Saturday, August 13, 2022
முகப்பு கட்சிகள் பா.ஜ.க சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்

சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம்

-

பத்திரிக்கை செய்தி

நாள்:17.05.2017

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய் !
தஞ்சையில் ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய் !!

கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 18.05.2017 வியாழன் காலை 10.30 மணி
இடம்:தஞ்சை இரயிலடி.

ஞ்சை வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது, இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த 12-ம் தேதி முதல் இங்கு வந்து பயிற்சியளித்து வருவதாக ஓரிரு செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அப்பல்கலைக் கழகத்தில் 400-க்கும் மேற்ப்பட்ட  போலீசைக் குவித்தும், பயிற்சி நடக்கும் 2 கட்டிடங்களைச் சுற்றி இரும்புத்திரை கொண்டு மறைக்கப்பட்டும், கண்காணிப்பு கோபுரம், வெள்ளமென ஒளி உமிழும் விளக்குகள் அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை–திருச்சி சாலையில் இருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மதில்களுக்கும் பரந்து விரிந்த கட்டிடங்களுக்கும் மத்தியில் சிலம்பு மற்றும் கத்திச்சண்டைக்கான பயிற்சிகள் நடப்பதாக தகவல் கிடைக்கிறது. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் துப்பாக்கி பயிற்சி எடுப்பது போல இங்கும் பயிற்சியளிக்கப்படலாமென சந்தேகம் எழுகிறது. இது முற்போக்கு சக்திகள், ஜனநாயக வாதிகள், தலித்துகள், சிறுபான்மை மதத்தினர் அனைவரையும் கவலை கொள்ளச்செய்யும் செய்தியாகும். இத்தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்காமல் அதற்கு 400-க்கு மேற்பட்ட காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குறியது

தந்தை பெரியார் கட்டி வளர்த்த பகுத்தறிவு சுயமரியாதை உணர்வுகளை குழிதோண்டி புதைக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது.   ஆட்சியையும் பதவியையும் காத்துக் கொள்வதற்காகவும் தங்கள் ஊழல் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எடப்பாடி அரசு தமிழ்ச்சமூகத்துக்கு எதிரான இச்செயலில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு  இடமளித்து, பல்கலைக்கழகம் என்ற அர்த்தத்துக்கே எதிராக செயல்படும் சாஸ்திரா-வை இனியும் பல்கலைக்கழகமாக கருத முடியாது. எனவே, சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை தமிழக மக்கள் புறக்கணிப்பததோடு இழுதது மூடப் போராட வேண்டும்.

குஜராத்திலும் வடமாநிலங்களிலும் கலவரத்தை நடத்தியே கட்சியைக் கட்டி சிறுபான்மையினருக்கெதிரான பச்சைப் படுகொலைகளை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.  ஜெயலலிதா மரணத்தை ஒட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வை பிளவு படுத்தியும் அதன் இரண்டு அணியினரின் கிரிமினல்-குற்றச் செயல்களை வைத்து மிரட்டி, தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.

உலகில் ஹிட்லருக்கு அடுத்து மிக கொடூரமான மனித குல விரோத சித்தாந்தத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட அதன் பல்வேறு உறுப்புக்களும் இந்தியாவிலிருப்பதே இந்திய மக்களை உலக அரங்கில் வெட்கித் தலை குனிய வைக்கிறது.  பா.ஜ.க, இந்து முன்னணியில் இருந்த சிலர் தங்கள் தொழில் போட்டி, கிரிமினல் நடவடிக்கைகள், கள்ளத் தொடர்புகள் போன்றவற்றால் கொல்லப் பட்டதையெல்லாம் கூட மத விவகாரமாக்கி கலவரத்தை தூண்டி வருகிறது. தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டும், தன்னைக் கடத்தியதாக தானே நாடகமாடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

பெரியார் பிறந்த தமிழகம் ஆரிய-பார்ப்பனிய சித்தாந்தத்துக்கும் அதன் அடிப்படையிலான சாதிய கட்டமைப்புக்கும் எதிரான போராட்டத்தில் கணிசமான வெற்றிகளைப் பெற்ற மாநிலமாகும். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான பூமியாகும். இங்கு குஜராத் போன்ற ஒரு கொடூர மதக் கலவரம் ஏற்படாமல் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

வறட்சி, வறுமை கடன் சுமை ஆகியவற்றிற்கு ஆளான விவசாயிகளின்  தற்கொலை,  தொழில் முடக்கம், டாஸ்மாக் சீரழிவு, இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பின்றி தவிக்கும் அவலச் சூழல் ஆகியவற்றால் குமுறிக்கொண்டிருக்கும் தமிழகத்தை அப்பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி மதக்கலவர பூமியாக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கொடும் செயல்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் விழிப்போடு இருந்து ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்.

தமிழக அரசின் ஆர்.எஸ்.எஸ். சார்பு நிலையை கண்டித்தும்,  சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், ஆர்.எஸ்.எஸ் -ன் மதவெறி ஊர்வலத்தை தடை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்  18.05.2017 வியாழன் காலை 10.30 மணி  தஞ்சை இரயிலடியில் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி..

இவண்,
இராவணன்
செயலர், மக்கள் கலை இலக்கியக்கழகம், தஞ்சை.
____

இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தஞ்சை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க