தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டம் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு படம் போட்டுக் காட்டியது. தமிழக விவசாயிகளின் தொடர் தற்கொலைகள், டாஸ்மாக் எதிரான மக்கள் போராட்டம், டாஸ்மாக்கு எதிரான திருப்பூர் போராட்டத்தில் பெண்களை கோழைத்தனமாக தாக்கிய போலீசுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் வாயுக்கு எதிரான விவசாயிகளின் கொந்தளிப்பு, விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும், அதனை மயிருக்கு சமமாக நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்த போராட்டம் என தொடர்ந்து நடந்து வருவதால் தமிழகமே பேராட்டக் களமாக மாறி வருகிறது.
இச்சூழலில் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் சார்பாக திருத்துறைபூண்டியில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், மூன்று முறை தடைவிதித்த மாவட்ட காவல்துறையை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. கரூரில் மக்கள் அதிகாரம் சார்பாக, கரூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 15.04.2017 அன்று காலை 6.00 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் பேருந்து நிலைய நுழைவாயிலில் சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தனர்.
அப்போது சினிமா பாணியில் வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் ராஜசேர்வை மற்றும் அவருடன் வந்த இரு காவலர்கள் தோழர்களை அதிகாரிகள் உங்களை அழைத்து வரச்சொன்னார்கள் எனக்கூறியுள்ளனர். அதற்கு தோழர்கள் முறையான காரணமின்றி வரமுடியாது. நீங்கள் தொடர்ந்து எங்கள் (மக்கள் அதிகாரம்) மீது பொய்வழக்கு போடுகிறீர்கள் எனவே வரமுடியாது என்றும், சுவரொட்டி ஒட்டுவது எங்களது அடிப்படை “ஜனநாயக உரிமை” அதை தடுக்க நீங்கள் யார்? என்று கேட்டுள்ளனர். பின்னர் போலீசார் வலுக்கட்டாயமாக இருவரையும் தரதரவென இழுத்துள்ளனர்.
இதனால் தோழர்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் விவசாயிகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியதால் போலீஸ் எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறது. இதனை தட்டிக் கேளுங்கள் என்று பேருந்து நிலையத்தினை போராட்ட களமாக்கினர். உடனே போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக வேனில் தூக்கிப்போட்டு காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
அ.தி.மு.க அமைச்சரின் ஆசிபெற்ற கரூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் தோழர்களை பார்த்து ஏண்டா நீ என்ன பெரிய ……. என ஆபாச வார்த்தைகளால் திட்டி, கூப்பிட்டால் உடனே வரமாட்டியா, நீங்கெல்லாம் ஒரு ஆளுமயிரா என்று பொறுக்கிக்கே உண்டான தொனியில் மிரட்டியுள்ளார்.
பிறகு தோழர்கள் சக்திவேல் மற்றும் ஐய்யப்பன் இருவர் மீதும் குற்ற எண்.348/2017, U/s.153(A), 353, 504 IPC, and 4(1) TNOPPD Act 1959-ன் படி வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது கரூர் போலீசு. பின்னர் வழக்கறிஞர்கள் உதவியுடன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தினசரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர் தோழர்கள்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் துறையினர் தொடர் பொய்வழக்கு போடும் இந்த அடாவடித்தனத்தை கண்டித்து 02.05.2017 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம், மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், நீங்கள் ஒட்டிய சுவரொட்டியில் வாசகங்கள் கடுமையாக இருக்கிறது. ஆகையால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றும், காவல் துறையினர் ஆபாச வார்த்தைகள் பேசியிருக்க கூடாது என்றும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மழுப்பலாக கூறினார்.
அதன்பின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரை சந்திந்தும் புகார்மனு அளித்தோம். மனுவினை பெற்றுக்கொண்ட ராஜசேகர், நீங்கள் ஒட்டும் போஸ்டரில் வாசகங்கள் கடுமையாக இருந்திருக்கும், ஆகையால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். என்று கூறவே, அதற்கு வழக்கறிஞர்கள் உங்கள் தலைமையில் இயங்கும் கரூர் மாவட்ட காவல்துறை திறமையாக பொய்வழக்கு போடுகிறது என்றும், இனியும் எங்கள் அமைப்பினர் மீது பொய் வழக்கு போடுவது தொடர்ந்தால், இதை நாங்களும் சும்மாவிடப் போவதில்லை, மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வோம், காவல்துறையின் யோக்கிதையை அம்பலப்படுத்துவோம் என எச்சரித்துவிட்டு வந்தனர்.
அதன்பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, கரூர் மாவட்ட காவல்துறை மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்வது மட்டுமின்றி, பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் பொய் வழக்கு போடுகிறார்கள். குறிப்பாக கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ், பசுபதிபாளையம் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார்கள் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம் என தொரிவித்தோம். கரூர் மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டு மக்கள் அதிகார தோழர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போலீஸ் நடந்து வருகிறது.
தொடர்ந்து பொய்வழக்கு போட்டுவரும் அ.தி.முக.வின் அடிவருடியும், மணல் மாஃபியாவின் கூட்டாளியுமான கரூர் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்வதை பல வழிகளில் தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும், எத்தனை இன்னல்கள், எத்தனை பொய்வழக்குகள் போட்டாலும் மக்களை ஆள அருகதையிழந்த இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கி எறியும் வரை நாங்களும் ஓயமாட்டோம். இந்த பொய்வழக்குகளைத் தாண்டி விவசாயிகளின் நியமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறோம்.
அரசை கண்டு அஞ்சி நடுங்க ஓட்டுக் கட்சி அரசியல் கட்சிகளின் அடிமைகள் அல்ல, எதிர்த்து நிற்கும் போராளிகள் நாங்கள்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு- 9791301097