Tuesday, December 3, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் - நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

-

வினவு குறிப்பு:

ரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில் நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார்.

இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக இந்த மரபணு ஆராய்ச்சி உண்மையை மறுக்க முடியாமல் எடுத்துரைக்கிறது. மற்ற ஆய்வுமுறைகளை விட மரபணு ஆராய்ச்சி இன்னும் துல்லியமானது. கி.மு 2000-ம் வாக்கில் மத்திய ஆசியாவிலிருந்து சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை வேராகக் கொண்ட ஆரியர்களின் வருகையை இந்த ஆய்வு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுகிறது. அதே காலத்தில் இங்கு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனதும் நடந்திருக்கிறது.

ஆரியர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் மற்ற மக்களும் குடியேறிகள்தான் என்று கட்டுரையாசிரியர் சற்றே நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். அது உண்மைதான். ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்களே இந்தியாவின் பூர்வகுடிகள். அதன் பிறகு சிந்து சமவெளி நாகரீகத்தை படைத்தோர், கிழக்காசியாவில் இருந்து விவசாயத்தோடு குடியேறிய மக்கள் எல்லாம் ஆரியர் வருகைக்கு வெகு காலம் முன்பே இங்கு குடியேறினார்கள். ஆனால் ஆரியமயமாக்கம் என்பது இங்குள்ள பூர்வகுடிமக்களை விரட்டியது, ஒடுக்கியது, சமஸ்கிருதமயமாக்கம், நிறவெறி, பின்னர் அதுவே வர்ணமாக மாறியது என்று ஒரு பெரும் பார்ப்பனிய அடக்குமுறையோடு தொடர்புடையது.

இன்று இந்த மரபணுக்கள் எல்லாம் கலந்து ஒன்று பிணைந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஒன்றிணைவை இன்றைக்கும் பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்கி மதம், சாதி, மொழியின் பெயரால் இந்திய உழைக்கும் மக்களை சூத்திரன், பஞ்சமன் என்றே ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறை ஆரியர் வருகையோடு தொடர்புடையது என்பதுதான் முக்கியமானது. “நாங்கள் கருப்பாக இருக்கும் திராவிடர்களோடு சேர்ந்து வாழவில்லையா” என்று தருண் விஜய் கேட்ட கேள்வி அதை வேறு விதத்தில் விளக்குகிறது. இனி இந்துமதவெறியர்கள், ஆரியர்கள்தான் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை மறுத்துப் பேச முடியாது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை அவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்து தடை செய்ய முனைவார்கள். உண்மையை வன்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்!

ந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதேசமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் தனி வகைப்பட்ட கலாச்சாரத்துடனும் கி.மு 2000 க்கும் கி.மு 1500 -க்கும் இடைப்பட்ட காலத்தில் (அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியாவிற்குள் குடியேறினார்களா என்பதுதான் அந்தக் கேள்வி. அந்த காலகட்டம்தான் சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆம் அவர்கள் குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.

மரபணுவியல் ஆராய்ச்சி அளிக்கின்ற இந்த விடை பலருக்கு வியப்பையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடும். ஏனென்றால், சமீபகாலமாக ஆரிய குடியேற்றம் என்ற கருத்தாக்கமே மரபணுவியல் ஆராய்ச்சிகளின் மூலம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற கருத்து பரப்பப்பட்டு வந்தது. இந்தக் கருத்து வலிந்து கூறப்படும் மிகைக் கூற்று என்பது அந்த கருத்தை முன்வைப்பவர்கள்  சுட்டும் மூல ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவனமாக படித்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய ஒன்று.

ஆனால், அப்படிப்பட்ட சந்தேகங்கள் எதற்கும் இடமில்லாமல், தந்தை வழியாக ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் Y-குரோமோசோம்கள் தொடர்பாக இப்போது  வெள்ளம் போல் வந்து சேரும் புதிய தரவுகள் ஆரியக் குடியேற்றத்தை மறுக்கும் வாதங்களை தூள் தூளாக்கிவிட்டன.

வம்சாவழித் தொடர்கள்

சமீப காலம் வரை தாயிடமிருந்து பெண் வாரிசுகளுக்கு கடத்தப்படுகின்ற mtDNA (matrilineal DNA) என்ற தாய்வழி உயிரணுவைப்பற்றிய தகவல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்தத் தரவுகள், இந்திய மக்களின் மரபணு தொகுப்பிற்குள் சுமார் 12,500 ஆண்டுகளாக வெளியிலிருந்து வந்த எந்த புதிய மரபணு சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தற்போது கிடைத்துள்ள புதிய Y-DNA தரவுகளிலிருந்து இந்த 12,500 ஆண்டு காலகட்டத்தில் இந்திய ஆண் வம்சாவழியில் வெளியிலிருந்து வந்த மரபணுக்கள் கலந்திருக்கின்றன என்பதை நிறுவ முடிகிறது. இது ஆரியக் குடியேற்றம் நிகழவில்லை என்று வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும்   தவிடு பொடியாக்கியிருக்கிறது.

தாய்வழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும், தந்தைவழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும் இடையேயான வேறுபாட்டுக்கான காரணம் என்ன என்பது இந்த புதிய விபரங்களின் ஒளியில் வரலாற்றை பரிசீலிக்கும் போது தெளிவாகத் தெரிகிறது. வெண்கல யுகக் குடியேறிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக இருந்திருக்கின்றனர்.  எனவே, தாய்வழி மரபணு தொடர்பான தரவுகளில் இந்தக் குடியேற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மரபணு  கலப்பு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. ஆனால், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட தந்தை வழி உயிரணு தொடர்பான தரவுகளில் அவை வெளிப்படுகின்றன.

இன்று சுமார் 17.5% இந்திய ஆண்களின் மரபு தொடர்ச்சி, மத்திய ஆசியாவிலும்,  ஐரோப்பாவிலும், தெற்கு ஆசியாவிலும் பரவியிருக்கும் R1a ஹேப்லோகுழுவைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. (ஒரு ஹேப்லோகுழு ஒரு தனிப்பட்ட வம்சா வழியை அடையாளப்படுத்துகின்றது). R1a வம்சாவழி மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பகுதியிலிருந்து மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் பரவியதென்றும் அவ்வாறு பரவும் வழியில் அது பல்வேறு துணைக்கிளைகளாக பிரிந்ததென்றும் தெரிகிறது.

சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்தியாவிற்குள் ஏற்பட்ட குடியேற்றங்களைப் பற்றிய ஒரு செறிவான கோர்வையான வரலாற்றை சித்தரிக்கும் ஆய்வுக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்னர் BMC Evolutionary Biology என்ற, அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.

“இந்திய துணைக்கண்டத்தின் மரபணுவியல் கால வரிசை பெருமளவில் ஆண் வழியிலேயே மரபணு கலப்பு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது” என்ற தலைப்பிலான அந்த ஆங்கில ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் மார்ட்டின் பி.ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு பின்வரும் முடிவுக்கு வந்திருக்கிறது :

சிந்து சமவெளி நாகரீகம்

“வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்து கலந்த  மரபணு உள்ளீடு பெருமளவில் ஆண்கள் வழி வந்திருக்கிறது. இது இந்தோ-ஐரோப்பிய மேய்ச்சல் சமூகம், ஒரு வட்டார அளவிலான தந்தைவழி ஆணாதிக்க சமூகம் என்ற முந்தைய புரிதலுடன் ஒத்துப்போகிறது. மேற்கண்ட மரபணு கலப்பை உருவாக்கிய இந்த குடிபெயர்வு, இதை விட விரிவான இந்தோ-ஐரோப்பிய குடிபெயர்வின் ஒரு பகுதியே. ஐரோப்பிய-ஆசிய கண்டங்கள் எங்கும், 3,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கிடைபட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த குடிபெயர்வு காஸ்பியன் பகுதியிலிருந்து தோன்றியிருக்கிறது.”

இந்திய ஆண்களின் உடலில் R1a குழுவைச் சேர்ந்த மரபணுக்கள் பரவலாக காணப்படுவது, இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வெண்கல யுகத்தில் குடியேறியதற்கான ஒரு வலுவான ஆதாரம் என்று பேரா. ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். பேரா. ரிச்சர்ட்ஸ் குழுவினரின் உறுதியான முடிவுகள், அவர்களது சொந்த ஆராய்ச்சியில் கிடைத்த வலுவான ஆதாரங்களை மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கிலும் நடத்தப்பட்ட மரபணுவியல் விஞ்ஞானிகளுடைய ஆய்வுகளில் கிடைத்த தரவுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.

ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபணுவியலாளரும், பேராசிரியருமான டேவிட் ரைக் தனது முந்தைய ஆய்வுகளில் மிகவும் எச்சரிக்கையாக முடிவுகளை முன் வைத்திருந்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டேவிட் ரைக் தலைமையிலான குழுவின் 2009-ம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான “இந்திய வரலாற்றை மீண்டும் பொருத்திப் பார்ப்பது” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையாகும்.

இந்த ஆய்வு இந்திய மக்கள்தொகையின் மரபணுவியல் உட்பிரிவை தீர்மானிக்க “வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர்” என்ற கோட்பாட்டை பயன்படுத்தியது. வடஇந்திய மூதாதையர் மத்திய கிழக்கு மக்களுடனும், மத்திய ஆசிய மக்களுடனும் ஐரோப்பியர்களுடனும் மரபணுவியல் ரீதியில் நெருக்கமானவர்கள் என்றும் தென்னிந்திய மூதாதையர் இந்தியாவில் மட்டுமே காணப்பட்டவர்கள் என்றும் அந்த ஆய்வு நிறுவியது. இன்றைய இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான குழுக்களை இந்த இரண்டு மக்கள் பிரிவினரின் கலப்பாக வகைப்படுத்தலாம் என்றும் மேல் சாதி குழுக்களிலும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை பேசுபவர்களிலும் வட இந்திய மூதாதையர் கூறுகள் அதிகமாக உள்ளன என்றும் இந்த ஆய்வு நிறுவியது. இந்த ஆய்வு ஆரிய குடியேற்றத்தை மறுக்கவில்லை. மாறாக வடஇந்திய மூதாதையர்களுக்கும் மத்திய ஆசிய மக்களுக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆரிய குடியேற்றம் பற்றிய கருதுகோளை வலுப்படுத்தியிருந்தது.

இருப்பினும், இந்த ஆய்வு உருவாக்கிய வடஇந்திய மூதாதையர்  – தென்னிந்திய மூதாதையர் என்ற கோட்பாடு விருப்பம் போல இழுத்துத் திரிக்கப்பட்டு இந்த இரண்டு குழுக்களும், ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறியதாகக் கருதப்படும் 4000-3500 ஆண்டுகளுக்கு வெகு முன்னதாகவே, பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்து விட்டவர்கள் என்றும் வாதிடப்பட்டது.

புதிதாக பெருமளவு தரவுகள் கிடைத்திருக்கும் நிலையில் இப்போது ரைக் என்ன சொல்கிறார் என்று கேட்போம். கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பிப் புல்வெளி பகுதிகளில் தோன்றி பின்னர் ஐரோப்பாவிற்கும் தெற்காசியாவுக்கும் பரவின என்ற கருதுகோளைப் பற்றி பேசும் போது அவர் “மரபணுவியலைப் பொறுத்தவரை ஸ்டெப்பி கோட்பாட்டுக்கு ஆதரவான நிலையே உள்ளது. ஐரோப்பாவில் இன்று வலுவாக காணப்படும் வடக்கு யூரேசிய வம்சாவழி கிழக்கு ஸ்டெப்பியிலிருந்து சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தது என்று நிறுவியிருக்கிறோம்” என்று சொன்னார்.

இந்தியாவைப் பொறுத்தவரை “2000 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் ஒரு சிக்கலான மக்கள் தொகை கலப்பு நடந்திருக்கிறது. பலவகை சமூகங்களைப் பற்றி பேசும் உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலத்துடன் இது பொருந்துகிறது” என்கிறார் அவர்.

இவ்வாறு, வெண்கலயுகத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினார்கள் என்ற கூற்றை எதிர்க்கும் வாதங்கள் ஒவ்வொன்றும் பொய்ப்பிக்கப்பட்டு விட்டன.

வாதங்களை தொகுத்துப் பார்க்கலாம்

  1. தாய்வழி உயிரணுக்களில் அதற்கான தரவுகள் இல்லை என்பதால் 12,500 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் வெளியிலிருந்து எந்த மரபணு கலப்பும் நிகழவில்லை என்ற வாதம் தந்தைவழி உயிரணு தரவுகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. தந்தைவழி உயிரணு தரவுகள் இன்றைக்கு 4,000 ஆண்டு முதல் 5,000 ஆண்டு வரை முந்தைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பெருமளவு வெளியிலிருந்து மரபணு கலப்பு நடந்திருக்கிறது என்று காட்டுகின்றன. குறிப்பாக இந்தியாவில் 17.5% ஆண் வம்சாவழியினரில் காணப்படும் R1a இந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்குள் கலந்திருக்கிறது. தாய்வழி உயிரணு தரவுகளில் இதற்கான ஆதாரங்கள் காணப்படாமல் இருப்பதற்கான காரணம், வெண்கல யுகத்தின் குடியேற்றங்கள் பெருமளவு ஆண்களால் நிகழ்ந்திருக்கின்றன என்பதேயாகும்.
  2. R1a வம்சாவழி மற்ற பகுதிகளை விட இந்தியாவில் அதிக பன்முகத்தன்மை கொண்டிருப்பதால், அது இந்தியாவில் தோன்றி பிற இடங்களுக்கு பரவியிருக்க வேண்டும் என்ற வாதமும் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால், R1a ஹேப்லோ குழுக்களைப் பற்றி கடந்த வருடம் வெளியிடப்பட்ட உலகளாவிய மிகப்பெரிய ஒரு ஆய்வு, இந்தியாவின் R1a வம்சாவழிகள் R1a-Z93 ன் 3 துணைக் குழுக்களை மட்டுமே சேர்ந்தவை என்றும் அவை 4000-4500 ஆண்டுகளுக்கு முந்தையவை மட்டுமே என்றும் நிறுவியிருக்கிறது.
  3. இந்தியாவில் வடஇந்திய மூதாதையர்கள், தென்இந்திய மூதாதையர்கள் என்ற இரண்டு புராதன குழுக்கள் இருந்தன என்ற கோட்பாட்டின் படி ஆரியர்கள் குடியேறியதாக சொல்லப்படும் காலத்துக்கு வெகு முன்னதாகவே அந்த இரண்டு குழுக்களும் இந்தியாவுக்குள் வந்து விட்டன என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானது. ஏனென்றால் அந்தக் கோட்பாட்டை முன் வைத்த ஆய்வே வடஇந்திய மூதாதையர் குழு என்று கூறப்படுவதே, ஆரிய குடியேற்றம் உட்பட பல குடியேற்றங்களின் கலப்புதான் என்று கூறி எச்சரித்திருந்தது.

இந்த ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் போது நாம் இன்னும் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக, வெவ்வேறு துறைகளில் செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகள் கி.மு 2000 இந்திய வரலாற்றின் முக்கிய காலகட்டம் என்ற முடிவுக்கு வருகின்றன.

அ. பிரியா மூர்ஜானி குழுவின் ஆய்வின் படி, அந்த காலகட்டத்தில்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களினங்களின் கலப்பு பரந்த அளவில் தொடங்கியது. அந்தமான் தீவுகளின் ஒங்கே மக்கள் மட்டும்தான் இந்த கொந்தளிப்பான காலகட்டத்தினால் பாதிக்கப்படாத ஒரே குழுவாகும்.

ஆ. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேவிட் போஸ்னிக் குழுவின் தந்தை வழி மரபணு ஆய்வின் படி, கி.மு 2000 வாக்கில்தான், இந்திய மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் R1a-வின் துணைக்குழுவான Z93 “மிகவும் கவனிக்கத்தக்க வகையில்” பிளவுபட ஆரம்பித்திருக்கிறது. இது “வேகமான வளர்ச்சியையும் பரவலையும்” குறிக்கிறது.

இ. கடைசியாக, நீண்ட காலமாகவே நிரூபிக்கப்பட்டு விட்ட தொல்லியல் ஆய்வுகள், கி.மு. 2000 வாக்கில்தான் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடைய தொடங்கியது என்று நிறுவியுள்ளன.

இந்த எல்லா தகவல்களையும் பக்கச்சார்பில்லாமல் பார்க்கும் போது, இந்திய வரலாற்றின் புதிரான கால கட்டத்தை புரிந்து கொள்வதற்கான தகவல்களும் கிடைக்காமலிருந்த இணைப்புகளும் கிடைத்துவிட்டன என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டாவதாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆய்வுகளில் பலவற்றின், நோக்கங்களும் மாதிரிகளும் ஆராய்ச்சி முறையியலும் உலகம் முழுவதற்குமானவை. எடுத்துக்காட்டாக, R1a Z93 வம்சாவழியின் சிதறலுக்கான காலத்தை 4000-4500 என்று கணித்த போஸ்னிக் ஆய்வு, பெரிய அளவிலான தந்தைவழி உயிரணு குடியேற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை, இந்தியாவுக்காக மட்டும் நிகழ்த்தவில்லை. மற்ற நான்கு கண்ட மக்கள் மத்தியிலும் நிகழ்த்தியது. அதன் மூலம் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன் நடந்த Q1a-M3 ஹேப்லோகுழுவின் குடியேற்றத்தை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது. இது அமெரிக்கக் கண்டத்தின் ஆரம்ப கால குடியேற்றத்தைப் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலத்துடன் ஒத்துப்போகிறது.

ஆகையால் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியேற்றங்கள் பற்றிய புதிர்களுக்கு சமீபத்திய இந்த ஆய்வுகள் மூலம் விடை கிடைத்துள்ளன. இந்த உலகளாவிய குடியேற்றங்கள் பற்றிய சித்திரம் மேலும் மேலும் முழுமை அடையும் போது, குடிபெயர்வுகள் பற்றிய இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ஒருமித்த கருத்தை (அறிவியலற்ற உள்நோக்கத்துடன் – மொர்) மறுப்பவர்களின் முயற்சி கடினமாகிவிடும்.

இது வரை, நாம் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களை மட்டுமே பார்த்தோம். ஏனென்றால் அதுதான் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வாக இருந்திருக்கிறது.

ஆனால் இதை விட விரிவான சித்திரத்தை நாம் காணத் தவறக் கூடாது. R1a வம்சாவழி 17.5% இந்திய ஆண்களிலும், அதை விடக் குறைவான அளவு பெண்களிலும் மட்டுமே காணப்படுகிறது.

உண்மையில், அறுதிப் பெரும்பான்மையான இந்தியர்கள் பல்வேறு குடியேற்றங்களிலிருந்தான மூதாதையரை கொண்டிருக்கிறார்கள்.

  1. 55,000 – 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்த வந்த ஆதிமுதல் குடியேற்றம்.
  2. கி.மு 10,000 ஆண்டுக்கு பிறகு மேற்காசியாவிலிருந்து பல அலைகளாக நிகழ்ந்த விவசாயக் குடியேற்றங்கள்
  3. காலம் இன்னமும் கணிக்கப்படாத கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக் மொழி பேசும் முண்டா, திபெத்தோ-பர்மன் பேசும் கரோ போன்ற இனத்தவர்களின் குடியேற்றம்

இப்போது தெள்ளத்தெளிவாகி விட்டது என்னவென்றால் நாம் ஒரு மூலத்தை அல்ல, பல மூலங்களைக் கொண்ட, அவற்றின் கலாச்சார, பழக்கவழக்க, வம்சாவழி, குடியேற்ற வரலாறு போன்றவற்றை ஏற்றுக்கொண்ட நாகரிகம் ஆவோம்.

  • இந்தியாவை முதலில் கண்டுபிடித்து குடியேறிய நால்திசையும் முன்னேறிச் சென்ற, பயமறியா முன்னோடிகளான, ஆப்ரிக்காவிலிருந்து வந்த மக்கள் நமது நாட்டின் மக்கட் தொகையின் அடித்தளப்பாறையாக இன்னும் இருக்கிறார்கள்.
  • பிறகு விவசாய தொழில்நுட்பத்துடன் வந்த மக்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை படைத்தனர். அவர்களின் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் இன்றும் நம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
  • பிறகு நெல் பயிரிடுதலையும் அது தொடர்பான கலாச்சாரத்தையும் கிழக்காசியாவிலிருந்து கொண்டுவந்த மக்கள் இவர்களுடன் இணைந்தார்கள்.
  • பிறகு சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் அதை ஒட்டிய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்துடனும் வந்து நமது சமூகத்தை அடிப்படையிலேயே உருமாற்றிய மக்களின் குடியேற்றம் நடந்தது.
  • இன்னும் பிற்காலத்தில் வியாபாரத்திற்காகவோ நாடுபிடிப்பதற்காகவோ வந்து, இங்கேயே தங்கிவிடுவது என்ற முடிவு செய்த மக்களின் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது.

இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இன்று இந்திய நாகரிகம் என்று நம்மால் அழைக்கப்படுவதை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாம் எல்லோருமே குடியேறிகள் தான்.

– டோனி ஜோசஃப் (Tony Joseph), நன்றி: The Hindu
தமிழாக்கம் – நேசன்

தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த டோனி ஜோசப் எழுதிய கட்டுரை சுருக்கப்பட்டு, மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.

மூலக்கட்டுரை : How genetics is settling the Aryan migration debate

ஆசிரியர் குறிப்பு : டோனி ஜோசஃப் ஒரு எழுத்தாளர் BusinessWorld ன் முன்னாளைய ஆசிரியர்.
ஆசிரியரின் டிவிட்டர் பக்கம் : @tjoseph0010

  1. திராவிடர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்துதான் வந்திருக்க வேண்டும் என்பதில்லை.
    ஆப்பிரிக்க நிலப்பரப்பு இந்திய நிலப்பரப்போடு இணைந்து ஒரு காலத்தில் இருந்தது என்று ஒரு கருத்து உண்டு. எனவே நிலப்பரப்பு ஒன்றாயிருந்து பிரிந்ததால் ஆப்பிரிக்க மக்களுக்கும் திராவிடர்களுக்கும் அந்த ஒற்றுமை இருந்திருக்கலாம்.

  2. Big blow to theologists like aravindan neelakandan. Very big thanks to mount road mahavishnu for this article.

    Very good translation with no hassle to read.

    This article disappoints me too for below reason. If all are migrants what abt annan seeman. Seeman vanderiya? Oh god. Can’t believe this.

    May be annan have answer for this too.

  3. ஆரியர் மட்டுமே வந்தேறியா அல்லது அனைவருமே வந்தேறியா,? ஆய்வு கூறுவதை முழுமையாக்க் கூறவும். R1a இந்தியா முழுமையும், அதாவது ஆரியத் தொடர்பு அறவே அற்ற பழங்குடிகளிடம் R1a இருப்பது எப்படி? இருளர், குறும்பர், செஞ்சு, காசி இனக்குழுக்களிடத்திலும் இந்த மரபணுக் கூறு இருக்கிறது.?

    • மனித இனம் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தது என்பதும் அது ஆப்பிரிக்காவில் இருந்துதான் உருவானது என்பதும் தான் ஆராய்ச்சி முடிவு.அப்படியென்றால் அனைவருமே வந்தேரிகள்தான்.என்ன ,யார் முதலில் வந்தேறினார்கள் யார் பிறகு வந்தேறினார்கள் என்று வேண்டுமானால் பெருமையடித்து உரிமை கொண்டாடலாம். மொத்தத்தில் எல்லோரும் வந்தேறிகள்தான். ஆராய்ச்சியின் முடிவு மனிதனை ,உ” அனைவரும் ஒன்று இதில் மேலோன் கீழோன் இல்லை ” என்ற உண்மையை நோக்கி தள்ளியிருக்க வேண்டும்.ஆனால் ஒரு கூட்டம் ” பிறப்பால் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என் கிறது ” இன்னொன்று “நாங்களே ஆதியில் உள்ளவர்கள் நீங்கள் வந்தேறிகள் ” என் கிறது. மனிதன் இணைவதற்க்கு பதில் மீண்டும் பிரிகிறான். எந்த வகையிலும் எவனும் பெருமையடிப்பதற்க்கு முகாந்திரமே இல்லை என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவு நமக்கு சொல்லும் பாடம்.

    • தலைப்புல இருக்குற இனக்குழு பேரெல்லாம் போட முடியாது செலமி அவர்களே..

      ஆரியர்கள்னு குறிப்பா எல்லாரும் சொல்லுறதுக்குக் காரணம், ஆர்க்கியாலஜி, மானுடவியல் ஆய்வுகள் பாப்பாரப் பசங்க (ஆரியர்கள்) கைபர் போலன் வழியா உள்ள வந்தவனுங்கன்னு சொல்லுது.. ஆனா இந்த பாப்பார டூமாங்கோழிகள் தன்னைத் தானே பூர்வகுடின்னு கதைய விட்டுட்டு, முசுலீம்களை வந்தேறின்னு பேசுனான்..

      பேசுனானா இல்லையா ?. போய் அரவிந்தன் நீலகண்டன் கிட்ட கேட்டுப் பாருங்கள் செலமி அவர்களே..

      அதுக்கு தான் ’ஆரியனை’ மட்டும் ”ஸ்பெசல்ல்ல்லா” தமிழ்நாட்டுல கவனிப்பாங்க …

  4. ஆமாங்காணும் …

    நாங்க வந்தேறியாவே இருந்துட்டுப் போறோம் உங்களுக்கு என்னய்யா பிரச்சினை !!. ஆரியர் திராவிடர்னு, பிளவு படுத்தப் பாக்குறேளே! தேஷ்துரோகி!!

    இந்த நாட்டுக்கு சாதியக் கலாச்சாரத்தைத் தந்ததே நாங்க தான் ஓய்… இந்த நாட்டோட எக்கனாமிக் சிஸ்டத்த – ஈகோ சிஸ்டத்தைப் பாதுகாத்து வச்சிருக்கது யாரு ஓய்,. நாங்க தான் .. எப்படி மெயிண்டைன் பண்ணுனோம் தெரியுமா ? சாதி வச்சித் தான். சதுர் வர்ணம் தான் அடிப்படை. நாங்க மேல இருந்துட்டு வேல பாக்காம உக்காந்தே சாப்பிடுவோம். கீழ போக போக எல்லா சாதிக்காரனும் வேலை பாக்கனும். .

    மறுபடியும் அதே தான் ஓய்..

    இந்த நாட்டை பீனல் கோடு கட்டுப்படுத்தல .. பூணூல் கோடுதான் கட்டுப்படுத்துது.

  5. ஆரியனோ திராவிடனோ மங்கோலியனோ தமிழனோ ஆங்கிலேயனோ அத்த்னை பேரும் ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவந்தான் என்ற ஆய்வில்தான் போய் முடியும் என்பதை நாங்கள் மிக நன்றாக அறிவோம். ஆயினும் பிறப்பின் அடிப்படையில் மனிதனை தரம் பிரிப்பது ,மனிதன் உருவாக்கி கொண்ட மொழியையே தேவ மொழி மற்றது பாவ மொழி என்று ஆக்குவது, இந்த கேனத்திற்க்குத்தான் இது போன்ற ஆய்வு முடிகளை வைத்து அந்த கேனத்தனத்தை சொல்லி சொல்லி எள்ளிநகையாட வேண்டியிருக்கிறது. “எல்லாம் சமம் எல்லோரும் சமம் “என்று, ஒத்துக்கொண்டால் வா இணைந்து இருக்கலாம். “நான்தான் உயர்ந்தவன் எனக்கு கீழே மற்றவன் “என்றால், “வந்தேறி நாயே வெளியே போ நீயே” என்று சொல்வதில் தவறே இல்லை.

  6. வணக்கம், நண்பர்களே மனிதனின் பிறப்பு என்பது லெமுரியா கண்டம், இந்த லெமுரியா கண்டம் என்பது தற்போதுள்ள கன்னியாகுமரியின் ஒருபகுதி ஆப்பிரிகாவின் ஒருபகுதி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒருபகுதி இந்த மூன்று பகுதியும் இனைந்தது தான் லெமுரியா கண்டம். அந்த நிலப்பரப்பில் தான் மனித இனம் தோன்றியது என்பது ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு. அது மட்டுமின்றி ஆரியர்கள் வந்தேரிகள் தான் இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள். இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் அனைவருமே திராவிடர்கள். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் திராவிடர்கள், அவர்கள் பேசிய மொழி தமிழ் மொழியை ஒத்துக் காணப்படுகின்றன என்பது மொழியலாரின் முடிவு. சிந்துசமவெளி், அரப்பா. மொகஞ்சதாரே, ரூபர், களிபங்கன், சங்குதாரோ, லோத்தல் போன்ற இடங்களில் அகழ்வாராய்சியின் முடிவு, ஆரியார்கள் வடமேற்க்கு எல்லையின் வழியாக இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன் அங்கு நாகரீகமாக வாழ்ந்த மக்கள் அங்கு வசித்துவந்துள்ளார்கள். அவர்கள் தான் திராவிடர்கள் எனும் தமிழர்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள் உரல், உலக்கை, எருது சின்னம் போன்றவை திராவிட மக்களின் அடையாளங்கள், இதில் எந்த வித சந்தேகமும் இல்லை ஆரியர்கள் இந்தியாவின் வந்தேறிகள் தான், அவர்கள் மேற்க்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள் சிலர் பிரிந்து ஈரான் வழியாக சென்றார்கள் சிலர் இந்தியாவிற்குள் நுழைந்து அங்கு வாழ்ந்த மக்களை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கி விரட்டி அடித்து அங்கேயே இந்த ஆரியர்கள் நிரந்தரமானார்கள் என்பது வரலாறு. ஆரியர்கள் என்று சொல்லக்கூடிய பார்பனிய இனம் வந்தேரிகள் தான். இந்தியாவின் பூர்வக்குடிகள் தமிழர்கள், திரவாவிடர்கள் ஆவார்கள்.

  7. ஆரியார்களாக இருந்தால் என்ன் திராவிடர்களாக இருந்தால் என்ன என்பதில் பிரச்சினை கிடையாது. ஆரியார்கள் ஆரியர்களாகவே இருந்தால் பிரச்சினை கிடையாது. தமிழன் தமிழனாகவே இருப்பான் ஆனால் ஆரியன் ஆரியனாக இருப்பதில்லை. ஆரியர்களின் பண்பாட்டு முறையையும் திராவிட பண்பாட்டு முறையையும் ஒப்பிட்டு பாருங்கள் யார் மனிதன், யார் மிருகம் என்பதை தெளிவாக புரிந்துக்கொள் முடியும். தமிழர்கள் யாகம் என்ற பெயரில் உயிரினங்களை கொண்றவர்கள் கிடையாது, காட்டு விலங்குளையும் மாமிசங்களையும் புசித்தவர்கள் கிடையாது. ஆரியர்கள் காட்டுபன்றி, மான் , பன்றி என அனைத்து விலங்குகளையும் தீயில் யாகம் என்ற பெயரில் கொன்று சாப்பிட்டுருக்கிறார்கள். தமிழர்கள் உணவு முறையை பாருங்கள், மனிதனை மனிதனாக வாழ வைத்தது. தமிழர் பண்பாடு. வால்மீகி எழுதிய இராமாயணத்தை முழுவதும் படியுங்கள் , அசுவமேத யாகம் என்ன அதற்கு என்ன விலங்கள் பயன்படுத்தினான் தசரன். அதன் பிறகு அந்த விலங்குகளை என்ன செய்தார்கள் என்ற விவரம் அதில் உள்ளது. மனித நாகரீகத்திற்கு எதிரானது தான் பார்பனிய பண்பாடு. அதை மறைத்துவிட்டு நாங்கள் தான் உயர்நதவர்கள் மற்றவர்கள் எல்லாம் தங்களுக்கு கீழானவர்கள் என்று வரையறை ஆம் தங்களுக எல்லாம் கீழனவர்கள் தான் அதனால் எங்கள் பண்பாடு உயர்நதது எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் தான் உங்கள் பண்பாடு.ஆரிய வந்தேரி நீ எங்கள் பண்பாட்டை சீர்குலைத்து உன்பண்பாடு தான் சிறந்தது என்று கற்பிக்க பார்கிறாய் நடக்காது. கங்கையில் விடும் மனிதப்பிணங்களை எடுத்து வெட்டி உன்ன்க்கூடிய அகோரிகள் யார், ஆரிய பண்பாட்டின் அடையாளம் தான் இந்து அகோரிகள்

  8. “உண்ட வீட்டிற்கே ரெண்டகம் நினைப்பவர்கள், “சாப்பிட்ட கையின் ஈரம் காய்வதற்குள் சாப்பிட்டதை மறந்தவர்கள்’மட்டுமல்ல வரலாற்று அறிவு அறவே இல்லாதவர்கள் மதவாதப் பிற்போக்குச் சக்திகள் தமிழ்மண்ணில் கால் ஊன்ற அனுமதிக்க கூடாது. யாருடைய பிள்ளை, எந்த ஊர், எந்த இனம், எந்த மதம் என்ற அடையாளங்களைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு அவன் பேசுகிற மொழிதான் முக்கியமான அடையாளம். தனி மனிதனின் வாழ்க்கையும், அவன் இணைந்து வாழ்கிற சமூக வாழ்வின் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளும் மொழியில்தான் -இலக்கியங்களாக சேமிக்கப்படுகின்றன. மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்றால் தமிழர்களின் அடையாளமான தமிழ்மொழி, நாம் காக்க வேண்டும், கற்க வேண்டும்…கற்பிக்கப்பட வேண்டும்..எங்கிருந்தோ வந்தவன் தமிழனின் அறிவு செல்வத்துக்கு, பண்பாட்டுக்கு உரிமை கொண்டாட ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

  9. இந்த கட்டுரையின் தலைப்பை இப்படியும் எழுதலாம் திராவிடர்களும் வந்தேறிகளே?!

    நமது சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் ஆரியர்களே என்று நிறுவும் ஆர்வத்தில் எழுதப்படட்ட மற்றுமொரு கட்டுரை ! அறிவியலை அறிவியலாக பார்க்காமல் , அதில் அரசியல் பார்த்ததால் வந்தேறிகள் என்னும் பதம் .

    ஆரிசயகர்ல் அணைத்து பிரச்சினைக்கும் காரணம் என்பது
    Scapegoating என்னும் விவாத கருத்தியலை அடிப்படையாக கொண்டது.

    யூத பாதிரிமார்கள் சமுதாயத்தின் அணைத்து பாவத்தையும் ஒரு ஆட்டின் மீது இறக்கி காட்டுக்குள் விட்டுவிடுவார்களாம்

    நம் சமூகத்தின் அணைத்து புரையோடி போன பழக்கத்திற்கும் காரணம் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் தான் , அவர்கள் மட்டும் வராவிட்டால் மஹா உன்னதமான சமுதாயத்தை நாம் அமைத்திருப்போம் என்கின்ற ஒரு கற்பனை முடிவின் அடிப்படையில் பிரச்சினையை அலசி மூல காரணமாக தன்னுடைய செய்கை தவிர மற்றவற்றை கண்டறிவது .

    இதை வேறு வடிவில் காணலாம் ,

    முகலாயர் படையெடுப்பு இல்லாவிட்டால் , இந்து கலாச்சாரத்தின் மூலம் இந்தியா பல மடங்கு முன்னேறி இருக்கும் .

    வெள்ளையர் படையெடுப்பு இல்லை என்றால் , இந்தியா முழுதும் இசுலாமிய நாடாக மாறி இறைவனின் ஏக ஆசி பெற்று இருக்கும்.

    முதலாளிகள் மட்டும் இல்லை என்றால் , எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து இருக்கும்.

    திராவிடர்கள் மட்டும் இல்லை என்றால் தமிழர்கள் ஆட்சி செய்திருந்தால் , தமிழ்நாடு பயங்கரமாக முன்னேறி இருக்கும்.

    ஜெருமணி மக்களின் கஷ்டத்திற்கு காரணம் யூதர்களே !

    இந்த கட்டுரை இன்னொரு முக்கியமான விஷயத்தையும் முன்னே வைக்கிறது . அதாவது விவசாய நுணுக்கம் , முதலில் குடியேறிய இந்திய பழங்குடி மக்களிடம் இல்லை என்பதுவும் விவசாய அறிவு பெற்றவர்கள் பின்னர் குடியேறியவர்கள் என்றும் கூறுகிறது .

    பெரிய அளவில் விவசாயம் நடந்து இருந்தால் அங்கே ஒரு நாகரிகம் அமைந்து இருக்கும் .

    நைல் நதி நாகரிகம் , மெசபடோமியா நாகரிகம் போன்றவை . அப்படி நிலையான இடத்தில குடி இருப்புகள் விவசாயம் சார்ந்து அமையும் போது மக்கள் நிலா உரிமை கொண்டவர்கள் , அதை சார்ந்து வாழ்பர்கள் என்னும் நிலை ஏற்பட்டது. ஆதாம் சுமித் கூறியது போன்ற தொழில் நுணுக்க விற்பன்னர்கள் உருவாகி இருக்க வேண்டும். அப்படி பட்ட சமுதாயத்தில் எல்லாமே , தொழில் நுணுக்கம் பரம்பரை பரம்பரையாக பயிற்றுவிக்கபட்டு வந்தது . சிந்து சமவெளி தவிர அங்கு எல்லாமே சாதி என்னும் சமுதாய படி நிலை அமைந்து உள்ளது. ,

    இந்தியாவில் இருந்த பழங்குடிகள் அந்த மிகப்பெரிய நாகரிகத்தை எட்டவில்லை அல்லது அதற்கான ஆதாரம் இன்னும் உறுதியாகவில்லை .( கீழடி )
    நான்காயிரம் ஆண்டு பழமையான எந்தவொரு மிகப்பெரிய அணையோ ,கட்டிடங்களோ தற்போதைய இந்திய நிலப்பரப்பில் இல்லை. சிந்து சமவெளி மட்டும் தான் கட்டிடங்களை கொண்டு இருந்தது .

    மிகப்பெரிய சமுதாய கட்டமைப்பு இல்லை என்னும் பொழுது இந்திய பழங்குடிகள் , ஹண்டர் கேதாரர் என்னும் முறையை பெரிதும் ,சிறிய அளவில் விவசாயமும் செய்து வாழும் முறையில் இருந்து இருப்பார்கள் . ஆஸ்திரேலிய அபாரிஜின்கள் மாதிரி . அப்படி பட்ட குழுக்களில் ,வேட்டையை பகிர்ந்து உண்ணும் முறை தான் அதிகம் இருக்கும் . அங்கே மக்கள் ஓரிடத்தில் நிலையாக இல்லாததால் , சமூக படிநிலைகள் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை .

    ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்கின்ற செய்தி இருக்கிறது .
    சிந்து சமவெளி தவிர இந்தியாவில் இருந்த பழங்குடிகள் மிகப்பெரிய நாகரிகத்தை அடையவில்லை அதனால் அங்கு சாதி படி நிலை ஏற்படவில்லை. அவர்களும் விவாசாயம் ஆரம்பித்து நாகரிகம் அமைக்கும் பொழுது அந்த சதி படிநிலைகளை ஏற்படுத்தி இருப்பார்கள்.

    சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது என்று நிரூபித்தால் மட்டுமே , சாதி இல்லா சமூகத்தில் சாதியை அறிமுகப்படுத்தி விட்டார்கள் என்று கொள்ளலாம் . அப்பொழுது கூட ஒரு சமூகம் ஒரு கருத்துருவை எளிதில் ஏற்று கொள்ளாது . உதாரணமாக இசுலாம் கிருத்துவம் போன்றவை ஒரேயரு நாளில் ஏற்கனவே ஒரு தத்துவ பிடிப்பு உள்ள மக்களை சென்று அடையவில்லை . சிறுக சிறுக தான் ஏற்று கொள்கிறார்கள் . எந்த பிடிமானமும் ( சரியான தவறான ஏதுவாகிலும் ) இல்லாத சமூகங்கள் பிடிக்கப்பட்ட உடனே ஆள்பவரின் சிந்தனைகளை அப்படியே ஏற்று கொள்ளும் . உதாரணம் எகிப்து , ஒரே வருடத்தில் இசுலாமை ஏற்று கொண்டது.

    சங்க நூல்களில் எதிலும் ஆரியர் ஆட்சியை பற்றி இல்லை . வடக்கில் இருந்து வந்ததை பற்றி இல்லை . ஒரு வேளை வானவியல் அறிவு இருந்து ஏதேனும் குறிப்புகளும் இல்லை. அதே காலகட்டத்தில் மெசபடோமியர்கள் , எகிப்தியர்கள் காலண்டர் செய்துவிட்டார்கள்.
    முதுமக்கள் தாழி சிந்து வெளியில் இல்லை .

    சங்க நூல்களில் சாதி பற்றிய குறிப்புகள் இல்லை அதனால் திராவிட சமூகம் சமதரம சமூகம் என கூறுகிறார்கள் . நல்லது அப்படி என்றால் சங்க காலத்திற்கு பிறகு தென் தமிழகத்தை ஆரியர் ஆட்சி புரிந்ததாக வரலாறு இல்லை . சங்க காலத்தில் புத்த ஜைன மதங்கள்தோன்றி இருந்தன . எவ்வித நிர்பந்தமும் இல்லாத திராவிடர்கள் முழுமையாக புத்த மதத்தை தழுவி இருக்கலாம் .

    சூழ்ச்சி செய்து விட்டார்கள் ,ஏமாந்து போனோம் என்பது எல்லாம் ஒரு சிந்து சமவெளி அளவிற்கு முன்னேறிய சமூகத்தில் இருந்து வரக்கூடாது

    Scapegoating என்பது திராவிட சாதிகளின் வன்மத்தை ,ஆரியர் என்னும் பூச்சாண்டியை காட்டி மறைப்பது மற்றும் அந்த சாதிகளுக்கு பாவமன்னிப்பு வழங்குவது போன்றதாகும்

    யார் காரணம் என்ற witch hunt செய்வதை விடுத்தது , எப்படி அனைவரும் சமம் என்னும் நிலைக்கு செல்லாம் என்னும் சிந்தனை உள்ள தலைவர் அமைந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும்

    • ஹஹஹா … பாவம் பாப்பாரக் கூட்டம் சமாளிக்க என்னென்ன கதையெல்லாம் பேசவேண்டியிருக்கு ?.

      என்னங்க ராமன், நிலைமை இப்படி ஆகிடுச்சே ? எல்லாரும் ஒரே இனம், வெஸ்டர்ன் கான்ஸ்பிரசின்னு புருடா விட்ட வெண்ணவெட்டிங்களோட வாதத்தை இன்னைக்கு விஞ்ஞானம் உடச்சிடுச்சி …

      முசுலீம்கள் வந்தேறிகள் என்று வாய்கூசாமல் பேசிய பார்ப்பனக் கிரிமினல்களை, நீயும் தாண்டா வந்தேறி ந்னு செவுட்டுல அறஞ்சு சொல்லிடுச்சு இந்த ஆய்வு..

      இப்போ தொனி ஏன் மாறுது ?. திராவிடரும் வந்தேறிகள் தானன்னு ?.. முசுலீம் படையெடுப்பு
      தற்போது இந்தியா என சொல்லப்படுகிற நிலப்பரப்புக்குள்ள வந்த பிறகு இங்கிருக்கும் தலித்துகள் தங்கள் மீது திணிக்கப்படுகிற சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறி முசுலீம்களா மாறுனாங்க .. அந்த வகையில் அவங்க பூர்வகுடிகள் தான். ஆனா கைபர் போலன் வழியா உள்ள வந்த பாப்பாரப் பசங்க, தனது சாதியைக் கட்டிக்காப்பாத்திக்க அக மணமுறையில தான் திருமணம் செஞ்சுக்கிட்டானுங்க .. அந்த வகையில இப்போ முடிய பாப்பாரப் பசங்க வந்தேறிங்க தான்.

      திராவிடர்கள் வந்தேறிகளான்னு கேட்டால் அதுக்கு ஒரே பதில் தான். அது ஐராவதம் மகாதேவன் சொல்லிருக்காரு. “ சிந்து சமவெளி நாகரீகம் – திராவிட நாகரீகமே” .

      ஆகையால் தாங்கள் இங்கு வருவதற்கு முன்னாலேயே ஒரு நாகரீகத்தைப் படைக்கும் அளவிற்கு கலாச்சாரத்தில் முன் தோன்றிய மூத்த குடி திராவிடக் குடி.

      அதனால் முசுலீம்கள், திராவிடர்கள் எல்லாரும் பூர்வ குடிகளாகத் தான் இருக்கிறார்கள். 2% பாப்பாரப் பசங்க தான் வந்தேறிகள் …

      புரியுதா இராமா ?.

      இது தான் அந்த மணிகண்டனுக்கும், சௌமிக்கும் பதில்

      • // ஆனா கைபர் போலன் வழியா உள்ள வந்த பாப்பாரப் பசங்க, தனது சாதியைக் கட்டிக்காப்பாத்திக்க அக மணமுறையில தான் திருமணம் செஞ்சுக்கிட்டானுங்க //

        மன்னிக்கவும். தற்போதைய அறிவியலின் படி ஆண்கள் மட்டுமே வந்து , இந்திய நிலப்பரப்பில் இருந்தவர்களை மணம் செய்து இருக்கிறார்கள் .கட்டுரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள்

        அக மண முறை என்று இருந்திருந்தால் மைட்டோ காண்ட்ரியா பெண்வழி ஜீன்களை கொண்டு எப்போதே உறுதிப்படுத்தி இருப்பார்கள் .

        ஆகவே இப்பொழுது வசிக்கும் ஆரியர்கள் தவறு ஆரிய-திராவிட கலப்பினத்தவர் உங்களுக்கு சித்தி மகன் போல சகோதரர்கள் என்றாகிறது 🙂

    • Raman,

      பப்பு வேகலை!

      எல்லா பிரச்சினைக்கும் காரணம் இஸ்லாமிய படையெடுப்பு, கிருஸ்தவ மிசனரிகள் என்று சொல்லும் ஆரிய மேலாதிக்க அரசு ஆட்சியில் இருக்கிறது. அனைவரும் சமமில்லை, சமமற்ற படிநிலை சமுதாயம் தான் எங்கள் இந்து மதத்தின் சிறப்பு, பண்பாடு! அந்த சிறப்பான நிலைக்கு சமூகத்தை கொண்டுபோவதும் இந்து ராஷ்டிரத்தை படைப்பது தான் இலட்சியம் என்று சொல்லும் ஆரிய மேலாதிக்க அரசு ஆட்சியில் இருக்கிறது.

      அதற்கு எதிராக இருப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று சொல்லி அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

      அதை எதிர்த்து நீங்கள் புரிந்த கருத்துப் போரை அறியத்தந்தால் நீங்கள் அந்தப் பக்கம் இல்லை என்று நிரூபிக்கலாம்.. போலித்தனம் கூட உங்களுக்கு கைவரவில்லை.

      அறிவியல் அறிஞரான நீங்கள், அறிவியல் பூர்வமாகவே இந்தக் கட்டுரையை மறுக்கலாமே ? ஆர்.எஸ்.எஸ்-சின் சுயராஜ்ய பத்திரிக்கையில் இந்த கட்டுரையை மறுத்துள்ளார்கள்.. படித்துவிட்டு வந்து இன்னும் முயன்று பாருங்கள்.

      ”அண்ணே நீங்க பத்தாங்கிளாஸ் பெயில் அண்ணே ( நீங்க பாஸ் ஆனாலும் நாங்க பெயிலுன்னு தான் சொல்லுவோம்).. நாங்க எட்டாங்கிளாஸ் பாஸ்.. பாஸ் பெருசா, பெயில் பெருசா” என்றும் ”சரஸ்வதி நதி பற்றி வேதத்தில் உள்ளது அந்த நதி இந்தியாவில் உள்ளது என்று கண்டறிய அகழ்வாய்வாளர்கள் உறுதி பூண்டுள்ளனர்” அதனால் ஆரியர்கள் பூர்வகுடிகள் என்றும் ‘ஆதாரப்பூர்வமாக’ இதை மறுத்துள்ளார்கள்.

      அந்த உளறலைப் படிக்கவில்லையா? படித்துவிட்டு வந்து இன்னும் முயன்று பாருங்கள்..

      • அறிவியலை மறுப்பதாக எங்கே படித்தீர்கள் ?

        சாதி கொடுமைக்கு ஆரியர் மட்டும் காரணம் என்று witch hunt செய்து திராவிட ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு கொடுப்பதைத்தான் எழுதி இருக்கிறேன்.

        இது நீண்ட கால நோக்கில் இந்திய சமூகம் சாதி அற்ற சமூகமாக மாறுவதை, அதற்கான தீர்வை காண்பதில் பின்னடைவையே ஏற்படுத்தும் என்று கருத்தில் எழுதி இருக்கிறேன் .

        அரை குறையாக படித்துவிட்டு , straw man விவாதம் செய்ய வேண்டாம்

        //
        அதனால் ஆரியர்கள் பூர்வகுடிகள் என்றும் ‘ஆதாரப்பூர்வமாக’ இதை மறுத்துள்ளார்கள்.
        //

        https://scroll.in/article/737715/fact-check-india-wasnt-the-first-place-sanskrit-was-recorded-it-was-syria

        • Raman,

          ஓ… நீங்கள் “ஆரியர் வந்தேறிகள்” கட்டுரையின் அறிவியலை ஏற்றுக் கொண்டு, அறவியலை தான் மறுக்கிறீர்களோ? சரி தான். சாதி ஒழிய வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம். சரி தான்.

          இந்தக் கட்டுரை வந்தவுடன் இரண்டு தரப்புகள் எதிர்வினையாற்றியுள்ளனர்.

          ஆரியர்கள் குடியேறிகள் என்பதை ஆதரிப்போர், கட்டுரையை ஆதரித்தும், மொழிபெயர்த்தும் எழுதினார்கள். இவர்கள் அறிவியல் ஆய்வு சரி, கட்டுரை சரி என்கிறார்கள்.

          மறுதரப்போ, இந்தக் கட்டுரையே தவறு என்றும் அறிவியல் ஆய்வு முடிவை திரித்துக் கூறுவதாகவும் சொல்கிறார்கள். அப்படி எதை இந்தக்கட்டுரை திரித்துள்ளது என்பதற்கு அந்த தரப்பிடம் பதில் இல்லை.

          “அறிவியல் அறிஞரும் நடுநிலையாளருமான” நீங்கள் அறிவியலை மறுக்கும் தரப்பிடம் போய் அறிவியலை நிரூபிக்க விவாதித்ததாகத் தெரியவில்லை. மாறாக இங்கே திராவிட ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு வழங்குவதாக வாதிடுகிறீர்கள். இதன் மூலம் ஆரிய ஆதிக்க சாதிகளை விடுவிக்கிறீர்கள் என்றும் சொல்ல முடியும்.

          ஆரியப் பார்ப்பன சாதிகள், படிநிலையில் உச்சாணியில் இருந்து கொண்டு திராவிட ஆதிக்க சாதிகளைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மேலாதிக்கத்தை ஒடுக்குமுறையை செலுத்துகிறார்கள். இதற்கும் அறிவியல் ஆதாரம் கொடுத்தபிறகு தான் அவர்களை நீங்கள் சாடுவீர்கள் போல. ஆனால், மறுபுறம் இங்கு திராவிட ஆதிக்க சாதிகளுக்கு பாவ மன்னிப்பு வழங்குவதாக வாதிடுகிறீர்கள்.

          சங்ககாலத்தில் சாதி இல்லை என்கிறார்கள், அதன் பிறகு தமிழகத்தை ஆரியர் ஆளவில்லை – என்கிறீர்கள். பல்லவர், சோழர்கள் ஆட்சிகள் எப்படிப்பட்டவை என்பதற்கு வரலாற்று ஆதரங்கள் இருக்கின்றன. சமணர்களை கழுவில் ஏற்றிய சம்பந்தர் பற்றி நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் எழுதியுள்ளனர். புத்த விகாரைகளை தங்கத்தை திருடி விவரம் கோயிலொழுகு நூலில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது அறிவியல் இவற்றை நிரூபிக்கவில்லையே… நீங்கள் தான் நடுவுநிலை அறிவியல் அறிஞர் ஆயிற்றே..

          இந்திய சமூகம் சாதி அற்ற சமூகமாக மாறுவதற்கு எதிராக, நால்வருண சாதிப் படிநிலை சமூகம் தான் உலகிலேயே ஆகச்சிறந்த அமைப்பு என்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். சாதி ஆதிக்கத்தை – இசைவுடனும், நல்லிணக்கத்துடனும் செயல்படுத்தப்பட்ட படிநிலை அமைப்பு என்று மொழிபெயர்க்கிறார்கள். உதாரணம். ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி. அவர்களது நோக்கம் சாதி அமைப்பு நீடிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், தற்போது கொஞ்சமேனும் தளர்ந்திருக்கும் அடிமைச் சங்கிலியை மீண்டும் இருக்கிக் கட்ட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.

          “அறிவியல் அறிஞரும் நடுநிலையாளருமான” நீங்கள் அறிவியல் ரீதியாக சாதி அமைப்பு தவறு என்றோ அல்லது சாதி அமைப்பை சரி என்று திமிரோடு சொல்லி அதை நீடிக்கச் செய்யும் இவர்களுக்கு எதிரகவோ எந்த கருத்துப் போரும் புரிந்ததாகத் தெரியவில்லை. மாறாக, சாதி அமைப்பை ஒழிக்கப் போராடுபவர்களிடம், அல்லது குறைந்தபட்சம் சாதி அமைப்பு தவறு என்று சொல்பவர்களிடம் வந்து Witch Hunt என்கிறீர்கள்.

          சாதி ஒழிப்பு தான் உங்கள் இலட்சியம், அறிவியல் தான் உங்கள் ஆயுதம் என்று நம்பிவிட்டோம். இதை தான் பப்பு வேகலை என்றேன். இதற்கு நீங்கள் நேரடியாகவே இது அறிவியல் இல்லை என்று எதிர்க்கலாம். எதிர்ப்பதற்கு ஆயுதம் சுவராஜ்யா-வில் கிடைக்கும் என்று பரிந்துரைத்தேன். Its neither straw man argument nor the stray dog argument!

          பெரிய அறிவியல் அறிஞர் நீங்கள் என்னை போய் பொழிப்புரை எழுத வைத்துவிட்டீர்களே? So sad!

          • //சாதி அமைப்பு தவறு என்றோ அல்லது சாதி அமைப்பை சரி என்று திமிரோடு சொல்லி அதை நீடிக்கச் செய்யும் இவர்களுக்கு எதிரகவோ எந்த கருத்துப் போரும் புரிந்ததாகத் தெரியவில்லை. மாறாக, சாதி அமைப்பை ஒழிக்கப் போராடுபவர்களிடம், அல்லது குறைந்தபட்சம் சாதி அமைப்பு தவறு என்று சொல்பவர்களிடம் வந்து Witch Hunt என்கிறீர்கள்.//

            சாதி சரி அல்லது மதம் சரி என்று வாதிடுபவர்களிடம் எத்துனை வருடங்கள் வேண்டுமானாலும் பேசலாம் . கால விரயம் ஏற்படும் .அவர்கள் ஒரு வட்டத்திற்குள் இருந்து சிந்திப்பவர்கள் .

            சாதி தவறு என்பவர்கள் வட்டம் தாண்டியவர்கள் ஆனால் அவர்களும் அந்த சாதி அடிப்படையிலேயே தீர்வை சிந்திக்கிறார்கள் . அதே சாதி வன்மத்தை ஒரு குறிப்பிட்ட சாதி மீது ஏற்றுகிறார்கள் . அதைத்தான் நான் எதிர்க்கிறேன். இந்த வழி முறையில் தீர்வை அடைய முடியாது.

            ஆரியர்கள் மீதான திராவிடர்களின் இனம் வெறுப்பு , இனறைக்கு திராவிடர்கள் மீதான தமிழர்களின் வெறுப்பு என்கின்ற பாதையில் செல்கிறது .

            “ஆரியர்கள் வந்தேறிகள் ” என்கின்ற பதம் இந்த அறிவியல் கட்டுரைக்கு தேவை இல்லாதது. அது சாதி வன்மத்தின் மறுவடிவம்.
            இசுலாமியர்களை வந்தேறிகள் என்று மதவாதிகள் கூறுவதாகும் இதற்கும் என்ன வித்தியாசம்? மதவாதிகளை போலவே , தீர்வை தேடுபவரும் சிந்தித்தால் அங்கே தீர்வு எப்படி வரும் ?
            திராவிட ஆதிக்க சாதிகளின் “கூட்டு மனசாட்சியை” திருப்தி படுத்த வேண்டுமானால் இது போன்ற பழி போடுதல் ( witch hunt ) உதவலாம் .

            தீர்வை சிந்திப்பவர்கள் சரியான தீர்வை சிந்திக்கும் திசையில் செல்ல வேண்டும் என்பதால் தான் இங்கே கருத்துக்களை பதிவு செய்கிறேன் .
            மதவாதிகளின் குப்பைகளை நான் படிப்பது இல்லை. அவர்களின் பிழைப்பே மதம் என்னும் அடித்தளம் கொண்டது . அதை காக்கவே விழைவார்கள்.

        • Raman,

          is it not the Witch Hunt ? it shows your view on all the lynchings

          //எல்லா பிரச்சினைக்கும் காரணம் இஸ்லாமிய படையெடுப்பு, கிருஸ்தவ மிசனரிகள் என்று சொல்லும் ஆரிய மேலாதிக்க அரசு ஆட்சியில் இருக்கிறது. அனைவரும் சமமில்லை, சமமற்ற படிநிலை சமுதாயம் தான் எங்கள் இந்து மதத்தின் சிறப்பு, பண்பாடு! அந்த சிறப்பான நிலைக்கு சமூகத்தை கொண்டுபோவதும் இந்து ராஷ்டிரத்தை படைப்பது தான் இலட்சியம் என்று சொல்லும் ஆரிய மேலாதிக்க அரசு ஆட்சியில் இருக்கிறது.

          அதற்கு எதிராக இருப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று சொல்லி அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.//

    • Ha Ha Ha,Just because Kalingathupparani was in the high school syllabus,this Tamilan pleaded removal of Tamil poetry from school syllabus some years ago saying that words in Kalingathupparani could not be read by him.How come he mastered Sangam literature to say that there is no mention about Aryan kingdom?OK,there is no mention about Aryan kingdom.But there is a PALYAAGA PERUMKUDUMI PERUMVAZHUDHI in Puranaanooru.This particular minister was said to be very proficient in conducting YAAGAMS.Raja Raja Cholan gave many villages to Brahmins.These villages were called as Brahmadeyam and Chadurvedi Mangalam.Cheran Senguttuvan gave much of his wealth to brahmins rather than to his soldiers.Without reading Airaavadham Mahadevan and Parpola,how he says that Indus Valley Civilization is not Dravidian civilization?Raman,do not expose your shallow knowledge and NUNIPPULMEYUM KUNAM.

      • Raja raja chola is 1000 AD .And period being discussed is 2000 BC, your argument has 3000 year hole.
        There is no artifact exist.

        There is one stone in Chembiankandiyoor with Indus scripts. But science rejected it because other bronze age indicators were missing.

        • Whether 1000 years or 3000 years,the hegemony of Brahmanism or Parrpaneyam continues.Even after Petiyar’s tireless efforts and implementation of Mandal Commission,more than 70 percent of Class 1 posts in Central and State govts ,Courts are held by them.In the Parrppana-Baniya media,they are the opinion makers.Still our Meeran Sahib says that their influence is not visible.These people who counted the zeroes after 176 and prevented the comeback of a regime,never highlighted the non-governance and many scandals in TN for the past 6 years.They were highlighting the assumed loss in 2g but kept quiet when containers of currency notes were stranded at public roads.And one gentleman says these people (so called opinion makers)should not be made as scapegoats.These people’s conscience will wake up only selectively.

          • // 70 percent of Class 1 posts in Central and State govts ,Courts are held by them//

            That was how caste society shared the resources. Rome was not made in days.

            Do you have statistics for “Land ownership castes” ? How much of oppressed have become land owners and farmers ? Does govt have any reservation plan to distribute it for them?

            Have you ever asked for “Estate tax” on lands and use that money to distribute farm lands for them ?

            • I have observed Raman’s comments on farmers for the past 4 years.Whenever he thinks about farmers,he could think about rich farmers only.(Seen many Pannaiyar films starring Vijayakumasr&Sarathkumar)But the actual land holding in TN is quite different from Raman’s dreams.Here is the statistics from the link agro.unom.ac.in/wp-content/uploads/2015/09/state_Agri_profile_Tamilnadu.pdf
              Out of 78.59 lakh hectares of total land holdings,Marginal farmers(defined as having land holding less than 1 ha)own 58.46 lakh hectares(74.39%)Their average land holding is only 0.37 ha.This was the position in 2005-06.Now,with water scarcity they would have become landless labourers.(During the 12 hour power-cut during 2011-12,many lathe owners in Coimbatore became security guards and watchmen in the apartments of Chennai (did not want to be known doing watchman job in their own city)
              Small farmers(defined as having land holding between 1 to 2 ha)hold 12.26 lakh hectares.(15.60%)Their average land holding is only 1.40 ha.By now,they would have become Marginal farmers.Semi-medium farmers (defined to own 2 to 4 ha)owned 5.71 lakh hectares.(7.27%)Their average land holding was 2.72 ha.
              Medium farmers (defined to own 4-7 ha)owned 1.93 lakh hectares.(2.46%)Their average land holding was 5.67 ha.Large farmers(defined to own 7-10 ha)owned only 0.23 lakh hectares (0.29%)
              All these farmers including the Large farmers are not well off as Raman dreams.At best,they would have cultivated sugarcane instead of paddy.But,after harvests year after year,the sugar mills never disburse the sugar cane proceeds to them.The Minimum Support Price given by the govt never support them.BJP promised to give 150% of their production cost as MSP as recommended by M.S.Swaminathan Committee.But,like other election promises,this was also not honoured.
              Raman wanted to levy “Estate Tax”and utilize the same for distribution of farm lands to the oppressed.The oppressed like Marginal farmers do not want your alms.They want rightful share of Cauvery water and remunerative price for their produce.Before asking for the levy of Estate tax,you should ask the govt to stop granting tax subsidies/concessions to big industrialists to the tune of Rs 5 lakh crore in every budget. who have also not honoured their promise of increasing productivity and creation of job opportunities.The public sector banks (Raman’s favourite punch bags)have to do 60% haircut on the Non-recovered loans provided to big industrial defaulters thereby increasing their provision from 9% to 25% for these non-recovered loans.(Raman would have accounts with private banks.But big private banks like ICICI Bank,Axis Bank should also do the haircut)Is Raman is happy with tax payers’ money wasted on these unproductive sharks?

    • There need not be any scapegoating.Probably,Raman has not read Gurumoorthi”s interview few days back in Times of India.He traced the steps taken by Cho Ramasamy in breaking DMK by instigating MGR.Right now,Gurumoorthi is doing the same thing by heaping unsolicited advice to three factions of ADMK.His ultimate aim is to prevent DMK coming to power.In spite of no govt in TN for the past 6 years,Gurumoorthi wants this regime should somehow complete another 4 years of misrule.In the meantime,he wanted all the policies of BJP govt at the centre to be implemented either overtly or covertly.

  10. திரு ராமன், // அனைவரும் சமம் என்னும் சிந்தனைக்கு செல்லலாம் என்னும் சிந்தனை உள்ள தலைவர்கள் அமைந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லலாம் // நல்லாத்தான் சொல்றீங்க. ஆனால் இந்த சிந்தனைக்கு தடையாய் இருப்பது யார்? அந்த சிந்தனயில் விடை இருக்கிறது. ” ஆரியர்கள் வந்தேரிகள் தான் ” என்று கடுமையாய் கருத்து பதிபவர்கள் எதன் காரணமாய் அந்த நிலை எடுக்கிறார்கள். ” நாங்கள்தான் உயர்ந்தவர்கள் ” என்ற ஆணவத்தோடு அல்ல்து அந்த உணர்வோடு ஒரு கூட்டம் திரியும் போது மற்றவர்களுக்கு ” ஒன்ட வந்த நாய்க்கு ஒய்யார உப்பரிகையா? ” என்ற எண்ணம் வருமா வரதா? வேறொரு தலைப்பில் விவாதிக்கும் உங்கள் தம்பி மணிகண்டனின் கருத்தை பார்த்தீர்களா? “பூணூல் இந்த நாட்டின் பண்பாட்டு அடையாளமாம்” என்ன திமிர் இது? பூணூலுக்கு பெரிய தத்துவமெல்லாம் கொடுத்து அதை எல்லாரும் போடலாம் என்ற நியாயப்படுத்துகிறாய்….சரி படுத்திவிட்டுப்போ. நீ போடு போடாம தொலை. நாட்டின் பண்பாட்டு அடையாளம் என்றால் என்ன அர்த்தம்? “நான் செய்வதெல்லாம் உயர்ந்தது” என்ற மேட்டிமைதானே. இது மணிகண்டன் என்ற தனி மனிதனின் கருத்தல்ல .இதுதான் அந்த கூட்டத்தின் கொள்கை பார்வை.இதுதான் சமூகத்தை ஏற்றத்தாழ்வாக்குகிறது. இதை உடைக்க வேறு வழியில்லை. இப்படி ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கியவர்களை ” நீ எங்களவ்ன் இல்லை. எங்களை தாழ்த்தி மேலான்மை செய்ய நினைப்பவன்,நீ ஒரு அழையா விருந்தாளி என் வீட்டை பிடுங்கி என்னை விரட்டப்பார்ப்பவன் போ வெளியே ” என்ற ஆத்திரம் வரத்தான் செய்யும்

  11. திராவிட groupபிடம் எனக்கு சில சந்தேகங்கள்

    1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது.
    Then what about church & mosque? .

    2. மத சம்பந்தமான நம்பிக்கை விரதம் மூடநம்பிக்கை,
    Then why you people wearing skull cap and attending Ramzan nombu functions ?.

    3.கடவுள் இல்லை, கோவிலில் இருப்பது கல் தான் எனில்
    . Then, கல்லுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை? சமஸ்கிருதம் ஏமாற்று எனில்
    தமிழ் ஏமாற்று வேண்டுமா?

    4.கடவுளை கற்பிபவன் அயோக்கியன்?
    Then, ஏன் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ?
    எல்லோரும் அயோக்கியன் ஆகவா?

    5. வேற stateல் போய் சாமி கும்பிடாதே, தமிழ்நாட்டில் கும்பிடு.
    இல்லாத சாமிய கும்பிடறவன் முட்டாள்னா,
    அந்த முட்டாள்தனத்த தமிழ்நாட்டில் தான் பண்ணணுமா?
    முழு முட்டாள்தனமும் தமிழுக்கு உரியதா?

    6.தெலுங்கு பாலாஜியையோ கேரள அய்யப்பனையோ கும்பிடாதே,
    தமிழ் கடவுளை மட்டும் கும்பிடு.
    (தமிழுக்கு மட்டும் தான் இவர்களுக்கு இல்லை )

    கடவுளுக்கு தனிதனியாக state, மொழி உண்டா?
    இது Meccaக்கும் ஜெருசலத்திற்க்கும் பொருந்துமா?

    1956க்கு முன்பு சென்னை மாகாணம் பிரிப்பதற்கு முன் பாலாஜியும், அய்யப்பனும் தமிழர்களாக இருந்து ? பின் telugu & malayali ஆக மாறி விட்டனரா?

    1956 முன் அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருக்குமே.
    பாவம் முருகனுக்கு மட்டும் தமிழை தவிர வேறு மொழி தெரியாது
    அது எப்பிடி ஒரு குடும்பத்துல அப்பா ஹிந்தி, அண்ணன் தமிழ், தம்பி மலையாளி ,

    7. உண்டியல்ல பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள்!
    Then, ஏழைக்கு உதவ அரசுக்கு நாங்க கட்ற tax பணத்துல meccaக்கு ஏன் ஆளை அனுப்புறிங்க.

    8. தமிழனுக்கு மதம் கிடையாது?
    தமிழன் இந்து இல்லை.
    அப்போ தமிழன் christian ஆக or muslim ஆக இருப்பானோ?

    தமிழன் இந்து இல்லை என்றால் இந்தியாவில் எந்த stateலேயும் இல்லாத
    அளவிற்கு அழகழகான கற்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான
    கோவில்களை கட்டிய நமது முன்னோர்கள் இந்துக்கள் இல்லையா.? முட்டாள்களா?

    9. வீட்டுக்காரர் மாட்டுக்கறி தின்போம்னு போராடுறாரு

    வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிட்டு கோமாதா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கு ?

    இதுதான் திராவிட கொள்(ளை)கை யா.?

    ஊருக்கு தான் உபதேசமா .?

    • ஜனக்ரெடென்ஸ் என்ற பெயரில் ஒருவர் அடுக்கடுக்காய் ஒன்பது கேள்விகளை கேட்டிருக்கிறார்.திராவிட குரூப்பிடம் கேட்பதாகவும் சொல்லி இருக்கிறார். கேள்விகள் நியாயமானவையும் சிந்திக்க வேண்டியவையாயும்தான் இருக்கின்றன.அத்தனை கேள்விக்ளுக்கும் பெரியாரின் உண்மை பேரன் களால் கண்டிப்பாய் அருமையான் பதில்களை தரமுடியும்.அந்த பதிலகள் பல தடுமாற்றங்களுக்கு மருந்தாகவும் அமையும். யாராவது இருக்கிறீர்களா பேரன் மார்களே… நானும் பெரியாரின் பேரன் தான். சந்தேகமில்லை.ஆனால் அவர் திராவிடக்ரூப் என்று தலைப்பிட்டு அந்த கேள்வியை கேட் கிறார்.உங்களது பதில் இன்றைய காலத்திற்க்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கும்

    • திராவிட குரூப்பிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் தரப்பில் பதில் இல்லை.நான் இந்த கேவிகளை எத்தி வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பெரியாரின் கொள்கைகளும் அவரின் சமூக பார்வையும் இந்த கேடுகெட்ட திராவிட ஆட்சியாளர்களால் மழுங்கடிப்பட்டு விட்டது என்பதற்க்கு சாட்சிதான் இந்த மெளனம் என்று எடுத்துக் கொள்கிறேன்.
      1.பெரியார் கோவிலையோ பள்ளிவாசலையோ சர்ச்சையோ எதிர்க்கவே இல்லை.அவர் மதத்தை எதிர்த்தார். பிறப்பால் மனிதனை மேலோன் என்றும் கீழோன் என்றும் பிரித்து வைத்து கொடுமை செய்யும் அரக்கத்தனத்தை எதிர்த்தார்.
      மதம் சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும் நிறுவப்பட்டு கடவுள் என்ற ஒன்றால் நிலை நிறுத்தப்படுவதை எதிர்த்தார்.
      அவர் கவலையெல்லாம் மக்களை பற்றியதுதான் கடவுளை பற்றியது அல்ல.இதை தெள்ளத்தெளிவாய் சொல்கிறார்
      அவரிடம் கேட் கப்படுகிறது ” திடீரென்று உங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன செய்வீர்கள்” என்று. உடனடியாக பதில் வருகிறது. ” கடவுள் இருக்கிறான் இருக்கிறான் என்று ஊர் முழுக்க சொல்வேன். எனக்கு கடவுளுக்கு என்ன பிரச்சினை ? கடவுளின் பெயரால் நடக்கிற மெளட்டீகங்கள் பாகுபாடுகள் பணவிரயம் இவைதானே நான் வெறுப்பவை.கடவுளை அகற்றாமல் இவற்றை அகற்ற முடியாது ஆகவே அந்த கடவுளை கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறேன்.”
      இதுதான் பெரியார். அவர் ஒருபோதும் “கடவுள் இருக்கிறானா என்று ஆராய்ச்சி பண்ணி கடவுளை நிராகரித்ததாக ” சொல்லவே இல்லை.
      ஆக பொதுவாகத்தான் அந்த கடவுள் நம்பிக்கையை எதிர்த்தார். அதே நேரத்தில் தான் பிறந்த மதமான இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்தில்தான் மிகக்கொடூரமான பாகுபாடுகளும் மூட நம்பிக்கைகளும் இருப்பாதாக காண்கிறார். அதுதான் அவர் வாழ்ந்த பகுதி மக்களின் பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.தானும் அந்த மதத்தில் ஒருவன் ஆகவே அதை கூடுதல் உரிமையோடும் மூர்கத்தோடும் எதிர்க்கிறார். இதைத்தானே அம்பேத்கரும் செய்தார்.அவரை மட்டும் ஏன் காவிகள் மடியில் வைத்து கொஞ்சுகிறீர்கள்.இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கராவது கடும் விமர்சனத்தோடு இந்து மதத்தை விட்டு வெளியேறியே போனார்.புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று வெட் கம் கெட்டுப்போய் காவிகள் சமாளிக்கும். ஆனால் பெரியார் கடைசிவரை ராமாசாமியாகத்தான் இறந்தார். அவர் எந்த மதத்தையும் ஏற்க்கவில்லை.” நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான்” என்று சில சமாளிப்பு திலகங்கள் சொல்லும். பிறகு ஏன் பெரியாரை தூற்ற வேண்டும். பெரியாரை கண்டால் மட்டும் ஏன் வேப்பங்காயாய் கசக்கிறது?அதுதான் பெரியார். யாரை காவிகளுக்கு அறவே பிடிக்க வில்லையோ யாரைக்கண்டால் அவர்கள் நஞ்சாக வெறுப்பார்களோ அவ்ர்கள் மிகச்சிறந்த தலைவர்கள் என்று பொருள். அப்படிப்பார்த்தால் அம்பேத்கரைவிட பெரியாரே பலபடி உயர்ந்தவர் என்பது என் கருத்து.
      இன்னும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். ஒரு பயணத்தால் என்னால் தொடர முடியவில்லை. கண்டிப்பாய் நாளையோ நாளை மறுநாளோ தொடருவேன் இன்ஷாஅல்லா

      • நல்லா மூட்டி விடறீங்க! உங்க பணி தொடர ,நமக்கு தெளிவு பிறக்கும், பெரியாரை பெரியாழ்வார் ஆக்கமலிருந்தால் சரி!

      • கே ப்ள்வி 2 மத சம்மந்தமான விரதம் மூட ந்ம்பிக்கை . பிறகு ஏன் ரம்ஜான் நோன்பு திறப்பு குல்லா ?பதில்; ரம்ஜான் நோன்பை இறை நம்பிக்கை என்று பெரியார் சொன்னாரா? அவ்ருக்கு எல்லா நோன்பும் மூட நம்பிக்கைதான்.இந்த குல்லா போடுகிற நாடகமெல்லாம் பெரியார் நடத்தியதில்லை.இந்த அரசியல் ஆதாயவாதிகள் ஓட்டுக்கு நடத்துகிற நாடகம். எங்களை பொறுத்தவரை நோன்பு திறக்கும் நேரம் என்பது மிக முக்கியமான பகுதி. பகல் முழுக்க பசித்தும் தாகித்தும் இருக்கிற நாங்கள் அதை முடிக்கும் நேரத்தில் பிரார்த்த்னையோடு இருக்கும் போது இவனுங்க வந்து ஓட்டு பிச்சை எடுப்பானுங்க. அரசியல் சாராத நாங்கள் யாரும் இதை விரும்புவதில்லை.இது அரசியல் வாதிகளால் நடக்கிறது.
        இப்போதாவது கொஞ்சம் பரவாயில்லை. நோன்பாளிகளை( முஸ்லிகளை ) அழைத்து கட்சிகள் நோன்பு திறக்க வைக்கின்றன. திருவாளர் கருணாநிதி காலத்தில் நோன்பு இருப்பவன் நோன்பில்லாத அவரை அழைத்து வந்து தலையில் குல்லாவை அவருக்கு கவிழ்த்தி கஞ்சி கொப்பரையையும் கையில் கொடுத்து குடிக்க வைப்பான்.
        இதை ஜெயலலித்தான் தான் அழைத்து நோன்பு திறக்க வைத்தார்.
        நாங்கள் இரண்டையுமே விரும்பவில்லை. இது எங்கள் நம்பிக்கை சம்மந்தப்பட்டது. இதில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை.
        சரி.. இந்த நாட்டின் குடிமக்களாகிய சிறுபான்மையினரின் ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதே உமக்கு எங்கோ அரிக்கிறதே..இந்த நோன்பு திறப்பால் யாருடைய உரிமையுமா பறிக்கப்படுகிறது? அல்லது நோன்பின் மூலமாய் யாருக்கும் தராததை எங்களுக்கு தந்து விடுகிறார்களா
        ஒரு அரைமணி நேர நிகழ்வு.இதையே பொறுத்துக்கொள்ள முடியவில்லையே
        மதச்சார்பற்ற நாடான இந்த நாட்டில் என்ன விழா நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சடங்குகளால் தான் ஆரம்பிக்கப்படுகிறது.
        தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தான் போனஸ். இலவச வேட்டி சேலை.பெருநாளையும் கிறிஸ்மசையும் கண்ணுக்கு தெரியவில்லையா?
        நாங்கள் யாராவது கேட்டோமா?

        • கேள்வி 3. கோவிலில் இருப்பது கல் என்றால் அதை வணக்குபவன் காட்டுமிராண்டி என்றால் பிறகு ஏன் தமிழில் அர்ச்சனை ?நல்ல கேள்வி
          பெரியாரை பொறுத்தவரை கோவிலில் இருப்பது கல் தான்.அவர் வணங்குவதில்லை. அடுத்தவன் வணங்குவதை அவர் தடுத்ததும் இல்லையே.
          நான் ஏற்கனவே சொன்னதைப்போல கடவுளை விட கடவுளின் பெயரால் நடக்கிற அநீதிகளையும் அக்கிரமங்களையும் தானே அவர் சாடுகிறார்.
          மனிதனை சமமாக்குகிற, அறிவை மழுங்கடிக்காத சித்தாந்தமாயிருந்தால் அவர் கவலை படுவதில்லை அவ்ரே குறிப்பிடுகிறார்.
          அதனால் தானே வைக்கம் போராட்டம் நடத்துகிறார். மக்களை திரட்டி கோயிலுக்கு அழைத்து போகிறாரே!
          சிலைகளை உடைக்கவா அழைத்துப்போனார்? சிலையை வணங்கத்தானே அழைத்துப்போனார்.
          அவரைப் பொறுத்தவரை தான் கடவுளை நம்பாதாது வணங்காதது தனிக்கதை. வணங்குபவனை அவன் வணங்கும் வரை, சுயமரியாதையோடும் முழு உரிமையோடும் அவன் கோயிலுக்குள் போக வேண்டும் பிறப்பால் அவனை தாழ்த்தி அவன் உரிமையை மறுக்கும் அதிகாரம் எவனுக்குமில்லை. ” நீ கோயிலுக்கு போக வேண்டுமா? போடா தைரியமாக .அவன் யாரடா உன்னை துரத்த? கல்லை வணங்குவது பைத்தியக்காரத்தனம் என்று நீ அறிந்தால் அதை தெளிந்து தவிர்த்திடு. அடுத்தவனுக்கு அஞ்சி நீ போக மறுத்தால் அதை நான் அனுமதிக்க மாட்டேன். உன் சுயமரியாதையை உருவி விட ஒரு நாய்க்கும் அதிகாரமில்லை. போ உள்ளே .கோயிலுக்கு போய் உன் நம்பிகையை நீ காட்டு அவன் யார் உன்னை விரட்ட?
          இதுதான் பெரியார்.அவருக்கு கல்லோ சிலையோ பிரச்சினை இல்லை. இயேசுவோ அல்லாவோ பேதமில்லை. மனிதனின் தன்மானம் சுயமரியாதை பகுத்தறிவு பாதிக்கப்படுகிறதா? அங்கே அவர் கைத்தடி வந்து நிற்க்கும்.
          மொழி என்பது இனத்தின் அடையாளம்.
          என் மொழி அவமதிக்கப்படுகிறதா? அங்கே என் இனம் அவமதிக்கப்படுகிறது
          கடவுளின் பெயரால் என் மொழியை இழிவு செய்ய நீ யார்?
          “வளம் செரிந்த உன் மொழியால் உன் நம்பிக்கையை நீ வெளிப்படுத்து. அவன் யார் உன் மொழியை இகழ? வழக்கொழிந்து போன ஒரு மொழியை வைத்துக்கொண்டு அதுவே கடவுள் மொழி என்று சொன்னால் பொறுக்காதே அது ஏமாற்று”
          இதுதான் பெரியார்

          • கேள்வி 4. ” கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் பிற்கு ஏன் எல்லா ஜாதியும் அர்ச்சகராக வேண்டும்?”
            பதில்; மூன்றாவது கேள்விக்கான பதிலிலேயே இந்த கேள்விக்கான பதிலும் தொக்கி நிற்க்கிறது.”கடவுள் சிலைக்கு நெருக்கமாக போவதற்க்கு பிறப்பிலேயே ஒருவனுக்கு தகுதி இருந்தால்தான் முடியும். அவன் நன்னடத்தையோ அர்ச்சனை செய்யும் முறையை அறிந்திருத்தலோ ஒரு போதும் தகுதி ஆகாது”
            என்ற மூடத்தனத்தை உடைக்கவே, ” போ உன் கடவுள் அருகே. எவன் உன்னை தடுப்பது ” என்று வரிந்து கட்டுகிறார்.
            எப்படி பார்த்தாலும் அவரிடம் இருந்தது சமூகத்தின் மேல் உள்ள அக்கறைதான் விளிம்பு நிலை மக்கள் மேல் அவர் கொண்டிருந்த பரிவுதான்.
            அவர் என்ன தாழ்த்தப்பட்டவராகவா பிறந்திருந்தார்?. ஏகப்பட்ட சொத்துக்கள் பல கோயிகளுக்கு அறங்காவலர்.ஏன் இந்த கிழவன் இப்படி மாறடிக்க வேண்டும்?எவ்வளவு சொகுசாக இருந்திருக்கலாம்.ஆட்சி பீடம் ஏற வாய்ப்பு வந்தும் அதையும் நிராகரித்துதானே வாழ்ந்தார்.அவர் தந்தைதான்… தமிழகத்திற்க்கே தந்தைதான்.
            இன்னுமொரு முக்கிய குறிப்பு…அவர் சிலைக்கு கீழே எழுதப்பட்டிருக்கும் கடவுளை நம்புபவன் முட்டாள் காட்டுமிராண்டி அயோக்கியன் என்பது அவர் வார்த்தையல்ல.

            • கேள்வி எண் 5, 6 இருக்கிறதே அது பெரியார் பேரன் களுக்கு பொறுந்தாது. அது எங்களிடம் கேட் கிற கேள்வி அல்ல.
              தமிழை வைத்து பைத்தியம் விளையாடுகிற கூட்டம் ஒன்று இருக்கிறது அங்குதான் போய் கேட் க வேண்டும்.
              பெரியார் தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லித்தரவில்லை.இன்னும் சொல்லப்போனால் இந்த தமிழ் பைத்தியங்களை கிண்டலடித்தார். திருவாளர் கருணாநிதி ” தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன்” என்று பீற்றி திரிவார். அதையே,
              ” என் தம்பி கருணாநிதி தலையை கொடுக்க வேறு காரணங்கள் கிடைக்க வில்லையா தமிழ்தான் கிடைத்ததா?”
              என்று நக்கலடிக்கிறார். அதே நேரம் தமிழ் எழுத்துகளை சீர் திருத்தம் செய்ததும் அவரே.
              ட்
              கமிழை வைத்து அரசியல் செய்வது தமிழ் தமிழ் என்று சும்மா உணர்ச்சி கொந்தளிப்பில் கத்துவது இதெல்லாம் பெரியாருக்கு உவப்பானதே கிடையாது.இதுவே ஒரு மடத்தனம்.

    • இதே பதிவை (அவா பாஷையில் அட்சரம் பிசகாமல், முகனூலில் வேறு ஒருவர் பதிவிட்டு உள்ளார்)
      //ஹரிஹரன் கணபதி திராவிட க்ரொஉப்பிடம் எனக்கு சில சந்தேகங்கள்

      1. கடவுள் கிடையாது, கோவில் கூடாது. …ஸே மொரெ
      // பதிலை படித்து தெரிந்து கொள்ளவும்!

  12. //திரு ராமன், // அனைவரும் சமம் என்னும் சிந்தனைக்கு செல்லலாம் என்னும் சிந்தனை உள்ள தலைவர்கள் அமைந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லலாம் // நல்லாத்தான் சொல்றீங்க. ஆனால் இந்த சிந்தனைக்கு தடையாய் இருப்பது யார்? அந்த சிந்தனயில் விடை இருக்கிறது.//

    இது அமெரிக்க வெள்ளை கருப்பு என்பது போல எளிய பிரிவு அல்ல .
    அல்லது இசுலாமுக்கு முன் இருந்த அரபி – அடிமை முறையும் அல்ல.

    ஒரு குறிப்பிட்ட பிரிவினரை துரத்தி விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பது தீர்வு அல்ல.

    ஒவ்வொரு சாதியும் , தங்களுக்கு மேலே உள்ளவர்கள் வேண்டாம் ஆனால் கிழே உள்ளவர்கள் வேண்டும் என்னும் மனா நிலை கொண்டவை . பல ஆயிரம் ஆண்டு சமூக பழக்கம் .

    // நாங்கள்தான் உயர்ந்தவர்கள் ” என்ற ஆணவத்தோடு அல்ல்து அந்த உணர்வோடு ஒரு கூட்டம் திரியும் போது மற்றவர்களுக்கு ” ஒன்ட வந்த நாய்க்கு ஒய்யார உப்பரிகையா? ”//

    பிரமிடின் மேலே இருப்பவர்கள் அதன் கிழே இருப்பவர்கள் ஆதரவில் தான் அங்கே இருக்க முடியும் . வேளாண்மை சமூகத்திற்கு விலை இல்லா தொழிலாளி கிடைக்க அவர்கள் உதவுவார்கள். பதிலுக்கு இவர்கள் அவர்களை பிரமிடின் மேலே இருக்க அனுமதிப்பார்கள் .

    //நீ எங்களவ்ன் இல்லை. எங்களை தாழ்த்தி மேலான்மை செய்ய நினைப்பவன்,நீ ஒரு அழையா விருந்தாளி என் வீட்டை பிடுங்கி என்னை விரட்டப்பார்ப்பவன் போ வெளியே//

    ஐந்தே வருடத்தில் குடி உரிமை தரக்கூடிய காலகட்டத்தில் இருந்து கொண்டு குகை மனிதனை போன்ற தீர்வை தருவதால் பயன் இல்லை. கூட சேர்ந்து கும்மி அடித்த பிறகு , அவன்தான் காரணம் என்று தப்பிக்க முடியாது . witch hunt என்று கூறுவது இதை தான்
    திராவிட ஆதிக்க சாதிகளின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த வேண்டுமானால் உதவலாம் தீர்வை தராது

  13. திரு ராமன், அடிப்படையை சுட்டிக்காட்டினால் அதன் விளைவை சொல்லி திசை திருப்புகிறீர்கள்.நீங்கள் சொல்வது உண்மை. ஒவ்வொரு சாதியும் தன் படித்தரத்தில் நின்று கொண்டு தனக்கு கீழ் உள்ளதை அமுக்கி கொண்டு நிற்கிறது உண்மை. ஆக கீழ் படித்தரததில் கிடப்பவன் தனக்கு மேல் மேல் உள்ள அடுக்குகளால் நசுங்கி கிடக்கிறான். இன்று கல்வியும் பல துறை சார்ந்த வாய்ப்புக்ளும் பரவலான நிலையிலும் ஆழ படிந்து போன சாதிய வக்கிரம் இன்னும் தன் கோரத்தை காட்டிக்கொண்டுதான் திரிகிறது. இதற்க்கெல்லாம் அடிப்படை என்ன? மதம் முக்கிய காரணியாக இருந்திருக்கிறதா இல்லையா? ஒரே மதம் சார்ந்த மக்கள் என் கிறோம் மதச்சடங்குகளைக் கூட இன்னின்னார் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறோம்.அரசியல்வாதிக்ளும் அறிஞ்சர்களும் ஜாதிக்கு எதிராய் கத்தி பயனில்லை.மதவாதிகளும் மடங்களும் அந்த கட்டை உடைத்து, புறக்கணித்து ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை சரியான முறையில் உங்கள் ஆகமம் மந்திரம் அனைத்தையும் சொல்லிகொடுத்து தயார்படுத்தி, பறையன் என்றும் பள்ளன் என்றும் அடிமையாக்கிய மனிதனின் தலைமையில் பிராமணன் என்றும் பிள்ளைமார் என்றும் மேட்டிமை பேசித்திரிந்தவன் தெய்வத்தை வழிபட்டால் இழிவு நீங்க ஆரம்பிக்குமில்லையா? திராவிட ஆதிக்க சாதிகளின் கள்ளத்தனத்தையும் உடைத்து நொறுக்குங்கள். அவர்கள் குறுக்குசால் ஓட்ட ஏன் நீங்கள் அனுமதிக்க வேண்டும்.பிராம்ண ஆதிக்கம் என்பது இன்று வெளிப்படையாய் இல்லை என்பது உண்மை.இந்த சாதிய ஆதிக்கத்தின் வேர் எங்கிருந்து உருவாகிறது. அதை வெட்டினால் தானே துளிர்க்காமல் இருக்கும். சும்மா கிளையை ஒடித்து ஒடித்து விடுவதால் பயனில்லை. வந்திருக்கும் ஆய்வை பரப்புங்கள்.உண்மையை முன்னெடுத்து செல்லுங்கள். வந்தேரி பொந்தேரி கதைகளெல்லாம் தானே மறையும்.

  14. கேள்வி எண் 7 ” உண்டியலில் பணம் போடாமல் ஏழைக்கு கொடுங்கள்,எங்கள் வரியை எடுத்து மெக்காவுக்கு போகிறவர்களுக்கு கொடுக்கவா?”
    இதுதான் நரித்தனமான கேள்வி. பெரும்பாலான மக்களை ஒரு குறிப்பிட்ட மக்கள் மேல் ஏவி விடுகிற தந்திரம்.

    முஸ்லிம்கள் வாழ்வில் ஒரு முறை அரேபியா போய் வருவது மதக்கடமை.இதை சில தனியார் நிறுவனங்கள் மூன்று லட்சம் நாங்கு லட்சம் வரை வாங்கிக்கொண்டு அனுப்புகின்றன. அதிகமானபேர் இதில்தான் சென்றுவருகிறார்கள். அவர்களும் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள். போகிறவர்களுக்கும் அங்கே 7நட்சத்திர விடுதியில் தங்க இடம் அவர்கள் பகுதி சாப்பாடு.சமையல் காரரும் கூடவே போவார்.சொகுசாக கடமையை முடித்து வருகிறார்கள்.
    வசதி குறைவானவர்களுக்கு மத்திய அரசு அதிக லாபமில்லா முறையில் இந்த சேவையை செய்து கொடுக்கிறது. கவனத்தில் கொள்க இதனால் அரசிற்க்கு எந்த நட்டமுமில்லை. என்னவோ அரசாங்கம் இலவசாமாய் எங்களை அழைத்துச் செல்வது போல காவிகள் தோற்றம் காட்டுவார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைய தேதிக்கு அரசு சர்வீசில் ஒன்னே முக்கால் லச்சம் ஆகிறது. அங்கு இந்திய அரசுக்கு சொந்தமான கமிட்டியில் தங்க வைக்கப்படுவார்கள். அனைவரும் ஒரே பெரிய அறை சாப்பாடு என்பது நடுத்தர முறையில் இருக்கும். தனியாரிடம் போவதோடு ஒப்பிட்டால் அரசு சர்வீசில் நிறைய அனுசரிக்க வேண்டும். பலரும் விண்ணப்பித்திருத்து இருப்பதால் காத்திருக்க வேண்டும். நான் நினைத்தவுடன் அரசு சேவையில் போக முடியாது.

    இதன் காரணமாக பெரும்பாலோர் தனியார் சர்வீசில் தான் போகிறோம்.
    நானே என் தாயாரை அழைத்து போக வேண்டி இருந்தது. முதலில் அரசு கமிட்டியில்தான் போக நினைத்து தாமதம் வசதி குறைவு போன்ற காரணத்தால் மூன்று வருடத்திற்க்கு முன் தனியாரிடமே பணம் கட்டி போய் விட்டேன்.
    என்ன்மோ இவர் வீட்டு பணத்தை கட்டுகட்டாக எங்களிடம் தந்து அரசு எங்களை அனுப்பி வைப்பதை போல என்ன ஒரு பாசாங்கு.
    இவர் மட்டும்தான் வருமான வரி கட்டுகிறார். நாங்களெல்லாம் சும்மா உக்காந்து இவர் பணத்தில் கொளுத்து உண்ணுகிறோம்.
    அடப்பாவிகளா.. வளைகுடா நாடுகளில் கொளுத்தும் பாலைவன வெய்யிலில் ஒட்டகம் மேய்க்கவும் அரேபியன் வீட்டு பிள்ளைக்கு பீ கழுவவும் செய்து என் படிக்காத சகோதரன் அனுப்பும் பணம் தான்யா இந்த நாட்டிற்க்கு வரும் அதிகப்படியான அன்னிய செலவாணி.
    இங்கு இருக்கும் ஆதிக்க சாதிகள் தான் அங்கேயும் பெரும் பொறுப்புகளிலும் பதவியிலும் இருந்து மிக சொகுசாக வாழ்பவர்கள். அவைகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகள். ஆனால் இங்குள்ள இஸ்லாமியன் அங்கே அடிமட்ட வேலையில் தான் பெரும்பாலும் இருந்து கூலியாக இருந்து வருடக்கணக்கில் குடும்பம் பிரிந்து ரியாலையும் தினாரையும் இங்கே அனுப்பி விடுகிறான்.
    எவ்வளவு வன்மம் உங்களுக்கு என்ன்மோ ஓசியில் நாங்கள் வாழ்வதைப்போல

    • கேள்வி எண் 8 தமிழனுக்கு மதம் கிடையாதா ?
      ஆதி தமிழன் சிலை வணக்கம் செய்தவனாக இல்லை.வள்ளுவனும் பொதுவாக இறைவனை பற்றி குறிப்பிடுகிறானே அன்றி எந்த உருவம் சார்ந்த பெயரிலும் கடவுள் அழைக்கப்படுவதில்லை.
      இது ஒரு பெரிய விவாதத்திற்க்கு இட்டு செல்கிற வாதமாகிவிடும்.
      தமிழனுக்கு மதமே இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.மதம் என்றால் என்ன ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை கொள்கையை ஏறுக்கொள்ளுதல் தமிழன் என்பது இனம்தானே அதில் இருப்பவன் அவன் விரும்பிய சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்கிறான்.நாங்கள் இஸ்லாத்தை ஏறுக்கொண்டோம். கிறிஸ்த்துவை கடவுளின் மகனாக ஏற்றுக்கொண்டவர்கள் இருக்கிறார்கள்
      நாத்திகத்தை ஏற்ற தமிழனும் இருக்கிறான் பெளத்தத்தை ஏற்ற தமிழனும் இருந்திருப்பான்.
      இந்து மதம் என்ற ஒன்று இல்லையே வெள்ளைக்காரனுக்கு பிறகல்லவா நீங்கள் இந்து என்ற வார்த்தையை கண்டு பிடிக்கிறீர்கள். அதுவும் அவன் சொல்லித்தந்ததுதானே.

      பல்வேறு இனக்குழுக்களாக இருந்த் மக்களை இப்போது இந்து என்று அழைத்துக்கொள்கிறீர்கள்.
      இந்து என்ற பதம் ஏது?

      • கேள்வி எண் 9 ” வீட்டுக்காரம்மா பசு மாட்டை கும்பிடுகிறார் வீட்டுக்காரர் மாட்டுக்கறி திங்கிறார் இதுதன் திராவிட கொள்கையா?”
        நான் பெரியாரின் பார்வையில் நின்றுதான் திராவிட கொள்கையை பேசுகிறேன். கண்ட கள்ளன் களின் செயல் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.
        கருணாநிதி குடும்பம் வடிகட்டிய கள்ளத்தனம் நிரம்பிய குடும்பம். அங்கே அத்தனையும் நடிப்பு.
        தகப்பன் ,”இந்து என்றால் திருடன் “என்பார். மகன், “திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் “என்பார்.
        விடை கிடைத்து விட்டதா?
        அதாவ்து இந்து என்றால் திருடன். 90 சதவீத இந்து, அதாவது திருடன் திமுகவில்தான் இருக்கிறான்.
        90 சதவீத திருடனும் திமுகவில்தான் இருப்பதாக தகப்பனும் மகனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.
        இதற்க்குத்தான் நான் தொடர்ந்து சொல்கிறேன். இவர்களுக்கு ஜெயலலிதா ஆயிரம் மடங்கு மேல்.
        அவர் நடிக்கவில்லை.
        இவர்களைப்போல் ஓட்டிற்க்காக எந்த மதத்தையும் பழிக்கவும் இல்லை. தனக்குள் உள்ளதை ஒளிக்கவுமில்லை.
        இதை நான் சொன்னால் சில உடன் பிறப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்.
        ” கலைஞரையா சொன்னாய் கலைஞ்சரயா சொன்னாய்” என்று.
        பெரியாரின் வாரிசுகள் இவர்களல்ல. இவர்களை வைத்து பெரியாரின் திராவிட கொள்கையை பார்த்தால் தப்பும் தவறுமாய் தான் விளங்க வேண்டி வரும்.
        பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இவர்களை விரட்டி விட்டு விட்டார். அற்ப அரசியல் ஆதாயத்திற்க்காக பெரியாரை கொச்சைப்படுத்தி விட்டு சென்ற் கூட்டம்தான் இது. நான் அண்ணாதுரையையும் சேர்த்தே சொல்கிறேன். அண்னாதுரையையே சொல்லும்போது வீரமணி என்ன விதி விலக்கா? பெரியாரின் பெயர் சொல்லி வயிறு வளர்ப்பவர்கள் இவர்கள். எங்களைப்போன்ற இயக்கம் சாராத அமைப்பு சாராதா வெளியே தெரியாத் லட்சோப லட்சம் பெரியாரின் பேரன் கள் இருக்கிறோம். காலமெல்லாம் அவரை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
        அவர் கொள்கைக்கு நேர் விரோதமாக அவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செலுத்த மாட்டோம்.அவர் காலத்தில் அவர் சொன்னவைகளிலிருந்து காலத்திற்க்கு ஏற்ப எங்களை நாங்கள் வளர்த்துக்கொண்டே இருக்கிறோம்.
        பெரியாரின் திராவிடம் யாருக்கும் எதிரானதல்ல. மக்களுக்கு ஆதரவானது.அனைவரையும் சமமாக்கி ஒன்றாக முன்னேறச்செய்வது

    • ஆண்டுதோறும் மக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு இந்திய அரசு ”மானியம்”வழங்குவதாக இந்திய மக்களின் மனதில் ஒரு கருத்து திணிக்கப்பட்டுள்ளது.உண்மையில் நடுவண் அரசு ஒரு பைசா கூட ஹஜ் புனித பயணிகளுக்கு மானியம் வழங்கவில்லை.அப்படி சொல்வது அப்பட்டமான பொய் .பித்தலாட்டம்.ஊரை ஏய்க்கும் நாடகம்.நடுவணில் சங் பரிவாரங்கள் ஆண்டாலும் காங்கிரசுஆண்டாலும் இந்த கபட நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.புனித பயணிகளின் வானூர்தி கட்டணம் தவிர்த்து எந்த செலவையும் அரசு ஏற்று ”மானியம்”வழங்குவதில்லை.வானூர்தி கட்டணத்தை சந்தை விலையை விட கூடுதலாக நிர்ணயித்து விட்டு அந்த கூடுதல் தொகையில் ஒரு பகுதியை புனித பயணிகளிடம் வாங்கி கொண்டு விட்டு மீதியை மானியம் என்ற பெயரில் வானூர்தி நிறுவனத்துக்கு வழங்குகிறார்கள்.

      இதை புரிந்து கொள்ள சில ஆதாரங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
      .
      இணைப்பில் உள்ள சுட்டியில் 2012-ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்க்கான செலவு விவரங்கள் [Break-up]உள்ளன.காட்டாக,சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்டு சவுதி அரேபியா சென்று திரும்புவது வரை ,அங்கு தங்குவது,அங்கு போக்குவரத்துக்கு ஆகும் செலவு,உணவுக்காக தரப்படும் ரொக்கம்,என அனைத்துக்கும் ஹாஜிகள் உரிய கட்டணம் செலுத்துகிறார்கள் என்பதை காணலாம்.

      http://www.hajcommittee.gov.in/…/Cir…/2012/circular_no27.pdf

      இறுதியாக உள்ள வானூர்தி கட்டணம் 20,000-ரூபாய் என்பதில்தான் மானியம் எனும் மோசடி அரங்கேற்றப்படுகிறது.அதை இந்த ஆண்டு ஹஜ் கட்டணத்தை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.அதற்கான சுட்டிகளை ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.

      http://www.hajcommittee.gov.in/…/…/2016/circular_2016_14.pdf

      2016-ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளிடம் ரூபாய் 45.000-வானூர்தி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.ஹாஜிகள் ஏர் இந்தியா மூலமாக மட்டுமே பயணிக்க வேண்டும் என அரசு ஏகபோகத்தை நிறுவியுள்ளது,ஏர் இந்தியா சென்னையிலிருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு போக வர ரூபாய் 60,253-என கட்டணம் நிர்ணயித்துள்ளது.ஹாஜிகளிடம் வசூலித்த ரூபாய் 45.000-போக மீதி 15,250-ரூபாயை நடுவண் அரசு ஏர் இந்தியாவுக்கு செலுத்துகிறது.இங்குதான் மோசடி அரங்கேறுகிறது.
      2016-ல் சென்னையிலிருந்து ஜித்தா நகருக்கு போக வர கட்டணம் ஏர் இந்தியாவில் .37,428 தான் ஜெட் ஏர் வேஸில் 40.000தான் சவுதி அரேபியனில் 35.800தான்.

      பார்க்க;http://www.farecompare.com/…/Chennai…/Jeddah-JED/market.html#

      வணிக வானூர்திகளில் தனித்தனி பயணச்சீட்டு விற்பனைக்கான கட்டணம் இது. மொத்த விற்பனை [Institutional sales ]யில் இன்னும் விலை குறையும்.அதிலும் ஹாஜிகள் செல்வது போன்று பட்டய பறப்பு [chartered flight ]என்றால் இன்னும் விலை குறையும்.
      அநியாயமாக 60,000-என கட்டணம் நிர்ணயித்து விட்டு சந்தை விலையை விட சுமார் எட்டாயிரம் ரூபாய் கூடுதலாக வசூலித்து விட்டு அதன் பின்னரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு மானியம் வழங்குவதாக கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

      இது உலக மகா மோசடி .

      பி.கு.

      2012-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வானூர்தி கட்டணம் 45.000-ரூபாய்.ஹாஜிகளிடம் வசூலிக்கப்பட்ட வானூர்தி கட்டணம் 20,000-ரூபாய்.அரசு வழங்கிய மானியம் 25,000 ரூபாய்.அன்றைய வானூர்தி கட்டண சந்தை விலை.18,000-தான்

    • வினவு தளத்திலேயே ஹஜ் மானிய அவதூறை பல முறை சங்கிகள் வாந்தி எடுத்திருக்கிறார்கள்.அவற்றை தகுந்த ஆதாரங்களுடன் மறுத்தாலும்

      பார்க்க.https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-121206

      மீண்டும் மீண்டும் வந்து ரோபோ சங்கராக

      காலைல மணி ஆறு இருக்கும்.
      கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு

      என்று மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க