சென்ற வார உலகம் – படங்கள் !

1
31

ருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்திய தரைக்கடலினுள் குதிக்கின்றனர். அதில் ஒரு பகுதியினர் கடலினுள் புதையுறுகின்றனர். மீதியுள்ளவர்கள் ஐரோப்பாவில் கரை தப்ப முயற்சிக்கின்றனர். உலகைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கொந்தளிப்பான காட்சிகள் சில.

ஜெர்மனியில் இருக்கும் உறவினர்களுடன் தங்களைச் சேர்ப்பதில் ஏற்படும் தாமதத்தை எதிர்த்து கிரீசில் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு வெளியே போராடுகிறார்கள் சிரிய அகதிகள்.

அதிபர் மைக்கேல் டெமரின் தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய சட்டத்திருத்த முன்மொழிதலை எதிர்த்து நடந்தப் போராட்டத்தில் பிரேசில் வீடற்ற தொழிலாளர்கள் இயக்கத்தைச் (Brazil’s Homeless Workers Movement) சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உரக்க முழக்கமிடுகிறார்.

ஆகஸ்டு 8-ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக சமாதானத்திற்கு அழைப்பு விடுக்கும் பேரணியில் பிரார்த்தனை செய்கின்றனர் கென்ய மக்கள்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மோதல்கள் வெடித்ததால் பற்றியெரிந்த வெனிசுலாவின் தலைநகர் கராகஸ்.

சோமாலியாவின் தலைநகரான மொகடிசூவின் மாக்கா அல்-முகாராம் சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த நபரை சோமாலிய இராணுவ அதிகாரிகள் வெளியேற்றுகின்றனர். ஞாயிறன்று ஒரு காவல் நிலையத்திற்கு அருகே கார் குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமுற்றனர்.

சால்வடாரன்(Salvadoran) படையினரால் 1975-ம் ஆண்டு நடந்த ஒரு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட படுகொலைகளை நினைவு கூறுவதற்காக சான் சால்வடாரில் நடைபெற்ற அணிவகுப்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கலந்து கொள்கிறார்.

ஏதென்ஸ் நகரின் ஹீரோட் அட்டிகஸ் தியேட்டரில் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பாடுகின்றனர். அகதிகளுடைய குழந்தைகளுக்கு இசையை கற்றுக்கொடுப்பதற்கான உலகாளவிய முன்முயற்சியின் ஒருப்பகுதியாக கிரீஸ் தலைநகரை சுற்றியுள்ள அகதிகள் முகாம்களைச் சேர்ந்த பல பத்துக் குழந்தைகள் இசை நிகழ்ச்சியை அந்த அரங்கில் அரங்கேற்றினர்.

இந்திய நிர்வாக காசுமீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்தியப் பாதுகாப்புப்படையினருடன் நடந்தத் துப்பாக்கிச் சண்டையில் பலியான காசுமீரத்து கிளர்ச்சியாளர் ஷபிர் அஹ்மத் மீரின் உடலைச் சுற்றிலும் திரண்ட மக்கள் முழக்கம் எழுப்புகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர் பலியான பிறகு அப்பகுதி இன்னும் கொந்தளிப்புடன் இருந்துக் கொண்டிருக்கிறது.

’நேட்டோ’ தலைமை இராணுவக்கூட்டணியின் கவச வண்டி ஒன்றின் சேதாரத்தை அமெரிக்கப் படைகள் மதிப்பிடுகின்றன. காந்தகார் தெற்கு மாநிலப்பகுதியில் வெளிநாட்டுப் படைகளை தலிபான் தற்கொலைப் படையினர், புதனன்று (02-08-2017) தாக்கியதில் குறைந்தது இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நன்றி : ALJAZEERA

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி !

சந்தா

1 மறுமொழி

  1. ஒன்றை கவனிக்க வேண்டும் வினவு, மத்திய தரைக்கடலில் செல்லும் கருப்பர்கள் எல்லாம் திங்க வழியில்லாமல் செல்லவில்லை, பெரும்பாலானவர்களுக்கு டிவிக்களில் கருப்பு உதைபந்தாட வீரர்கள் அங்கே ராஜா வாழ்வு வாழ்வதை போல் தாமும் ஒரு முயற்சி செய்து பார்போமே என்றுதான். அதுவே இவர்களை உயிரை கூட பணயம் வைக்க தூண்டுகிறது. குறிப்பாக இளைஞ்அர்கள். இதை ‘பூட்பால் ட்ரீம்’ என்று மேற்கு ஊடகங்கள் சொல்கின்றன.

    வெனிசுவேலாவில் அன்று ஒரு போராட்ட இளைஞன் சொல்கிறான் ‘இங்கே கம்மூனிசம் எங்களுக்கு வேண்டாம்’ என்று. அவனுக்கு பொதுவுடமையை பற்றி எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னவென்றே தெரியாமல் எதிர்க்க பழக்கியிருக்கிறார்கள். பொதுவுடமையை தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகளோடு சேர்த்து பயன்படுத்தும் நைச்சியமான வேலையின் விளைவே. வெனிசுவேலாவில் இந்த அரைவேக்காடுகளை தூண்டிவிடும் அந்த சமஸ்தானம் எதுவென்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும். இதை பற்றி ஒரு கட்டுரை எதிர்பார்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க