privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !

தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !

-

ங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாருங்கள் பகிருங்கள்.

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

  • தமிழக விவசாயிகளுடைய அனைத்து வகைக் கடன்களும் ரத்து !
  • காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மின் கட்டணம் கல்விக் கட்டணம், பேருந்துக்கட்டணம் ஆகியவை அடுத்த அறுவடை வரை ரத்து !
  • ஜல்லிக்கட்டை நடத்த நிரந்தர சட்டம் !
  • மூடு டாஸ்மாக்கை !
  • ஆற்று மணல் தாது மணல் கிரானைட் போன்ற கனிமவளக் கொள்ளைக்குத் தடை !
  • நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கண்காணிக்கும் அதிகாரம் – மக்களுக்கே !
  • பணமதிப்புநீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு இழப்பீடு, உடனடிக் கடன் !
  • படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை !
  • தமிழகத்தை அழிக்க வரும் அணு உலை, நியுட்ரினோ, மீத்தேன் ஷேல் கேஸ், கெயில் குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை!
  • மீனவர்களின் வாழ்வாதாரம், உயிர்பாதுகாப்புக்கு உத்தரவாதம்!
  • பள்ளிக்கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வி !

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை,
உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது

தொடர்புக்கு 9962366321

Marina declaration

  1. தமிழக மக்களின் இந்த பிரகடனம் தான் ஆளும் வர்க்கம் சுட்டிக்காட்டும் விசயமான “ மெரினாவில் திவிரவாதிகள் “ என்ற செய்திக்கு பின்னணியாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் இத்தகைய தீர்மானங்களை பிரகடனம் செய்தால் ஆளும் வர்க்கம்,, அதிகார வர்க்கம் அதன் நிஜ முகத்தை…, ஓநாய்களின் குணத்தை காட்டிவிட்டு உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க