நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர். முதல் இருபது நிமிடங்கள் சீமான் மட்டும் பேசினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் ரஜினி எனும் தமிழரல்லாத நபர் ஆள நினைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பேசினார். நெறியாளர் அசோக வர்ஷினி கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் அவர் மேற்கண்ட கருத்திலேயே நின்று கொண்டு வேறு வேறு விளக்கத்தை கொடுத்தார்.
ரஜினியின் முன்னோர்கள் கிருஷ்ணகிரியில் பிறந்தாலும் அவர் மராட்டியரே, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் வாரிசுகள் இங்கே வந்து ஆள முடியுமா, 400 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஆள முடியுமா? என்றவர், பெரியார் கூட இங்கே நான் சேவைதான் செய்வேன், ஆளும் தகுதி பச்சைத் தமிழர் காமராஜருக்கு மட்டுமே உண்டு என்று பேசியதாக கூறினார்.
தமிழன் நினைத்தால் கர்நாடகத்திலோ இல்லை மராட்டியத்திலோ முதல்வர் ஆக முடியுமா என்றும் கேட்டார். ப.சிதம்பரம் கூட கர்நாடகத்தில் மேலவை எம்பியாக முடியவில்லை என்றார். ஆனால் அதே ப.சிதம்பரம் மராட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கினால் இன்று மேலவை உறுப்பினராக இருப்பதைப் பற்றி கேட்ட போது அது அவருக்கு தெரியவில்லை.
பெருமாள் மணியோ, “அரசியல் சாசனப்படி இங்கே யார் வேண்டுமானாலும் ஆளலாம். ஒரு தமிழர் பிரதமரானால் கர்நாடகா மராட்டியம் என முழு இந்தியாவையும் ஆளலாம் என்றார். அப்போது மணியை நீ வா என பேசிய சீமான் “உன் அரசியல் சாசனத்தை கொண்டு போடு” என்றார். அந்த நேரத்தில் கேடி ராகவன் நுழைந்தார்.
ரஜினியை சினிமாக்காரர் என்று பழித்துரைக்கிறீர்களே நீங்கள் மட்டும் சினிமா இயக்குநராகத்தானே அரசியலுக்கு வந்தீர்கள், உங்களை மக்கள் அங்கீகரிக்கவில்லையே என்றார். அவரையும் நீ வா என சீமான் பேசியதும், ராகவன் மரியாதையாக பேசுங்கள், இதுதான் தமிழர் பண்பாடா என்று பேசி அடக்கினார். அத்துடன் நெறியாளர் தந்தி டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்க அதிகரித்து விட்ட உற்சாகத்துடன் இடைவெளி விட்டார். அதன் பிறகு சீமான் வரவில்லை. நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்காகவே இந்த குறிப்பு. இதில் எமது கருத்து எதையும் எழுதவில்லை. விவாதத்தை பார்க்காதவர்கள் பார்க்கும் பொருட்டு இங்கே யூடியுபின் இணைப்பும் உள்ளது.
இனி வாக்களியுங்கள்!
நாட்டு மக்களின் பிரச்சினை என்ன ?
கடன் நிலைமை என்ன ?
உள்கட்டமைப்பு நிலை என்ன?
இவற்றை எல்லாம் மறைத்து எதுகை மோனையாக பேசி அணைத்து பிரச்சினைக்கும் காரணம் தமிழர் அல்லாதோர் ஆண்டதால்தான் என்று முடிக்கிறார் .
கடைசியில் நம்ம சாதிக்காரன் வரணும் என்கின்ற சாதி வெறியை சற்றே டிஸ்டெம்பர் அடித்து தமிழர் வரணும் . RSS இதைய பெயிண்ட் அடித்தால் இந்தியாவை இந்துக்கள் மட்டும் ஆளனும் .
ஆனால் இலங்கையை சிங்களவர் மட்டும் ஆளனும் என்றால் இனவெறியாம்.
ஜனநாயக நாட்டில் யார் யார் அரசியல் செய்யலாம் என்று இவர் முடிவு செய்வாராம். அத்தகைய சிந்தனையே பாசிசமானது.
இவருக்கு களம் அமைத்து கொடுத்தது திராவிட அரசியலே !
பெரியாரின் சீர்திருத்தங்களை பெயரளவில் கூறிவிட்டு , அண்ணாவின் தமிழுக்கும் அதன் மூலமான கட்சியின் வளர்ச்சிக்கும்
தமிழ் தமிழ் என்று அதீதமான முக்கியத்துவம் கொடுத்து கல்வியை பிரச்சார பூமியாக்கி வைத்து இருக்கிறார்கள் .
நம் மனப்பாட கல்வி முறையின் காரணமாக , சமூக அரசியல் அமைப்பு எதையும் புரியாதவர்களாக ,சினிமா மட்டும் தெரிந்தவர்களாக வெளியே வருகிறார்கள் . இவர்களை நம்பி தான் ரஜினியும்( சினிமா கவர்ச்சி ) , சீமானும் (மொழி கவர்ச்சி ) அரசியல் செய்கிறார்கள்.
சீமான் போன்ற இன வெறியரை காட்டிலும் ரஜினி மேலானவர்.
ஊழல் பிரச்சினை என்பது வேறு , சமூகம் இரண்டாக அணி பிரிந்து வெறுப்பது வேறு. பின்னதை சரி செய்ய பல நூறு ஆண்டுகள் தேவை படும்.
Whats wrong with Seeman’s ” A TAMIL SHOULD GOVERN TN” argument ? Anyone with good explanation ? Please
If being Tamil is enough for making tamilnadu problem free, then is it ok for you to have Vaikundarajan a tamilian being Chief minister ?.
Will it solve a problem by the only reason of being Tamil ?.
P.R. Palanisamy – is also tamil.
Mr. A,
You did not answer my question. I asked “Whats wrong with Seeman’s ” A TAMIL SHOULD GOVERN TN” argument ?”
You did not answer my question. I am expecting a direct answer. Yes or No.
Simple question and simple answer.
மிஸ்டர் .ஆர்,
பெரும்பான்மை தமிழன் தான் தமிழ்நாட்ட ஆளனும்னா பெரும்பான்மை இந்திகாரன் தான் இந்தியாவை ஆளனும். பெரும்பான்மை இந்து தான் இந்தியாவை ஆளனும்..
அப்புறம் வெள்ளக்காரன் கம்பனியில அவன் மட்டும் தான் வேலை செய்யணும்….
தக்காளிய தென் அமெரிக்ககாரன்மட்டும் தான் சாப்பிடனும்….வெங்காயத்தை பாகிஸ்தான் காரனுங்க மட்டும் தான் சாப்பிடனும்னு கூட பேசலாம்.
இப்படி யோசிச்சு பாருங்க…. வெள்ளைக்காரன் போனதுக்கப்புறமா .இந்தியாவ இன்டியாகரனுங்க தான் ஆண்டுக்கிட்டு வராங்க…. என்ன பண்ணிட்டாங்க…வெள்ளைக்காரன் இருந்தப்போ சுரண்டுனத விட இப்போ தான் அதிகமா சுரண்டல் நடக்குது…
மொதல்ல தேசிய இனப் பிரச்சினைக்கு இடைஞ்சலா இருக்கிறது பாப்பனுங்களும் அமெரிக்காவுமா இல்லை அண்டை மாநிலத்துகாரங்களா?
இங்க ஏன் பாப்பானுங்க என்று கூறுகிறேன் என்றால் பல ஆண்டுகளுக்கு முன்னமே நிலம் புலம் எல்லாத்தையும் வித்துபுட்டு அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டாங்க அவிங்க. அதனால் தேசிய பிரச்சினைகள் குறித்து அவாள்களுக்கு அக்கறை கிடையாது .. ஏன்னா இந்த மண்ணோட ஏதாச்சும் தொடர்புள்ள இருக்குனும்ல . அப்புறம் அவாள்களின் கட்சியான பி.ஜெ.பி க்கும் தேசியத்துக்கும் கூட சம்மந்தம் கிடையாது….அவாள கேட்டா பார்ப்பனீயம் தான் தேசியம் என்று சொல்லுவார்கள்.
சீமான்- ரங்கராஜ பாண்டேவின் பேட்டியில் இருந்து. (ஒரு வருடம் முற்பட்டது)
///பாண்டே : சாதியின் அடிப்படியில் தான் தமிழர் யார் என்று நாம் தமிழர் கட்சி அடையாளம் காண்கிறது.
சீமான்: இல்லை. நாம் தமிழர் கட்சி சாதியின் அடிப்படியில் இன அடையாளம் காண்பதில்லை. “தமிழை தாய் மொழியாகவும், வாழ்வியல் மொழியாகவும் கொண்டு தன்னைத் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்ளும் எவரையும் நாம் தமிழர் கட்சி தமிழராகத்தான் அடையாளம் காண்கிறது”. திராவிடக் கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ள யாருக்கும் இது பொருந்துமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.///
நமது கேள்வி
அப்ப நாம் தமிழர் ஆவணத்தை எழுதியது பைத்தியகாரனா
1) 69%(BC+MBC+ஸ்C+ஸ்T) இட ஒதிக்கீட்டை பயன் படுத்தும் 200 சாதிகளில் 100 சாதிகள் தான் தமிழ் சாதிகளாம் 2)இந்த முறை இட ஒதிக்கீட்டை நீக்கி தமிழ் சாதிகளுக்கு முன்னுரிமை குடுப்பார்களாம் அப்புறம் மற்ற மாநிலங்களில் எப்படி இட ஒதிக்கீடு உள்ளதோ அதே போன்று இட ஒதிக்கீடு இருக்குமாம்.
3)வீட்டிலும் வெளியிலும் தமிழில் பேசுகிறார்களோ அவர்களே தமிழர்கள் என்று ரங்கராஜ பான்டே இன்டெர்வியூவில் சொல்வது.இப்போது சாதியை வைத்து தமிழர்களை வைத்து தமிழர்களை அடையாளம் கான்பது.(பக்கம் 308,277)
4)மற்ற மாநிலத்தவர் இங்கு வந்து வாழலாம் ஆனால் ஆள்வது தமிழராக இருக்க வேண்டும் என்பது.இப்போது இட ஒதிக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை என்பது.
பிறப்பின் அடிப்படியில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பது பார்ப்பினியம் என்றால் சீமானும் அதை தானே செய்கிறார்.
யார் தமிழர் என்பதை சாதியை வைத்து தான் முடிவு செய்வோம் என்று நாம் தமிழர் ஆவணத்தில் போட்டு இருக்கிறதே???
பா.ஜ. க தனது நெடுங்கால திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக, தந்தி டிவியை சுவீகரித்து நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க வை வீழ்த்துவதற்கு, அதாவது சிறியஅளவிலாவது அதன் செல்வாக்கை சேதப் படுத்துவதற்கு சீமானை கொம்பு சீவி வளர்து விட்டது. இன்று தங்களின் பெருங்கனவான தமிழ் மண்ணை அபகரிப்பதற்கான தருணம் கூடிவந்துள்ளதா க, அவர்கள் கருதுகி றவேளையில் தாங்களே வளர்த்த சீமான் இப்படி கொக்கரிப்பதைப் பொறுக்காமல் கொன்று புதைப்பதற்கு தயாராகி விட்டனர்.
தந்தி டி.வி ஓணர் கூட தமிழர்தான்(ஒரே சாதிக்காரங்களா கூட இருக்கலாம்), ஆனாலும் என் னபண் ண… இணையில்லா இலக்கான பார்பன ராஜியத்தையும், சமஸ்கிருத ஆட்சியையும் ஆமைப்பதற்கான
யாகம் நடந்துகொண்டிருக்கிறது, இதில் விழுந் துவிட்டசிறு பூச்சிதான் சீமான்.
இன்று வேறு வழியே இல்லை சீமானை பத்துபேர் கூடி கதறக்கத றகொன்றா கவெண்டும்.
இந்த பாவத்த என்கையால( வாயால) செய்யவிருப்பல நீயே முடிச்சிறும்மான்னு நெறியாளர் அசோக வர்ஷினியை ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறார் பாண்டே.
இது சீமானுக்கும் தெரியாத ஒன்றல்ல, ஆனாலும் அவர் தனது ஓட்டை சித்தாந்தத்தைப் பிடித்துக்கொண்டு கடைசிவரை முயற்சி செய்கிறார்.
ஆனால் வினவு தோழர்கள் நினைப்பதுபோல் சீமானை யாரும் கோமாளியாக பார்க் கமாட்டார்கள். நான்கு பேர் கூடி ஒருத்தனை அடிக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
ஆனாலும் கேடி ராகவன் அடைகிற அறசீற்றம்தான் உச்சகட்ட காமெடி…
“அவசரபடாதிங்க மாமா, சரவ ணபவன்ல இருந்து செட் தோச வரும் உக்காந்து சாப்டுட்டு சாவகாசமா பேசலான்னு” நெறியாளர் அசோகவர்ஷினி செய்கையால சொல்றது சூப்பர்.
சீமானை கோமாளியாகத்தான் பார்த்தாக வேண்டும்.தனக்குப் பின்னால தமிழ்நாடே இருக்குதூங்ற கோமாளித்தன எண்ணத்தில்தான் இந்த அரைகிறுக்கு பேசித்திரியுது.கொஞ்சமும் வயசு வித்தியாசம் மட்டுமரியாதை தெரியாத அல்லது தான் எல்லாத்தையும் விட பெரிசுன்ற கிறுக்கு மண்டையில ஏறியிருக்குது.கொஞ்ச நாட் களுக்கு முன் தோழ்ர் அருணனையும் இதே தந்தி டிவி இந்த சீமானை வைத்துதான் அவமான படுத்துவதாக நினைத்து சீமானோடு சேர்ந்து அவமானப்பட்டது.எந்த தெளிவும் கிடையாது ரொம்ப ஆவேசமா உடம்ப ஆட்டி ஆட்டி எதிராளிகளை ஒருமையில பேசி,இவர் பெரிய தமிழ் பற்றாளராம்..இவர்தான் தமிழனை தலையில வச்சி தாங்கிறாராம்.தேஷியம் தேஷியம்னு ஊர ரெண்டாக்கிற __ இந்த சீமான் போன்றதுகள்தான் ஆக்கமும் ஊக்கமும்.
என்னை பொறுத்தவரையில் சீமான் போன்ற இனவெறியர்களால் தமிழகத்திற்கு என்றுமே தீமை தான், சீமானின் செயல் மக்களின் உரிமையில் தலையிடும் செயல். மக்கள் ரஜினி தான் முதல்வராக வர வேண்டும் என்று முடிவு செய்தால் அதை கூடாது என்று தடுப்பதற்கு யாருக்குமே உரிமையில்லை.
என்னை பொறுத்தவரையில் திராவிட கட்சிகளை விட பிஜேபி காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருக்க வேண்டும், தேசிய கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருப்பது தமிழக நலனுக்கு நல்லது.
அதேபோல் ரஜினி தனி கட்சி ஆரம்பிப்பதை விட பிஜேபி அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படலாம். ரஜினி போன்ற ஒரு நல்லவர் தமிழக முதல்வராக வர வேண்டும்.
சீமானை இனவெறியர் என்று மதவெறி-மனிதகுல எதிரிகள் சொல்லித்திரிவது பெரிய வேடிக்கை.சீமானை எல்லா தமிழ்ர்களும் வெளிப்படையாக எதிர்க்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.இல்லையென்றால் தேசிய வெறிபிடித்த கூட்டம் சீமானை காட்டி தமிழ் உணர்வை தமிழ் ப்ற்றை மழுங்கடிக்க பார்க்கும்.சீமானின் முற்றிய பைத்தியம் அதற்க்குத்தான் வழிகோலுகிறது.
தேச பற்று (உங்களை போன்றவர்களுக்கு தேசிய வெறி) நிச்சயம் அவசியமானதே. இந்திய வரலாற்றை பார்த்திர்கள் என்றால் 1000 இந்தியா மற்றவர்களிடம் அடிமையாக இருந்ததற்கு காரணமே இந்த தேச ஒற்றுமை இல்லாதது தான். அதனால் இந்தியா இழந்தது மிக அதிகம், மீண்டும் அந்த நிலை வரமால் இருக்க வேண்டும் என்றால் தேசப்பற்று அவசியம், தேச ஒற்றுமை அவசியம். வலிமையான பாரதமே வளமான பாரதத்தை உருவாக்கும்.
சார்வால்….சும்மா தேச ஒற்றுமை என்று பம்மாத்து கட்டுறீங்ககாட்டிகினு இருக்கீங்க.
ஒன்னு சொந்த அறிவாச்சம் இருக்கணும் இல்லை …கொஞ்சம் வரலாற்று அறிஞர்கள் சொல்றதையவது கேக்கணும்…..சும்மா வந்து தேச ஒற்றுமை இல்லை….தேச பற்று வேணும்….அப்படின்னு அச்சு உட்டுகினு இருக்கீங்க…..
சரி ஒற்றுமையாக இருந்த உங்க தேசத்துக்கு பேரு இன்னாது நைனா?….மேப் எதாச்சும் வெச்சுருக்கீங்களா?
உங்க ஆளுங்க அடிச்சுக்கிட்டத பாக்கணுமே இப்போ பாகிஸ்தான்காரன் கூட தேவலாம்.
எந்த நாளில் இருந்து கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியவர்களை நல்லவர்களாக்கினீர்கள் மணி ?
ஒரு மனிதனை பற்றி உண்மை இருக்கிறதோ இல்லையோ கண்டபடி அவதூறு பரப்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. ரஜினி கருப்பு பணம் வைத்து இருந்தார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை வருமான வரித்துறையினரிடம் சொல்ல வேண்டியது தானே, அப்படி உங்கள் குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்குமே.
என்னை பொறுத்தவரையில் ரஜினி நல்லவர், அவர் ஆட்சி செய்யும் அளவிற்கு திறமை இருக்கிறதா என்பது தெரியாது ஆனால் நல்லவர் ஆட்சியில் இருக்கும் பொது திறமைசாலிகளை அவர் வைத்து சிறப்பான ஆட்சியை கொடுக்கலாம்.
இது வரையில் 3 தேர்தலில் வாக்கு அளித்து இருக்கிறேன், பாராளுமன்ற தேர்தல் என்றால் காங்கிரஸ் கட்சிக்கும், சட்டமன்ற தேர்தல் என்றால் அதிமுகவிற்கு தான் வாக்கு அளித்து வந்தேன், வரும் தேர்தலில் ரஜினி தனி கட்சி ஆரம்பித்தாலும் சரி அல்லது பிஜேபி காங்கிரஸ் கட்சியில் இணைத்து தேர்தலிலும் நின்றாலும் என் வாக்கு ரஜினிக்கு தான்.
அப்படி ரஜினி தேர்தலில் நிற்கவில்லை என்றால் நான் பிஜேபிக்கு வாக்கு அளிக்க போகிறேன் .
நீங்க யாருக்கு வேணா பேஷா வாக்களிங்கோ.
ரஜினி நல்லவர்னு சொல்றீங்களே அந்த நல்லவரோட ஆசிரம பள்ளிக்கூடம் அதாம்பா கிண்டி ரேஸ்கொர்ஸ் ரோட்டுல இருக்கே …..அங்க வண்டி ஓட்டுனர்களுக்கு ஒரு ஆறு மாசமா சம்பளம் கொடுக்கலன்னு ஓட்டுனர்கள் எல்லாம் சேர்ந்து போராட்டம் பன்னுனாங்களே….அப்போ அந்த நல்லவர் எங்க போட்டார் …இமயமலைக்கா?…இல்லை வெளிநாடா?
கர்நாடகாவுல நூற்றுகனக்கான் கோடிகள் முதலீடு செய்திருக்கார்…ஆந்திராவில் செய்திருக்கார்…மகாரச்டிரவில் செய்திருக்கிறார் என்று அரக்க பறக்க பேசுகிறார்கள். அவரது சொத்து மதிப்பு சில பல ஆயிரம் கோடி இருக்குமென்று கூறுகிறார்கள்.
ஆனால் ப்பூணு சொல்ற மேரி சொற்ப காசு சும்மா சுத்தி சுத்தி உட்ட பொகைக்கே அதா விட அதிகமா செலவு செஞ்சிருப்பாரு. அதா கொடுக்க வக்கில்ல சும்மா வந்துட்டாங்க ரசிக குஞ்சாமனிங்க…..
மணி மாமா,
ஏன் டென்சன் ஆகுறீங்க ..
ரஜினி கருப்புப்பணம் வச்சிருக்குறதுக்கு ஆதாரம் வேணுமா உங்களுக்கு?. எங்கிட்ட இல்ல, ஒரு வேளை ஏ. அண்ணே வச்சிருக்கலாம். இருந்தா கொடுப்பாரு.
சரி மாமா, அந்த ஆஸ்ரம் நு ஒரு பள்ளிக் கூடம் நடத்துதே அவரு பொண்டாட்டி லதா, அந்த ஸ்கூலுல டிரைவர்கள்ல இருந்து வாத்தியாருங்க வரைக்கும் ஒழுங்கா சம்பளம் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம்ல .. கேட்டா மெரட்டுறானுங்களாம்..
இதுக்கு என் கிட்ட சாட்சி இருக்கு மாமா..
அந்த டிரைவரு நம்ம பக்கத்து ஏரியால தான் இருக்காரு. பாக்குறப்ப நானும் கேப்பேன். அவரும் புலம்புவாரு.
இப்போ ரஜினிக்கும் அந்த ஆஸ்ரம் பள்ளிக்கூடத்துக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லப் போறீங்களா ?. அல்லது ரஜினிக்கும் அந்த ஆஸ்ரம் ஸ்கூலை நடத்துற அவரு பொண்டாட்டிக்குமே சம்மந்தம் இல்லைன்னு சொல்லப் போறீங்களா மணி மாமா ?.
தங்களின் அன்பு பதிலைக் காண காத்திருக்கும்
உங்கள் நலவிரும்பி,
அனானியன்.
அண்ணன் ஏ. அவர்களே,
உங்களுக்கு எங்கள் மணியண்ணனைப் பற்றித் தெரியாது. குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்றவங்கள பாத்திருப்பீங்க… நம்ம மணியண்ணே மண்ணுக்குள்ள தலைய விட்டு எடுத்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்லுவாரு..
அவரு கிட்ட போயி .. நீங்கல்லாம் பேசி ஜெயிக்க முடியுமாண்ணே …
நாம் தமிழர் கட்சி தமிழகத்து ஆர்.எஸ்.எஸ் ….சீமான் தமிழகத்து மோடி…..
எப்படி தமிழ்நாடு தமிழருக்கே என்று சீமான் வெறிப்பேச்சு பேசுகிறாரோ அது மாறி தான் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி ஆளுங்க பேசுறாங்க…..
ரெண்டு பேரையுமே காலி பண்ணனும்…
பி.ஜெ.ப்பி இங்க வலுவா இருக்குனும் என்பது ஒங்க ஆசை, அவா அப்புறம் ஏக்கம். ஆனா என்ன பண்றது சட்டியில இருந்தாதான அகப்பைல வரும்…பாத்து ஏங்கி ஏங்கி வீங்கி போற போறீங்க…..
அப்புறம் தேசிய கட்சிகள் என்று சொல்றீங்களே அப்படின்னா ஏன்னா? தேசியம் என்றால் அதற்கு என்று ஒரு வரையறை இருக்கு. அந்த வரையறைப்படி இந்தியாவில எல்லாமே தேசிய கட்சிகள் தாம்.
வேணும்னா பி.ஜெ.பி யா போலி தேசிய கட்சின்னு வெண்ண சொல்லலாம்.
What is the problem here ? Seeman ? or His view “A TAMIL SHOULD GOVERN TN” argument ?
Any one ? Answer me please.
If you want to answer, you have to understand the question first.
முதலில் உங்கள் நோக்கம் தமிழர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்வது அரசியல் சாசனப்படி தவறு. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் தமிழனுக்கு சொந்தமாக இருக்கும் போது அவனை தமிழகத்திற்குலேயே முடக்கும் உங்களின் இனவாத அரசியல் தவறு…
இந்தியா அனைவருக்கும் சொந்தம், ஒரு மலையாளி தமிழகத்தில் தேர்தலில் நின்று மக்களும் அவரை தேர்ந்தெடுத்து அவர் முதலமைச்சர் ஆனால் கூடாது என்று தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதேபோல் ஒரு தமிழன் கேரளாவில் தேர்தலில் நின்று அவனை கேரளா மக்கள் தேர்ந்தெடுத்து கேரளா முதல்வரானால் அதை தடுக்க ஒருவருக்கும் உரிமை கிடையாது.
உடனே காவேரி முல்லை பெரியாறு என்று ஆரம்பிக்காதீர்கள். ஆந்திரா தெலுங்கு கங்கை திட்டம் என்று எவ்வுளவோ positive விஷயங்கள் இருக்கிறது
இன்று தமிழன் ஆண்டாள் என்ன எண்பிர்கள் நாளை ஒரு வன்னியன் ஆண்டாள் என்ன எண்பிர்கள் அடுத்து ஒரு கவுடன் ஆண்டாள் என்ன என்று நாட்டை சுக்கு நூறாக துண்டாக்கி விடுவீர்கள். ஏற்கனவே மதத்தின் பெயரால் நாட்டை துண்டாக்கினது போதும்.
Theoretically you arguments may be correct, but practically ? Do you believe A TamiL can ba chef minister in Kerala or any other Provinces in India ? I want to hear your honest and practical answer.
ஒருவேளை ஒரு நல்லவன் ஆள வேண்டும் என்று கூறினால் கூட பரவால. தமிழன் மோசமானவனா இருந்தா என்ன பண்றது.
Define who is tamil by you definitions or seeman’s definition
You did not answer my question Mr. Naga.
தமிழனை தமிழின் ஆள்வது சரி
யார் தமிழன் என்று யார் முடிவு செய்வது சீமானா
அண்ணே ஆர். அண்ணே,
உங்க கேள்வியே பயங்கரமா இருக்குண்ணே …
இப்போ ஜெயலலிதா, டாஸ்மாக்கை மூட முடியாதுன்னு தான் ஆரம்பத்துல அமைச்சர்கள் மூலமா அறிக்கை விட்டுச்சு. அதை எல்லாரும் எதிர்த்தாங்க..
உடனே நீங்க வந்து, இப்போ உங்களுக்கு எது பிரச்சினை, ஜெயாவா இல்லை அவங்க “ டாஸ்மாக்கை மூட முடியாதுன்னு சொன்னதா?” அப்படின்னு கேப்பீங்களா ?.
நல்லா காமெடி பண்றண்ணே…
ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் அதனால அவளை எதிர்க்கனும். டாஸ்மாக் தேவை இல்லை, மக்களை அழிக்கும் அதனால அதனை எதிர்க்கனும். இதுவா அதுவா ந்னு எந்தக் கேள்விக்கும் ஒரே வார்த்தையில பதில் சொல்ல ம்டியாதுன்னே..
அப்புறம் – நீங்க என்ன செவ்வாய் கிரக பாசையிலையா கேள்வி கேட்டிருக்கீங்க ?.. அதை கஸ்டப்பட்டு புரிஞ்சிக்கிறதுக்கு ?.
சீமான் ஒரு அரவேக்காடு. மேலே நாகராஜ் சொன்ன மாதிரி நிமிஷத்துக்கு ஒண்ணு பேசிட்டுத் திரியுற முட்டாள். எல்லாத்துக்கும் மேல அவர் ஒரு பாசிஸ்ட். அதனால சீமானை எதிர்க்கனும்.
தமிழன் என்ற தகுதி ஒன்று போதாது தமிழகத்தை ஆள.. அதனால அது ஒரு அரவேக்காட்டு வாக்கியம் , அதையும் எதிர்க்கனும்
போதுமாண்ணே வெளக்கம்..
Hello அனானியன்,
I prefer decent and healthy discussion here. (Unwanted and unnecessary wording will distract our topic here.) I am still waiting for your answer.
If anyone can rule / govern TN, then anyone can rule India too. Same logic. Am I correct ? If I am correct then why did you sent British out ?
Discuss about the theme not the person who raise the question. I would like to have a healthy discussion here anyone ? Please ?
நல்ல கேள்விண்ணே..
இதத் தான் பகத் சிங் அன்னைக்கே சொன்னாரு..
காந்தி தலைமையில காங்கிரஸ்**** சுதந்திரம் சுதந்திரம்னு கத்திக்கிட்டு இருக்கானுங்க..
வெள்ளக்காரனை வெரட்டிட்டு, பழுப்புத் தோல் முதலாளி உக்காந்து அதே சுரண்டலைச் செய்யிறதுக்கு தான் இந்த முக்கு முக்குறானுங்க .. அது நமக்குப் பலனைத் தராது. உழைக்கும் மக்கள்ளான தொழிலாள்ர்கள் விவசாயிகள் கையில் அதிகாரம் கொண்டு வருவதும், முதலாளி மற்றும் பண்ணைகளின் கைகளில் இருக்கும் அதிகாரத்தைப் பறித்தெடுப்பதும் தான் முழுமையான சுதந்திரம் நு சொன்னாரு..
அதாவது, வெறுமனே இந்தியாவை இந்தியன் ஆளனும்னு சொல்றதோ, தமிழகத்தை தமிழன் ஆளனும்னு சொல்றதோ அரைவேக்காட்டு வாதம்.
எந்த மாதிரியான ஆட்சிங்கிறது தான் இங்க பிரச்சினை ?.
தமிழன் ஆண்டால் தேனாறும் பாலாறும் ஓடிடுமா ?.
சீமான் பாஷையில பெரியார் கூட தமிழன் கிடையாது தான். அவர் இல்லைன்னா இந்த ப**சி **ல்லாம் நின்னு பேசிறுக்கையாவது முடியுமா ?.
சீமான் பாஷையில சத்தியமூர்த்தி அய்யர் தமிழன் தான். சமூகநீதிக்கு எதிரா அவன் போட்ட ஆட்டத்தை மறக்க முடியுமா ?..
Answer me directly. Tamil should govern TN – This Ideology is correct or Not ? (Do not bring democracy and other ……. here. Practically is it possible A tamil can be a Chef Minister other than TN in India ?)
I have been to this forum for a long time and I noticed one thing here – Everyone blame each other for everything but not for the topic or the summary of the article. No one is ready to discuss about the theme of the article and no one is ready to answer if some one raise a legitimate question.
This is not a good sign for a growing and a good forum
தமிழ் நாடு என்று எதற்காக மாநிலத்துக்குப் பெயரிட வேண்டும்? ஆல் இந்தியா மாநிலம் எனப் பெயர் வைத்து விட்டு வாறவன் எல்லாம் ஆளவைத்து அடிமையாக வாழ்ந்துவிட்டுப் போகலாமே?
பிற மொழியினரால் அரசியல் நடத்த வசதியாகத் திராவிடம் எனத் ********** பெயரை வைத்து தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்த பெருமையை தமிழகம் தேடிவிட்டது. இனிமேல் எத்தனை சீமான்கள் கரடியாகக் கத்தினாலும் எதுவும் மாற்றம் ஏற்பட முடியாத கட்டத்துக்கு தமிழகத்தின் வரலாறு சீரழிந்துவிட்டது.
சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் ஆதித்தனாரும் மறைமலைஅடிகளும் பாரதி பாரதிதாசனும் இனிமேலும் பிறந்து வரமாட்டர்கள் என்றே நினைக்கிறேன்.
I am really really sad to see our peoples carelessness. They do not care our language, culture, our history our heritage. They are ready to loos our identity. Even they did not understand how importance is to preserve our identity.
Here I asked a question WHATS WRONG WITH THE IDEALOGY A TAMIL SHOUD GOVERN TN? Nobody answer my question. They are scolding each other but non of them are ready to discuss about the question. Seeman simply saying that we have been ruled by non tamil and we lost everything. We are loosing everything little by little. His argument is wright. Because we lost everything. He is saying A tamilian can understand our needs and our problem. There may be lots of unaccecptable or unwanted arguments lies within his idealogy. But we have to understand his basic idea. Need more talks. need more discussion. WE have to polish one by one.
But here in this forum, lots of people simply blame seeman for everythig. Simply blame each other people who are in this forum. Blame others persanally or discuss others personality.
I am not going to blame anyone here. Because we are the people who do a milk shower to the cutouts. But not shed a single drop of milk to the needy people.
What a SHAME.
I doubt about our history. We are ruled by forigners for more than five centuries. We lost our pride, and accepts others superiority. We believe in other not us. Shame.
If anyone can show me an example for non natives who rule other people in their native land ?
Poor people.I AM REALL REALLY SAD TO SEE rejecting our own IDENTITY. This can happen in TN only.
No water from KAvery – Ther is no talking about democracy.
No water from Mullai Periyaru – There is no talking about Democracy.
More than 500 fishermen were killed by the Sri Lankan Navy – There is no talking about democracy.
If I said “have to govern my own home” then we all cry Democracy. Shameless people we are.
Even for a talk can we imagine a tamil politician’s governance other provinces in India ?
Come on guys come out of the pot. Think outside the box. See out side. See the world. See the other provinces in India. Read Read Read. Warch Watch Watch. Practically where is democracy in the world. Show me one please.
Finally: We do not have enough time to blame each other, fighting each other. Then where we get the time to see the REAL WORLD.
நீங்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டிர்கள் முதலில் நாங்கள் (தமிழக மக்கள்) இந்தியர்கள் பிறகு தான் நாங்கள் தமிழர்கள்.
இந்த தமிழன் தமிழ் இனம் என்று சொல்லி இலங்கையில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும், ஒரு தலைமுறையே அழிவில் தள்ளியிருக்கிறீர்கள், இலங்கையில் ஏற்பட்ட அழிவை போல் தமிழகத்திலும் நடக்க கூடாது. சீமானின் கட்சியை புறக்கணிப்பதற்கும் மிக முக்கிய காரணம் இது… தெலுங்கு மலையாள கன்னட மக்கள் எங்கள் சகோதரர்கள் தான் அவர்கள் மீது வெறுப்பை வளர்க்க பார்க்கும் உங்கள் தமிழ் உணர்வு எங்களுக்கு வேண்டாம்.
“தெலுங்கு மலையாள கன்னட மக்கள் எங்கள் சகோதரர்கள் தான் அவர்கள் மீது வெறுப்பை வளர்க்க பார்க்கும் உங்கள் தமிழ் உணர்வு எங்களுக்கு வேண்டாம்.”
You are right Manikandan. I accept that. But I have a Question for you. Are they accepting you as their brother and sister.
நான் ஆரம்ப காலத்தில் கேரளாவில் தான் வேலை பார்த்தேன் அங்கே என் நண்பன் வீட்டில் தான் தங்கினேன், அவர்கள் என்னையும் அவர்களின் மகனை போல் பார்த்து கொண்டார்கள், நான் தங்கியதற்கு பணம் கொடுத்த போது அவர்கள் வாங்கவே இல்லை.
என் மிக நெருங்கிய நண்பனே ஒரு சீக்கியன் தான்.
என் தனிப்பட்ட அனுபத்தில் இருந்து தான் சொல்கிறேன், கேரளா, கர்நாடக, ஆந்திரா மக்கள் எல்லாம் நம் சகோதரர்கள் தான்.
முடிந்தால் நீங்கள் ஒரு முறை இந்தியா முழுவதும் சுற்றி பாருங்கள், சாதாரண மக்களிடம் பேசி பாருங்கள் நிச்சயம் உங்கள் மனம் விசாலம் அடையும், இந்த குறுகிய மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள்.
அனைத்து இடங்களிலும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்போடு தான் இருக்கிறார்கள், சீமான் போன்ற அரசியல்வாதிகளின் குறுகிய பார்வையால் தான் இனவாதம் மதவாதம் ஜாதிவாதம் பேசி கொண்டு மக்களின் மனதில் விஷத்தை விதைக்க பார்க்கிறார்கள்.
இதை யாரிடம் சொல்கிறீர் மணிகண்டன்?உலகம் முழுக்க சாதாரண சராசரி மக்கள் அன்புடனும் விட்டுக்கொடுக்கும் மனதுடனும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த பாடத்தை சீமானுக்கு நடத்துவதைவிட உங்கள் தலைவர் மோடிக்கும் மோடியை சுற்றியிருக்கும் கூட்டத்திற்க்கும் போய் முதலில் நடத்துங்கள். நாங்கள் சீமானை பார்த்துக்கொள்கிறோம். இன்று நாட்டில் நடப்பது கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டவில்லையா மணிகண்டன்?சீமானுக்காக்க கோபம் வந்தால் நாட்டை ஆளும் காவிகளின் மேல் வெறியே வரவேண்டுமே! அப்படி வந்தால் உங்களின் ஒப்பாரி நியாயம் என்று எடுத்துக்கொள்ளலாம்.சீமானை விட பல பல மடங்கு விஷத்தை நாட்டு மக்கள் மேல் தூவி மக்களை தொடர்ந்து மதவெறியின் பால் இழுத்துக்கொண்டே இருக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் காவி கயவர்களின் பக்கம் நின்று பேசிக்கொண்டு சீக்கியர் நல்லவர் மலையாளி நல்லவர் கன்னடர் நல்லவர்…இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா?மனிதர்கள் எல்லோரும் நல்லவ்ர்களே பிரித்தாள நினைக்கும் கயவர்களைத்தவிர அந்த நாசகார சக்திகள் நாசமாகிப்போவார்கள் …நல்ல மக்கள் நலமாக வாழ்வார்கள்.
“என் தனிப்பட்ட அனுபத்தில் இருந்து தான் சொல்கிறேன், கேரளா, கர்நாடக, ஆந்திரா மக்கள் எல்லாம் நம் சகோதரர்கள் தான்”
That’s correct. They are our brothers and sisters. But it is seems to me that they are thinking otherwise.
What about letting our own family and our farmers die without water ? Are you going to say that is politics ? Think practically.
சார், முதல்ல தப்பு தப்பா இங்கிலிஷ்ல டைப் பண்றத நிறுத்திட்டு தமிழ்ல டைப் பண்ணி தொலைங்க… புண்ணியமாப்போவும்.
You understand what I am trying to say? Ah. That’s all I wanted. (English is not my mother tongue. Language is to communicate and I am not perfect in English. Also I can not type in Tamil, Sorry brother)
Far Better Than Thaminglish – I believe.
You are not saying a word about whats wrong with his ideology ? Talk about that. (He is not asking separation, I believe)
நம்மை எரிச்சல் படுத்துவது ஒன்றே மணிகண்டனின் குறி.பிஜேபி கார கேவலமான் தந்திரங்களில் இதுவும் அடக்கம்.நாமெல்லாம் தேசிய உணர்வின்றி அம்மனமாய் இருப்பது மாதிரியும் ஒவொவொரு பிஜேபி காரனும் டன் கணக்கில் தேசியத்தை வைத்துக்கொண்டு நமக்கு போர்த்தி விடுவது மாதிரியும் பாவ்லா காட்டுவது.இன்றைக்கு இந்த தேசியவியாதி ரொம்ப ரொம்ப முத்தி போய் இருப்பது எச் ராஜாவின் பேச்சு ஒன்றே போதும்.தன்னுடைய பொண்டாட்டி பிள்ளைகளை கோபத்தில் திட்டினால்கூட தேசவிரோதி என்றுதான் எல்லா பிஜேபி காரனும் திட்டுவான் கள் போல.
“தங்கட்சி.., தங்கட்சி.., “
தமிழ்நாட்டில் T.R.க்குப் பிறகு இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியவர் பெரியண்ணன் சீமானாகத்தான் இருக்கும்.
ஆமா பெரியண்ணனுக்கு அதற்க்கு ஒன்றும் குறைச்சலில்லை.தொண்ணூறு வயது கிழவனும் தம்பி நூறு வ்யது கிழ்வியும் அவருக்கு தங்கச்சி.புதூ கலாச்சாரத்தையும் உருவாக்குறாராமா
Whats wrong with that?
tamilana tamilan than alanum nu oru statementa vecha vatham panringa ok, idhu keka nalla than irukum,unarchi poorvama. unga kelvi ku na kelvi moolama badil solren.
1. Tamilar tamilar na, tamilan nu yara soluvinga, ebdi piripinga.
2. onnu jathi adiapadai la pachai tamilar nu soluvom, abdi sonna elarukum tamil unarvu iruku nu solla mudiyathu ok, so ithu wrong.
3. sari 1000, 2000 years ku munadi poi patha, ellarum tamil than pesitu irundhanga, malayalam language ila, so avungalum tamilar la than varuvanga, so ibdium mudiyathu
3. pala varushama telugu , malayam, kannadam, tamil pesaravanga kula marriage nadanthurku, so ithula yaru tamilan yaru kannadan nu kadu pidika mudiuma. so intha adayaltha than dravidam nu solanga( nenga dravida katchi ku poirathinga) so idulaim tamilan yaru nu sollamudiyathu.
so intha madiri neraya vishyam sollalam, ana tamilan yaru nu oru definition thara mudiyave mudiyathu. so nenga sonninngala tamila nata tamilan ala kudatha nu, tamil nu varaiyaraye seimudiyathu, ariviyal porvama partha mozhiya vechu oru intha piraka mudiyathu
so tamil unarvulla, ingu valara nalla aatkala than thervu seiyanum. TAMILANA TAMILAN THAN ALANUM ngarathu muttal vivatham. nenga example kaga british namala anadangale nu kontu povinga ,but namma adimaya than vechurunthanga ( ipavum abdi than) adhu democracy ila. so inin itha example ah solathinga.
one question to you
TMAILAN THAN ALANUM NA TAMILAN elarum nallavana?
tamilan abdingara oru qulofication podhuma? answer me