Saturday, July 13, 2024
முகப்புசெய்திபுதிய ஜனநாயகம் - ஜூலை 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – ஜூலை 2017 மின்னிதழ்

-

புதிய ஜனநாயகம் ஜூலை 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. சரக்கு மற்றும் சேவை வரி : புறவாசல் வழியாக இந்து ராட்டிரம்!
“ஒரு தேசம், ஒரு சந்தை, ஒரு வரி” என்ற முழக்கம் “ஒரே தேசம் ஒரே பண்பாடு” என்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் கொள்கையைச் சுமந்து வரும் தேர். பண்பாட்டு பன்முகத்தன்மையும் ஜனநாயக உரிமைகளும் இந்தப் பொருளாதாரத் தேர்ச்சக்கரத்தில் நசுங்கி அழியும். மதச்சார்பற்ற விவகாரங்கள் என்று கூறப்படும் பொருளாதார, அரசியல் விவகாரங்கள் ஒவ்வொன்றிலும் வெகு வேகமாக அதிகாரம் மையப்படுத்தப்பட்டு வருகிறது. மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்ற ஆயுதத்தை ஏந்தி நாற்காலியில் அமர்ந்திருக்கிறது இந்துத்துவ பாசிசம்.

2. “வளர்ச்சி” தோற்றுவித்த விவசாயிகளின் கலகம்!
வளர்ச்சியின் மூலம் நாட்டு மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுவிடப் போவதாக உடுக்கை அடித்து வருகிறார், மோடி. ஆனால், மத்தியப் பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த விவசாயிகளின் கலகமும்; அசாம், ஆந்திரா, சத்தீஸ்கர், பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தமது விளைபொருட்களை வீதியில் கொட்டி நடத்திய போராட்டங்களும் சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சி, கிராமப்புற வறுமையைத் தீவிரப்படுத்தியிருப்பதை அம்பலப்படுத்திவிட்டன.

3. விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது!
அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்திய விவசாயிகள் வஞ்சிக்கப்பட்ட கதை.

4. உற்பத்திச் செலவு 9 ரூபாய் : சந்தை விலை 11 பைசா!
இதற்குப் பெயர் சுதந்திரச் சந்தையா, சுதந்திரக் கொள்ளையா?

5. வீரிய ரக மிளகாய் சாகுபடி: கம்பெனிக்குப் பணமழை! விவசாயிக்கு கடன் சுமை!!
வீரிய ரக விதை உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்துவதன் மூலம் விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்த்துவிடலாம் என்ற யோசனை மூடநம்பிக்கை மட்டுமல்ல, மோசடியானதும்கூட.

6. கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?
நாடெங்கும் குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்கிவிட்டால், விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் தப்பிவிட முடியும் என்ற வல்லுநர்களின் ஆலோசனை நகைப்புக்குரியது.

7. வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற மோடி அரசின் கவர்ச்சிகரமான முழக்கத்தின் பின்னே இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பலிகடாவாக்கும் சூழ்ச்சிகள் மறைந்துள்ளன.

8. விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும்!
இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். இதைத் தடுப்பதுதான் இந்தியாவைத் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருப்பதாக் குமறுகிறார்கள், ஆளும் வர்க்க அறிவாளிகள்.

9. விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில்?
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது. மாறாக, பாட்டாளி வர்க்க அணுகுமுறையோ விவசாயிகளை முன்முயற்சியுள்ள குடிமக்களாக, மாற்றத்தின் தூதர்களாகப் பார்க்கிறது.

10. மாடு விற்பனைக்குத் தடை : பசுவைப் பாதுகாக்கவா, விவசாயிகளை வெளியேற்றவா?
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப்பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்று விட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியில்லை.

11. ஆரியர்கள் வந்தேறிகள்தான்! நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு
வெண்கலயுகத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினார்கள் என்ற கூற்றுக்கு மேலுமொரு அறிவியல் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது, இந்த ஆய்வு.

12. இந்தியாவிற்கு பி.டி. கடுகு! அமெரிக்காவுக்கு ஆர்கானிக் உணவு!!
மோடி அரசு மரபீணி மாற்றம் செய்யப்பட்ட கடுகை இந்திய மக்கள் மீது திணிக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். கும்பல் இயற்கை விவசாயத்தைத் தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன?

புதிய ஜனநாயகம் ஜூலை 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க