privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாகிரேக்கப் புரட்சியாளர் ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் நினைவு தினம் !

கிரேக்கப் புரட்சியாளர் ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் நினைவு தினம் !

-

கிரேக்க‌ நாட்டில் ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ க‌ம்யூனிச‌ கொரில்லா இய‌க்க‌த் த‌ள‌ப‌தி ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் (1905-1945) கொல்ல‌ப் ப‌ட்ட‌ எழுபத்தியோராவது நினைவுதின‌ம் 2017 ஜூன் 16.
இர‌ண்டாம் உல‌க‌ப் போரில், கிரேக்க‌ நாடு நாஸிப் ப‌டைக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. கிரேக்க‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி ம‌க்க‌ள் ப‌டை (ELAS) என்ற‌ பெய‌ரில் கொரில்லாக் குழுக்க‌ளை அமைத்து விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌து.

போரின் முடிவில், பிரிட்டிஷ் ப‌டைக‌ளின் ஆத‌ர‌வில் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ கிரேக்க‌ முத‌லாளித்துவ‌ அர‌சு, க‌ம்யூனிஸ்ட் கொரில்லாக்க‌ள் ஆயுத‌ங்க‌ளை ஒப்ப‌டைக்க‌ வேண்டுமென‌ வ‌லியுறுத்திய‌து. த‌ள‌ப‌தி ஆரிஸ் அத‌ற்கு ச‌ம்ம‌திக்க‌ ம‌றுத்தார். கிரேக்க‌த்தை சோஷ‌லிச‌ நாடாக்குவ‌த‌ற்கான‌ ஆயுத‌ப் போராட்ட‌த்தை தொட‌ர்ந்தார்.

ம‌த்திய‌ கிரேக்க‌ மலைப் ப‌குதியில் ம‌றைந்திருந்த‌ ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ், ம‌ற்றும் அவ‌ர‌து தோழ‌ர்க‌ளும், முத‌லாளித்துவ‌ அர‌சுப் ப‌டைக‌ளால் சுற்றி வ‌ளைக்க‌ப் ப‌ட்டன‌ர். அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில் கொல்ல‌ப் ப‌ட்டு, அவ‌ர்க‌ள‌து தலைக‌ள் துண்டிக்க‌ப் ப‌ட்டு, திரிக்க‌லா நக‌ர‌த் தெருக்க‌ளில் பொது ம‌க்க‌ள் பார்வைக்காக‌ வைக்க‌ப் ப‌ட்டிருந்த‌ன‌.

தகவல் : கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி 

Today is the 71st anniversary of the death of the First Captain of the People’s Army (ELAS) Aris Velouchiotis (1905-1945). Velouchiotis was a partisan, member of the Communist Party of Greece (KKE) and guerrilla leader during the Axis occupation in WW2. Aris, who was born in Lamia, central Greece in 1905, was a cadre of the Communist Party of Greece and at the decision of the party he undertook the formation of the People’s Army (ELAS) during the fascist occupation, the armed wing of the National Liberation Front (EAM).

Aris opposed the Varkiza Agreement, which disarmed ELAS, and returned to the mountains. In June 1945, his small armed group was surrounded in Mesounda (Arta) and killed by the bourgeois army, which desecrated their corpses, cutting off the heads of Aris and his comrades, which were hung in the central square in the town of Trikala. The then leadership of the party disowned him.

–  ஃபேஸ்புக்கில் தோழர் கலையரசன் (Kalai Marx)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க