privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்துணைவேந்தரை நியமனம் செய் ! அண்ணா பல்கலை முற்றுகைப் போராட்டம்

துணைவேந்தரை நியமனம் செய் ! அண்ணா பல்கலை முற்றுகைப் போராட்டம்

-

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்தாதே!
மே.17,18,19 – 2017 அண்ணா பல்கலைக் கழகம் தொடர் முற்றுகை!

ண்ணா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக் கழகம் போன்றவை துணைவேந்தரே இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறவில்லை. இப்பல்கலைக் கழகத்தில் மட்டும் 2 லட்சம் இளநிலை, முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும், 1500 பி.எச்டி மாணவர்களும் பட்டம் பெற முடியவில்லை. இதனால், மேற்படிப்புகளுக்கும், உரிய வேலைகளுக்கும் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் மே.19 ந்தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது வெட்கக் கேடான செயல். இதனை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

துணைவேந்தரை நியமனம் செய்வதில் என்ன பிரச்சனை? துணைவேந்தரை நியமிக்காமலேயே பல்கலைக் கழகங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதற்கெல்லாம் இந்த அரசிடம் எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை. துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி, பேராசிரியர் வேலைக்கு 50 லட்சம், உதவி பேராசிரியர் வேலைக்கு 30 லட்சம். தகுதி, திறமை, பணி அனுபவம் எதுவும் தேவையில்லை, பணம் இருந்தால் பதவி. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்றவைகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடுகள் நடந்தது நாள் தோறும் அம்பலமாகி வருகின்றன. முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் என அனவரும் கூட்டு சேர்ந்து கல்வித்துறையை கல்லா கட்டும் துறையாக மாற்றியிருக்கிறார்கள்.

பல்கலைக்கழகங்கள் லஞ்சம் ஊழலில் ஊறித்திளைக்கிறது என்பது மட்டுமல்ல, கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதன் விளைவாக, இப்போது ஒட்டுமொத்த கல்வித்துறையுமே மாணவர்களுக்கு எதிரானதாக மாறியுள்ளது. சரியாக சொல்வதென்றால் கல்வித்துறையை நிர்வகிக்கும் ஆற்றலை, தகுதியை இந்த அரசு இழந்துவிட்டது. கல்வித்துறை மாணவர்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதில்லை, ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல்போல் செயல்படுகிறது.

துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் வேறொருவர் கையெழுத்திட்டு பட்டங்களை வழங்குவது மோசடி ஆகும். அந்த மோசடியை இப்போது அரசே செய்கிறது. ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் கொடுத்த பட்டங்கள் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் செல்லாமல், வெறும் குப்பைக் காகிதங்களாகின. இதே அநீதியை மீண்டும் அண்ணா பல்கலைக் கழகம் அரங்கேற்ற இருப்பதை எதிர்த்து எமது பு.மா.இ.மு போராட்டம் நடத்தியது. கல்வியாளர்களும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களும் எதிர்க்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்புகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், உயர் கல்வித்துறை செயலர் கையெழுத்திட்டு பட்டமளிக்க திட்டமிட்டுள்ளது எடப்பாடி அரசு.

இப்படித்தான் செய்வேன், என்ன முடியும்? என்று மாணவர்கள், பேராசியர்கள், பெற்றோர்களுக்கு சவால் விடுகிறது இந்த அரசு. இந்த அநீதியை வேடிக்கை பார்க்கக் கூடாது. இது பட்டம் வாங்க காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், வாழ்க்கை பாதிப்பு மட்டுமல்ல, கல்வியையே நாசப்படுத்துகின்ற நடவடிக்கை. இவர்களிடம் கெஞ்சுவதில் பயனில்லை. மெரினா எழுச்சியைப் போல், டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி மூடி வரும் பெண்கள் போராட்டத்தைப்போல், விடாப்பிடியாக போராடித்தான் தீர்க்க முடியும்.

எனவேதான், “துணைவேந்தரை போடாமல் பட்டமளிப்பு விழாவை நடத்தாதே!” என்று பு.மா.இமு வரும் மே 17 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் வாழ்வைக் காக்க போராடிய மாணவர்களோடு கரம் கோர்க்க மே.17 -ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள். கல்வியின் மீதும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைவோம். மாணவர் நலனை காப்போம்!

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க