Friday, March 24, 2023
முகப்புஉலகம்ஐரோப்பாG20 : ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம் !

G20 : ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம் !

-

முதலாளித்துவத்திற்கு எரிதாக போராடியவர்களை, தெருவில் அடித்து நொறுக்கும் ஜெர்மன் போலீஸ்

G20 மகாநாட்டை எதிர்த்து நடந்த கலவரங்கள் தொடர்பான  பதிவுகளின் தொகுப்பு:

ஹம்பூர்க், ஜெர்மனி, G20 : முத‌லாளித்துவ‌த்திற்கு எதிரான‌ போர்க்க‌ள‌ம்.

  • வானில் வ‌ட்டம‌டிக்கும் அமெரிக்க‌ இராணுவ‌ ஹெலிகாப்ட‌ர்க‌ள்.
  • டிர‌ம்ப் த‌ங்குவ‌த‌ற்கு எந்த‌க் ஹோட்டலிலும் இட‌ம் கிடைக்க‌வில்லை! (வ‌ர‌வேற்பில்லை) அத‌னால், அர‌ச‌ விருந்தின‌ர் மாளிகையில் த‌ங்க‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
  •  வ‌ங்கிக‌ள் த‌ம‌து ஊழிய‌ர்க‌ள‌ விடுமுறை எடுக்க‌ச் சொல்லி இருக்கின்ற‌ன‌.
  • க‌டைக‌ள் மூட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

(5 July at 07:29 )

“Welcome to Hell”, “ந‌ர‌க‌த்திற்கு ந‌ல்வ‌ர‌வு”! – ஜெர்ம‌னியில் ந‌ட‌க்கும் முத‌லாளித்துவ‌ எதிர்ப்புப் போராட்ட‌ம்

ஹம்பூர்க் நகரில் பூட்டப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள். கண்ணாடியை உடைத்து விடுவார்கள் என்று பலகை அடித்து மூடியிருக்கிறார்கள்

உல‌கில்‌ 20 தொழிற்துறை வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ நாடுக‌ள் ஒன்று கூடும் G20 ம‌காநாடு இன்று ஜெர்ம‌னி, ஹம்பூர்க் ந‌க‌ரில் ந‌டைபெறுகின்ற‌து. உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்று கூடி வ‌ர்த்த‌க‌ம் ப‌ற்றிப் பேச‌வுள்ள‌ன‌ர்.

ஜெர்ம‌னியின் இர‌ண்டாவ‌து ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், பார‌ம்ப‌ரிய‌மாக‌ ஒரு இட‌துசாரி ந‌க‌ர‌ம். பெருமள‌வில் க‌ம்யூனிஸ்டுக‌ள், அனார்க்கிஸ்டுக‌ள், தீவிர‌ இட‌துசாரிக‌ளைக் கொண்ட‌ ந‌க‌ர‌ம்.

முத‌லாம் உல‌க‌ப் போர் முடிவில், வெற்றிக‌ர‌மான‌ பாட்டாளி வ‌ர்க்க‌ப் புர‌ட்சி ந‌ட‌ந்து ஹ‌ம்பூர்க் சோவிய‌த் அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ஜெர்ம‌னியின் பிர‌தான‌மான‌ துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ ஹ‌ம்பூர்க், இப்போதும் இட‌துசாரிக‌ளின் கோட்டையாக‌ க‌ருத‌ப்ப‌டுகின்ற‌து.

ம‌காநாட்டுக்கும், முத‌லாளித்துவ‌த்திற்கும் எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்துவ‌த‌ற்காக‌ ஒரு இல‌ட்ச‌ம் ஆர்வல‌ர்க‌ள் ந‌க‌ர‌த்தில் கூடி இருக்க‌லாம் என்றும், அதில் ஆயிர‌க்க‌ண‌க்கானோர் வ‌ன்முறையில் ஈடுப‌ட‌லாம் என‌வும்‌ காவ‌ல்துறை க‌ண‌க்கிட்டுள்ள‌து.

அங்கு எந்த‌ நேர‌மும் க‌லவ‌ர‌ம் ந‌ட‌க்க‌லாம் என்ற‌ அச்ச‌ம் கார‌ண‌மாக‌ வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் மூட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. பொதும‌க்க‌ளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்க‌ள்.

போலீஸ் வ‌ண்டிக‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ர‌யில் த‌ண்ட‌வாள‌ங்க‌ளை தொடுக்கும் மின்சார‌ வ‌ய‌ர்க‌ள் நாச‌மாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இத‌னால் ந‌க‌ரில் ர‌யில் போக்குவ‌ர‌த்து பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. (6 July at 11:16)

“They are coming”, “அவர்கள் வருகிறார்கள்” போர்வெறி பிடித்த, நவ தாராளவாத கொடுங்கோலர்கள் வருகிறார்கள்.

முத‌லாளித்துவ‌ எதிர்ப்பு கிள‌ர்ச்சிக்கு அஞ்சி,  ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ப‌த‌ற்ற‌ம் நில‌வுகிற‌து. ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்த‌த் த‌டை. ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ந‌க‌ர‌ம் முழுவ‌தும் இராணுவ‌ம‌ய‌மாகிற‌து. போலீஸ் வாக‌ன‌ங்க‌ளை விட‌ வேறெந்த‌ வாக‌ன‌மும் தெருவில் காண‌ முடிய‌வில்லை.

அமைதியாக‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌விருந்த‌வ‌ர்க‌ளுக்கு போலீஸ் அனும‌தி த‌ர‌ ம‌றுத்த‌து. த‌ண்ணீர் பீர‌ங்கிக‌ள் பொருத்திய‌ வாக‌ன‌ங்க‌ளை கொண்டு வ‌ந்திருந்த‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் போலீசாரைத் தாக்கிய‌தாக‌ச் சொல்லி த‌ண்ணீர் பாய்ச்சி கூட்ட‌த்தைக் க‌லைத்த‌து. த‌ம்மை நோக்கி போத்த‌ல்க‌ள் வீச‌ப்ப‌ட்ட‌தாக,‌ போலீஸ் த‌ன‌து தாக்குத‌லுக்கு நியாய‌ம் க‌ற்பித்த‌து. ஆனால் ஒரு குடிகார‌ன் ம‌ட்டுமே ஒரேயொரு போத்த‌லை வீசிய‌தாக‌ நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் தெரிவித்த‌ன‌.

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் போலீஸ் வ‌ன்முறையை எதிர்த்து பெரிய‌தொரு ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணி ந‌ட‌ந்தது. இத‌ற்கிடையே, அய‌ல் நாடுக‌ளில் இருந்து ஜெர்ம‌னிக்கு செல்ல‌ முய‌ன்ற‌ அர‌சிய‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ள் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டு, பாஸ்போர்ட் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிய‌ வ‌ருகின்ற‌து. (6 July at 23:00)

ச‌க்திவாய்ந்த‌ 20 உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் ஒன்றுகூடியுள்ள‌ ஹ‌ம்பூர்க் ந‌க‌ரில் ச‌ட்ட‌ம், ஒழுங்கு சீர்குலைந்துள்ள‌து. தெருக்க‌ளில் த‌டைக‌ள் போட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. வ‌ர்த்த‌க‌ நிலைய‌ங்க‌ள் உடைத்து சூறையாட‌ப்ப‌டுகின்ற‌ன‌. போலீசார் குறைந்த‌து நூறு பேரை கைது செய்துள்ள‌ன‌ர்.

ஹ‌ம்பூர்க் ந‌க‌ரின் சில‌ ப‌குதிக‌ளை போலீஸ் க‌ட்டுப்பாட்டில் வைத்திருக்க‌ முடிய‌வில்லை. இராணுவ‌ம் வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அங்கு இர‌ண்டாவ‌து நாளாக‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌க்கிற‌து. இட‌துசாரிக‌ளின் கோட்டைக‌ளாக‌ க‌ருத‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் போலீஸ் வ‌ர‌ விடாம‌ல் த‌டுத்து வீதித் த‌டைக‌ள் போட‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

ப‌ல‌ இட‌ங்க‌ளில் BMW, பென்ஸ் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ள் எரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ந‌க‌ர‌ம் எங்கும் புகைமூட்ட‌மாக‌ காண‌ப்ப‌டுகின்ற‌து. ஜெர்ம‌ன் ஊட‌க‌ங்க‌ள் “உள்நாட்டுப் போர்” என்று வ‌ர்ணிக்கும் அள‌விற்கு நிலைமை மோச‌ம‌டைந்து வ‌ருகின்ற‌து. (7 July at 22:59)

பெண் போராட்டக்காரர் மீது தண்ணீரை பீச்சியடிக்கும் போலீஸ்

முற்ப‌க‌ல் செய்யின் பிற்ப‌க‌ல் விளையும்.” – பழமொழி

ஹ‌ம்பூர்க் ந‌க‌ர‌ம் பற்றி எரியும் காட்சி.

இல‌ங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற‌ நாடுக‌ளில் பேர‌ழிவு த‌ந்த‌ போர்களை உருவாக்கி, இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை அக‌திக‌ளாக‌ அலைய‌விட்ட‌வ‌ர்க‌ள், G20 என்ற‌ பெய‌ரில் கூட்ட‌ம் போடுகிறார்க‌ள். இன்னும் எத்த‌னை பேரைக் கொன்றொழிக்க‌ திட்ட‌ம் போடுகிறார்க‌ளோ தெரிய‌வில்லை.

அதைக் கண்டு இரத்தம் கொதிக்காதவர்கள், அதையெல்லாம் க‌ண்டுகொள்ளாத‌வ‌ர்க‌ள், “ஐயோ… காரை எரிக்கிறார்க‌ள். க‌டைக‌ளை உடைக்கிறார்க‌ள்.” என்று கூப்பாடு போடுகிறார்க‌ள். த‌ங்க‌ள் ந‌ல‌னை ம‌ட்டும் பெரிதென‌ எண்ணும் ப‌ச்சையான‌ சுய‌ந‌ல‌வாதிக‌ள்.

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி காரணமாக, இல‌ட்ச‌க்கணக்கானோர் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். வேலை‌யிழ‌ந்த‌வ‌ர்க‌ள் எத்தனை இலட்சம்? அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கோப‌த்தை வெளிப்ப‌டுத்தும் போது இப்ப‌டித் தான் இருக்கும். இது இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தார்மீக‌க் கோப‌ம். த‌ங்க‌ளை இந்த‌ நிலைக்குத் த‌ள்ளிய‌ முத‌லாளிக‌ள், அர‌சுக்கு எதிரான‌ கோபம். இது முத‌லாளித்துவ‌த்தின் அவமானகரமான தோல்வி.

தினை விதைத்த‌வ‌ன் தினை அறுப்பான். வினை விதைத்த‌வ‌ன் வினை அறுப்பான்.” – பழமொழி

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுச்சி கொள். சோஷலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்.

நன்றி: தோழர் கலையரசன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க