அனிதாக்களுக்காக “நீட் தேர்வை” எதிர்ப்போம் !

15
4

அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு.

னிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர். அனிதாவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர். ஓட்டு வீடு தான் சொந்தம். வேறு எந்த சொத்தும் இல்லாதக் குடும்பம்.

குழுமூரில் அந்த காலத்தில் துவங்கிய கிறித்துவ மிஷனரிப் பள்ளி உண்டு. அது தான் அந்த சுற்று வட்டாரப் பகுதியின் ஏழை மக்களுக்கு கல்வி அளிக்கும் பள்ளி.

அந்தப் பள்ளியில், தன் உயர் நிலைக்கல்வியை பெற்றார் அனிதா. 10-ம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள், அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

பத்தாம் வகுப்பில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 478. கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99. தமிழில் 96, ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் எடுத்தார்.

இந்த மதிப்பெண்ணிற்கு அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் கட்டண சலுகையில் இடம் அளித்தார்கள். இதை விட ஒரு முக்கியக் காரணம் அந்தப் பள்ளியில் சேர்த்ததற்கு உண்டு.

அந்தக் காரணம், இவர்கள் வீட்டில் கழிப்பறை கிடையாது என்பதே. ஏழை குடும்பத்திற்கு படுக்க இடத்தோடு வீடு இருப்பதே பெரிய விஷயம் தானே. இதனாலேயே ஹாஸ்டல் வசதி கொண்ட பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

+2 விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அனிதா. இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194. கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு போல +2 மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால் அனிதா தேர்வுப் பெற்றிருப்பார். காரணம் அவரது கட் ஆப் மதிப்பெண் 196.5. அதிலும் சிறந்த மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும்.

ஆனால் நீட் தேர்வால் அனிதாவின் கல்வி எதிர்காலம் பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுதினார். பெற்ற மதிப்பெண் 86. அனிதாவின் மருத்துவப் படிப்பு கனவு, மத்திய அரசால் கருக்கப் பட்டிருக்கிறது.

இன்று நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணன் மணிரத்தினத்தோடு வந்து கலந்து கொண்டார் அனிதா.

“நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?”, என்று கேட்டேன். ” இல்லீங்க. போகலை”. “அப்பா என்ன பண்றார்ம்மா?”. ” திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு”. இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.

குழுமூர் கிராமத்தில் பிழைப்பாதாரம் இல்லாமல், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார் சண்முகம். நான்கு மகன்கள், ஒரு மகள். உழைத்து நான்கு மகன்களுக்கும் கல்லூரி கல்வி வழங்கி விட்டார்.

உடன் வந்திருந்த அண்ணன் மணிரத்தினம் சமூக செயற்பாட்டாளர். பொதுப் பிரச்சினைகளுக்காக என்னை அணுகக் கூடியவர். குடிமைத் தேர்வு பயிற்சிக்காக சென்னயில் பயில்பவர்.

மணிரத்தினத்திடம் கேட்டேன், “அப்பாவும் திருச்சியில், நீங்க எல்லோரும் படிக்கிறீங்க. அம்மா தான் அனிதாவுக்கு துணையா ?”. அவரது பதில் அடுத்த இடி. “அம்மா இறந்து பத்து வருஷமாச்சி அண்ணா”.

ஒடுக்கப்பட்ட இனம். அம்மா இறந்துவிட்டார். அப்பா வெளியூரில் கூலி வேலை. ஒண்டுக் குடித்தன ஓட்டு வீடு. அதிலும் கழிப்பறை வசதி கிடையாது. இந்த சூழலிலும் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் அனிதா.

கல்வி மாத்திரமே எதிர்காலம் என்று உணர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்து, பத்தாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை உயிரைக் கொடுத்துப் படித்து, +2ல் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பு கிடைக்கும் என்றிருந்த அனிதாவின் வயிற்றிலும், வாழ்விலும் அடித்திருக்கிறது இந்த முரட்டு முட்டாள் மத்திய அரசாங்கம்.

இந்த ஒரு அனிதா தான் நம் பார்வைக்கு வந்திருக்கிறார். நாட்டில் இன்னும் எத்தனை அனிதாக்களோ ?

இத்தனை பேர் வாழ்க்கையை சூறையாடிய ‘மோடி’ என்ன பதில் சொல்லப் போகிறார். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஏழை, எளிய கிராம மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து நிற்கிறார் மோடி. இந்த எளிய மக்களின் வயிற்றெரிச்சல் இவரை அதல பாதாளத்தில் வீழ்த்தும். அது வரை போராடுவோம்.

#அனிதாக்களுக்காக “நீட் தேர்வை” எதிர்ப்போம் !
#OpposeNEET

நன்றி: சிவசங்கர் எஸ்.எஸ் (முகநூல் பக்கத்திலிருந்து)

15 மறுமொழிகள்

 1. நாட்டை குட்டிசுவராக ஆக்குவதில் தான் இந்த கம்யூனிஸ்ட்களுக்கு எவ்வுளவு அக்கறை. ஒருவர் 12 வருடங்களாக படித்த பாடங்களை எந்தளவுக்கு புரிந்து வைத்து இருக்கிறார் என்பதற்காக தான் பொது தேர்வு நடத்தப்படுகிறது, அதில் ஒருவர் வெற்றி பெறவில்லை என்றால் அவர் ஒழுங்காக பாடங்களை புரிந்து படிக்கவில்லை என்று அர்த்தம், அப்படிப்பட்டவர் எப்படி சிறந்த மருத்துவராக இருக்க முடியும். நீட் தேர்விலும் கூட 11 ம் வகுப்பு பாடங்களில் இருந்து 53 சதவீதத்திற்கும் மேல் கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழக பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடங்களை பெரும்பாலான பள்ளிகள் நடத்துவதே இல்லை நேராக 12ம் வகுப்பு பாடங்கள் தான் நடத்தப்படுகிறது.

  இது எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் சமசீர் கல்வி என்ற பெயரில் கல்வியின் தரத்தை குறைத்து மாணவர்களின் வாழ்வில் அரசியல்வாதிகள் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.

  மருத்துவ படிப்பிற்கு மட்டும் அல்ல, இன்ஜினியரிங் படிப்பிற்கும் நீட் போன்ற தேர்வு முறை கொண்டு வர வேண்டும்.

  #SupportNEET

 2. அவர் வீட்டில் கழிவறை இல்லை ஆனால் அவர் வீட்டில் கண்டிப்பாக தொலைக்காட்சி பேட்டி இருக்கும் அதற்கு மாத மாதம் கேபிள் பணம் கூட காட்டுவார்கள். ஆனால் இவர்களுக்கு அரசு கொடுக்கும் மானியத்தில் ஒரு கழிப்பறை கட்டுவதற்கு மட்டும் பணமே இருக்காது.

  சுத்தம் சுகாதாரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும் அது வராதவரையில் யாரும் ஒன்றும் செய்யவும் முடியாது.

 3. இந்த பதிவில் மணிகண்டனின் வக்கிர சிந்தனைகளுக்கு எதிராக நான் ஒரு வார்த்தை பேசப்போவது இல்லை…அதே நேரத்தில் யார் யார் எல்லாம் அவர் வக்கிர கருத்தை எதிர்த்து குரல் கொடுக்கபோகிரார்கள் என்று பார்க்கத்தான் போகிறேன்….(வினவு ஒரு சுயநலம் கொண்ட நடுத்தர வ்ர்ர்கத்து ஊடகமாக மாறிக்கொண்டு வருகிறது என்பது எனது கருத்து)

  • இது வினவின் மீதான குற்றசாட்டு அல்ல…வினவு வாசகர்கள் மீதான ஒட்டு மொத்த குற்றசாட்டு… எனவே கீழ் கண்டவாறு மாற்றி படிக்கவும்…((வினவு ஒரு சுயநலம் கொண்ட நடுத்தர வர்கத்து “””வாசகர்களின்””” ஊடகமாக மாறிக்கொண்டு வருகிறது என்பது எனது கருத்து)தவறுக்கு வருந்துகிறேன்….

 4. MANIKANDAN AVARGALE 12 VARUDAM PADITHADHAI ANITHA GYABAGAM VAITHUKOLVADHU IRUKKATUM.MAKKAL ELLORUME INDHA ARASIN KEDAANA THITTANGALAI THANGALIN SINDHAI ENGUM NIRAPPIKONDE VARUGIRARGALE ENNA SEIYA PORIRGAL?

 5. Naatula thangave veedu ella..Intha ponnu private school la padichiruku annan chennai la coaching class poraru mla kooda natpa erukaru oatu veedu ithellam yezhai kana thaguthiyaa….?dhalith sirumigal palar toilet illatha adw school la padikiranga avangala pathiyellam mla elutha maataru.ethula vinavu vera post poduranga manasu romba kashtama eruku….adw la padikiravan 1160 edutha than mla eluthuvar pola

 6. மணிகண்டனுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியா நோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. எவ்வளவு ஆதாரங்களை கொடுத்தாலும் திரும்ப திரும்ப அவரது பொய்மைகளை அள்ளி வீசத் தயங்காதவர். இந்த முறை அவரது வர்க்க விரோதம் உச்ச கட்ட பைத்தியக்காரத்தனத்தை எட்டியுள்ளது.

  • Sir apo nan solratha pariseelikka kooda manasu illaya ungalukku? Sivasankar mla private school la padicha ponnuku adharavu tharaaru yen sc st padikira schools oda avala nilaya pathi elutha mudiyala NEET ku nan opposite than ana adw la padikira pasangalala 1000 marks kooda eduka mudiyalaye atharkana karanam antha schools oda vasathi matrum pasangaloda pinpulamthane ipdi oru school ku poi visit Panni unmaya therinji intha kannotathula NEET a ethirthu sivasankar mla Facebook la eluthuvar aa?

 7. சட்டியில் குதிரை ஓட்டிவிட்டு, பந்தயத்தில் தோற்ற கதையாக…நம்மூர் +2வில் மதிப்பெண் பெற்றால் போதுமா… அரசாங்க நடைமுறை “அனிதாக்களுக்கும்” “அம்பானிகளுக்கும்” ஒன்று தான்… கோடி கணக்கில் பணம் இருந்தாலும் இப்பொழுது அறிவிருந்தால் தான் டாக்டர் படிப்புக்கு படிக்க முடியும்… அனிதாவை நினைத்து வருத்தப்பட்டாலும், இந்த நீட் தேர்வால் பல நல்ல் விஷயங்கள் இனி வரும் காலங்களில் நடக்கும்… இது போல சிலருக்காக வருந்தினால் வேலைக்காவாது….

 8. INDIAN SIR ANITHAKKALAI AZHITHU AMBANIGALAI VAZHA VAIKKATHAN NEET ENDRU NAAN THAVARAGAVE NINAITHUVITEN.HARIYUM SIVANUM ONNU ANITHAVUM AMBANIYUM KOODA ONNU.NEETTAI ARIYADHAVAN VAAILADHAN BANNU.SORY MANNATHAN GANAVANGAL ALLY ALLY MUDICHITANGALEY.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க