Saturday, January 16, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா குறுஞ்செய்திகள் - கேலிச்சித்திரங்கள்

குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்

-

டொனால்ட் ட்ரம்பின் மவுனத் திறப்பு மோடியை நினைவுபடுத்துகிறது!

முசுலீம் மக்கள் மீதான வன்மத்தில் ‘உத்தமர்கள்’ மோடிக்கும், ட்ரம்புக்கும் வேறுபாடு கிடையாது. வங்கதேச ஏழைகள் இந்தியாவில் வேலை பார்ப்பதை இந்துமதவெறியர்கள் எதிர்ப்பது போல மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை வெள்ளை நிறவெறியர்கள் எதிர்க்கிறார்கள். கன்சாஸ் மதுவறை துப்பாக்கிச் சூட்டில் இந்தியரான ஸ்ரீனிவாஸ் கொல்லப்பட்ட போது வாய் மூடியிருந்த ட்ரம்ப் மார்ச் 1 புதனன்று கண்டிப்பது போன்று பாவனை செய்கிறார். கொள்கையில் பிரிந்திருக்கலாமே ஒழிய வெறுப்பு மற்றும் தீய நடவடிக்கைகளை எதிர்ப்பதில் நாம் ஒன்றுபட வேண்டும் என்று ஓநாய்க் கண்ணீர் வடிக்கிறார் டிரம்ப். தாத்ரி படுகொலையாகட்டும், உனா தலித் மக்கள் மீதான தாக்குதலாகட்டும் மோடியும் கூட இதே நாகரீகத்தோடுதான் சில பல நாட்கள் கழித்து “வருந்தத்தக்கது” என்றார்.

ஹிட்லர் கண்ணீர் வடித்தார் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி போடுமளவு ‘கலியுகம்’ முற்றிவிட்டது!

_________________

எச்சரிக்கை: கொலைவெறி நாய்!
“கவனம் – உள்ளே கோபக்கார லூசு நாய் அலைகிறது!” -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியிருக்கும் வெள்ளை மாளிகையில் தொங்கும் எச்சரிக்கைப் பலகை!
கார்ட்டூன் நன்றி: கிரீஸ் நாட்டைச் சேர்ந்த Dino, Cartoon Movement.


புதிர் போட்டி: அத்தனைக்கும் ஆசைப்படும் ஜக்கியின் ஆதி யோகி பொம்மைக்கு மாடலிங் செய்தவர் யார் ?

________________________

No comment

_________________

“காஷ்மீரில் கல்லெறிபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்றே கருதுப்படுவார்கள்”
– இராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத்
கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi


மக்கள் அதிகாரப் போராட்டம் வென்றது

_________________

– வினவு ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்:

 1. மூன்றாம் உலக நாடுகளின் விடயத்தில் ட்ரம்ப் எடுத்த நிலைப்பாடு மிக சரியானதே. ஏற்கனவே, அமெரிக்க அகதிகளின் வருகை, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி ஆயிர கணக்கான மக்கள் வருகையினால் over loaded ஆகி விட்டது. இது அங்கிருக்கும் உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நிலைமை அளவிற்கு கைமீறி செல்வதால், மேற்கண்ட முடிவினை ட்ரம்ப் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உள்நாட்டு வேலை வாய்ப்புகளையும் , கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்க்காக, TPP(Trans-Pacific Partnership)எனப்படும் பசிபிக் நாடுகளை சேர்ந்த பெரு முதலாளிகளுடன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் ரத்து செய்தார். மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மக்கள் வருவதை கட்டுப்படுத்துவது என்பதை மேற்கண்ட TPP விடயத்தோடு சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

  மற்றபடி இசுலாமிய நாடுகள் மீதான தடை என்பது ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளே புகாமல் இருக்க வேண்டும் என்கிற பாதுகாப்பு காரணத்திற்காக தான். இதில், இடதுசாரிகள் குற்றம் சாட்டுவதை போல், இசுலாமியர்களின் மீதான காழ்ப்பு என்பதெல்லாம் இல்லை. காழ்ப்புணர்வு என்பது இங்கு கம்யுனிஸ்டுகளிடம் தான் இருக்கிறது. ட்ரம்ப் அனைத்து இசுலாமிய நாடுகளையும் தடை செய்ய வில்லையே. சவூதி, இந்தோனேசியா, மலேசியா, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற இசுலாமிய நாடுகளுக்கு எந்த தடையையும் அமெரிக்கா விதிக்கவில்லை எனப்து குறிப்பிடதக்கது.

  • இராக்கியர்களும் சிரியர்களும் இன்றைக்கு வீடிழந்து தொழில் இழந்து நிற்பதற்கு அமெரிக்காவின் பொய்யான போரே ஆதி காரணம் .

   சவூதி மற்றும் ஈரான் இடையேயான சன்னி சியா சாதி சண்டை சிரியாவில் உக்கிரமடைந்தற்கும்,ஐசிஸ் உருவானதற்கும் சதாம் போன்ற சர்வாதிகாரி ஒழிக்கப்பட்டதே காரணம்.

   இப்படி தெருவில் நிற்க்க வைத்து விட்டு, என் வீட்டிற்குள் வராதே என்பது தார்மீக ரீதியாக தவறானதாகும் .

   • போர் தொடுத்தது, ஒபாமாவும், ஜார்ஜ் புஷும் தான் ட்ரம்ப் அல்ல. ஆகவே, ட்ரம்ப் இதற்காக கவலை படவேண்டியதில்லை. சரி அமெரிக்காகாரன் இந்த நாடுகளை தெருவில் நிற்க வைத்து விட்டான். இதற்க்கு என்ன தீர்வு, நாட்டை விட்டு அகதியாக ஓடிப்போவதா? நிச்சயமாக இல்லை, அந்த நாட்டிலேயே இருந்து, ஏகாதிபத்தியத்திற்கும், அது தோற்றுவித்த பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும். போராடி வளர்ச்சி பாதையில் நாட்டை மீட்க வேண்டும், நமது ஜப்பானை போன்று.அது தான் நிரந்தர தீர்வு.

    ஆனாலும் நீங்கள் வருந்த வேண்டாம், இராக் மீதான தடையை ட்ரம்ப் நீக்கி விட்டார். மற்ற ஆறு நாடுகளுக்கும் தடை பொருந்தும், அதுவும் அடுத்து வரும் 90 நாட்களுக்கு மட்டும் தான். எனினும், இந்த தடை நீட்டிக்கப்பட்ட மேற்படி ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி கிரீன் கார்ட் பெற்றவர்கள், முறையான வீசா வைத்திருப்பவர்களுக்கு தடையுத்தரவு பொருந்தாது என்று தெரிவிக்க பட்டுள்ளது. So,கவலை வேண்டாம்.

    இருந்தாலும் ராமன், உங்களின் இந்த ஜனநாயக முகமூடி மிக சூப்பராக இருக்கிறது. நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். என்ன இருந்தாலும் மார்க் ஜூகர்பேர்கும், பில் கேட்ஸும், வாரென் பபெட்டும் தயாரித்தது அல்லவா, நன்றாகத் தான் இருக்கும். சாவேசின் வெனிசுலா மக்களுக்கோ அல்லது காஸ்ட்ரோவின் கியூபா மக்களுக்கோ கடுகளவும் பயன்படாது என்றாலும், ட்ரம்ப்பை எதிர்த்து முசுலீம்களுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிக்க பயன்படும். பார்த்து கிழிந்து விடாமல் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    கொசுறு:- நேற்று வரை ட்ரம்ப்பை, இசுலாமிய அரக்கர்களை அழிக்க வந்த விஷ்ணுவின் பதினோராவது அவதாரமாக பார்த்து வந்த அம்பிகள் அனைவரும். H1B வீசா மீதான கடுமையான நடைமுறைகளுக்கு பிறகு ஆன்சைட் கனவில் பெரிய ஓட்டை விழுந்து விட்டதாலும், ‘வட போச்சே’ என்கிற வயித்தெரிச்சலினாலும் இப்போது அனைவரும் ட்ரம்பை காய்ச்சி எடுக்கும் ஜனநாயகவாதிகள் ஆகி விட்டார்களாம். இதற்க்காகவாவது ட்ரம்ப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    • ஒரு வேளை மாற்று கருத்து கூறினால் அவர் h1b விசா கிடைக்காததால் சொல்கிறார் என்று பொடி வைத்து எழுதி இருக்கிறார் அம்மணி. பலே ! 🙂

     நாம் தமிழரை ஆதரிக்கும் நீங்கள் நாம் அமெரிக்கர் கட்சியை ஆதரித்தில் வியப்பேதும் இல்லை

     “இந்த குறிப்பிட்ட மக்களே இப்படித்தான் ,அவங்க புத்தி அப்படித்தான்
     ” என்று வகை படுத்தி பிரிப்பது தான் பார்ப்பனீயம் . அது எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்கப்பட வேண்டும். பார்ப்பனர்கள் எல்லோரும் இப்படித்தான் என்ற கூற்றையும் கூட அதே வகையில் சேர்த்து தான் பார்க்கிறேன்

     //போர் தொடுத்தது, ஒபாமாவும், ஜார்ஜ் புஷும் தான் ட்ரம்ப் அல்ல. ஆகவே, ட்ரம்ப் இதற்காக கவலை படவேண்டியதில்லை
     //

     அமெரிக்க அரசு தான் போர் தொடுத்தது , செனட் சபை ஒப்புதல் எல்லாம் பெறப்பட்டது . இதை ஏதோ தனி நபர் செய்ததாக ,போனது போகட்டும் என்று ஒதுக்கி வைக்க முடியாது .

     பாகிஸ்தானுக்கும் சவூதிக்கு கதவை திறந்து வைத்து விட்டு, தீவிரவாதிகள் வரமாட்டார்கள் என்று கூறுவது உண்மையிலேயே நாட்டை காக்கும் சிந்தனை அல்ல .ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தனிமை படுத்தி பிரிவினை வளர்ப்பது தான் நோக்கம் , பயங்கரவாதத்தை அழிப்பது அல்ல.

     //இதற்க்கு என்ன தீர்வு, நாட்டை விட்டு அகதியாக ஓடிப்போவதா? நிச்சயமாக இல்லை, அந்த நாட்டிலேயே இருந்து, ஏகாதிபத்தியத்திற்கும், அது தோற்றுவித்த பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்//

     இது என்ன சத்தியாகிரக போராட்டம் என்று நினைத்துவிட்டேர்களா ?
     சிரியா நாடு ஏற்கனவே சாதி சண்டையில் அடித்து கொண்டு இருந்தார்கள். சவூதியும் ஈரானும் ஆளுக்கு ஒரு பக்கம் துப்பாக்கி கொடுத்து போர்களமாக்கி விட்டு இருந்தார்கள் . வெளிநாட்டு போர் போர் வீரர்களை எதிர்ப்பார்களா ? உள் நாட்டு சர்வாதிகாரியை எதிர்பார்களா ? உள் நாட்டு சர்வாதிகாரியை எதிர்க்கும் உள்நாட்டு போர்வீரர்களை ஆதரிப்பார்களா ?
     இப்படி பல பிரச்சினையில் இருந்த போது மிருகத்தனமான மதவெறி கொண்ட isis என்ற, சதாமின் முன்னாள் ஈராக்கிய ராணுவ வீரர்களால் பயிற்றுவிக்கப்பட்ட கொடூர அமைப்பு பிரச்சனையை மேலும் பெரிதாக்குகிறது .

     இந்த பிரச்சனியா எல்லாம் போதாது என்று அமேரிக்கா ரஷ்யாவின் கவுரவ பிரச்னை வேறு ?

     டாக்டர்களும் எஞ்சிநீர்களும் துப்பாக்கி தூக்கி, அரசு ஆதவரவு பெட்ரா குழுக்களோடு போராட முடியாது

     //இதற்க்காகவாவது ட்ரம்ப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும்.//

     இட்லி சுடும் டீக்கனாலஜி வைத்து கொண்டு , ஏகடியம் வேறு ?
     பக்கத்துக்கு ஊட்டுக்காரன் பலசாலி , ஏன் தம்பி கைய ஒரே அடியில ஓடுச்சுட்டாரு என்று சந்தோசப்படுகிறீர்கள் .

     இது தான் மதவெறி இனவெறி தரும் அல்ப சுகம்

     • //ஒரு வேளை மாற்று கருத்து கூறினால் அவர் h1b விசா கிடைக்காததால் சொல்கிறார் என்று பொடி வைத்து எழுதி இருக்கிறார் அம்மணி. பலே//

      அப்போ அது உண்மை இல்லை என்கிறீர்களா. ஆன்சைட் ‘ஓசி சோறு போச்சேன்னு’ வருத்தம் இல்லையா.. சந்தோசம் தான்.

      //ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தனிமை படுத்தி பிரிவினை வளர்ப்பது தான் நோக்கம் , பயங்கரவாதத்தை அழிப்பது அல்ல.//

      அப்படியா… பாகிஸ்தான்னுக்கும் சவுதிக்கு இல்லாத பிரிவினை அப்படி சிரியாவுக்கு என்ன இருக்காம் எனக்கு புரியல. ஒரு வேளை பாகிஸ்தானும் சவுதியும் இசுலாமிய நாடுகள் இல்லையோ.

      // உள் நாட்டு சர்வாதிகாரியை எதிர்பார்களா ? உள் நாட்டு சர்வாதிகாரியை எதிர்க்கும் உள்நாட்டு போர்வீரர்களை ஆதரிப்பார்களா ?//

      உள்நாட்டு சர்வாதிகாரம்,உள்நாட்டு குழப்பம், வெளிநாட்டு சதி, அண்டை நாடு செய்யும் சுழுச்சி இப்படி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பெயர் தான் போராட்டம், புரட்சி என்பதெல்லாம். அதனை செய்ய வேண்டும். இது தான் சாக்கு என்று தன் நாட்டை விட்டு அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவுக்கும் ஓடி போக கூடாது. நியாயமாக பார்த்தால் மோடி போன்ற அயோக்கியர்கள் ஆட்சியில் இருப்பதற்கு இந்தியாவில் இருந்து தான் பாதிக்கு மேற்பட்டோர் இந்த நாட்டை விட்டு அகதியாக ஓட வேண்டும்.

      விஷயம் என்னவென்றால்,ட்ரம்பின் இந்த செயல்பாட்டை அமெரிக்காவின் 32 கோடி மக்களும் எதிர்ப்பது போன்று ஒரு பொய்யான பிம்பம் ஒன்றை ட்ரம்ப் எதிர்ப்பு ஊடகங்கள் கட்டமைக்கின்றன, பசிபிக் நாடுகளை சார்ந்த பெரு முதலாளிகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததையே, பெரிய ஜனநாயக விரோத செயலாக சித்தரித்து செய்தி வெளியிட்டவை தான் மேற்படி ஊடகங்கள். ஆனால் உண்மை அதற்க்கு மாறானது. பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் அனைவரும் ட்ரம்பின் செயல்களை ஆதரிக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக மேற்படி தடையை ஆதரிக்கவே செய்கிறார்கள். அதற்க்கு ஆதாரம் கீழே.

      http://www.telegraph.co.uk/news/2017/02/10/americans-still-support-donald-trumps-immigration-ban-poll-shows/

      இதற்க்கு மேல் வலுவான ஆதாரம் வேண்டுமென்று நினைத்தால், உடனே கூகிளுக்கு பொறுக்க போக வேண்டாம். உங்கள் உறவினர் யாரவது அமெரிக்காவில் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளவும்.(இதை படித்து விட்டு, நான் அமெரிக்காவில் இருந்து தான் கருத்து பதிவிடுகிறேன் என்று எத்தனை போலிகள் கிளம்பப் போகிறார்களோ)

      2 ,3 லட்சம் பேர் ஓரிடத்தில் கூடி(இவர்கள் பெரும்பாலும் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அங்கு சென்று குடியேறியவர்கள்) ட்ரம்பிற்கு எதிராக கோஷம் எழுப்புவதை ஒரு பெரும் கூட்டமாக காட்டி, பாருங்கள் அமெரிக்காவே ட்ரம்பை எதிர்க்கிறது என்ற மிகை படுத்தல் செய்திகள் தான் வெளியிட படுகின்றன. ஒரு வேளை, ட்ரம்ப் அதிபரானால் அமெரிக்காவை விட்டே போய் விடுவேன் என்று கூறிய பிபிசி செய்தி நிறுவனம், சொன்ன சொல்லை காப்பாற்றாமல் இன்னும் அங்கு குப்பை கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. So,பெரும்பான்மை மக்கள் விரும்பாத யாரும் அமெரிக்காவில் அல்ல ஆப்ரிக்காவில் கூட ஜனாதிபதியாக ஒரு நாள் கூட குப்பை கொட்ட முடியாது என்பது தான் உண்மை.

      //நாம் தமிழரை ஆதரிக்கும் நீங்கள் நாம் அமெரிக்கர் கட்சியை ஆதரித்தில் வியப்பேதும் இல்லை…//

      நாம் தமிழரை தமிழர்களாகிய நாங்கள் தான் ஆதரிக்க முடியும், எங்கிருந்தோ கேரளாவில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கு அதில் உவப்பில்லை என்றால், அதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை தான். ஒரு வகையில் ட்ரம்ப் எதிர்ப்பை இங்கு இருந்தும் நாம் புரிந்துக் கொள்ளலாம்.

      • //அப்படியா… பாகிஸ்தான்னுக்கும் சவுதிக்கு இல்லாத பிரிவினை அப்படி சிரியாவுக்கு என்ன இருக்காம் எனக்கு புரியல. ஒரு வேளை பாகிஸ்தானும் சவுதியும் இசுலாமிய நாடுகள் இல்லையோ.//

       சவூதி குடிமக்களே இரட்டை கோபுர கொலைகளுக்கு காரணம்
       பாகிஸ்தான் பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது
       நாட்டை காக்கும் எண்ணம் உள்ளவன் இதற்கு நடவடிக்கை எடுத்திருப்பான்.

       //. இது தான் சாக்கு என்று தன் நாட்டை விட்டு அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவுக்கும் ஓடி போக கூடாது//

       உடனே உங்கள் தலைவரிடம் இதை எடுத்து சொல்லி , இலங்கை அகதிகளுக்கு புத்தி மதி கூறி திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் .
       ஐரோப்பாவில் தஞ்சம் அடைத்திருப்பவர்களையும் திரும்ப சொல்லி குறுந் செய்தி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

       //விஷயம் என்னவென்றால்,ட்ரம்பின் இந்த செயல்பாட்டை அமெரிக்காவின் 32 கோடி மக்களும் எதிர்ப்பது போன்று ஒரு பொய்யான பிம்பம் ஒன்றை ட்ரம்ப் எதிர்ப்பு ஊடகங்கள் கட்டமைக்கின்றன//

       ஹிடலரின் செய்கையை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தார்கள் .
       அடுத்து இங்கே விவாதம் அமெரிக்கர்களுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல , தார்மீக கடமை இருக்கிறதா இல்லையா என்பது தான் .

       கர்ப்பமான காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தார்மீகமான கடமை .

       காதலுனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை , அவர் வீட்டில் இருப்பவர்களுக்கும் விருப்பம் இல்லை என்று நீட்டி முழக்கி பிரச்சாரம் செய்கிறீர்கள் .

       கடமைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வித்தியாசம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் . இது வெறும் உதாரணம்.

       //எங்கிருந்தோ கேரளாவில் இருந்து இங்கு பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கு

       நியாயமாக பார்த்தால் மோடி போன்ற அயோக்கியர்கள் //

       தமிழ் மொழி வெறி கொண்ட நீங்கள் ஏதோ புனிதர் போலவும் , மத வெறி கொண்டவர்கள் மட்டும் அயோக்கியர்கள் போலவும் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் .
       இதில் நீங்கள் கூட்டு பிரார்த்தனை வேறு செய்கிறீர்களாம் ஜீசஸ் செவி சாய்க்க வேண்டுமாம் . ஐயோ பாவம் ஜீசஸ் !

       உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் , இனவெறி பித்தம் தலைக்கேறி சாமி ஆடி இருக்கிறீர்கள் …

       இதுவே உங்களுக்கு எனது கடைசி பதில் , உங்கள் பித்தம் குறைத்திருக்கிறது என்று அனுமானித்தால் பதில் உரைப்பேன் .
       விடை பெறுகிறேன் .

 2. மிஸ்டர் ராமன் அமெரிக்காவை குறை சொல்லாதீர்கள்.ஆதாரம் உங்களிடம் ஆயிரம் இருக்கலாம் மனதில் வைத்து பூட்டி வையுங்கள்.உலக சமாதான தூதன் ட்ரம்ப்பை கொண்டாடுங்கள்.இதற்க்கு மேலும் “பயங்கரவாதமும் பயங்கரவாதிகளும் வார்த்தெடுப்பது அமெரிக்காவால்தான்”என்று உளறி கொண்டிருந்தால் சகோதரி ரெபெக்காமேரியின் சாபத்திற்க்கு ஆளாக வேண்டிவரும்.ஜாக்கிரதை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க