privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவிவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி - கைது !

விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது !

-

நெடுவாசல் – கதிராமங்கலம் விவசாயிகளுக்காக மாணவர்கள் போராடுவது குற்றமா? சோறுபோடும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 35 பேரை இடைநீக்கம் செய்ததை வாபஸ் வாங்கு எனவும் இன்று (24.7.2017) காலை 11.30 மணியளவில் வகுப்புக்களைப் புறக்கணித்து கல்லூரி வாயில் அருகில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  ஒன்று கூடி முழக்கமிட ஆரம்பித்தனர்.

வாழவிடு! வாழவிடு விவசாயிகளை வாழவிடு!
நெடுவாசல் – கதிராமங்கலத்தில் கதறுகிறார்கள் விவசாயிகள்!
நீட் தேர்வு திணிப்பை எதிர்த்து முழங்குகிறார்கள் மாணவர்கள்!
தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிபோகுது!
மாணவர்கள் போராடாமல் வேடிக்கை பார்க்க முடியுமா?
விவசாயிகளுக்கு  ஆதரவாக போராடக்கூடாது என கட்டளை போட
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் காளிராஜ் பாகுபலி ராஜமாதாவா?
மாணவர்கள் நாங்கள் அடிமை கட்டப்பாவா?
 மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக
 போராடுவது எங்கள் பிறப்புரிமை!
அதை  தடுக்க கல்லூரி முதல்வருக்கும் –
போலீசுக்கும் ஏது உரிமை!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 35 பேர் மீதான இடைநீக்கத்தை
உடனடியாக ரத்து செய்!
விண்ணதிரும் இம்முழக்கங்களைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தைக் கலைக்க முன்றனர். மாணவர்கள் கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தி துரத்தியடித்தது.
சில முன்னணி மாணவர்களை மட்டும் பிடித்து இழுத்துச் சென்று அடைத்து  வைத்துள்ளது. இடைநீக்கம் செய்த மாணவர்களை கல்லூரியில் சேர்க்கவும் – கைது செய்தவர்களை விடுவிக்கவும், விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடவும், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் ஒன்று திரளவேண்டிய முக்கியமான தருணம் இது.
இவண்
அனைத்துக் கல்லூரி மாணவர்கள்
9092464675

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னனி,
சென்னை, தொடர்புக்கு – 94451 12675.

_____________

இந்தப் போராட்டச் செய்தி உங்களுக்கு முக்கியமானதில்லையா?

  • தமிழக மாணவர் போராட்டத்தின் இணையக் குரலாக பயணிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க