Tuesday, April 13, 2021
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு கலவரம் செய்த போலீசை கைது செய் ! திருச்சி - சென்னையில் ஆர்ப்பாட்டம்

கலவரம் செய்த போலீசை கைது செய் ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்

-

மாணவர்கள் பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் !
தீ வைப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காவல் துறையினரைக் கைது செய் !
பணிநீக்கம் செய் !

கண்டன ஆர்ப்பாட்டம்

10 x 3 PRPC Print

நாள் : 30.01.2017
இடம் : விக்னேஷ் ஓட்டல் அருகில்,மத்திய பேருந்து நிலையம், திருச்சி.
நேரம் : திங்கள் மாலை 5.00 மணி.
            

தலைமை :
வழக்கறிஞர் ப.முருகானந்தம்
, B.A.,B.L.,
மாவட்ட செயலாளர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

கண்டன உரை :

 • வழக்கறிஞர். சீனிவாசன், B.COM.,B.L.,  தலைவர்
  திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம்
 • வழக்கறிஞர் ராஜேந்திரகுமார்,
  தலைவர், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், திருச்சிராப்பள்ளி
 • வழக்கறிஞர் மருதநாயகம் ,  மூத்த வழக்கறிஞர் திருச்சி
 • வழக்கறிஞர் இரா ஆதிநாரயணமூர்த்தி.B.COM.,BL,
  (செயற்குழு உறுப்பினர்), மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி
 • சே.வாஞ்சிநாதன் BSC.,B.L., (வழக்கறிஞர் பணிநீக்கம்)
  மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
 • வழக்கறிஞர் சு.  ஜோதி, B.A., B.L.,  திருச்சி.
 • காவேரிநாடன், தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி
 • நன்றியுறை : வழக்கறிஞர். மா.சிவசங்கர், M.A.,B.L.,
  செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

PRPC

அன்பார்ந்த பொதுமக்களே ! வழக்கறிஞர்களே ! மாணவர்களே !

கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஒன்று. இப்போராட்டத்தை இந்தியாவே ஏன் உலகமே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர், அறிவுஜீவிகள், என அனைவராலும் பேசப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட போராட்டம் வன்முறை வெறியாட்டமாக மாற யார் காரணம்.? கலவரத்தை நடத்தியவர்கள் யார்?

கடந்த 16.01.2016 தொடங்கிய இந்த போராட்டத்தில் எந்த அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ தன்னுடைய அடையாளத்தோடு பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தை ஆதரித்து பங்கேற்றுள்ளனர். இது எதுவும் யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. தொடங்கிய நாளிலிருந்தே ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்லாமல் தமிழர்களின் உரிமையான காவிரி , நீட் தேர்வு , சமஸ்கிருத திணிப்பு,ம் மீனவர் பிரச்சினை போன்றவற்றையும் உள்ளடக்கியே அனைவரும் பேசினர். ஆரம்பம் முதலே காவல்துறை , போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது போன்ற  தோற்றத்தினை மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வந்தது..

தொடங்கியதிலிருந்து ஆறு நாட்களாக காவல் துறையுடன் சிறு முரண்பாடுகூட ஏற்படாததுடன் காவல்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ஏழாவது நாள்  அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் போராடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து அவர்களை களைக்க முயன்றதேன் ? ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பற்றி வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து கலைந்து செல்வதாகவும் அதற்கு இரண்டு மணிநேரம் மட்டும் அவகாசம் கேட்டதை கூட அனுமதிக்காமல்  அவசரகதியில் அடித்து துரத்தும் வேலையில் காவல்துறை  அராஜகமாக ஈடுபட்டதேன். என்ற கேள்விகளை அனைவரும் எழுப்புகின்றனர் ஆனால், அரசும் காவல் துறையும் தங்கள் ஜனநாயக விரோத, சட்டவிரோத செயலை நியாயப்படுத்துவதற்காக மாணவர்களையும் அவர்களை ஆதரித்து வந்த ஜனநாயக சக்திகளையும் வன்முறையாளர்களாக சித்தரிக்க முயன்றுள்ளது. இதற்காக தானே திட்டமிட்டு குடிசைகளுக்கு தீ வைத்தல், வாகனங்களை கொளுத்துதல், பொதுச் சொத்துகளை சேதப் படுத்துவது போன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டுள்து. குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொது மக்களைத் தாக்கி கைது செய்து பீதியூட்டி வருகிறது. இவையனைத்தும் சமுக ஊடகங்கள் வழியே பல்வேறு ஊடகங்களில் அம்பலமாகி  மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். இந்த வன்முறையை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், கோவை மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், காவல் நுண்ணறிவுத்துறை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்களை கொண்டு காவல்துறையும் அரசும்  நிறைவேற்றி இருக்கிறது.

முல்லை பெரியாறு, கூடங்குளம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான  பிப்ரவரி 19 தாக்குதல் போன்ற அனைத்திலுமே போராடியவர்கள் மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்ற சாயத்தை ஊற்றி தனது கோர முகத்தை மறைப்பதில் கைதேர்ந்தது இந்த காவல்துறை.

அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையையும் அரசியல், பண்பாட்டு உரிமைகளையும் இழந்து நிற்கும் மக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயம் அழிந்த விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்ட எழச்சி அத்தகைய பல பிரச்சினைகளுக்கானதாகவும் மாறிவிடக்கூடாது என்ற அரசின் அச்சத்தின் விளைவாகவே போராட்டத்தை அவசர அவசரமாக முடிக்க முயற்சித்தது. அதற்காக ஜனநாயக விரோத, சட்ட விரோத வழிமுறைகளைக் கையாள முயற்சித்துள்ளது.

அரசியலைப்பு சட்டம் ஷரத்து 14,  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. அந்த வகையில் இந்த கலவரத்தை ஏற்படுத்திய காவல் துறையினர் அனைவரும்  தண்டிக்க பட வேண்டியவர்களே!  தீ வைத்து தனிநபர் சொத்துக்களை சொத்தழிப்பு செய்தது, பொதுசொத்துகளை சேதப்படுத்தியது, கொடுங்காயம் ஏற்படுத்தியது, கொலைமுயற்சி மற்றும் கருவில் இருந்த சிசுவை எட்டி உதைத்து அதை கொலை செய்தது, பெண்களை மாணபங்கபடுத்தியது , உள்ளிட்ட இந்திய தண்டணை சட்ட பிரிவுகளின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அவர்கள் அரசியலைப்பிற்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்களல்ல. அந்த வகையில் கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களே!

நீதித்துறையே !

 • காவல் துறையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது மட்டுமே நீதியாகாது.
 • காவல் துறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் நீதித்துறை முனைவு (JUDICIAL ACTIVISM) கொண்டு வழக்குபதிவு செய் ! கைது செய்து விசாரணை செய்ய உத்திரவிடு! பணிநீக்கம் செய் !

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி. 94875 15406

_________________

PP Logo

போலீசு ராஜ்ஜியம் எழுந்துநின்ற தமிழகமே ! எதிர்த்து நில்!

ஆர்ப்பாட்டம்


நாள் : 30.
01. 2017
நேரம் : மாலை 4 மணி
இடம் : குமணன் சாவடி (பூந்தமல்லி அருகில்), சென்னை.

 • பொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசுதான், போராடுபவர்கள் அல்ல !
 • அமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் ! கைது செய் !

தலைமை : தோழர். வெற்றிவேல செழியன்,
சென்னை மண்டலஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

உரைவீச்சு :

 • தோழர் இளஞ்சேகுவேரா, தலைமை நிலையச்செயலர், விசிக
 • தோழர் கே.சுகுமார் வழக்கறிஞர், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ
 • தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில மாணவரணிச் செயலர்,திக
 • தோழர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர்,சென்னை மாவட்டச் செயலர், சிபிஐ  – எம்.எல்
 • தோழர் அஜிதா, இணைச்செயலர், சென்னைக்கிளை,பெண்கள் விடுதலை முன்னணி
 • தோழர் கார்த்திக்கேயன், மக்கள் கலை இலக்கியக் கழகம்
 • தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் அதிகாரம்

 தகவல் :
தோழர்.வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.91768 01656.

 1. ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் போது ஈராக்கிய பொதுமக்களை பிடித்து இதோ தீவிரவாதி என்று சுட்டுக்கொன்று தன்னுடைய ஊடகங்களுக்கு நேரடி ஒளிபரப்பை நிகழ்த்தியது அமெரிக்க இராணுவம். இதன் மூலம் உலகம் முழுவதும் அம்பலப்பட்டு
  நாறியது அமெரிக்க அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான போர். அமெரிக்கா தான் உலகின் மிகப்பெரிய தீவிரவாதி என்று உலகமெ காரித்துப்பியது. ஆயினும் அமெரிக்க அரசு
  தண்டிக்கப்படவில்லை.

  அமெரிக்கா மட்டுமல்ல தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

  பொதுவாக காவல்துறையும் ஊடகங்களும் ஒன்றாக தான் வேலை செய்வார்கள். அதாவது காவல்துறை அளிக்கும் தகவல்களை தான் பத்திரிக்கைகள் பெரும்பாலும் வாந்தியெடுக்கும்.

  மக்கள் தாங்களாகவே கலவரம் செய்யவில்லை. இந்த நிலை நீடித்தால் ஆளும் வர்க்கத்திற்கு தான் பிரச்சினை.

  அதனால் அரசு காவல்துறை ரவுடியினரை ஏவி விட்டு வன்முறையில் ஈடுபட செய்தது. இம்முறையும் பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு துரோகமே இழைத்தன.

  முதலில் கார்கள், ஆடோக்கள், பைக்குகள் என தீயிட்டது மாணவர்கள் தான் என்றும் பின்னர் அம்பலப்பட்டவுடன் தனித்தமிழ்நாடு கோரிக்கை, பின்லேடன் படம் போட்ட பைக், நக்சலைட்டுகள், ஜல்லிகட்டை தவிர வேறு பிரச்சினையை பேசுவது என்று ஊடகங்கள் அரசுக்கும் போலீசுக்கும் சிறப்பாகவே ஒத்து ஊதினர். ஆயினும் மக்கள் மத்தியில் அரசுடைய உறுப்புகள் அனைத்தும் அம்பலப்பட்டு நாறுகிறது.

  ஊடகங்கள் என்பது ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்ய தான் என்ற பாலபாடத்தை இதுகாறும் மக்கள் தனித்தனியே தங்களது சொந்த அனுவவங்களில் இருந்து உணர்ந்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தமிழகமும் இன்று உணர்ந்து இருக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க