Saturday, July 11, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் - மதுரை கருத்தரங்கம்

கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்

-

“கீழடி அகழ்வாய்வு முடக்கப்படுகிறது! தொல் தமிழர் நாகரிகம் புதைக்கப்படுகிறது!! என்ன செய்யப் போகிறோம் நாம்!!!” என்கின்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் கடந்த 28‍.05.2017 ஞாயிறு மாலை மதுரை மாட்டுத்தாவணி அருகில் செய்தியாளர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தோழர் சினேகா தனது வரவேற்புறையில் சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட உட்புறத்தில் சுடப்பட்ட பானைகள் கண்டறியப்படவில்லை. ஆனால் கீழடியில் இருபுறமும் சுடப்பட்ட மண்பானைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அரிய 310 பழம்பொருட்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு நம் தொல்தமிழரின் நாகரிகம் கண்டறியப்படுவதை பொறுக்க முடியாமல் இந்து‍-இந்தி-இந்தியா என்று ஒற்றை கலாச்சாரத்தை நோக்கி செல்ல முயற்ச்சிக்கும் RSS – BJP  கும்பல் கீழடியை முடமாக்கி அழிக்க முயற்சிக்கிறது. ஆனால் ஏற்கனவே ராமன் சிலைக்கு செருப்படி, விநாயகர் சிலை உடைப்பு என ஆரிய எதிர்ப்பு பாரம்பரியம் கொண்டது. எனவே இந்த கருத்தரங்கிற்கு வந்திருப்பவர்கள் இங்கே சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என உரையாற்றினார்.

தோழர் கதிரவன்

தோழர் கதிரவன் தன்னுடைய தலைமை உரையில் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் மட்டுமே ஒரு போக்கிற்காக‌ 3-வது கட்ட ஆராய்ச்சிக்கு பாஜக அனுமதி வழங்கி 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.  இதை ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போய்விடக்கூடாது என்று பயந்துபோய் அனுமதியளித்துள்ளனர் என சந்தேகிக்க காரணங்கள் இருக்கின்றன. கிடைத்துள்ள 5,300 பழம்பொருட்களில் குறைந்தது 10 பொருட்களையாவது ஆய்விற்கு அனுப்பவேண்டும் என்று பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது கூட‌ பொருட்படுத்தாமல் வெறும் இரண்டை மட்டுமே கால கணிப்பு ‍ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அதுவும் வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.

வட இந்தியாவில் நடக்கும் அகழ்வாராய்ச்சியிலிருந்து 15, 20 பொருட்களை அனுப்புகின்றனர். ராமாயண அருங்காட்சியகத்திற்கு 150 கோடி ஒதுக்கீடு, இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கீடு என்பதையும் இதோடு சேர்த்து சிந்தித்து பாருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை விவசாயிகளிடம் கேட்காமல்கூட கையகப்படுத்தும் மோடி கீழடிக்கு கள அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்க மறுக்கிறது. மேலும் வெளிநாட்டு பிரதமர்களை சந்திக்கும் போதெல்லாம் பகவத்கீதையை பரிசளிக்கும் மோடி பிறப்பால் உயர்வு தாழ்வை ஏற்றுக்கொள்ளாத திருக்குறளை பரிசளிப்பதில்லை. இவற்றையெல்லாம் பல ஆயிரக்கணக்கில் பிரசுரங்களிடித்து  மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்றுள்ளோம் என தனது உரையில் பேசினார்.

தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம்

அதன் பின்னர் தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் பேசும்போது பொதுவாகவே வடஇந்தியாவில் JNU    பேராசிரியர்கள்கூட தென்னிந்தியாவில் மூவேந்தர்கள் பேரரசு இருந்தது என்பதையோ அல்லது அசோகர் காலத்திற்கு முன்பாகவே எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். கீழடிக்குப் பிறகுதான் ரொமிலா தாப்பரிடம் மாற்றம் வந்துள்ளது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த வரலாற்று போராய மாநாட்டின் தலைமையுரையில் கீழடி கண்டுபிடிப்பானது நாம் தமிழக வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்றார்.

ஆனால் கீழடியே முதன் முறை அல்ல ஆதிச்சநல்லூரில் தொடங்கி கொடுமணல், புளிமான் கோம்பை என பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. இதில் ஆதிச்சநல்லூர் கிட்டத்தட்ட கி.மு.1700-க்கும் முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ சில சில்லறை விசங்களை கூறி அதன் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளார்கள். குறிப்பாக வட இந்திய அகழ்வாரய்ச்சிகளில் கிடைத்த மண்பாண்டங்களில் எதிலும் எழுத்துக்கள் குறிக்கப்படவில்லை. தமிழக்கத்தில்தான் எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அதுவும் பிராமி எழுத்துக்கள் கலக்காத தமிழ் எழுத்துக்களுடைய மண்பாண்டங்கள். மேலும் வட இந்தியாவில் எத்தனையோ அறிஞர்கள் 20 வருடம் வரை ஒரே அகழ்வாராய்ச்சியில் பணி செய்தே ஓய்வு பெறும் சூழலில்
திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை மட்டும் 2 வருடத்தில் மாற்றுவது கூடாது. என்னுடைய கணிப்பின்படி கீழடியானது மிகப்பெரிய தொழிற்கூடமாக இருக்கலாம் குறிப்பாக நெசவு அல்லது நூல் தயாரிப்பு செய்யப்பட்ட தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்று பேசினார். முனைவரின் உரையானது இந்தியாவின் மூத்த தொல்குடி தமிழ்குடிதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இருந்தது.

அதன் பின் ம.க.இ.க.வின் மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் பேசும்போது முனைவரின் அனுபவப்படி பல்வேறு ஆராச்சி முடிவுகள் தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் விதமாக வந்திருக்க ஆனால் அது எதுவும் பாடநூல்களில் சேர்க்கப்படாமல் 1960-களில் சேர்க்கப்பட்ட பாடங்களே வரலாற்று நூல்களில் இருக்கிறது என்றால் இந்த பாடத்திட்டமே எவ்வளவு அநாகரிகமானது என்று கேள்வியெழுப்பினார். பொதுவாகவே BJP – RSS   கும்பலை சந்தேகப்பட பல காரணங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் திராவிட நாகரிகத்தின் தொன்மையை பற்றியும் பல்வேறு கண்டுபிடிப்பு உண்மைகள் வெளியே வந்துள்ளது. ஆனால் BJP – RSS  கும்பல் இவை எவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்மொழி, சிந்து நாகரிகமே இந்து நாகரிகம்தான் என இன்னுமும் சொல்லி கொண்டிருக்கின்றனர்.

தோழர் காளியப்பன்

பாட நூல்களில் புராணக் கதைகளை நுழைப்பது, திராவிட கருத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசுவது இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் இவர்கள் கீழடியை விட்டு வைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். கால்டுவெல் தன்னுடைய ஆராய்ச்சியில் தமிழர்கள் அவ்வளவாக மூடநம்பிக்கை அற்றவர்களாகவும், பொதுவில் பொதுச்சிந்தனை உடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இந்துத்துவ கும்பல் வைத்துள்ள பெயர் பிரித்தாளும் அந்நிய சூழ்ச்சிக்காரர். மேலும் அத்திரப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் RSS-ன் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு வேட்டு வைப்பதாக உள்ளது, எனவேதான் தமிழகத்தில் நடக்கும் எந்த அகழ்வாராய்ச்சிகளை நிறுத்திவிட அவர்கள் துடிக்கிறார்கள்.

தோழர் ராமலிங்கம்

RSS-ன் சாவர்காரின் கருத்துப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா என்று ஒற்றை பண்பாடு கொண்ட நாடாக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்துக்கள் என்று கூறியதை யோசித்துப் பார்த்தால் அவர்களின் திராவிட எதிர்ப்பு மனநிலை புரியும். எனவே ஆதிச்சநல்லூர் தொடங்கி கீழடி வரையிலான அனைத்து அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை வெளியே கொண்டுவர போராடுவதும், அந்த முடிவுகளை வரலாற்று பாடநூல்களில் இடம் பெறச்செய்வதும் ஆரிய இந்துத்துவ சித்தாந்தத்திற்கு பேரிடியாக இருக்கும் என தேவையை உணர வைத்து பேசினார்.

இறுதியாக ம.க.இ.க வின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கத்திற்கு திரளான பார்வையாளர்களும், ஜனநாயக உணர்வு கொண்டவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. தமிழின் தொன்மை வெளிப்பட திருக்குறள் ஒன்றுதான் ஆதாரம். தொல்காப்பியம் இலக்கண நூல். திருக்குறள் ஆன்மா, மறுபிறவி என்ற வேதசிந்தனைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. அதை விடுவிக்க திருக்குறளுக்கான சரியான உரைகளை. ஊக்குவிக்க வேண்டும்
  தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம் (பரிமேலழகர் இங்கே திருத்தப்படுகிறார்)

 2. இனியும்சரித்திரத்தைபுதையவிடக்கூடாது இன்னொருபார்ப்பனசூழ்ச்சிக்கு தமிழகம்பழியாகக்கூடாது!கீழடிபுதையல்மீட்கும்ஓசைக்கு சுதிசேர்ப்போம்!

 3. Indology என்று கூகுள் செய்து பாருங்கள். இந்திய சிந்தனை பற்றிய கருத்துகள் அனைத்தும் வடமொழி வழியே தோன்றியதுதான் என்ற உணர்வுதான் வெளிப்படும்.
  தமிழ் தொனமொழி, செம்மொழி என்றால் அதற்கான தனித்துவமான சிந்தனை எங்கு காணப்படுகிறது ? இதற்கான விடை திருக்குறள் என்றுதான் வெளிப்படும். திருக்குறள் தமிழ்ச் சிந்தனையாகவா கூறப்படுகிறது. மறுமை என்பதை மறுபிறவி என்றல்லவா புரிந்து கொள்கிறோம். மறுபிறவி என்பது பாவ புண்ணியங்கள் அடிப்படையில்தானே புரிந்து கொள்ள முடியும். இவையெல்லாம் வடமொழி வேதக் கருத்துகள் இல்லையா ? அதாவது வடமொழியை மீறிய தமிழ்ச் சிந்தனை இல்லை திருக்குறளில் இல்லை என்றல்லவா ஆகிறது. தமிழரின் கடமை , வடமொழியை மீறிய தமிழ்ச் சிந்தனை உண்டு என்பதை நிலை நிறுத்துவதாக இருக்க வேண்டும்.
  கீழடி வழியாக அகழ்வாய்வு ஒருபுறம் தமிழரின் நாகரிகம் நிலை நிறுத்துகிறது. அதற்கு இணையாக தனித்தன்மையான தமிழ்ச் சிந்தனையை முன்னிறுத்த வேண்டியது தேவையாகும்.
  என் நூல் கீதையின் சிந்தனையை திருக்குறள் சிந்தனையோடு ஒப்பு நோக்கி திருக்குறளின் தனித்தன்மையை நிலை நிறுத்துகிறது.
  அந்தக் கருத்துகளை பரப்பக் கூடிய சரியான மேடை கிடைக்கவில்லை. என் வயது 75. எனக்கு எந்த ஆதாயமும் கிடையாது. என் நூலுக்கு ஒரு மேடை, விமரிசனம் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆதங்கம்.
  இந்தத் தளத்தில் உ்ள நண்பர்களின் உதவியை எதிர்நோக்குகிறேன்.

  • என் நூல் சென்னையில் ஒடிசி புத்தகக் கடை அடையார் …கிடைக்கும். இணையத்தில் பெற
   wwwnotionpress.com …….bookstore
   http://www.amazon.in
   ஆகிய வலைத்தளங்களில் பெறலாம்.
   vichaan@gmail.com

 4. //
  மேலும் அத்திரப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன //

  Any link related to above statement will be appreciated.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க