Sunday, February 28, 2021
முகப்பு செய்தி சென்னை மாவட்ட மக்களிடம் லெனின் பிறந்த நாள் விழா !

சென்னை மாவட்ட மக்களிடம் லெனின் பிறந்த நாள் விழா !

-

பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 148 வது பிறந்தநாள் விழா – புஜதொமு வின் ஆலைவாயில் கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரங்கள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் மணலி பகுதிகளில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 148 வது பிறந்த நாளையொட்டி ஆலைவாயில் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் நடைப்பெற்றது.

காலை 05:45 முதல் கெமின் கிளை, எம்.எச்.எச் கிளை, ஜி.எம்.எஸ் கிளை, பி.டி கிளை எஸ்.ஆர்.எப் இணைப்பு சங்கங்களில் கொடி ஏற்றி ஆசான் லெனின் படம் வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஆலை வாயில் கூட்டத்தில், ஆசான் லெனின் பற்றி தொழிலாளர் மத்தியில் பு.ஜ.தொ.மு மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ் குமார் உரையாற்றினார். அடுத்தபடியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வேலை செல்லும் தொழிலாளர்களிடம் பிரசுரம், இனிப்பு வழங்கப்பட்டது. பிரசுரத்தினை ஆர்வத்துடன் வாங்கி சென்று படித்தனர்.

காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி பஜாரில் மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் தலைமையில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ் குமார் அவர்கள் ஆசான் லெனின் படத்தினை திறந்து வைத்தார். பின்னர் மக்களிடத்தில் பிரசுரமும், இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியாக மக்களிடத்தில் லெனின் பற்றியும், இன்றைய அரசியல் நிலைமை குறித்து பேசினார். குறிப்பாக ஒவ்வொரு வர்க்கமும் பாசிச மோடி அரசால் எப்படி பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பதையும், இதனை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இன்றைய விழாவில் மொத்தமாக நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் –  94444 61480


சென்னை நேரு பார்க் பகுதியில் லெனின் பிறந்த நாள் விழா!

உலகெங்கும் இருக்கும் ஏழை மக்கள் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் முலம் புரட்சியை நடத்தி, அரசியல் பொருளாதர விடுதலை பெறுவதும், மக்கள் ஆட்சி அதிகாரத்தில் அமருவது சாத்தியமே என்று நிருபித்தவர் ரசிய புரட்சியின் நாயகன் தோழர் லெனின். இவரது 148வது பிறந்த நாளை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக நேரு பார்க் பகுதியில் கொடியெற்றி, இனிப்பு வழங்கி நினைவுகூர்ந்தோம்.

பறையிசையுடன் நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.

நேருபார்க் பகுதியில் காலை 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் தோழர் இளவரசி தலைமை தாங்கினார். இவர் தனது உரையில்.. ”மக்கள் போராட்டங்கள் தினசரி நடந்துக் கொண்டு இருக்கிறது தோழர் லெனின் சொன்னது போல நுற்றுக்கானக்கான போராட்டங்கள் அனைத்து இடங்களிலும் நடந்துக் கொண்டுயிருக்கிறது. அப்போராட்டங்களுக்கு நம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புத் தலைமை தங்க வேண்டிய தேவையிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.”

அடுத்தாக பொதுக்குழு தோழர் அனந்தப்பராஜா கொடியெற்றினார். இளம் தோழர்கள் முழக்கமிட்டனர்.

ஏன் இந்த பிறந்த நாள் விழா என்பதைப் பற்றி பொதுக்குழு தோழர் புவனேஸ்வரன் பேசினார், அவரது உரையிலிருந்து… ”உலகெங்கும் மக்கள் பசியாலும் பஞ்சத்தலும் செத்துக் கொண்டுயிருக்கிறார்கள். மறுபுறம் மக்கள் சொத்தை கொள்ளையடித்து வளமான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டுயிருக்கிறார்கள் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவங்களும். ஆனால் ரசியப் புரட்சியின் நாயகன் தோழர் லெனின் மக்களுக்காகவே வாழ்ந்தார், மக்களை நேசித்தார். தனது நாட்டில் மக்களின் தேவைகள் அறிந்து அதை நிறைவேற்றியவர். ஆனால் நமது நாட்டின் பிரதமர் மக்களை பற்றியும், ஒரு மாதமாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் ஊர் ஊராக சுற்றுகிறார். செல்பி எடுத்துக் கொள்கிறார். நாளுக்கு நாள் விலைவாசி ஏறுகிறது. பெட்ரோல் விலை ஒவ்வொரு நாள் இரவும் ஏறிக்கொண்டுயிருக்கிறது. ஆனால் 55 வருடமாக விலைவாசி ஏறாத நாடாக ரசியா இருந்தது. மக்கள் பிரச்சனைகள் உடனுக்குடன் கேட்டு தீர்க்கப் பட்டது.

தமிழகத்தில் பாடிகள் ஆண்டுக் கொண்டுயிருக்கிறது. அன்று ஜெயலலிதா பாடியும், இன்று எடாப்பாடியும் ஆண்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. எதிர்த்து கேட்பவர்கள் தேசத்துரோகிகள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள். போலீசைக் கொண்டு தாக்குகிறார்கள். அமைப்பு தலைமையின் கீழ் போராடுகிற மக்களை கண்டு தள்ளி நிற்கிறது போலீசு. எனவே அமைப்பாக மாற வேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தாக வேண்டியுள்ளது. பல பகுதிகளில் டாஸ்மார்க் எதிரானப் போராட்டத்தில் பெண்கள் மிகவும் உணர்வுடன் செயல்படுகிறார்கள். ஓட்டுக் கட்சிகளை நம்பி பயனில்லை. ஒட்டுபோட்டும் இனி பிரச்சனைகள் தீர போவதுமில்லை. எனவே தேர்தல் பாதைக்கு வெளியே தான் தீர்வுயிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களை இந்த அரசமைப்பை துக்கியெறியும் போராட்டத்திற்கு அணிதிரட்ட வேண்டியுள்ளது. அதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறப் பட்டது. இறுதியாக மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்
சென்னை


மே 5, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் “காரல் மார்க்ஸ்” 200-வது பிறந்த நாள்! ஏப்ரல் 22, 2017 பாட்டாளி வர்க்க ஆசான்“லெனின்” 148-வது பிறந்த நாள்! என்ற தலைப்பிலான பிரசுரத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக பூந்தமல்லி பகுதியில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கம்பெனி பேருந்துக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் மற்றும் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க