவர்கள் மிரட்டப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் குர்தி இனப் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடி ஐ.எஸ்.தீவிரவாதிகளை விரட்டினர். இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.

மோடி அரசு ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு எதிரானது. ஆகச் சிறுபான்மையினரான பார்ப்பன சனாதனங்களை மரபுகள், பழக்க வழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளாக வைத்துக்கொண்டு அதைப் பெரும்பான்மை இந்துக்கள் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்க எத்தனிக்கிறது. மோடி அரசு தலித் மக்கள், பழங்குடிகளுக்கு எதிரானது. இசுலாமியர்களுக்கும் இன்னும் பல மதச் சிறுபான்மையினருக்கும் எதிரானது. இந்து ராஜ்யம் என்ற ஆர்.எஸ்.எஸ்.ன் கனவை நனவாக்க சனநாயகத்தின் பெயரில் மோடி பாசிசத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். பொருளியல் நெருக்கடிகளை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்தப் பார்க்கிறார். இதை நாம் அனுமதிக்கக்கூடாது ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கிளைப் பொருளாளர் தோழர் சங்கையா நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவுற்றது. கீழைக்காற்று நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வாசிப்புத் தளம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இசுலாமியர்கள், வணிகர்கள், தோழமை அமைப்பினர் 400 பேர்வரை கலந்துகொண்டு இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மதுரை

 1. //இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.//இல்லை அது இசுலாமிய சகோதர்த்துவம் உண்மை சம்த்துவத்துக்கும் இசுலாமிய சகோதரத்துவத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை இசுலாத்தில் தீண்டாமை கிடையாது என்பது பொய் இசுலாமியனுக்கு இசுலாமியன் அல்லாதவன் தீண்டத்தகாதவனே ஆதாரம் மெக்கா பள்ளிவாசலை சுற்றி போகநான் முஸ்லீம் பைபாஸ் இருக்கு ஒரு வேளை இசுலாமியர்களுக்குள் சம்த்துவம் வேனும் அதுக்காக அவர்கள் போராட வேண்டும் என்றால் அதை பொது சிவில் சட்டத்தின் மூலம் ஏன் செய்யக்கூடாது எனென்றால் அத வெளியாள் செய்ய அனுமதி இசுலாத்தில் இல்லை கம்மூனிஸ்டுகள் மெத்த படித்த முட்டாள்கள் என்பதை அடிக்கடி இசுலாம் விசய்த்தில்நிரூபிக்கிறீர்கள்….

  • ஜோசப் சொல்லவந்த ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விட்டேன் பார்த்தீர்களா? கிருஸ்துவ நண்பர்கள் , கிருஸ்துவ கல்வி நிறுவனங்கள் என்று பல ஆண்டுகள் உறவாடிய எனக்கு நான் மாற்று மதத்தவன் என்பதால் RC கோவில்களில் “ அப்பம் “ ஒரு முறைகூட கொடுக்கபட்டது இல்லை… அதற்கான காரணத்தை சிறுவயதிலேயே நான் அறிந்ததால் அது எனக்கு பெரிய வலிகளை ஏற்படுத்தியது இல்லை. நான் கிருஸ்துவனாக இருந்து அப்பம் கொடுக்கப்படாமல் இருதால் தானே நான் அதனை தீண்டாமை என்று நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் … அது அவர்கள் மத கட்டுபாடு என்ற அளவில் எடுத்துகொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு … உங்களுக்கு?

 2. 1, இசுலாத்தில் தீண்டாமை கிடையாது என்பது பொய் இசுலாமியனுக்கு இசுலாமியன் அல்லாதவன் தீண்டத்தகாதவனே,

  இசுலாத்தில் தீண்டாமை கிடையாது உண்மை நான் வெளிநாட்டில் அதுவும் முஸ்லிம் நாட்டில்தன் வேலை பார்க்கிறேன் இங்கு எந்த முஸ்லிமும் யாரையும் தெட கூடாது ஒன்ன சாப்பிட கூடாது செல்லவில்லை இந்து மதத்தில் உள்ளது போல் இசுலாத்தில் தீண்டாமை

  2,ஆதாரம் மெக்கா பள்ளிவாசலை சுற்றி போகநான் முஸ்லீம் பைபாஸ் இருக்கு

  அவன் அல்லசாமியை கும்மிட போரன் அங்கு நமக்கு என்ன வேலை அவனுக்கு ஒரு ரோடு நம்க்கு தனி ரோடு ஏன் நம்ம ஊருலையும் தான் இருக்கு நம்ம எதவது வெளி ஊருக்கு போகும் போது பைபாஸ் வழியை யூஸ் பான்னுவேம் அப்ப நம்ம இந்திய அரசு அந்த ஊரை ஒதுக்கி வைச்சுருட்சா

  திலித் கிருத்தவன் ஒருவனான் மேல் ஜாதி கிருத்துவ கோவில் நூழைய முடியாது , நம்ம ஊரில் இன்னும் இருக்கு அனால் தலித் முஸ்லிம்க்கு அவர்கள் புனித சவுதி காபவுக்கு அருகில் நின்னு சாமி கும்மிடமுடியும்

  நான் தலித் முஸ்லிம் முன்னேற்றத்தை நேரில் பார்த்தவன் தலித் கிருத்தவன் அடைந்த துயரதையும் நேரில் பார்த்தவன் எனவே முஸ்லிம் மக்களிடம் தீண்டாமை இல்லை , இந்துவிடமும் அதைவிட அதிகம் கிருத்துவனிட்மும் இருக்கு ,

  • விளக்கத்திற்கு நன்றி தமிழ் அவர்களே .. அருமையாக சொன்னீர்கள் ..
   தலித் முஸ்லீம் என்பதை நீங்கள் (தலித்தாக இருந்து முஸ்லீமாக மாறியவர்) என்ற ஒரு புரிதலுக்காக பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை அறிகிறேன்… மற்றபடி “தலித் முஸ்லீம்” என்றால் பதமே கிடையாது .. அவர் முஸ்லீம் மட்டும் தான் … நன்றி .

  • தலித் கிறிஸ்தவன் மேல ஜாதி கிறிஸ்தவன் சர்ச்சுகுள்ள நுழைய முடியாது தமிழ்நீ பாய்தான் என்பதை உன் வாக்கு மூலமேநிரூபிக்கிறது
   முதலில் தலித் பேராயர்(பிஸப்) எத்தனை பேர் இருக்காங்க தமிழ்நாட்டுல தெரியுமா எங்க ஊரு இருக்குற மதுரை ராமநாதபுரம் தென் இந்திய திருச்சபையின் பேராயர் தலித் இன கிறிஸ்த்தவர் என்றே சொல்லுகிறார்கள்….

   • ஜோசப் அவர்களே, கிருஸ்துவ தலித் எழுத்தாளர் பாமா அக்காவின் கருக்கு சுய சரிதை நாவலை படித்துவிட்டு வந்து இந்திய கிருஸ்துவத்தில் மேல் சாதியத்தின் மேலாண்மையை புரிந்துக்கொளுங்கள்! பாமா அக்காவை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றாலும் உங்களுக்கு தெரியுமே இல்லையோ என்பதற்காக கூறுகின்றேன். பள்ளி ஆசிரியர்(யை), மடத்தில் இருந்து அங்கு இருக்கும் சாதிய பாகுபாடுகள் காரணமாகவும், அது எளியவர்களுக்கு சேவை செய்யவில்லை என்ற காரணத்தாலும் அதில் இருந்து விடுபட்டவர்… ஆனாலும் ஏசுவின் போதனைகளை தன் வாழ்வில் பின்பற்றுபவர்… அவரின் வார்த்தைகளில் கூறுவது என்றால் :

    “சொந்த மண்ணில் தலித்களுக்கு அவமானம் என்றில்லை…. ஆண்டவன் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி…..இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடு இல்லை.இது தான் இன்றும் இருக்கும் கொடுமை..இந்தக் கொடுமைகளை எதிர்த்த போராட்டமே ‘கருக்கு” ஆக உருவெடுத்து உள்ளது.”

    • மிஸ்டர்செந்தில்குமரன்,கட்டுரைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் விவாதம் திரும்புகிறது.இந்த பி.ஜோசப்புக்கு இதுதான் வேலை.இதற்க்குத்தான் ஜெயலலிதா பற்றிய விவாதத்திலும் ரெபெக்காமேரியிடமும் குறிப்பிட்டிருந்தேன்.கிறிஸ்த்தவ மதத்தில் ஜாதி இருக்கிறதா?கிறிஸ்த்தவத்தில் ஜாதி இருக்கிறதா?கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை.இந்திய தமிழ்க கிறிஸ்த்தவர்களிடம் ஜாதி இருக்கிறது.இது எங்கிருந்து தொற்றியது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.ஒரு நாவலை உதாரணமாய் காட்டுகிறீர்கள்.அந்த நாவல் தமிழக கிறிஸ்த்தவ சமூக அமைப்பில் புரையோடிப்போன ஜாதிய பாகுபாட்டின் எதார்த்தத்தை பேசலாம்.அதனால் கிறிஸ்த்தவம் ஜாதீயம் உள்ளது என்று ஆகாது.வெள்ளையர்களிடம் நிறவெறியும் நிற பாகுபாடும் உள்ளது.அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்த்தவர்கள் என்பதால் கிறிஸ்த்தவம் நிற பாகுபாட்டை ஏற்றுக்கொண்டதாக ஆகவே ஆகாது.இதுதான் சாக்கு என்று எல்லா மதத்திலும் தலித்துகளுக்கு கொடுமைதான் என்று ஒரேயடி மட்டையடி அடிக்கிறீர்களே பெளத்தமும் சாதி உள்ளதா?சமணமும் சாதி உள்ளதா? உங்களுடைய மத நிராகரிப்பிற்க்கு கொள்ளைபுற வழியிலெல்லாம் வரக்கூடாது. முதலில் சாதி பாகுபாடு பற்றிய கட்டுரையா இது?இந்த ஜோசப்புக்கென்று எந்த கொள்கையும் கோட்பாடும் கிடையாது.காவிகளாவது அவர்களுக்கென்று உள்ள ஒரு பலவீனமான கொள்கையை வைத்தாவது அழுகிறார்கள்.இந்த ஜோசப்புக்கு இங்குமங்குமாக ஓடிதிரிவதும் சம்மந்தமில்லாமல் உளறிக்கொட்டுவதும்தான் வேலை.

    • கிறிஸ்துவர்களுக்குள் சாதி வேறு பாடு இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் செந்தில் ஆனா அதுக்காக தமிழ் போன்ற ஆளுகளின் அவதூறை அமோதிக்க முடியாது சின்ன தகவலே மத பிரச்சாரம் என்று தவறாக நினைக்க வேண்டாம் இசுலாமியர்களைப்போல வினவை மத பிரச்சார தளமாக ஆக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடனும் சொல்லுவ்து
     யேசு இறந்த போது எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரை இரண்டாய் கிழிந்தது என்று விவிலியம் கூறுகின்றது யேசு இறந்து ஏன் சம்பந்தம் இல்லாமல் அந்த திரையை கிழிக்க வேண்டும் எனென்றால் எருசலேம் கோவிலுக்குள்ள யூதர்கள் மட்டுமே போக முடியும் அதுவும் பூஸ பன்றது தூபம் காட்டுறதுன்ற வேலைக்கு யூத சாதிய்லயே ஆரோனின் வம்சத்தார் மட்டுமே போக முடிய்ம் மாற்று சாதியை சேர்ந்தவர்கள் சமாரியர் (விவிலய்த்தில் பழைய ஏற்ப்பாட்டின் படி கீழ் சாதி என்று சொல்லப்பட்டவர்)வெளியே முற்றத்தில் இருந்து தொழுது கொள்ள வேண்டும் .

     இந்த மூன்று பிரிவினர்களுக்கிடையே ஒருவரை ஒருவர் பார்க்காதபடி திரை இருந்தது யேசு இறந்தபோது கிழிந்தது அந்த திரைதான் கிறிஸ்துவர்கள் அந்த திரையை தங்கள் எண்ணத்தில் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்

     அனா நான் கேக்குறது என்னனா இசுலாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களை மூமின் என்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களை காபிர்கள் என்றும் பிரிக்கிறது காபிகளை நண்பர்கள் ஆக்க கூடாது முடிந்தால் அவர்களிடம் ஜிகாத் செய்து அவர்களை கொன்று அவர்கள் மூமீன் ஆகும் வரை போரிடு என்று சொல்லும் மதம் எப்படி சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று இந்த மெத்த படித்த கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே லாஜிக்கலி இடியாட்டிக் பேச்சாகவல்லவா இருக்கிறது….

     • சத்தியமா எதுக்கு இவற்றை எல்லாம் என்னுடைய பின்னுட்டத்துக்கு பதிலாக கொடுகின்றீர்கள் என்று சிறிதும் புரியவில்லை ஜோசப்! நான் பேசியது தமிழ் நாட்டில் தலித் கிறிஸ்துவர்களின் நிலையை பற்றி…. தலித் கிருஸ்துவர்களுக்கு என்று தனி தனி தேவாலையங்கள் இல்லை என்றா கூற வருகின்றீகள்!

      • அய்யா பேராசிரியரே நான் சொன்னது உண்மைல விளங்களயா இல்ல விளங்காத மாறி நடிக்கீறா தலித் தலித அல்லாதவர் வேறுபாறு கிறிஸ்தவத்துல இல்லைனு நான் எப்ப சொன்னேன் நான் கேக்குறது இசுலாம் சமத்துவத்தை போதிக்கின்ற மதம் என்று எப்படி ஒரு கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே ____________ ……

    • தமிழ் லுத்தரன் திருச்சபை இருக்கிறது வினவு தளம் கூட ஒரு கண் மருத்துவமனையின் அவலங்களை தோலுறித்து கட்டுரை எழுதியது அந்த லூக்கா கண் மருத்துவமனை அந்த திருச்சபையின் கீழ்தான் வருகிறது அந்த திருச்சபை தலித்துகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட திருச்சபையே தரங்கை பேராயர் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் எல்லோரும் தலித் இனத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள் அவர்கள் ஆளுகையில் உள்ள திருச்சபைகளில் மாற்று சாதியினருக்கு என்ன மரியாதை என்பதையும் சேர்த்தே ஆய்வு செய்து எழுதுங்கள் இதில் எனக்கு எள்ளலவும் வருத்தம் இல்லை ஆனால் அதே நேரத்தில் திருச்சபைகள் கிறிஸ்தவர்களின் குறைகளை வைத்து இசுலாமிற்க்கு சமத்துவ மதம் என்ற சர்டிபிகேட் குடுப்பதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும் கிறிஸ்துவத்தில் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் இசுலாம் சமத்துவம் குடுக்கும் மதம் என்று பொய் சொல்லி இசுலாத்தை நோக்கி தலித்துகளை தள்ளி விடும் முயற்ச்சி என்று நான் சந்தேகம் கொள்ள்வது தவறில்லயே…

   • என் பெயர் கொண்ட நண்பன் திருசிக்கு அருகில் உள்ள லப்பைகுடிகாட்டில் வசிக்கின்றான். ஒரு இரு குடும்பங்களை தவிர அனைத்துமே இஸ்லாமிய குடும்பங்கள் தான். அவர்கள் வீட்டுக்கு புதுமனை புகு விழாவுக்கு நண்பர்கள் சென்று இருந்தோம்.வீட்டுக்கு பின் புறம் பள்ளிவாசல்.அங்கும் சென்றோம்…யாதொரு இடையூருகளும் இஸ்லாமியர்களிடம் இருந்து ஏற்படவில்லை. பள்ளி வாசல் உள் இந்து குழந்தைகளை கூட மந்திரிக்க இந்து பெண்கள் கூட அழைத்து செல்வதனை கண்டு இருகின்றேன்.

    அதே நேரத்தில் மாற்று மதத்தவருக்கு என்று கட்டுபாடுகள் அவர் அவர் மதத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது என்பதனை மறக்க இயலாது.வாழ்நாளில் கல்வி வரையில் பெரும் பகுதியை- (உண்மையில் mPHIL பதிப்பு தவிர ) கிருஸ்துவ கல்வி கல்வி நிறுவனங்களில் கழித்தவன் நான். கிருஸ்துவ கல்வி நிறுவங்களில் சாதியத்தின் செல்வாக்கை நன்கு அறிந்தவன் நான்… நான் பள்ளி பதிப்பு முடித்த தென்னாற்காடு மாவட்டத்தை பொறுத்தவரையில் வன்னிய கிறிஸ்துவர்களின் செல்வாக்கு கிருஸ்துவ மத நிறுவனங்களில் பெருமளவுக்கு இருப்பதனை யாருமே மறுக்க இயலாது. திருச்சியில் CSI ஆலயத்தின் கீழ் வரும் கல்வி நிறுவனங்களில் (பிஷப் கல்லுரி) நாடார்களின் பெரும்பான்மையையும் அந்த சாதியின் அடிப்படையில் அந்த சாதிக்காரர்கள் முதல்வர் பதவிகளை பெற்றதனையும் கண்டு உள்ளேன்.
    சாதி அடிப்படையில் அவர்கள் குழுக்களை அமைத்துக்கொண்டு அதிகாரத்தை பெறுவதற்காக ஒருவருடன் மற்றவர் நடத்துகின்ற நிழல் யுத்தங்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்ததை நீங்கள் கண்டு இருப்பீர்கள். அந்த கல்லூரியில் சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர் பதவிக்கு வரவேண்டிய ஒரு பாதிரியாரை அவர் தலித் கிருஸ்துவர் என்ற காரணத்தால் மாற்று சமுகம் ஓரம் கட்டிய நிகழ்வுகளை எல்லாம் நான் கண்டு இருகின்றேன்.

    அந்த பாதிக்கப்பட்ட தலித் பாதிரியார் பிறிதொரு நாளில் எனக்கு நான் வேலை செய்த கொடைக்கானல் கிருஸ்துவ கல்லூரியில் முதல்வராக இருந்து இருக்கின்றார். ஒரு ஆண்டுகளில் அவரிடம் இருந்து நான் கற்றது அதிகம் என்றாலும் அவர் சாதி அடிப்படையில் அமெரிக்கன் கல் லூரயில் பட்ட துயரங்களை அவ்வவப்போது கூறுவார். எனவே முழு புசணிக்காயை சோற்றில் போட்டு மூடும் வேலையை செய்ய முயற்சிக்கவேண்டாம்.

    • பத்தி பத்தியா எழுதி தள்ளாம நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க கிறிஸ்தவத்தவர்களில் சாதி வேறுபாடு இல்லனு நான் எப்ப சொன்னேன் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லயே மீண்டும் என்னுடய கேள்வி

     அனா நான் கேக்குறது என்னனா இசுலாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களை மூமின் என்றும் ஏற்றுக்கொள்ளாதவர்களை காபிர்கள் என்றும் பிரிக்கிறது காபிகளை நண்பர்கள் ஆக்க கூடாது முடிந்தால் அவர்களிடம் ஜிகாத் செய்து அவர்களை கொன்று அவர்கள் மூமீன் ஆகும் வரை போரிடு என்று சொல்லும் மதம் எப்படி சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று இந்த மெத்த படித்த கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே லாஜிக்கலி இடியாட்டிக் பேச்சாகவல்லவா இருக்கிறது….

     • ஜோசப் அவர்களே, நான் பத்தி பத்தியாக எழுதினாலும் ,உண்மையை மட்டுமே எழுதிக்கொண்டு இருகின்றேன் ஜோ…! அதனால் தான் பதில் சொல்ல இயலாமல் என்னை ஏசுகின்றீர்கள்… நன்றி… மிக்க நன்றி…. நான் எந்த மதத்திலும் சமத்துவம் இருபதாக உங்களுக்கு இங்கோ அல்லது இமெயில் அனுப்பியோ நான் கூறவில்லையே ஜோசப் ராசா…! (உங்கள் ஈமெயில் கிடைத்தது) அப்புறம் ஏன் கீழ் உள்ள கருத்துகளை என்னுடைய பின்னுட்டத்துக்கு எழுதி உளறி வைத்து உள்ளீர்கள் ஜோசப் ராசா! //மதம் எப்படி சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று இந்த மெத்த படித்த கம்மூனிஸ அறிவாளி சொன்னார் என்பதே லாஜிக்கலி இடியாட்டிக் பேச்சாகவல்லவா இருக்கிறது….//

      நான் வைக்கும் வாதத்துக்கு உங்களால் பதில் அளிக்க இயலாத சூழல் வருமாயின் உடனே கண்டபடி உளறுவது என்பது எப்படி பொருத்தமான விவாத முறையாகும்? யோசியுங்கள் ஜோசப் அவர்களே!

      • செந்திகுமரன் உங்களின் மூலமாக சில கருத்துகளை வெளிப்படுத்தலாம் என நினைக்கிறேன்.ஜோசப்பின் பதிவுகளை வினவுக்கு நான் வந்த காலத்திலிருந்து அறிகிறேன்.இது ஏதோ அறியாமையினாலோ ஆர்வக்கோளாறினாலோ வந்து விழும் கருத்துகளல்ல.இது நீண்ட காலங்களாக ஏற்றப்பட்ட துர்போதனையால் வந்த விளைவு.அந்த துர்போதனைகளாலே அவர் மூளை துறுப்பிடித்திருக்கிறது.இஸ்லாம் என்ற வார்த்தையை கேட்டவுடனேயே அவருக்குள் ஒரு உஷ்ணம் பாய்வதை பார்க்க முடிகிறது.இது சாதாரண கிறிஸ்த்தவர்கள் ,சாதாரண இந்துக்கள் மற்றும் உள்ள சதாரண மக்களிடம் பார்க்க முடியாது.ஒரு சமூகத்தைப்பற்றி பிற சமூகத்திற்க்கு விமர்சனம் இருக்கலாம்.விமர்சிக்கவும் படலாம்.இது அந்த வகையில் சேர்ந்ததல்ல.இஸ்லாம் மிகப்பெரிய போட்டிக்குரியதாக,வெல்ல முடியாத சவால் நிறைந்ததாக தொடர்ந்து போதிக்கப்பட்டு ,வீழ்த்தியே தீரவேண்டிய வில்லனாக காட்டப்பட்டிருக்கிறது.நியாயமான விவாதங்களால் இவை சாத்தியமில்லை என்ற நிதர்சனம் அவர்களுக்கு தெரியும்.பிறகு எப்படி சந்திப்பது?அவதூறுகளை அள்ளித்தெளி.வலிந்து தவறான பொய்களை திரட்டி ஊற்று.எங்கேயோ போய் கொண்டிருக்கிற பேச்சை திசை மாற்றி,உனக்கு இருக்கும் அறிவை கொண்டு வெறுப்பின் பக்கமாய் கொண்டு வா..கூடுமானவரை வசைபாடு.இதன் மூலமாய் ஒருவன் கிடைத்தாலும் வெற்றி.இதுதான் காவிகளுக்கும் கோட்பாடு.தாழ்வுமனப்பான்மையால் வெந்து புழுங்கும் ஒவ்வொருவனும் இதைத்தான் செய்வான்.இங்கிருக்கும் பலர் ஜோசப் அடிக்கடி உதிர்க்கும் ஒரு கருத்தை கேட்டிருக்கலாம்..வினவு இஸ்லாத்திற்க்கு ஆதரவாக இருப்பதாக..அப்படி எந்த முகாந்திரமாவது இருக்கிறதா?சிறுபான்மையினருக்கு உறுதுனையாய் இருப்பது என்ற வகையில் முஸ்லிம்களுக்கு அரணாக ஆதரவாக சில அரசியல் பிரச்சினைகளில் கருத்து கொண்டிருக்கலாம்.அதற்க்காக இஸ்லாத்திற்க்கு ஆதரவாக வினவு என்பது எப்படிப்பட்ட புனைவு?நானே பலமுறை சித்தாந்தரீதியாக மோதி அதன் பதிவுகள் வெவ்வேறு பக்கங்களில் இருக்கிறது.ஆகவே ஜோசப்பை யோசிக்க சொல்வதெல்லாம் வீண் வேலை.அங்கு யோசிக்கும் அளவிற்க்கெல்லாம் வேலை செய்யாது.தூக்கி போட்டுவிட்டு சும்மா இருங்கள்.

      • அப்பிடி என்ன வாதத்தை வைத்து விட்டீர்கள் தமிழ்க்கு ஜால்ரா அடித்தீர் நான் உங்கட்ட கேள்வி கேக்கவே இல்லை நான் கேட்ட கேள்வி வினவுதளத்துக்கு அதுக்கு நீங்க பதில் சொல்லுறதா நினைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களின் குறைகளை பத்தி பத்தியாக எழுதீனீர்கள் நான் அதை மறுக்கவே இல்லை மீண்டும் எனது பின்னூட்டத்த பொருமையாக படியுங்கள் இசுலாம் சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று துணிந்து ஒரு பொய்யை வலிந்து சொல்லுகிறார்கள் ஆனால் அப்பிடி இல்லை என்பதுதான் என் கருத்து இதுக்கு தேவையே இல்லாமல் கிறிஸ்தவர்களயும் கிறிஸ்தவ மதத்தையும் இழுத்தது நீங்களும் தமிழும்தான்

       • ஜோசப்,

        இந்திய கிருஸ்துவத்தில் உள்ள குறைகளை குறிப்பாக சாதியத்தை மறுக்கவில்லை என்று இப்போது கூறும் நீங்கள் தானே உங்கள் முந்தைய பின்னுட்டம் 2.2ல் கீழ் உள்ள கருத்துகளையும் கூருகிண்றீகள்!// தலித் கிறிஸ்தவன் மேல ஜாதி கிறிஸ்தவன் சர்ச்சுகுள்ள நுழைய முடியாது தமிழ்நீ பாய்தான் என்பதை உன் வாக்கு மூலமேநிரூபிக்கிறது
        முதலில் தலித் பேராயர்(பிஸப்) எத்தனை பேர் இருக்காங்க தமிழ்நாட்டுல தெரியுமா எங்க ஊரு இருக்குற மதுரை ராமநாதபுரம் தென் இந்திய திருச்சபையின் பேராயர் தலித் இன கிறிஸ்த்தவர் என்றே சொல்லுகிறார்கள்….// இந்த கருத்தை மறுக்கவே நான் விவாதத்தில் உள் நுழைந்தேன்… மற்றபடி மதத்தின் மீதான என் கருத்து என்னவென்றால் மதம் அது எதுவென்றாலும் மக்களை அதனுள் அடிமைபடுத்தி அவர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க இயலாத நிலைக்கு தள்ளுவது தான் மதத்தின் கடமையாக இருக்கிறது.

        குறிப்பாக ஒரு விஷயம் : “”ஒரு மதத்தில் பிறக்கும் குழந்தை ஆனா ,பெண்ணா என்று தீர்மாணிபது கடவுள் தான் என்று உள்ளது….”” ஆனால் பிறக்கும் குழந்தையை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கவைக்க சிசனிங் என்ற தொழில் நுட்பம் உள்ளது. அது இந்தியாவில் தடை செய்யபட்டு உள்ளது… ஆனால் பால் உற்பத்தியை பெருக்க பெண் மாடுகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய அந்த தோழில் நுட்பம் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. பெண் கருமுட்டையில் உள்ள xx குரோமோ சோம்களை ஆண் விந்தணுவில் உள்ள XY குரோமோ சோம்களுடன் இணையும் தருணத்தில் XX என்றால் பெண் குழந்தையும் XY என்றால் ஆண் குழந்தையும் பிறக்கின்றன… இன்று எந்த பாலினம் வேண்டும் என்று நாமே ஆய்வகத்தில் முடிவு செய்யலாம். அது தான் சிசனிங் தொழில் நுட்பம்… அப்ப மனிதன் கடவுள் ஆகிவிட்டானா ஜோசப்?

        • அய்யா சரவனன் ஆதிதிராவிடர் சாதிய சார்ந்தவரே பேராயராக இருக்கும் போது எந்த திருச்சபையில் உங்களை உள்ளே நுழைய விட வில்லை என்று தமிழுக்கு ஜால்ரா அடிக்கும் நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை தலித்து சாதிய சார்ந்தவர்கள் பிஸப்பாவே இருக்கும் போது ஏன் இப்படி அவதூறை பரப்புகிறீர்கள் என்று தமிழுக்கு நான் அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள் ,சரி அதை விடுங்கள் xY விளக்கம் எல்லாம் தெரியாத முட்டாள் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு பதில் அளிக்கிறீர்கள் அய்யா அடியேன் நானும் 78 பேப்ப்ருல பாஸு பன்ன எம் டெக் பட்டதாரி என்று தாங்களும் தங்கள் சமூகமூம் அங்கீறத்து அருள் பாளிக்க வேண்டும்

         • தலித் கிருஸ்துவராகிய திரு பாமா வின் ஒப்புதல் வாக்கு மூலமாக திகழும் கருக்கு சுய சரிதை நாவலில் அவரின் அனுபவங்களை, அவரின் தாழ்த்த பட்ட சாதிக்கென்று தனியாக தேவாலையம் அவரின் சொந்த ஊரில் இருப்பதனை தெளிவாகவே கூறுகின்றார் என்னும் நிலையில் அப்படி எல்லாம் இல்லை என்று முழு பூசனிகாயை சோற்றில் போட்டு மூட முயலாதீர்கள் ஜோசப்…..

          • சொந்த ஊருல எஸ்ஸி தேவாலயம் சரி கம்மூனிஸ்ட்டுகளை சாதி அண்டவே இல்லயா எனக்கு தெரிந்து மூத்த கம்மூனிஸ்டு தா பாண்டியன் வெளிப்படையான தேவர் சாதி ஆதரவாளர் அப்புறம் சில மார்கிஸ்டு கம்மூனிஸ்டுகள் தங்கள் பேருக்கு பின்னடி சாதி போட்டு தங்கள அடயாளப்ப்டுத்தி கொள்கின்றனர் ,புத்தாண்டு நிதி வசுல் செஞ்ச மார்கிஸ்டு தோழர்கள் எஸ்ஸி தெருவுக்கு எஸ்ஸி தோழர்களும் பிஸி தெருவுக்கு பீஸி தோழர்கள் என்று பிரித்தே அனுப்புகிறார்கள் எஸ்ஸியா இருந்து கம்மூனிஸ்டா இருக்குறவங்க என்னதான் புடுங்குனாலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி கூட சாதி பாத்து யாரு அந்த ஏரியா ல அதிகமுனு பாத்துதான் குடுப்பாங்க அனா கிறிஸ்தவ திருச்சபைல எஸ்ஸி அதிகமான விசவாசிகள் இருந்தா ஆட்டோமேட்டிக்கா அங்க எஸ்ஸிதான் பேராயர்

           அண்னன் சொல்லுற அறிவுபூர்வமான கம்மூனிஸதுல தான் மார்கஸ் சொல்லுறாரு மதம் ஒரு அபின் அப்பிடினு இசுலாமிய மதம் அபினா சமத்துவத்தை போதிக்கும் மதமா இல்லை அபினா எனக்கு தெரிஞ்சு எங்க ஊரு முனியான்டி கோவிலுக்கு பின்னாடி உங்காந்து பள்ளன் பறயன் தேவர் நாடார்னு எல்லா சாதிக்கார கஞ்சா அடிக்கிறவன் எல்லாம் சமமா உக்காந்து கஞ்சா பீடிய ரவுண்டு கட்டி இழுப்பானுக அது போன்ற சமத்துவத்தைதான் இசுலாமிய மதம் போதிக்கின்றது என்று கம்மூனிஸ்டு தோழர்கள் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாமா ,

           அப்புறம் கம்மூனிஸதுலயே மார்கிஸ்ட் லெலினிஸ்ட் இருக்கா மாறி
           அய்யரிஸ்ட், எஸ்ஸியிஸ்ட்,பீஸியிஸ்ட்,லாம் இருக்கு எனக்கு என்னமோ மக இக இசுலாமிஸ்ட்நுதான் தோன்றது

          • கிறிஸ்தவத்தில் சாதி இருகிறது என்று சொல்லி நான் கேட்ட கேள்வியை வினவுதள கட்டுரைக்கு ஆதரவாக திசை திருப்பிய செந்தில் பேராசிரியர் அவர்கள் யார் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்த இசுலாம் எந்த வகையில் சமத்துவத்தை போதிக்கின்றது என்று விளக்கி அருளாமல் கிறிஸ்தவர்களை குறை சொல்லிக்கொன்டே இசுலாம் என்ற நாத்த பூசனிக்காயை சமத்துவ சோத்தில் ஏன் மறைப்பதற்க்கு துனையாக இருக்கிறீர்கள் உலகெங்கிலும் உள்ள் இசுலாமியர்களின் செயல் பாடுகளை கொண்டும் இசுலாமிய முத்தொகுப்பு நூலகளை கொண்டும் இசுலாம் என்பது மதம் என்ற போர்வையில் வந்த கம்மூனிஸ்டுகளுக்கு பிடித்தமான அரசியல் நாத்த பூசனிக்காய் என்று நிரூபிக்க முடியும் நீங்களும் முடிந்தால் இசுலாம் இஸ் இக்குவல்டு சமத்துவம் என்று நிருபிக்க வேண்டும் இல்லை என்றால் திருடனுக்கு தேள் கொட்டியது போல வினவு ஆளுக மாறி சும்மா இருக்கலாமே

          • மணிகண்டன், எந்த மதத்திலும் கொள்கை அளவிலும் சரி , நடைமுறையிலும் சரி சமத்துவம் இல்லை என்ற கருத்தை நான் முன்பே கூறிய பிறகும் எதுக்காக மதங்களில் சமத்துவம் இருக்கிறது என்று நான் பொய்யாக முட்டுகொடுத்து உங்களிடம் வாதாடவேண்டும்?

          • ஒரு வழியா எந்த மதத்துலும் கொள்கை அளவிலும் நடமுறயிலும் சமத்துவம் இல்லை என்று ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி அனா இசுலாமில் நடைமுறையில் சமத்துவம் இருப்பதாக ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டையை கம்மூனிஸ்டுகள் காட்டுகிறார்கள் இசுலாம் சமத்துவத்தை போதிக்கும் மதம் என்று.

           இசுலாத்துல தலாக், பெண்களுக்கான சொத்துரிமை,குழந்தை திருமணம் ,ஆண்களுக்கு 4 கலியானம் என்ற மூடத்தனங்களை காட்டிதான் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் பொது சிவில் சட்டம் வந்தால் மத முல்லாக்களின் மதிப்பு குறையும் இசுலாமிய கட்டமைப்பு சிதறி இசுலாமிய பெண்களிக்கு சுதந்திரம் கிடைக்கும் எனென்றால் மத்த மதங்களை விட இசுலாம் அதிகமாக பெண்களை ஒடுக்கும் தத்துவம் இந்த வகையில் பொது சிவில் சட்டத்தை வரவேற்க்கலாம்

           மோடி நன்பக தன்மை அற்றவர் என்பதால் அவர் கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை நம்ப முடியவில்லை என்றால் எப்பிடி பொது சிவில் சட்டம் இருந்தால் நல்லது என்று மக்களுக்கு விளக்கலாம் அதை விடுத்து பொது சிவில் சட்டமே தேவை இல்லைனு சொல்லுறது ஏன்னு தெரியல அதுவும் இல்லாம இசுலாம் சம்த்துவத்த போதிக்கும் மதமுனு இசுலாமுக்கு ஏன் ஜால்ரா வேற அடிக்கனும்

          • ஒரு குரூப் செய்யுற தப்ப சுட்டிக்காட்டி இன்னொறு குரூப் செய்யுற தவ்றுக்கு நியாயம் கற்பிப்பது என்பது என்ன வகையான தத்துவமோ தெரியல

          • joseph: இஸ்லாம் பற்றி நீங்கள் சொல்வது மிக சரி.

           மோடி அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பொது சிவில் சட்டத்தை யார் கொண்டு வந்தாலும் இவர்கள் எதிர்ப்பார்கள் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதம் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரையில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் முற்போக்கு என்றே சொல்வார்கள் காரணம் இஸ்லாமிய அடிப்படை வாதம் அமெரிக்காவை எதிரியாக பார்க்கிறது, எதிரியின் எதிரி என் நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஆதரிக்கிறார்கள் (அல்லது எதிர்ப்பது இல்லை)

           அதேபோல் மோடிக்கு கெட்ட பெயர் வரும் என்றால் இவர்கள் நம் நாட்டிற்கு இழிவை தேடி தரவும் தயங்க போவதில்லை.

          • ஜோசப் , பொது சிவில் சட்டடத்தை எப்படி எல்லாம் ஹிந்துத்துவாக்கள் எதிர்கின்றார்கள் என்று அம்பலபடுத்தும் கட்டுரைகளை வினவு ஆறு பாகங்களாக வெளியிட்டு இருக்கிறது…. அதனையும் படியுங்கள்… மேலும் இந்த கட்டுரையில் மத சமத்துவத்தை பற்றி பேசிய நபர்…, நீங்கள் கம்யுனிஸ்டு என்று குறிப்பிடும் நபர் உண்மையில் கம்யுனிஸ்டு அல்ல அவர் தமிழ் இன வாத கொலகைகளில் முனைப்புடன் இருப்பவர் என்பதால் தான் வினவு உங்களுக்கு பதில் அளிக்காமல் மவுன புன்னகையையே பதிலாக அளித்துக்கொண்டு இருக்கின்றது என்ற உண்மையை உங்களால் இதுவரையில் புரிந்து கொள்ள முடியவில்லை ! வினவு தளத்திலோ அல்லது வினவின் அரசியல் சார்ந்த அமைப்புகளிலோ அப்ப்படி சமத்துவம் உள்ள மதம் உலகில் உள்ளது என்று கூறப்பட்டு இருக்குமாயின் அதற்கு முதல் எதிர்ப்பு குரல் என்னிடம் இருந்து தான் வந்து இருக்கும்! ஆனாலும் உங்களுக்கு அழுத்தமாக மீண்டும் கூறவ விரும்புகின்றேன்… உங்கள் மதம் அல்லது நான் சார்ந்த மதம் என்று இல்ல்லை… எந்த மதத்திலும் நடைமுறையில் சமத்துவம் இல்லை என்பதே உண்மை…. தொடருங்கள் உங்கள் விவாதத்தை…. அந்தஆறு கட்டுரைகளையும் படித்துவிட்டு வினவு சார்ந்த அமைப்புகளின் கருத்தை இந்த பொது சிவில் சட்டத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்… நன்றி…

           https://www.vinavu.com/2014/09/23/common-civil-code-busting-the-myths-1/
           https://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/
           https://www.vinavu.com/2014/10/29/common-civil-code-busting-the-myths-3/
           https://www.vinavu.com/2014/11/25/common-civil-code-busting-the-myths-4/
           https://www.vinavu.com/2015/01/02/common-civil-code-busting-the-myths-5/
           https://www.vinavu.com/2015/02/06/common-civil-code-busting-the-myths-6/

          • ஜோசப், நீங்கள் கம்யுனிஸ்ட்டாக நம்பும் அவர்-தியாகு அவர்கள் (மத சமத்துவம் பற்றி பேசியவர்) தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் . எனவே அவரின் கருத்தை கம்யுனிஸ்டின் கருத்தாக நீங்கள் கருதும் போது அது உங்களின் புரிந்தலின் குற்றமே தவிர வினவின் குற்றம் அல்லவே !

          • ஜோசப், கடந்த மூன்றாம் தேதியே என்னுடைய பின்னுட்டத்தில் (2.2.2.1.1.2.1) “மற்றபடி மதத்தின் மீதான என் கருத்து என்னவென்றால் மதம் அது எதுவென்றாலும் மக்களை அதனுள் அடிமைபடுத்தி அவர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்க இயலாத நிலைக்கு தள்ளுவது தான் மதத்தின் கடமையாக இருக்கிறது.”” என்று குறிப்பிட்டு உள்ளேன்…

           மேலும்30 dec அன்றே என் பின்னுட்டத்தில் (2.2.1) மதங்கள் மீதான பாமாவின் கீழ் கண்ட கருத்தை உங்களுக்கு அளித்து மதங்களின் மீதான மாயை பற்றி கூறி இருந்தேன்.
           “சொந்த மண்ணில் தலித்களுக்கு அவமானம் என்றில்லை…. ஆண்டவன் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி…..இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடு இல்லை.இது தான் இன்றும் இருக்கும் கொடுமை..இந்தக் கொடுமைகளை எதிர்த்த போராட்டமே ‘கருக்கு” ஆக உருவெடுத்து உள்ளது.”

           ஆனாலும் இவற்றை எல்லாம் படித்து உணராமல் நீங்கள் பொறுமை இன்றி பேசிக்கொண்டு இருபது உங்களின் ஆவேசத்தை மட்டுமே காட்டுகின்றேதே தவிர உங்கள் அறிவை வெளிகாட்டவில்லை…
           Joseph said :/// ஒரு வழியா எந்த மதத்துலும் கொள்கை அளவிலும் நடமுறயிலும் சமத்துவம் இல்லை என்று ஒப்புக்கொண்டதற்க்கு நன்றி அனா இசுலாமில் நடைமுறையில் சமத்துவம் இருப்பதாக ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டையை கம்மூனிஸ்டுகள் காட்டுகிறார்கள் இசுலாம் சமத்துவத்தை போதிக்கும் மதம் என்று.///

    • செந்தில்குமரன்,கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை.கிறிஸ்தவர்களிடம் ஜாதி தொற்றிக்கொண்டுவிட்டது உண்மை.இஸ்லாம் இயல்பிலேயே மிக வீரியமான எதிர்ப்பு மருந்தை கொண்டிருப்பதால் முஸ்லிம்களிடம் அவை தொற்றுவதற்க்கு வாய்ப்பேயில்லை.ஆனால் இந்த ஜோசப்பின் விவாதம் ஏதாவது அர்த்தத்தோடு இருக்கிறதா?முதலில் ஜாதியை பற்றிய விவாதமே இந்த கட்டுரைக்கு அர்த்தமற்றது.அதையும் தாண்டி முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை காபிர்கள் என் கிறார்களாம்.இது ஜாதி சம்மந்தபட்டதா?தமிழனை தமிழன் என்று அழைப்போம்.தமிழன் அல்லாதவனை தமிழனல்ல என்றுதானே அழைப்போம்.கடவுளை கடவுளுக்கென்று ஒரு இலக்கனத்தை வகுத்து அந்த வரயறையோடு இஸ்லாம் நம்ப சொல்கிறது.அது அல்லாதவர்களை கடவுளை நம்பாதவர்கள் என் கிறது.இதன் அரபு பதம்தான் காபிர் என்ற வார்த்தை.உதாரணத்திற்க்கு என் பார்வையில் ஜோசப் காபிர் என்றால்,ஜோசப் பார்வையில் நான் காபிர்தான்.நான் டிரினிடி எனப்படுகிற முக்கடவுள் கொள்கையை நம்புவதில்லை.நான் கிறிஸ்தவன் இல்லை.கிறிஸ்தவர்களுக்கு நான் காபிர்.என்னுடைய ஏகத்துவ கொள்கையை,கடவுளுக்கு ஒருபோதும் மகன் தேவையில்லை என்ற கொள்கையை ஜோசப் ஏற்கவில்லை எனக்கு ஜோசப் காபிர்.இதில் எங்கே ஜாதி வந்தது?முஸ்லிம் அல்லாதவர்களை கொல்ல சொல்கிறது இஸ்லாம் என்பது, மணிகண்டன் கள் இன்னும் கொஞச நேரத்தில் ஆரம்பிக்க போவது,அதை இந்த ஜோசப் அழகாய் எடுத்து கொடுக்கிறது.இப்போது புரிகிறதா? இந்த ஜோசப்பை ஏன் கஞ்சி காய்ச்ச வேண்டும் என்று?ஜெயலலிதா சாவுக்கு பிரியாணி வைத்து கொண்டாடினேன் என்பதும் இது மாதிரியான சலம்பல்களில் ஒன்றுதானே தவிர நீங்கள் நினைப்பது போல் சமூக அக்கறையால் வந்த கொந்தளிப்பு கிடையாது.ஜோசப்பிற்க்கு இருக்கிற ஒரே தகுதி கையில் கணிணி இருப்பது மட்டும்தான்.அதை வைத்து கக்கூஸில் கிறுக்குபவன் கிறுக்குவதைப்போல கிறுக்குவது.பதில் சொல்ல எந்த தகுதியுமற்ற, ஆரோகியமான விவாதத்தை திசை திருப்ப மட்டுமே பயன்படுகிற ஒருவரின் வார்த்தைக்கு தயவு செய்து முக்கியம் கொடுத்து பதிலலிக்காதீர்கள்.

     • //ஜோசப் பார்வையில் நான் காபிர்தான்.நான் டிரினிடி எனப்படுகிற முக்கடவுள் கொள்கையை நம்புவதில்லை.நான் கிறிஸ்தவன் // அய்யா நான் மட்டுதான் காபீர் என்று உங்க மதம் சொல்லுது கிறிஸ்தவ மதத்துல முஸ்லீம்களை காபிர் என்றோ இல்லை வேறு எதும் பெயர் வைத்தோ அழைக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் ஆத்திரம் அதிகமாகி அது இது என்றெல்லாம் பேச வேண்டாம் கிறிஸ்துவர்கள் உங்களை காபிர்கள் என்றோ கொல்லப்பட தகுதியான்வர்கள் என்றோ எங்கும் சொல்லவில்லை உங்க மத மூடத்தனதை ஏன் கிறிஸ்தவத்தோடு கோர்த்து விடுகிறீர் உங்க மத மூடத்தனத்துக்கு கம்மூனிஸ்டுகள் யோக்கிய சர்டிபிகேட் கொடுக்கலாம் ஆனா எல்லாரும் குடுத்தே ஆகனும்னு எதிர் பாக்க கூடாது என்ன பிரியுதா….

      • இதுதான் மூளை அவிந்த வாதம்.கிறிஸ்த்தவ மதம் முஸ்லிகளை காபிர் என்று சொல்லுமா?இஸ்லாம் ,கிறிஸ்த்தவத்தையும் இயேசுவையும் பார்க்கும் பார்வை தனி.முஸ்லிம்கள் எனப்படுவோர் கிறிஸ்த்தவத்திற்க்கு பிறகு வந்தவர்கள் என்பதுதானே வரலாற்று பார்வை.பிறகு எப்படி கிறிஸ்த்தவம் முஸ்லிகளை பற்றி பேசும்?இயேசுவை ஏற்க்காதவர்களை கிறித்தவம் என்ன சொல்கிறது?பாவிகள் என் கிறது.பாவிகளை இரட்ச்சிக்க வந்தவராக இயேசுவை சொல்கிறது.அவரை பரிசுத்த ஆவியாக ஏற்பவர்களே பரலோகராஜியத்தில் நுழைய முடியும் என் கிறது.இப்படி அனைவரையும் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க வேண்டித்தானே தினகரன் பால்தினகரன் அவர் மனைவி மக்கள் இன்னும் மோகன்,சி லாசரஸ் போன்றவர்கள் அனுதினமும் எல்லா தொலைகாட்சிகளிலும் கூவி கூவி அழைப்பு விடுகிறார்கள்.நாங்கள் இதை எப்படி பார்க்கிறோம்? எங்களை பாவிகள் என்று அடையாளப்படுத்துவதில் எங்களுக்கு ஏதொரு வருத்தமும் இல்லை.ஐயோ பாவிகளா,”இப்படி கர்த்தரை மனித குடும்பமாய் கற்பனை செய்து மகன் என்றும் தாய் என்றும் கற்பனை செய்து இயேசு சொல்லாததை சொன்னதாக அவர் மீதே இட்டுகட்டி பொய்யை அவிழ்த்து விடுகிறீர்களே “என்று உங்களை பரிதாபமாகத்தான் பார்க்கிறோம்.நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பினால்தானே எங்களுக்கு ஆத்திரம் வருவதற்க்கு?”இறைவன் நீங்கள் கற்பனை செய்வதைவிட்டும் தூயவன்,அவன் யாரையும் பெறவில்லை யாராலும் பெறப்படவும் இல்லை.நீங்கள் வணங்குவது உங்கள் கற்பனைகளையே,நீங்கள் காபிர்களே “என்று எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் சொல்லும்பொழுது உங்களுக்கு கோபம் வந்தால் உங்கள் நம்பிக்கை பலவீனப்பட்டிருக்கிறது.ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற பயம் வருகிறது.அந்த பயம்தான் இப்படி பிதற்ற வைக்கிறது.ஜோசப்பே இயேசுவை உண்மையாய் விசுவாசியப்பா! விசுவாசம் உண்மையாயிருந்தால் காபிர் என்பதற்க்கு கோபம் வராது.”உளறுகிறான் துளுக்கன் “என்று போய்க்கொண்டே இருக்கலாம்.

       • ____என்ன தலிவா இன்னும் புரியவில்லயா நான் உங்கட்ட கேள்வியே கேக்க வில்லை இ ருந்தாலும் இன்னும் பொங்கலாமே ஆத்திரம் அதிகமாகி இப்படியெல்லாம் கத்தலாமா கம்மூனிஸ அறிவாளிகளே நான் கேட்டதுக்கு சும்மா இருக்கும் போது நீங்க ஏன் பொங்க வேண்டாமே…..யாயா அல்லா

        • பின் குறிப்பு கம்மூனிஸ்டுகளுக்கு யேசுவின் போதனைகளை பொலிட்டிகள் ரீதியா காப்பி அடிச்ச தத்துவமே கம்மூனிஸம் என்று சொல்லுகிறேன் இதை பொய் என்று நிரூபித்து கம்மூனிஸம் தனித்துவமானது யேசுவின் போதனைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்தால் நிருபிக்கிற மனுசனுக்கு நான் 2000 சன்மானம் தருகிறேன் அதை விடுத்து இசுலாம் சம்த்துவத்தை போதிக்கும் மதம் என்று கம்மூனிஸ்டுகள் நிரூபிக்க வேண்டும் அப்படி நிரூபித்தால் கூட 2000 சன்மானம் தருகிறேன் முடிந்த தோழர்கள் வரவும்நான் ஆவலோடி காத்து இருக்குறேன் ___________