privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமுன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு - ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு !

முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு !

-

ஜூலை 15, 2017 அன்று நடந்த பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கக் கூட்டத்தில் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பணிபுரியும் சங்க உறுப்பினர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாகவும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்னும் சில முக்கியமான முடிவுகள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகள் இந்திய ஐ.டி துறையில் வெகுகாலம் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

தலைவர் : திரு. ஷியாம் சுந்தர்
துணைத்தலைவர்கள் :
திரு. காசிராஜன்,
திருமதி வாசுகி சீனிவாசன்
செயலாளர் : திரு.சுகேந்திரன்
பொருளாளர் : திரு. ராஜதுரை
இணைச் செயலாளர் : திரு. ஓம்பிரகாஷ்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
திரு. சரவணன்
திரு. ரவி சங்கர்
திரு. கமல்

மேலும், சங்கத்தின் சிறப்புத் தலைவராக திரு விஜயகுமாரும், சட்ட ஆலோசகராக திரு சுரேஷ் சக்தி முருகனும் வழிகாட்டுவதற்கு சம்மதம் தெரிவித்து பொறுப்பேற்றுள்ளனர்.

சங்கத்தில் நாங்கள் இணைந்துவிட்டோம்! நீங்கள்

இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதிலும் ஊழியர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமான ஒன்று. அதன்படி பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், பூனே, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • பெங்களூருவில் ஐ.டி ஊழியர்களை திரட்டி அத்தகைய ஊழியர் சங்கத்தை பதிவு செய்வதற்கான முயற்சிகளை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஆதரிக்கிறது.
  • கோயம்புத்தூரில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஹைதராபாதிலும், கொல்கத்தாவிலும் பு.ஜ.தொ.மு வழிகாட்டலின் கீழ் ஊழியர் சங்கம் அமைப்பதற்கான குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஜனவரி 10, 2015 அன்று தோழர் கற்பகவினாயத்தை அமைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளில் ஐ.டி ஊழியர்களுக்காக பல முக்கியமான வெற்றிகளை ஈட்டித் தந்தது ஊழியர் சங்கம். அத்தகைய ஒரு முயற்சியின் விளைவாக,

  • ஐ.டி துறைக்கு தொழிலாளர் சட்டங்களிலிருந்து எந்தவித விலக்கும் அளிப்படவில்லை என்றும்,
  • ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது என்றும்,
  • ஐ.டி ஊழியர்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் தொழிலாளர் துறையில் மனு தாக்கல் செய்யலாம் என்றும்

அறிவிக்கும்படி தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பு.ஜ.தொ.மு மாநிலக் குழுவின் வழிகாட்டலின் கீழ் தோழர் கற்பகவினாயகம் தலைமையிலான அணியின் விடாப்பிடியான கடின முயற்சிகளின் விளைவாக, இப்போது ஐ.டி ஊழியர்கள் பல சட்ட உரிமைகளை பயன்படுத்த முடிகிறது.

  • சட்ட விரோத வேலை நீக்கத்துக்கு எதிராக தொழில் தகராறு சட்டம் பிரிவு 2A-ன் கீழ் மனு தாக்கல் செய்வது,
  • பல்வேறு மாநிலங்களில் சங்கம் அமைத்து பதிவு செய்வது,
  • நிர்வாகத்திடம் கூட்டு பேச்சுவார்த்தை உரிமை கோருவது,
  • தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழில்தாவா தாக்கல் செய்வது

போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் குழு இந்த பயணத்தின் அடுத்தக் கட்டத்தை தொடர்ந்து, ஐ.டி துறையில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் புதிய உயரங்களை தொடுவதோடு மட்டுமல்லாமல், நமது நாட்டில் அனைத்து பிரிவு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கான போராட்டத்திலும் முக்கிய பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறோம்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐடி ஊழியர் பிரிவு,
தமிழ்நாடு.

  • இணையம் : new-democrats.com
    மின்னஞ்சல் : combatlayff@gmail.com
    தொலைபேசி : 9003198576
    _____________

ஐ.டி ஊழியர்களின் நலனுக்காக  குரல் கொடுக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க