Wednesday, September 11, 2024
முகப்புசெய்திஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது ராஜஸ்தானில் கட்டாயம் !

ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது ராஜஸ்தானில் கட்டாயம் !

-

“நான் ஏழை. நான் அரசாங்கத்தின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுகிறேன்” என அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. மஞ்சள் நிற பெயிண்டின் பின்னணியில் சிவப்பு மையால் இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் குடும்பத் தலைவரின் பெயருடன் அந்தக் குடும்பங்களின் வறுமைக் கோட்டுக் குறியீட்டெண்ணும் எழுதப்பட்டுள்ளது.

யோக நிலையில் ராஜஸ்தான் பாஜக முதல்வர் – வீட்டுச் சுவற்றில் ஏழை என்று எழுதப்பட்டுள்ள நிலையில் மக்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டௌசா மாவட்டம் தவிற பாலி மற்றும் பாரன் உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களில் உள்ள ஏழைகளுடைய வீட்டுச் சுவர்களில் இவ்வாறு அடையாளமிட்டுள்ளது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு. டௌசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் மற்றும் பண்டிகூய் ஜில்லாக்களில் மட்டும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டதின் கீழ் பயனடைவோர் சுமார் 70 சதவீதம் பேர் உள்ளனர் – அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள். இவர்கள் பெரும்பாலும் தலித், பழங்குடியினர் மற்றும் முசுலீம்களாக உள்ளனர்.

“வெறும் பத்து கிலோ கோதுமைக்காக நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. எங்கள் வீட்டுச் சுவர்களை அரசு அதிகாரிகள் அசிங்கம் செய்து வைக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் எங்களைக் கேலி செய்கிறார்கள்” என்கிறார் குந்தேரா தங்கர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்.

ஆனால் அரசு அதிகாரிகள் தரப்பிலோ, நலத்திட்ட உதவிகள் தவறானவர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்து விடக்கூடாதே என்கிற அக்கறையில் தான் இவ்வாறு அடையாளமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், கடந்த ஆண்டே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உதவி பெற விரும்புகிறர்கள், தங்களது ஆதார் அட்டைகளைக் காட்டுவது கட்டாயமென அறிவிக்கப்பட்டது. எனில் ஆதார் அட்டைகளைக் கொண்டோ, குடும்ப அட்டைகளைக் கொண்டோ கண்டுபிடிக்க முடியாத “வறுமையை” சுவறில் மஞ்சள் முத்திரை இடுவதன் மூலம் தான் அரசால் கண்டுபிடிக்க முடிகிறதா?

உண்மை அதுவல்ல. மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஆளும் பாரதிய ஜனதா அரசுகள், திறந்த வெளியில் காலைக் கடன்களை முடிக்கும் ஏழைப் பெண்களை ஒளிந்திருந்து படம் பிடிக்க அரசு அதிகாரிகளைக் களமிறக்கி விட்டிருக்கும் செய்தி கடந்த வாரங்களில் வெளியானது. இதே ராஜஸ்தான் மாநிலத்தில், காலைக் கடனைக் கழிக்கச் சென்ற பெண்களை ஒளிந்திருந்து புகைப்படமெடுப்பதைத் தட்டிக் கேட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் (மா.லெ) சேர்ந்த தோழர் ஜாபரை அடித்தே கொன்றுள்ளனர் அதிகாரிகள்.

இந்துத்துவ அரசியல் என்பது தலித்துகள் மற்றும் இசுலாமியர்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல – மாறாக உழைக்கும் ஏழை மக்கள் அனைவருக்குமே எதிரானது. ஏழை மக்களின் மேல் பார்ப்பனியத்துக்கு உள்ள ஆழமான வன்மமும் வெறியுமே பாரதிய ஜனதாவின் ஆட்சியில் இவ்வாறு வெளிப்படுகின்றது.

வறுமையை விளம்பரப்படுத்தும் வசுந்தரா ராஜே

நாஜி ஜெர்மெனியில் யூதர்களை அடையாளப்படுத்த மஞ்சள் நட்சத்திர இலட்சினைகளைக் கட்டாயமாகச் சுமக்கச் செய்து பின்னர் குறிவைத்து அழித்தொழித்தனர்.

இதோ, பாரதிய ஜனதா வடநாட்டு ஏழைகளுக்கு அடையாளமிடத் துவங்கியுள்ளது. தமிழிசை, பொன்.ராதா உள்ளிட்ட  பார்ப்பன பாசிச பாதந்தாங்கிகள் தமிழ்நாட்டிலும் இதே போன்றதொரு அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அறைகூவி வருகின்றனர். தமிழர்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான் – ஒன்று, மானத்தோடு வாழ பார்ப்பனியத்தோடான இறுதி யுத்தம் ஒன்றுக்குத் தயாராக வேண்டும்; அல்லது நெற்றிகளைத் துடைத்துச் சுத்தமாக்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலக வாசலில் வரிசையில் நிற்க வேண்டும்.

என்ன செய்யப் போகிறோம்?

செய்தி ஆதாரம் :

  1. நாஜி ஜெர்மெனியில் யூதர்களை அடையாளப்படுத்த மஞ்சள் நட்சத்திர இலட்சினைகளைக் கட்டாயமாகச் சுமக்கச் செய்து பின்னர் குறிவைத்து அழித்தொழித்தனர்.

    இதோ, பாரதிய ஜனதா வடநாட்டு ஏழைகளுக்கு அடையாளமிடத் துவங்கியுள்ளது. தமிழிசை, பொன்.ராதா உள்ளிட்ட பார்ப்பன பாசிச பாதந்தாங்கிகள் தமிழ்நாட்டிலும் இதே போன்றதொரு அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அறைகூவி வருகின்றனர். தமிழர்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான் – ஒன்று, மானத்தோடு வாழ பார்ப்பனியத்தோடான இறுதி யுத்தம் ஒன்றுக்குத் தயாராக வேண்டும்; அல்லது நெற்றிகளைத் துடைத்துச் சுத்தமாக்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலக வாசலில் வரிசையில் நிற்க வேண்டும்.

    என்ன செய்யப் போகிறோம்?

    Well said.

    Answer – Fight to the end.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க