Monday, January 25, 2021
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

-

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர வேண்டும் என்கிறார் தோழர் ராஜு.

  1. எதிர்காலத்தில் மக்களின் எழுச்சியை தவிர்க்க

  2. பார்க்க பார்க்க நினைக்க நினைக்க நெஞ்சம் பதறினாலும் மாணவர்களும் குப்பத்து மக்களும் சிந்திய ரத்தம் பெரிய நன்மையை தமிழனுக்கு தமிழ் நாட்டிற்க்கு ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கிறது.2014ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பரப்பப்பட்ட பிரம்மாண்ட ஊடக பொய்யால் இந்தியாவே தடுமாறி விழுந்தது.தமிழ்நாட்டில் வேறூன்ற முடியாவிட்டாலும் பொய்,பரவலான தாக்கத்தை ஏற்படுத்தித்தான் இருந்தது.ஆட்சியில் அமர்ந்த காலத்திலிருந்து ,பொய்யால் உருவான மணற்கோட்டை பொருபொருவென்று உதிர்ந்து கொண்டே வந்தது.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுத்தமாய் துடைத்தெரியப்பட்டு விட்டது.இது சம்மந்தமாய் தொலைகாட்சிகளில் வந்த விவாதங்கள் செய்திகளை யுடியுபில் பார்க்கும் பொழுது, கீழ் உள்ள விமர்சனக்களில் எதிர்கருத்தே இல்லாத அளவிற்க்கு தமிழனின் ஒற்றுமை புல்லரிக்க வைக்கிறது.நேற்று நடந்த ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கூட அகிலா என்ற இளம்பெண்ணின் வாதத்தில் பஜக வாணதியின் முகம் கருத்து தொங்கியது.எவ்வளவு தெளிவான ஆனித்தரமான வாதம் தெரியுமா?H ராஜா வகையாறாக்களை கதிகலங்க வைக்கிற வாதங்கள்.ஏன் இந்த தளத்திலேயே தேசியம் என்ற அழுக்கு மூட்டையை தூக்கிகொண்டு யாருமே எட்டிக்கூட பார்க்கவில்லையே!வலி மறந்து போகிறது..தமிழனின் ரத்தம் விலை மதிப்பற்றது.

  3. இதுதான் பொறுக்கிகள் நடத்தும் பொறுக்கித்தன அரசியலின் வௌிப்பாடு.

  4. இனிமேல் இவ்விதப் போராட்டங்கள் அரசியல் தளத்தில் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற வயிற்றெரிச்சல்தான் போலீஸ் அராஜகத்துக்குக் காரணம். ஆனால் ஏவி விட்டவர்கள் யார் என்பதுதான் துல்லியமாகத் தெரியவில்லை. மோடி, பன்னீர்செல்வம், சசிகலா மாபியா குழு, ஜார்ஜ் என்ற மலையாளி, இப்படிப் பல ஹேஷ்யங்கள்.

  5. ஆரம்பம் முதலே மாணவர் போராட்டத்தை மதிய உளவு துறையும், தமிழ்னாடு காவல் துறையும் தன் கட்டுபாட்டில்தான் வைத்திருந்தது! போராட்டத்தை மீடியாக்கள் உதவியால் பூதாகரமாக்கி, உச்சநீதிமன்ற ஆணையை மீற முகாந்திரம் அமைத்து கொண்டதுடன், பொதுமக்கள் கவம் எதிர்கட்சிகளின் பாலும், இதர தமிழனுக்கு மிக அவசர தேவையான காவிரி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு பக்கம் ‘திசை திரும்பாமல்’ இருக்க அஙங்கே காங்காணிகளையும் வைத்திருந்தது! எப்போது குப்பத்து மீனவர்கள் – மாணவர்கள் உறவு ஏற்பட்டதோ அப்போதே மத்திய அரசும், தமிழக அடிமை ஆட்சியின் எஜமான் பி ஜே பியும் , போராட்டத்தை சமூக விரோத சக்திகள் எடுத்து கொண்டதாக வதந்தியை கிளப்பி விட்டனர்; போலிசும் அதைநிரூபிக்க, அரைவேக்காட்டுநாடகம்நடத்தியது, அதுவும் அம்பலப்பட்டு போக , ஆத்திரம் கொண்டு குப்பத்து மக்களின்பால் தனது ‘வீரத்தை’ காட்டியது ! திரை மறைவில் தான் இருப்பதை , வெளிப்படையாக ஆர் எஸ் எஸ் , ஒரு எச்சரிக்கை ஊர்வலம்நடத்தி காட்டியது! மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேக்கு வீரவணக்கம் செய்ய , இந்த தேச துரோக கும்பலுக்கு எதிர்ப்பு இருக்க கூடாது என்பதும் , போலிசின் முன்னெச்சரிக்கை , குப்பத்து வெறி தாக்குதலுக்கும், இஸ்லாமிய சமூகம் குறிவைக்கப்பட்டதற்கும் காரணமாயிருக்கலாம்! மாணவர்களை பயன்படுத்தி கொண்ட வர்கள் இப்போது ஆளும் கட்சிக்கு துதிபாடுகிறார்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க