Thursday, December 12, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

-

மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே !
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே !
மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம் !
நம்ம ஊரில் இனி கிடையாது டாஸ்மாக், அடிச்சு தூக்கு !…

  • இவை கடந்த ஆண்டு மக்கள் அதிகாரம் வைத்த முழக்கங்கள்.

க்கள் அதிகாரத்தின் முழக்கம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இன்று தமிழக தாய்மார்கள் ஊர்தோறும் டாஸ்மாக்கை அடித்து மூடுகிறார்கள்.  அரசு மூடாது மக்களது அதிகாரம்தான் மூடும் என்பதை தமிழகத்தில் தொடரும் போராட்டம் நிரூபித்து வருகிறது. போலீசாரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சவில்லை. கடப்பாரையால் கடையை இடிக்கிறார்கள். சாராய பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைக்கிறார்கள். சட்டவிரோதமாக சாராயம் விற்பதை கைப்பற்றி உடைக்கிறார்கள். போலீசோ செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த முடியும்.

டாஸ்மாக் கடைக்கு இடம் தரமுடியாது என மக்கள் அதிகாரிகளை புறக்கணிக்கிறார்கள். வெட்கம் கெட்ட அதிகார வர்க்கம் ஊரின் ஒதுக்குபுறத்தில் கடையை கட்டுகிறது. அதையும் மக்கள் இடிக்கிறார்கள். சொரணையுள்ள அரசாக இருந்தால் உடனே டாஸ்மாக்கை மூடுகிறேன் என உத்தரவிட்டிருக்கும். சாக்கடையில் மிதக்கும் காசையும் நக்கி எடுக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது.

அன்று டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதற்காக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மக்கள் அதிகாரத் தோழர்கள் பலரும் சிறை சென்றார்கள். மூடு டாஸ்மாக்கை என பாடியதற்காக தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். டாஸ்மாக் எதிர்ப்பு மாநாட்டில் பேசியதற்காக பலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் டாஸ்மாக் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டனர். அய்யா சசி பெருமாள் உயிரையே விட்டார். இவ்வாறு தொடரும் மக்கள் போராட்டதால் அரசு தனிமைப்பட்டு திகைத்து நிற்கிறது.

மணல் கொள்ளையா ஆற்றிலிறங்கி மணல் லாரியை மறித்து போராடு, கட்டணக் கொள்ளையா, தனியார் பள்ளியை முற்றுகையிடு, தரமான சிகிச்சை இல்லையா? மருத்துவமனையை சூழ்ந்து கொள், குடிநீர் இல்லையா? நகராட்சி அலுவலகத்தில் குடியேறு, போலீசாரின் அத்துமீறலா, விடாதே போராடு, ஜல்லிக்கட்டு மெரினா எழுச்சிக்கு பிறகு, அடித்தாலும் அடங்காது இது வேற தமிழ்நாடு என முழங்கு!

குடிவெறிகொண்டு அரசே டாஸ்மாக்கை திறக்க முயற்சிக்கிறது. மின்சாரம், கல்வி, மருத்துவம், குடிநீர் கொடுக்க வக்கில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கத் துப்பில்லை. நம்மை ஆள்வதற்கு இந்த அரசுகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?

மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த அரசிடம் கெஞ்சுவதால் பயன் இல்லை. அரசை பணியவைக்கும், டாஸ்மாக், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம்தான் சரி. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமே தோற்றுப் போன இந்த அரசு கட்டமைப்புதான்.

மக்களின் இந்த மகத்தான எழுச்சி பற்றிப் பரவட்டும்!
போதையிலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்க மக்கள் அதிகாரமே தீர்வு!

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

இவண்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க