Wednesday, July 9, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை - படங்கள்

வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்

-

ஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மோடி அரசின் மாட்டிறைச்சி தடை காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வர முடியாமல் வெறிச்சோடி கிடந்தது. பல மாட்டு வியாபாரிகள் இதனால் மாடுகளை வாங்கி விற்கவும் முடியாமல், வேலையிழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாட்டு சந்தையில் அடிமாடுகளும் குறைந்த அளவே கொண்டுவரப்பட்டன. சந்தையில் இதை சார்ந்து தொழில் செய்யும் மற்ற வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தடை வெறும் பசு புனிதம் என்று கூறும் மனுநீதி மட்டுமல்ல, இந்தியாவின் மாட்டுசந்தையை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்திற்கான முதல் கட்டம்.

28-05-2017 அன்று திருவோணம் மாட்டுச் சந்தை திடல்
28-05-2017 அன்று நடைப்பெற்ற திருவோணம் மாட்டு சந்தை
தஞ்சை மாவட்டம், திருவோணம் மாட்டுச் சந்தை 28-05-2017. விற்பனையாகாமல் திரும்பி செல்லும் மாடுகள்
மாட்டிறைச்சி தடையினால் திருவோணம் மாட்டு சந்தையில் வேலையிழந்து நிற்கும் சிவவிடுதி மாட்டு வியாபாரிகள்
திருவோணம் சந்தை, மூக்கணாங்கயிறு பின்னும் தொழிலாளி
28-05-2017 அன்று திருவோணம் மாட்டு சந்தையில் விவசாயிகள் அனுப்பி வைத்துள்ள அடிமாடுகள்
திருவோணம் மாட்டு சந்தையில் கடைவிரித்தேன் கொள்வாரில்லை – டீ விற்கும் தொழிலாளி
திருவோணம் மாட்டு சந்தையில் கயிறு சாட்டைக்குச்ச்சி வியாபாரம் ஆகாமல் காத்திருக்கும்  வியாபாரி
சந்தையில் கயிறு வாங்குவதற்கு ஆளில்லாமல் அவற்றை திருப்பி எடுத்து செல்லும் பெண் வியாபாரி
மாட்டிறைச்சி தடையினால் ஆட்களில்லாத சந்தையில் கடைவிரித்திருக்கும் மற்ற வியாபாரிகள் .

– வினவு செய்தியாளர்கள்