Saturday, May 8, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்

விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்

-

chennai st joseph stundents  art (17)

ன்று சனிக்கிழமை 14.01.17 உழவர் திருநாள். ஆனால் தமிழக உழவர்களின் வீடுகள் இழவு வீடாக மாறி ஒப்பாரியும், ஓலமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல், ஈரோடு, கோவை, தேனி மாவட்டங்களிலும் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்த வண்ணமிருக்கின்றனர்.

இந்த சூழலில் நமக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக கும்பகோணம் கலைக்கல்லூரி மாணவர்களும், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்தியுள்ளனர். பொங்கலை கருப்புப் பொங்கல் என்றும் புறக்கணித்துள்ளனர். இம்மாணவர்களின் வரிசையில் தற்போது சென்னைக் கல்லூரி மாணவர்களும் இணைந்துள்ளனர்.

சென்னையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கல்லூரின் விஷுவல் கம்யூனிக்கேஷன் பிரிவு மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தமது தூரிகைகளை உயர்த்தியுள்ளனர். விவசாயிகள் சாவுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை தமது ஓவியங்கள் மூலம் அம்பலப்படுத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ள மாணவர்கள், பொங்கலையும் புறக்கணித்து தமது சமூக உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொங்கல் ஏற்பாடுகள் துவங்கிய போது கல்லூரியே இரண்டாக தான் இருந்தது. ஒரு பக்கம் பொங்கல் விழாவுக்கான ஏற்படுகள் நடந்துகொண்டிருந்தன. மறுபுறம் சமூக அக்கறை கொண்ட விஷுவல் கம்யூனிக்கேஷன் மாணவர்கள் நாட்டிற்கே உணவளித்த விவசாயிகளையும், அவர்களின் சாவுக்கு காரணமான குற்றவாளிகளையும் தமது தூரிகைகளில் தீட்டிக் கொண்டிருந்தனர். இரண்டே நாட்களில் 25 க்கும் மேற்பட்ட ஓவியங்களை இரவு பகலாக வரைந்து முடித்தனர்.

சமூகத்தில் பிற மாணவர்கள் எப்படி இருக்கின்றனரோ அப்படித் தான் இருந்தனர். ஆனால் விவசாயிகளின் பிரச்சினையை அறிந்துகொண்ட போது மாணவர்களுக்கே உரிய துடிப்பையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினர்.

மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார். காலையில் அந்த மாணவர் ஒவியத்தோடு வந்து இதை கூறிய போது கையை பர்த்து பதறிப்போய் இப்படி எல்லாம் செய்யக்கூடாது தவறு என்று கூறினோம். இது தவறு தான் எனினும் சமூகத்திற்காக கொதிக்கும் இந்த உணர்ச்சியை மதிக்க வேண்டும்.

chennai st joseph stundents  art (1)கடந்த இரண்டு நாட்களாக இந்த ஓவியங்கள் கல்லூரியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. கல்லூரியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஊழியர்களும் பார்வையிட்டு வருகின்றனர். இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஓவியத்தின் அதே உணர்ச்சிகளுக்கு ஆட்படும் சக மாணவர்களும், கல்லூரி ஊழியர்களும் மாணவர்களை பாராட்டிச் செல்கின்றனர்.

இந்தியாவில் மாநகராட்சி கழிப்பறைகள் தவிர அனைத்து இடங்களிலும் அமர்ந்து கொண்டு அதிகார வர்க்க நந்திகள் இடையூறு செய்வதும், அதிகாரம் செய்வதும் நாம் அறிந்ததே. இக்கல்லூரி கிறித்தவக் கல்லூரி என்றாலும் இங்கேயும் சில அதிகாரப் பதவிகளை அவாள்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும், காவிரில் தண்ணீர் வராவிட்டால் போர் போட வேண்டியது தானே, அதற்கு மோடி என்ன செய்வார் என்றெல்லாம் மாணவர்களிடம் கேள்வி கேட்டு குழப்புவது. அதிருப்தியை வெளிப்படுத்துவது, இந்த மாதிரி எக்சிபிசன் வைக்கிறதெல்லாம் தேவையில்லாதது என்று கூறி எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்திவிட முயன்றனர். ஆனால் அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மாணவர்களும், மாணவர்களுக்கு துணையாக நின்ற ஆசிரியரும் பதிலளித்தனர்.

மாணவர்களே சரியில்லை, சீரழுந்துவிட்டனர், பொறுக்கிகள் என்று கூறுவது உண்மையல்ல. மாணவர்கள் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். மாணவர்கள் தான் ஈழப்பிரச்சினையில் முன் நின்றார்கள்.

எனவே மாணவர்களை பொதுவில் பொறுக்கிகள் என்று முத்திரை குத்துவது தவறு. மாணவர்களை சமூகம் ஏன் அப்படி பார்க்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையை ஆளும் வர்க்கம் தனக்கேற்ப வடிவமைக்கிறது. தனக்கேற்ப இயங்க வைக்கிறது. தனக்கு எதிராக திரும்பி விடாமலிருக்க திசை திருப்புகிறது. அதற்காக நுகர்வு வெறியிலும், ஆபாசத்திலும், போதையிலும் ஆழ்த்துகிறது.

மாணவர்களும் இளைஞர்களும் இந்த குறுகிய வட்டத்தை விட்டு வெளியேறாமலிருக்க, உலகமே அந்த வட்டம் தான் என்கிற கருத்தை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து அந்த வட்டத்திற்குள்ளேயே அவர்களை இறுத்தி வைக்கிறது. வட்டத்தைவிட்டு வெளியேற அவர்களுக்கு வழிகாட்டுவதும், கைகொடுப்பதும் தான் நமது வேலை. அதை தொடர்ந்து செய்வோமானால் மக்களுக்காக போராட மாணவர்கள் திரள் திரளாக வீதிகளுக்கு வருவார்கள்.

கும்பகோணம், திருச்சி, சென்னைக் கல்லூரி மணவர்களை தமிழகத்தின் பிற பகுதி மாணவர்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்காக போராட வீதிகளுக்கு வர வேண்டும்.

  • படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

தகவல்:
செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க