முகப்புகட்சிகள்பா.ஜ.கவிவசாயிகளுக்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விவசாயிகளுக்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

-

துப்பாக்கிக் சூட்டுக்கு மீனவர்கள் பலி, காவிரி துரோகத்திற்கு விவசாயிகள் பலி, கோகோ கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி… இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் சதித்தனமாக அழிவுத் திட்டங்களை கொண்டு வந்து அழிக்க துடிக்கிறது பாரதிய ஜனதா அரசு. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடினால் தேசத்துரோகி என்கிறது மோடி அரசு. இதற்கு ஒத்தூதுகிறது சசிகலாவின் பினாமி அரசு! தமிழக விவசாயிகளின் பிரச்சினைக்காக சென்னையைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக எழும்பூரில் நாளை 1.4.2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடக்கவிருக்கிறது.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளிகள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம். வாருங்கள், அணிசேர்வோம், போராடுவோம், தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டெடுப்போம்.
மெரினாவில் சாதித்த தமிழக மாணவர் சக்தியின் பலத்தை இங்கேயும்  காட்டுவோம்.
தமிழகம் அடிமையில்லை என்பதை மோடி அரசுக்கு நிரூபிப்போம்.

நாங்கள்
காத்திருக்கமாட்டோம்…!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
மூடாமல் ஓயமாட்டோம்…!

ஹைட்ரோ கார்பன்
திட்டத்தை உடனே மூடு!
விவசாயத்தையும்,
விவசாயிகளையும் வாழவிடு!

தமிழகத்தை அழிக்கும்
ஹைட்ரோ கார்பனை மூடச்சொன்னால்…
வறட்சி நிவாரணம் கேட்டால்…
விவசாயிகளை காக்க
மாணவர்கள் போராடினால்…
பத்திரிக்கையாளர்கள்
கேள்வி கேட்டால்…
தேசத்துரோகிகளா?

அடித்தாலும்
அடங்காது இது வேற தமிழ்நாடு!
தமிழனை அழிக்கத்துடிக்கும்
பி.ஜே.பி கும்பலே
தமிழகத்தை விட்டு ஓடு!

காளைக்காக கூடிய தமிழினமே
விவசாயிகளின்
கதறலுக்காகவும் கூடுவோம்!

இடம்: எழும்பூர் ரயில் நிலையம் அருகில் (தாளமுத்து நடராசன் மாளிகை எதிரில்)
தேதி: 01-04-2017  நேரம்காலை 11.30 மணி

இவண்
அனைத்துக்
கல்லூரி மாணவர்கள்
தொடர்புக்கு:
90924 64675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க