Tuesday, May 24, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் திவ்யா பாரதியை மிரட்டும் புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாஜக கூட்டணி !

திவ்யா பாரதியை மிரட்டும் புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாஜக கூட்டணி !

-

 மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

150-இ, ஏரிக்கரை சாலை,கே.கே. நகர்,மதுரை-625020  9443471003

__________________________________________________________________________________________________

பத்திரிக்கை செய்தி

10.07.2017

க்கூஸ் ஆவணப்பட இயக்குநர் தோழர் திவ்யா பாரதிக்கு, கடந்த பல நாட்களாக அலைபேசியில் கொலை மிரட்டலும் ஆபாச வசவுகளும் இடைவெளி இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. இந்த அராஜகத்தை டாக்டர் கிருஷ்ண சாமியின் புதிய தமிழகம் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினர் நடத்திவருகின்றனர்.மேற்படி கட்சிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் திவ்யா பாரதி மீது இரு சமூகங்களுக்கு இடையே மோதலைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அவரைக் கைது செய்யும் முனைப்பில் உள்ளது.கொலை மிரட்டலுக்கு எதிராக திவ்யா பாரதி கொடுத்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையின் இச்செயல் பாரபட்சம் மட்டுமின்றி, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் லலிதாகுமாரி தீர்ப்பை மீறுவதாகும்.

திவ்யா பாரதி கக்கூஸ் என்ற ஆவணப் படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட்டுள்ளார். மனிதாபிமானமற்ற, அநாகரிகமான செயல் என்று உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகி சட்டத்தின் மூலமாகவும் தடை செய்யப்பட்டுள்ள, மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் இழிசெயலை அந்த ஆவணப் படம் அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.

சட்டமும் உச்ச நீதிமன்ற ஆணையும் இப்படி இருக்க மனிதக் கழிவை மனிதர்களே அள்ள கட்டாயப்படுத்தப்படும் எதார்த்தத்தை அந்த ஆவணப் படம் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கிறது. பள்ளர் சாதியைச் சார்ந்தவர்களும் இந்தத் தொழிலில் உள்ளனர் என்று ஆவணப்படத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.இது தான் திவ்ய பாரதி செய்துள்ள மிகப் பெரிய குற்றம் என்கின்றனர் புதிய தமிழகம் மற்றும் ஜான் பண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கட்சியினர்.

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் வேலை செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் சிலரை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு, பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்துக் கேள்வி எழுப்பியதற்காக அக்கல்லூரி முதல்வர் சித்ரா செல்வி 12 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

அது சம்பந்தமான உண்மைகள்,முறைகேடுகள்,கல்லூரி முதல்வரின் கணவர் நடத்திய பாலியல் அத்துமீறல்களைப் பதிவுசெய்து சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார் திவ்யா.முதல்வர் பள்ளர் சாதியைச் சார்ந்தவர் என்பதாலும், பொருளாதாரத்தில் வலுவானவர் என்பதாலும் புதிய தமிழகம் கட்சியினர் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இதனை பாஜக அரசியல்ரீதியாகப் பயன்படுத்துகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அதுவும் கையால், குறிப்பிட்ட ஒரு சில சாதிகளே அகற்றும் கட்டாயம் இந்தியாவைத் தவிர உலகத்தின் வேறு எந்த மூலையிலும் இல்லை. இந்த அவலத்தை எதிர்த்துப் போராடி , மனித சமூகத்தின் அந்த ஆகப் பெரிய கேவலத்தை ஒழிக்கும் போராட்டத்தில் இணைய வேண்டிய புதிய தமிழகம் கட்சியினர், இப்படி அப்பட்டமாக சாதி வெறியோடு கடைகோடித்தனமாக நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

மலம் அள்ளுகிறவர்கள் இழிந்த தொழிலைத்தான் செய்கின்றனர். என் சாதிக்காரர்கள் அந்தத் தொழிலில் இல்லை என்று சொல்வது தீண்டாமைக் குற்றம். ஒருவேளை ஆவணப் படத்தில் தவறான தகவல் தரப்பட்டிருந்தால் தக்க ஆதாரங்களுடன் அதை மறுப்பதை விட்டுவிட்டு தன் சாதிப் பெருமையை முன்னிறுத்துவதன் மூலம் மற்ற சாதிகளை அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள். சாதி இழிவை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் சாதி ஆதிக்க வருணாசிரமக் கட்டமைப்பை தூக்கி நிறுத்த முனையும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வினருக்கு புதிய தமிழகம் கட்சியினர் அடியாள் வேலை பார்க்கும் இந்தப் புதிய போக்கு மிகவும் அபாயகரமானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே கேடுபயக்கக் கூடியது.

அரசு நிர்வாகம் துப்புரவுத் தொழிலுக்கு குறிப்பிட்ட சில சாதியினரை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. துப்புரவுத் தொழிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிற வகையில் அதை நவீனப்படுத்தி இப்போது நிலவும் சாதிய இழிவைத் துடைப்பதற்கு அனைவரும் போராட வேண்டும். இதைவிடுத்து, ஏனைய ஆதிக்க சாதிகளைப் போல நாங்களும் ஆதிக்க சாதிதானென்று கொக்கரிப்பது நியாயத்திற்கும்,சட்டத்திற்கும் முரணானதாகும்.

புதிய தமிழகத்தின் இச்செயலை, அந்த சாதியைச் சேர்ந்த ஜனநாயகச் சக்திகள் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். சாதி ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறவர்கள் இழந்துவிட்ட செல்வாக்கை மீட்கவும், அப்பட்டமான பிழைப்புவாத்திற்கும் சாதியைப் பயன்படுத்துகின்றனர். அரசுக்கு ஆதரவாக நின்று மக்களை ஒடுக்கும் வேலையைச் செய்கின்றனர்.

எனவே,கருத்துச் சுதந்திரத்தின் மீதும், பெண்ணுரிமையின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை  புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிறுத்த வேண்டும். திவ்யா பாரதி மீது போடப்பட்டுள்ள  வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

கொலை மிரட்டல் விடுப்பதோடு தொடர்ந்து அச்சுறுத்தும் கிரிமினல்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். கருத்துரிமையைக் காக்க வேண்டி அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராடவேண்டும் என்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

ம.லயனல் அந்தோணிராஜ்
மதுரை மாவட்டச் செயலாளர்

 

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை.

_____________

சாதி தீண்டாமையை எதிர்த்துப் போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. பின்னே ஸ்மார்ட் சிட்டிகளையும் அதில் அரைகுறை நடிகையோடு ஆடுவதை படம் எடுத்து இளைஞர்களுக்கு சுயநலத்தை ஊக்குவிக்காமல், இந்த கேவலத்தை ஆவண படம் எடுத்தால்?
  பாயத்தான் செய்யும் குரங்குப்படை. ஏனென்றால் ‘கீழ்மக்கள்’ எல்லாம் ஞானம் பெறுகிறார்கள்னோ..பிரமிடு தளும்ப தொடங்கிடிச்சுனோ..கலி காலம்.

 2. புதிய தமிழகம் கட்சியின்ரே சாதி தீண்டாமை இன்னபிற சமூக அவலங்களை ஒழிப்பதற்கு தொடர்ச்சியான நேர்மையான சரியான கொள்கையீன் வழி சமரசமில்லாத போராட்டங்கைளை முன்னெடுத்து செல்ல வேண்டும்.அதன் பாதையில் எத்துனை தடை வந்தாலும் தொடர்ந்து போராட வேண்டும்.புதிய தமிழகம் தொடங்கும் பொழுது உங்கள் பார்வையில் அது அனைத்து மக்களுக்கான கட்சிதானே?அல்லது குறிப்பிட்ட சாதிய அமைப்பா?எங்கள் இனத்தவரை எப்படீ மலம் அள்ளூவாதாக காட்டலாம் எனக்கேட்டால் அவ்வினம் உங்கள் பார்வையில் சமுகத்தில் உயர்சாதி அந்தஸ்த்தில் உள்ளதா என்ன? தலித் சமுதாயத்தில் எத்தனை உட்பிரிவுகள் இருந்தாலும் ஆதீக்கசாதியரின் பார்வையீல் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தி எஸ்சிதானே?அதன் பார்வையில் கொண்டே ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்.நம் அவலம் சுட்டிக்காட்ட ஒரு படைப்பு வரும்போது நாம் அதன் பக்கம் நிற்க வேண்டாமா?பரீசீலியுங்கள் சோதர்களே.மாறாக கோணீசாக்குகளை உடையாக்கி அண்ணல் அம்பேத்கரை மூடி நிற்க வைத்தீருக்கும் எச்.சனாதிகளின் லெட்சுமண எல்லைக்கோட்டீற்குள் சென்றீர்களாயிஜ்ன் கக்கூஸ் ஆவணப்படம் நாளை அவர்களால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உறுதீசெய்யப்பட்டு வீடும்.

 3. எங்கள் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

  இந்த கக்கூஸ் திவ்யா பாரதியால், ஏன் தன்னுடைய சாதியை மலமள்ளுபவர்களாக பதிய மனமில்லை? முடியவில்லை?

  இதைப்படிக்கும் ஒவ்வொரு சாதியினருக்கும் இக்கேள்வி பொருந்தும். ஏன் உங்கள் சாதிகளில் மலமள்ளுபவர்களே இல்லையோ? 😛

  இந்த ஒத்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல்தான் அந்த வீராங்கனை ஒடி ஒளியுறாங்க. பிரச்சனைக்குக் காரணமே இந்தக் கேள்விதான்.

  பொதுபுத்தியில் உள்ளவர்களும் இதை அறியாமல், ஆகா ஓகோவென புகழ்வதால் இவர் செய்தது சரியென்றாகாது.

  அப்படியெனில், இராசபக்சே, ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் செய்த படுகொலைகளைக் கூட பெருமளவிலான மக்கள் புகழ்ந்ததால், சரியென்றாகிடுமா?

  முதலில் எந்த ஒரு பொதுவுடமைவாதியாவது சாதியையையும், வர்க்கத்தையும் ஒரே ஆவணப்படத்தில் பதிய முயல்வாரா?

  வர்க்கப் பார்வையெனில், எந்தச் சாதியையும் அடையாளப்படுத்தாமல், அனைத்து சாதிப்பிரிவு ஏழை மக்களும் மலமள்ளுவதாகப் பதிந்திருக்க வேண்டும்.

  சாதிப்பார்வையெனில், FC, BC, MBC, SC, ST பிரிவுகளில், பிரிவிற்கு ஒரு சாதியையாவது அடையாளப்படுத்தி ஆவணப்படத்தில் பதிந்து இருக்க வேண்டும்.

  இதுதான் ஆவணப்படத்தின் இலக்கணம்.

  ஆனால், அந்த ஆணவப் படத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினரின் சாதிகளைத் தனித்தனியாகப் பதிந்துள்ளார். இவர்களுக்குள் வர்க்கவேறுபாடும், சாதி வேறுபாடும் இல்ல போல? 😛
  (sc பட்டியலில் 76 தனித்தனி சாதிகள் இருக்கு! )

  Fc, Bc, mbc என வரும் போது வர்க்கத்தை மட்டுமே கூறி! உள்நோக்கத்துடன் சாதிகளைக் கூறாமல், நகர்ப்புற முதலாளித்துவத்தால் ஏழையாக்கப்பட்ட மக்கள்னு மட்டும் ஏன் பதியணும்? அந்த ஏழை மக்களுக்கு சாதி இல்லையோ? 😛

  என்னால், உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தில் வேறெந்த fc, bc, mbc, sc , st சாதிகளில் மலமள்ளும் தொழிலில் இருப்பவர்களை விட, பள்ளர்களில் இவ்வெண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.

  நிலைமை இப்படி இருக்க, பள்ளர்களைத் தேடிப்பிடித்து பதிவு செய்த இவரால், ஒரு நாயுடுவையோ, ரெட்டியையோ, கள்ளரையோ, நாடார்களையோ, மறவரையோ, பிள்ளையையோ பதிவு செய்யாததின் உள்நோக்கு என்ன? கோழைத்தனமா?

  ஆனால், இதைப்போல எடுத்திருந்தால் சமூக அங்கிகாரம் கிடைத்திருக்காது. கண்டிப்பாக இந்தபடத்தை fc,bc,mbc சாதியினர் ( அதாவது இன்று பரிதாபத்துடன்! இப்படத்தை உச் கொட்டிப்பார்க்கும் நீங்கள்தான் :p ) படத்தை தடை செய்துவிடுவர்.ஏனெனில் இழிவை பட்டியல்சாதியினர் மீது திணிப்பதுதான் பொதுபுத்தி வக்கிரம்.

  சுருக்கமா சொல்லணும்னா, இந்தப்படமே மிகப் பெரிய தீண்டாமை மனப்பான்மையில் எடுத்துள்ளார்.

  தவறு யார்மீதென உணருங்கள். பொதுபுத்தியில் சிந்திப்பதை நிறுத்துங்கள் சகோதர சகோதரிகளே! ?

  • //’’என்னால், உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தில் வேறெந்த fc, bc, mbc, sc , st சாதிகளில் மலமள்ளும் தொழிலில் இருப்பவர்களை விட, பள்ளர்களில் இவ்வெண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்’// உங்கள் ”கணக்கெடுப்பின்” படி FC,BC,MBC போன்ற பிரிவுகளில் உத்தேசமாக எத்துணை பேர் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அப்படி விரல்விட்டு சிலரை காட்டுங்கள் பார்ப்போம்.

   சரி. உங்கள் பிரச்சினை என்ன? மலம் அள்ளுவது இழிவானது;அந்த இழிவை என் சாதிக்காரன் எவனும் செய்வது கிடையாது என்பது தானே? இதன் பொருள் என்ன? சாதிய அடுக்கில் நானிருப்பது சற்று மேல்மட்டத்தில் அவ்வளவு கீழாக இல்லை என்பது தானே?சாதிய அடுக்குமுறை காலம்காலமாக இப்படி சரியாமல் காப்பாற்றப்பட்டு வருவது இந்த மன நிலையால் தான். குருமூர்த்தியால் ஞானஸ்தானம் பெற்று விட்டிர்கள் என்றால் வேறெப்படி சிந்திக்க முடியும்?

  • அது சரி பாஸ்கரன்,

   ஒரு சின்ன டவுட்டு .. அந்த ஆவணப்படம் வெளிவந்தது பிப்ரவரில .. உங்களுக்கு ஜூலை கடைசி வாரத்துல தான் மண்டையில் உறைச்சதா ?. இல்லாட்டி ஜூலை கடசி வாரம் தான் உங்களுக்கு ஆவணப்படம் கையில் கெடச்சதா ?.

   பொதுப்புத்தியில் சிந்திக்கிறது கெடக்கட்டும் வெங்காயம் .. உங்களோட சோ கால்டு ‘முற்போக்கு’ புத்திக்கு இவ்வளவு லேட்டா தான் பிக் அப் எடுக்குமா சார் ?.

   அதுவும், திண்டுக்கல் அண்ணா பல்கலையின் சித்திரை செல்வி பத்தி வீடியோ வந்த்தும் தான் உங்களுக்கு புத்தி வருதுன்னா .. இது புதிய தமிழகம் கிட்டு சாமியோட டீலிங்கில் வந்த எஃபக்ட் மாதிரி தானே தெரியுது.

   மக்களுக்கு பொதுப்புத்தி பத்தி கிளாஸ் எடுக்காம , உங்க வர்க்கப் புத்திய கொஞ்சம் சொரண்டிப் பாருங்க சார்..

 4. இந்த மாதிரியான கட்சிகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டும்.சாதிய தீண்டாமையை ஊக்குவிக்கும் கட்சி புதிய தமிழகம் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளனர் காவிகள்.

 5. பாஸ்கரன், உங்கள் வாதம் இஸ்லாமிய கடும்போக்குவாதிகளின் ‘பகிரங்க விவாத’ பேச்சுகள் போலுள்ளது. அல்லது இங்குவரும் ‘முஸ்லிமை சொன்னியா?’ வகையறாக்களின் கதை போலுள்ளது. அடி முடி இல்லா கதையாக இருக்கிறது. எதோ குறிப்பிட்ட சாதிமட்டும் எசமான் ரஜனி போல் தலைகுனிந்து செல்வது போலவும் மற்ற நாங்கள் எல்லாம் எதோ வாய்பொத்தி இந்த கொடுமைய பாரு என பச்சாதாப படுவது போலவும் இருக்கிறது உங்கள் கருத்து. மக்களை மதரீதியாக பிளவுபடுதிய அக்கால பிரிட்டிஷ்காரனின குயுக்க்தியை ஒத்திருக்கிறது உங்கள் கருத்து.மலம் அள்ளுவதை திணிக்கப்பட்ட அநியாயமாக பார்க்காமல் ஏதோ பிறப்போடு ஓட்டிவந்த இழிவு போல் ஏன் குறிப்பிட்ட சாதியை சொல்கிறாய் என்கிறீர்? அப்போ நீங்கள் தான் மோசமான சாதிய வாதி. தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் தெரிந்தே இவ்வாறு மக்களை குழப்ப முயல்கிறீர்கள் என்றால், ஒரு கெட்ட செய்தி – மக்கள் இப்போ முன்னை மாதிரி எல்லாம் இல்ல, குயுக்திகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள பழகியிருக்கிறார்கள். வேறு வழியில் முயற்சிக்கவும்.

  \\ பொதுபுத்தியில் சிந்திப்பதை நிறுத்துங்கள் சகோதர சகோதரிகளே!\\
  எப்படி? அவனவன் சேர்ந்து நிற்பதை விடுத்து இப்படியான முட்டையில் மயிர்புடுங்கி விசயங்களுக்காக சாதியை கட்டிபிடித்துகொன்டு பிரிந்து போக சொல்கிறீரோ?

 6. கக்கூஸ் பட இயக்குனர் திவ்யபாரதிக்கு சில பகிரங்கக் கேள்விகள்:

  1. இந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் யார்? அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் திவ்யா?

  2.இந்தப் படத்தை, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பார்த்தால் என்ன சங்கடப்படுவார்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?

  3.இந்தப் படத்திற்கு கக்கூஸ் என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டது? யாருக்கு அதிர்ச்சி தர விரும்புகிறீர்கள்?

  4.கையால் மலம் அள்ளுவது இழிவு என்றால், அதை ஆவணப்படுத்தி காலாகாலத்திற்கும் சேமித்து வைப்பது களவாணித்தனம் இல்லையா?

  5.கையால் மலம் அள்ளுவது சுயமரியாதைக்கான இழுக்கு என்றால், இவர்களெல்லாம் கையால் மலம் அள்ளுகிறவர்கள் என்று அடையாளம் காட்டுவது சுயமரியாதைக்கான இழுக்கு இல்லையா?

  6.பேண்டதை சரிவர பேணத்தெரியாத மற்றவர்களின் சுயமரியாதையை உங்கள் படம் எங்காவது சீண்டியிருக்கிறதா?

  7.மலம் அள்ளுகிறதும், அள்ள வைக்கிறதும் காமிரா மாதிரியான இயந்திரக் கண்களுக்குப் புலப்படாதவை என்ற கலையுணர்வு ஏன் உங்களுக்கெல்லாம் இல்லாமல் போகிறது?

  8.இன்றைக்கு ‘என்னை மலம் அள்ளுகிறவன் என்று சொல்லாதே!’ என பள்ளர்கள் சொல்வதை சுயமரியாதைக்கான குரலாக ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை?

  9.இந்தப் படத்தின் மூலம் நீங்கள் அடைந்த புகழில் பீ நாறுகிறதா?

  10.இந்தப் படம் எடுத்த பின்பு உங்கள் தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றத்தில் ஒரு மயிரளவு கூட அந்த மக்களுக்கு நடக்கவில்லையே, அது அநியாயமில்லையா?

  • பாஸ்கரன் … திவ்யாவிற்கு நீங்கள் கேள்வி எழுப்பினாலும், என் புரிதலில் சில பதில்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
   ////1. இந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் யார்? அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் திவ்யா? ///

   கண் உள்ள அனைவரும் தான் பார்வையாளர்கள். இந்த சாதியினர் தான் பார்க்கவேண்டுமெனில் யூ-டியூபில் போட வேண்டிய அவசியம் இல்லையே. இன்னமும் மனிதமலத்தை மனிதனே அள்ளும் அவலம் இந்த நாட்டில் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் ஆண்ட சாதிப் பெருமையும், வல்லரசுப் பெருமையும் பேசிக் கொண்டிருப்பவர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்பது தான் அப்படம் சொல்ல வரும் செய்து.

   ////2.இந்தப் படத்தை, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பார்த்தால் என்ன சங்கடப்படுவார்கள் என்பதை உங்களால் உணர முடியுமா? ///

   என் சமூகத்தை மலமள்ளுபவர்களாகக் காட்டுகிறாயா என்ற உங்களின் இழிகேள்விக்கு சங்கடப்படும் அளவிற்கு அவர்கள் மலமள்ளும் போது கூட சங்கடப் படமாட்டார்கள் ..

   //// 3.இந்தப் படத்திற்கு கக்கூஸ் என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டது? யாருக்கு அதிர்ச்சி தர விரும்புகிறீர்கள்? ///

   மலமள்ளுபவர்களை இழிவாகக் கருதும் உங்களைப் போன்ற கருங்காலிகளுக்கு

   /// 4.கையால் மலம் அள்ளுவது இழிவு என்றால், அதை ஆவணப்படுத்தி காலாகாலத்திற்கும் சேமித்து வைப்பது களவாணித்தனம் இல்லையா? ////

   அப்போ.. சாதியத் தீண்டாமை குறித்து புத்தகம் புத்தகமாக எழுதிக் குவித்த அம்பேத்கரும் களவாணி தானா ? கிருஸ்ணசாமி மட்டும் தான் ஒலகத்துலேயே பெரிய போராளி ..

   /// 5.கையால் மலம் அள்ளுவது சுயமரியாதைக்கான இழுக்கு என்றால், இவர்களெல்லாம் கையால் மலம் அள்ளுகிறவர்கள் என்று அடையாளம் காட்டுவது சுயமரியாதைக்கான இழுக்கு இல்லையா? ///

   எந்த நோக்கத்திற்காக அதனைச் சொல்கிறார்கள் என்பது தான் விசயம். உங்களைப் போன்று பெரும்பான்மையாக மலம் அள்ளும் தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்படும் சமூகத்தினரை தன் சமூகத்தோடு எப்படி ஒப்பிடலாம் என்ற கேள்வியைக் கேட்பது தான் அவர்களின் சுயமரியாதைக்கான இழுக்கு.

   //// 6.பேண்டதை சரிவர பேணத்தெரியாத மற்றவர்களின் சுயமரியாதையை உங்கள் படம் எங்காவது சீண்டியிருக்கிறதா? ///

   பேண்டதைப் பேணுவதா ? .. 10 கேள்வி ரவுண்டாக வருவதற்காக ஏஎதாவது கேட்கவேண்டும் எனக் கேட்கிறீர்களா ?

   /// 7.மலம் அள்ளுகிறதும், அள்ள வைக்கிறதும் காமிரா மாதிரியான இயந்திரக் கண்களுக்குப் புலப்படாதவை என்ற கலையுணர்வு ஏன் உங்களுக்கெல்லாம் இல்லாமல் போகிறது? ///

   சமூக உணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா , இல்லை நடிக்கிறீர்களா ?

   /// 8.இன்றைக்கு ‘என்னை மலம் அள்ளுகிறவன் என்று சொல்லாதே!’ என பள்ளர்கள் சொல்வதை சுயமரியாதைக்கான குரலாக ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை? ///

   ”மலம் அள்ளுகிறவனை இழிவாகப் பார்க்காதே, மனித மலத்தை மனிதனே செய்யும் அவலத்தைப் போக்க வேண்டும்” என்றும் அந்த ஆவணப்படம் சொல்லுகிறது. பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்தத் தொழிலில் இருத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அது சொல்கிறது. ‘‘மலம் அள்ளுகிறவனை இழிவாகப் பார்க்காதே என்று சொல்வதற்கும் , என்னை மலம் அள்ளுபவன் என்று சொல்லாதே என்று சொல்லுவதற்கும் உள்ள வித்தியாசத்தை, பார்ப்பனிய மலத்தை மூளையாகக் கொண்டிருக்கும் பாஸ்கர்களால் புரிந்து கொள்ள இயலாது.

   ////9.இந்தப் படத்தின் மூலம் நீங்கள் அடைந்த புகழில் பீ நாறுகிறதா? ///

   ஆம், அவருக்கு கிடைத்த புகழில், கிருஸ்ணசாமியின் உளப் பீ நாறுகிறது… அது வெளிப்படுகிறது.

   //// 10.இந்தப் படம் எடுத்த பின்பு உங்கள் தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றத்தில் ஒரு மயிரளவு கூட அந்த மக்களுக்கு நடக்கவில்லையே, அது அநியாயமில்லையா? /////

   உங்களைப் போன்ற கோடாரிக்காம்புகள் இருக்கும் போது அம்மக்களுக்கு எந்த மாற்றம் எப்படி ஏற்படும். பாஜகவின் காலை நக்கும் பு.த. கும்பல் இருக்கும் வரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு விடுதலை என்பது வெகு தூரத்தில் தான்

 7. ராஜன் // fc,bc,mbc யில் உள்ள சாதியினரும் வறுமையினால், இத்தொழிலைச் செய்கின்றனர்.

  உங்கள் வினா, fc,bc,mbc மக்களும் இதைச் செய்வதாக உங்கள் மனம் ஒப்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

  இதுதான் உண்மை. இப்படியான படங்கள், இது மாதிரியான பிம்பத்தைத்தான் பொதுபுத்தியில் உருவாக்குகிறது.

  என்னமோ!இத்தொழிலை பட்டியல் சாதியினர் மட்டும்தான் செய்வதாக நினைக்கும் தொனி தெரிகிறது?

  கடந்த ஆண்டு மலமள்ளும் தொழிலின் போது உயிரிழந்த தொழிலாளிகளிறன் சாதியைத் தேடிப்பாருங்கள். அதில் bc,mbc,sc என அனைவரும்இருப்பர்.

  எத்தனை நாள்தான் இழிவுகளை பட்டியல் சாதியினர் மீதே திணித்துக் கொண்டு, சூத்திர இடைநிலைச் சாதிகளின் மனதில் உயர் சாதி மனப்பான்மையை உருவாக்கம் செய்து கொண்டே இருப்பது உத்தேசம்?

  அதெப்படி, நியாயமான வினா கேட்பவர்களை காவி, rss, bjp னு முத்திரை குத்துறீங்க?

  சகோதரி திவ்யா பாரதி தன்னுடைய சாதியை இதில் ஏன் மலமள்ளுபவர்களாக ஆவணப்படுத்த முயலவில்லை என்ற ஒத்த கேள்விக்கு பதில் சொல்லாம, காவி ,rss, bjp னு பட்டம் கட்டுவதெல்லாம் கோழைத்தனம்.

 8. சின்னா // இத்தொழிலை திணிக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்காமல், பிறப்போடு ஒன்றாக ஒட்டிவருவதாக, நான் கூறவது போல் தவறாகக் குறிப்பிடுகிறீர்கள்?

  உண்மையில் இப்படம்தான், பிறப்பின் அடிப்படையில் பட்டியல் சாதியினர் மட்டுமே இதைச் செய்வதாகக் கட்டமைத்துள்ளது.

  உண்மையில் சாதி வெறியர் யார் என்பதை உலகிற்கு உரக்கக் கூறியதுற்கு நன்றி.

 9. ராஜன் ///சரி. உங்கள் பிரச்சினை என்ன? மலம் அள்ளுவது இழிவானது;அந்த இழிவை என் சாதிக்காரன் எவனும் செய்வது கிடையாது என்பது தானே? இதன் பொருள் என்ன? சாதிய அடுக்கில் நானிருப்பது சற்று மேல்மட்டத்தில் அவ்வளவு கீழாக இல்லை என்பது தானே?சாதிய அடுக்குமுறை காலம்காலமாக இப்படி சரியாமல் காப்பாற்றப்பட்டு வருவது இந்த மன நிலையால் தான். குருமூர்த்தியால் ஞானஸ்தானம் பெற்று விட்டிர்கள் என்றால் வேறெப்படி சிந்திக்க முடியும்?//

  மலமள்ளும் தொழில் இழிவானவொன்றாகத்தான் பொதுச்சமூகம் நினைக்கிறது.

  மேலும், அத்தொழிலைச் செய்பவர்களை அதிலிருந்து மீட்டு, வேறு தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதுதான், சமூக இயக்கங்களின் குரலாக ஒலித்துக் கொண்டுள்ளது.

  பள்ளமான நிலத்தில் உழவு செய்பவர்கள் பள்ளர்கள் என்று பெயரிலேயே உழவுக்குடியாகவும், நடைமுறையில் வேளாண்மை செய்துவருபவர்களை என்ன நோக்கிற்காக மலமள்ளும் தொழிலோடு தொடர்புபடுத்த வேண்டும்?

  இத்தகைய செயல், ஒரு சமூகத்தின் மீதான கலாச்சாரத் தாக்குதல் இல்லையா?

  இது எப்படி இருக்கு தெரியுமா! ஏதோ ஒரிரு இசுலாமிய தீவிரவாதகளை வைத்து, தீவிரவாதிகள் என்றாலே அது இசுலாமியர்கள்தான் எனப்பரப்பிய காவி இந்துத்வ ஊடகங்களின் கயமைத்தனத்தை ஒப்ப இருக்கிறது.

  பள்ளர்கள் இத்தொழிலைச் செய்வதில்லை எனக்கூறுவது நடைமுறை எதார்த்தத்தின் அடிப்படையிலேயே தவிர, வேறு நோக்கமில்லை.

  சாதி இருப்பு உள்ள சமூகத்தில், ஒரு படம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதாக அம்மக்கள் சுட்டிக்காட்டினால், அதற்கான விளக்கமும், அந்தக்காட்சியை நீக்குவதும்தான் படைப்பாளருக்கு அழகே தவிர, கேள்வி எழுப்புகிறவர்களை bjp,rss, குருமூர்த்தி எனக் குற்றம் சுமத்தி, அம்மக்களை தனிமைப்படுத்துவது தவறு.

  • சிறு ஒட்டுக் கட்சியொன்றை நடத்துவதில் உள்ள சிரமத்தை கிருஷ்ணசாமி பல சமயங்களில் புலம்பி தீர்த்திருக்கிறார்.அரசியல் அதிகாரத்தை சுவைப்பதில் எதையெல்லாம் இழக்க வேண்டிவரும் என்பதை நன்றாக தெரிந்தவர்.ஒரு கட்சியை நடத்துவது நம்பி வந்த கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வது இதிலெல்லாம் ஒரு மனிதன் எவ்வளவு தான் தன்மானங்கெட்டு கீழிறங்க முடியும் என்பதையும் நன்கறிந்தவர் அவர்.கட்டப்பஞ்சாயத்துக்களில் கல்லா கட்டும் நிலை, மாநிலங்களவைத் தேர்தலில் திடிரென கனிமொழிக்கு ஆதரவு கொடுத்து பெற வேண்டியதை பெறத் துணிவது இப்படியே அவர் காலம் கழிந்து கொண்டிருந்த வேளையில் தான் அமித்ஷா போட்டுக் கொடுத்த மாஸ்டர் பிளானில் குருமூர்த்தியால் ஞானஸ்தானம் செய்விக்கப்பட்டிருக்கிறார்.இட ஒதுக்கீடு வேண்டாம் என்பது, நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக கவுன்சிலிங் நடத்த கோரி போராடுவது என அண்ணன் போகும் பாதை தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடும் பாதை என்றாலும் அவரது முனைப்பும் பாஸ்கரன்ஜி போன்றவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் சிலிர்க்க வைக்கிறது.

 10. அது சரி பாஸ்கரன்,

  ஒரு சின்ன டவுட்டு .. அந்த ஆவணப்படம் வெளிவந்தது பிப்ரவரில .. உங்களுக்கு ஜூலை கடைசி வாரத்துல தான் மண்டையில் உறைச்சதா ?. இல்லாட்டி ஜூலை கடசி வாரம் தான் உங்களுக்கு ஆவணப்படம் கையில் கெடச்சதா ?.

  பொதுப்புத்தியில் சிந்திக்கிறது கெடக்கட்டும் வெங்காயம் .. உங்களோட சோ கால்டு ‘முற்போக்கு’ புத்திக்கு இவ்வளவு லேட்டா தான் பிக் அப் எடுக்குமா சார் ?.

  அதுவும், திண்டுக்கல் அண்ணா பல்கலையின் சித்திரை செல்வி பத்தி வீடியோ வந்த்தும் தான் உங்களுக்கு புத்தி வருதுன்னா .. இது புதிய தமிழகம் கிட்டு சாமியோட டீலிங்கில் வந்த எஃபக்ட் மாதிரி தானே தெரியுது.

  மக்களுக்கு பொதுப்புத்தி பத்தி கிளாஸ் எடுக்காம , உங்க வர்க்கப் புத்திய கொஞ்சம் சொரண்டிப் பாருங்க சார்.. //

  ஐயா வெங்காயமே, நாம் இப்பிரச்சனையை படம் எடுக்கும் முன்னரே இவரிடவலியுருத்தினோம்.

  தயவு செய்து இத்தொழிலை சாதியரீதியாக அடஅடையாளப்படுத்த வேண்டாம்னு சொன்னோம். தவிர, உங்க சாதியையும் ஆவணப்படுத்தும்படிக் கூறியதற்கு, இவரின் சாதியினர் அதைக்கடுமையாக எதிர்ப்பர் என்று கூறி ஓடியவர்தான் இவர்.

  இப்பிரச்சனையில் சித்திரைச்சசித்திரைச்செல்வியை கோர்ப்பது ஏனோ?

  சித்திரைச்செல்வி தவறிழைத்திருப்பின் அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

  எனினும் இதில் வேறொரு கோணமாக, இந்த திவ்யா பாரதி ஏன் தவறிழைக்கும் பள்ளர்சாதியைச் சேர்ந்த சத்ரா தேவியைக் குறிவைக்கிறார்?

  இவர் வாழக்கூடிய மதுரை மாநகரில் உள்ள எத்தனையோ கல்லூரிகள் ஒப்பந்தத்தொழிலாளர்களை கொடுமைப்படுத்துவது இவர் அறியாததா?

  எங்கள் எதிர்ப்பு 2016 இல் இருந்தே செய்துவருகிறோம். இதைச் சித்திரைச் செல்வி விவகாரத்துடன் முடிச்சிடுவதும், கட்சியுடன் முடிச்சிடுவதும் கண்டிப்பாக பள்ளர் சமூகத்தவரின் மீதான வினவின் நிலைப்பாடே காரணமாகும்.

  பள்ளர்களின் மீது வெறுப்பை உமிழ்வதற்கு கம்யூனிச ஆவணப்படமும் ஒரு கருவி என்பதனை மக்களுக்கு உணர்த்தியமைக்கு நன்றிகள் பல.

  • ////
   ஐயா வெங்காயமே, நாம் இப்பிரச்சனையை படம் எடுக்கும் முன்னரே இவரிடவலியுருத்தினோம்.
   ////

   அடடே, ஈரவெங்காயங்களுக்குப் பொய் மூளை முழுக்க ஊறிக் கிடக்கும் போலத் தெரிகிறது. திவ்யாபாரதி படம் எடுக்கும் போது துரைமார்கள் சொன்னார்களாம் ..

   அப்போ திவ்யா பாரதிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது, அசிங்கமாக பேசியது, அவருக்கு கொலை மிரட்டல் விட்டது எல்லாம், ஃபிப்ரவரியில இருந்து செஞ்சிருக்க வேண்டியது தானே.
   கடந்த 3 மாசமா டில்லியில் மோடிக்கு ம*ர் பிடுங்கி விடச் சென்றீரோ ? .

   சிதராதேவி பிரச்சினை வருவதற்கு முன் வரை பள்ளர் இன மக்களின் துன்ப துயரங்கள் பாஸ்கரன்களின் கண்ணுக்கு வந்து செல்லவில்லை போலும்.

   அதோடு திவ்யாபாரதியின் வீடியோவில் சிதராசெல்வி என்ற கிரிமினலின் சாதிப் பெயரை குறிப்பிடவில்லை.
   பு.த. கிட்டுன சாமி கொதித்தெழுந்த பின்னர் தானே புரிய வந்தது பற்ற வைத்த பரட்டை சித்ராசெல்வி தான் என்பது.

   பல கல்லூரிகள் ஒப்பந்தத் தொழிலாளிகளை துன்புறுத்துகிறார்கள். ஆனால் வீட்டில் கால் அமுக்கி விடவும், புருசனின் பாலியல் அரிப்புகளுக்கு பணி புரிபவர்களை அனுப்பி வைக்கவும் செய்வது சித்ரா செல்வி மட்டும் தான். அந்த இழிபிறவியை அம்பலப்படுத்தியதில் என்ன தவறு என்பதை அண்ணன் பாஸ்கரன் சொல்வாரா ?.

   உங்க பு.த. கட்சி க்கு அம்மணி சித்ரா செல்வி கொடுத்த கட்டிங் எவ்வளவுய் என்பதையும் இது போன்ற தளங்களில் வந்து குரைப்பதற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகள் எவ்வளவு என்பதையும் அன்னார் பாஸ்கரன் அவர்கள் நேர்மையாகச் சொல்வார் என நாம் நம்புவோமாக ..

   குறைந்த பட்சம் இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேர்ர்மையாக பதில் சொல்வார் என்றும் நம்புவோமாக .. ( மறுபடியும் வந்து “ என்ன கைய புடுச்சு இழுத்தியா “ ந்னு அண்ணன் கேட்கமாட்டார் என்றும் நம்புவோமாக)

 11. பாஸ்கரன் உங்கள் பத்து கேள்விகளில் பாதிக்கு மேல் ஒரே கேள்வியை பல வடிவங்களில் கேட்டிருக்கிறீர். அதாவது இப்படம் கையால் மலம் அள்ளும் அவலத்தை சொல்லும் நோக்கில் உங்கள் சாதியை மட்டும் குறிவைத்து அவமான படுத்துவதாக சொல்கிறீர். அதோடு நான் கூறியதை திரிக்கிறீர்.

  //இத்தொழிலை திணிக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்காமல், பிறப்போடு ஒன்றாக ஒட்டிவருவதாக, நான் கூறவது போல் தவறாகக் குறிப்பிடுகிறீர்கள்?//

  நான் தவறாக கூறவில்லை சரியாகத்தான் கூறியுள்ளேன். திணிக்கப்பட்டதை உணருங்கள் வெகுண்டு எழ வேண்டுமென்கிறேன். நீரோ இல்லை ஏன் என்னை மட்டும் மலம் அள்ளுவதாக சொல்கிறாய் என்கிறீர். நான் உமக்கு எவ்வாறு அநியாயமாக ஒரு புண் தரப்பட்டிருப்பதையும் அதற்கு மருந்து கட்டியே ஆக வேண்டுமென்றும் சொல்கிறேன், நீரோ எனக்கு புண் வந்ததை ஏன் வெளியில் சொல்கிறாய் உனக்கு புண் இல்லையா என்று கேட்கிறீர். என்ன சிறுபிள்ளைத்தனம்.

  \\இன்றைக்கு ‘என்னை மலம் அள்ளுகிறவன் என்று சொல்லாதே!’ என பள்ளர்கள் சொல்வதை சுயமரியாதைக்கான குரலாக ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை?\\

  மீண்டும் , கருத்து திரிப்பு. அப்போ பள்ளர் மலம் அள்ளுபவர்தன், அனால் வெளியில் சொல்லாதே, அம்பலப்படுத்தி அவமான படுத்தாதே என்னும் சுய பச்சதபமாக மாட்ட்ருகிரீர். இது ஆதிக்க சாதிவெறியை ஆபத்தானது. புண்ணை திறந்தால் தால் கழுவி மருந்து கட்டமுடியும் (மீண்டும் இது நயவஞ்சகமாக தரப்பட்ட புண்)

 12. சின்னா// தவறாக கூறவில்லை சரியாகத்தான் கூறியுள்ளேன். திணிக்கப்பட்டதை உணருங்கள் வெகுண்டு எழ வேண்டுமென்கிறேன். நீரோ இல்லை ஏன் என்னை மட்டும் மலம் அள்ளுவதாக சொல்கிறாய் என்கிறீர். நான் உமக்கு எவ்வாறு அநியாயமாக ஒரு புண் தரப்பட்டிருப்பதையும் அதற்கு மருந்து கட்டியே ஆக வேண்டுமென்றும் சொல்கிறேன், நீரோ எனக்கு புண் வந்ததை ஏன் வெளியில் சொல்கிறாய் உனக்கு புண் இல்லையா என்று கேட்கிறீர். என்ன சிறுபிள்ளைத்தனம்.//

  ஏன் திவ்யாபாரதி தன்னுடைய சாதியில் மலமள்ளுபவர்களைக் காண்பிக்கவில்லை என்ற கேள்விக்கு எதுக்கு சுத்தி வளைச்சு பேசணும்? நேரடியான பதில் சொல்லுங்க. புண்ணு புண்ணாக்கப் பத்தி பிறகு விவாதிக்கலாம்.

  மேலேயுள்ள கேள்விக்கு பதிலளித்துவிட்டு, பிறகு மற்றதைப் பேசலாம்.

  பின்வருவன பொதுப்பார்வையாளருக்கான வினா.

  இத் தொழிலில் பட்டியல் சாதியினரை காண்பித்திருப்பதன் மூலம் சமூகத்திற்கு எதைச் சொல்ல வருகிறார் இந்தப் பெண்?

  தாம் சாதியால் எவ்விதத்திலும் உயர்ந்தவர் இல்லை. அதேபோல், எவருக்கும் தாழ்ந்தவரில்லை என்ற எண்ணம் பட்டியல் சாதியினருக்கு நன்கு தெரியும்.

  ஆனால், தாம் பட்டியல் சாதியினரை விட உயர்ந்தவன் என்ற சூத்திர சாதிகளின் மனநிலையை உடைக்கவும், அவர்களுடைய போலியான இம்மாதிரியான உயர்வு மனப்பிம்பத்தை உடைக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

  ஆவணப்படத்தில் இத்தொழிலில் ஈடுபடும் கள்ளர், மறவர், நாயுடு, பிள்ளை, ரெட்டி etc etc போன்ற சூத்திர சாதிகளைக் காட்டியிருந்தால், இவ்வாவணப்படம் சூத்திர சாதிகளின் உயர்நிலை மனப்பான்மையைச் சிதைத்திருக்கும் என்று கூறுகிறேன்.

  எத்தனைநாள்கள்தான் இழிவைப் பட்டியல் சாதியினர் மீது திணித்து, சூத்திர சாதிகளை உயர்சாதி மனப்பான்மையில் வைத்திருக்க உத்தேசம்?

  • 1. பள்ளர்கள் அனைவரும் மலமள்ளும் தொழிலைத் தான் செய்கிறார்கள் என்று அந்த ஆவணப்படத்தில் கூறியிருக்கிறதா ?.

   2. பள்ளர்கள் ஒருவர் கூட மலமள்ளும் தொழிலைச் செய்யவில்லையா ?

   3. பள்ளர் சமூகத்தினரும் மலம் அள்ளும் தொழிலில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தைச் சொன்னால் உங்களுக்கு ஏன் யதார்த்தத்தைச் சொன்னவர்கள் மேல் கோபம் வருகிறது ? உண்மையில் அத்தொழிலில் பள்ளர்கள் சமூகத்தினரை அத்தொழிலில் இருத்தி வைத்திருப்பவர்களை அல்லவா கண்டுபிடித்து அவர்கள் மேல் கோபம் கொள்ள வேண்டும் ?

   4. சமூகத்தில் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ன சாதி இன்ன தொழிலைச் செய்ய வேண்டும், இவன் இவனுக்குக் கிழே என்று வர்ணாசிரம தர்மத்தைப் படைத்த பார்ப்பனீயத்தை எதிர்க்காமல், அந்தப் பார்ப்பனீயம் உருவாக்கிய வேதங்களின் கூற்றுப்படியே பெண் பித்தனான தேவேந்திரனைப் (இந்திரன்) பெருமைனவனாகக் கருதி தேவேந்திர குலம் என்று கூறிக் கொள்வதில் அப்படி என்ன பெருமை ? சாதிய படிநிலையை ஏற்படுத்தியவனை எதிர்க்காமல், அவனோடு கூட்டு சேர்ந்து கொண்டு(பாஜக) அந்த படிநிலையினால் இன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை எதிர்ப்பதற்கு வெட்கமாக இல்லையா ?

 13. தேவேந்திரகுல வேளாளர்கள் இந்த எஸ் .சி பட்டியலை விட்டு வெளியேற நினைக்கின்றார்கள் .. கக்கூஸ் திவ்யா திட்டமிட்டுத்தான் இந்த அவதூறை பரப்புகிறார் .. ************

  • பள்ளர், குடும்பர் சாதியைச் சேர்ந்தவர்களை, எஸ்.சி. பட்டியலில் திட்டமிட்டு தான் அம்பேத்கர் சேர்த்தாரா ? விட்டால், அப்படிச் சொன்னாலும் சொல்லுவீர்கள் சிவகுமார். அன்றைய சமூக சூழலில் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் எந்தெந்த சமூகத்தினர் ஒடுக்கப்பட்டனரோ, அவர்கள் வாழ்நிலை மேலே வர வேண்டும் என்று தான் எஸ்.சி.,எஸ். டி. போன்ற இடஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட்டன.

   இன்று நீங்கள் முன்னேறியிருக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். நன்று … தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பள்ளர், குடும்பர் சாதி மக்களை ஒன்றிணையுங்கள், போராட்டம் நடத்துங்கள் (இட ஒதுக்கீடு வேண்டாம் என போராட்டம் நடத்துங்கள்). முதலில் அதற்கு ஒரு அறைகூவல் விடுங்கள், எத்தனை பேர் உங்கள் பின்னால் வருகிறார்கள் என்று பார்ப்போம். வர வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம். எத்தனை பேர் வருகிறார்கள் என்பது தான் யதார்த்தம்.

   அப்படி யதார்த்தத்தில் நிரூபித்தால் மட்டுமே சட்டரீதியாக மாற்ற முடியும் (வெறும் முகநூலில் மட்டும் பொங்கினால், நீதிபதிக்கோ,சம்பந்தப்பட்ட அரசியல சாசன அமர்வுக்கோ தெரியாது). அந்த வேலையைச் செய்யுங்கள். அதை விட்டு விட்டு, உங்களது விருப்பத்தில் இருக்கும் ஓட்டைகள், யதார்த்தமாக ஒரு ஆவணப்படத்தில் அம்பலமானதற்காகக் கொதித்தெழுதல் எப்படி நியாயம்.

   முகநூலிலும், சமூக வலைத்தளங்களிலும் மட்டும் உங்கள் புரட்சியையும், சவடாலையும் நிகழ்த்தாமல், கொஞ்சம் வீதியில் இறங்கி உங்கள் சமூகத்தினரையும் அணி திரட்டி போராடி வென்றடையுங்கள் .. வாழ்த்துக்கள் ..

   விரைவில் சிவக்குமாரை இத்தகையதொரு வீதிப் போராட்டத்தில் முன்னணியாளராக தொலைக்காட்சிப் பெட்டியில் பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு .. விடை பெறுகிறேன்.

 14. அனானியன் // அடடே, ஈரவெங்காயங்களுக்குப் பொய் மூளை முழுக்க ஊறிக் கிடக்கும் போலத் தெரிகிறது. திவ்யாபாரதி படம் எடுக்கும் போது துரைமார்கள் சொன்னார்களாம் .. //

  சொன்னமா இல்லையானு திவ்யாபாரதியிடமே கேள். தன்னுடைய சாதியைப் பதிந்தால், கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறி ஓடியது யாரென விசாரிக்கவும்.

  முதலில் நான் புதியதமிழகக் கட்சிக்காரனென நினைத்துப் கேள்வியெழுப்புவதை நிறுத்தவும்.

  இப்படம் வெளியானதில் இருந்தே, இதற்கான எதிர்ப்பை முகநூலில் திவ்யாபாரதியிடமே பதிந்து வருகிறோம். ஆனால், அவர் பதிலளிக்காமல் ஓடி ஒளிகிறார்.

  இவ்விவகாரம் தற்போது பிரபலமானதன் காரணம், இவர் கைதின் போது, கிருஷ்ணசாமியிடம் இவரைப் பற்றிக் கேட்டபின்புதான். அதற்கு கிருஷ்ணசாமியும் இவர் பெயர்மட்டுமே தெரியும். கக்கூஸ் படத்திற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர், தாமே இவர் மீது வழக்கு தொடுக்க இருந்ததாகக் கூறியிருப்பதைக் கவனிக்கவும்.

  சித்திரா செல்விக்காகத்தான் கக்கூஸ் பாரதியை கேள்விக்குள்ளாக்குவதாக நீங்கள் சொறிந்து கொண்டால் சொறிந்து கொள்ளவும்.

  எல்லாக் கல்லூரிகளிலும் ஒப்பந்தத் தொழிலில் முறைகேடு மட்டும் நடக்குதாம்! சித்திரா தேவிக் கல்லூரியில் மட்டுந்தான் கால் அமுக்கிவிடச் சொல்றாங்களாம்! அடக் கொடுமையே! ஏனைய கல்லூரிகளில் நடப்பது எதுவுமே ஈரவெங்காயத்துக்கு தெரியல போலையே?

  மலமள்ளும் தொழிலில் காண்டிராக்டர்கள் செய்யக்கூடிய ஒரு ஊழலைக் காட்ட முடியவில்லை! சூத்திர இடைநிலைச் சாதியில் உள்ள ஒரு காண்டிராக்டரின் ஊழலைப் பெயரோடு ஆவணப்படுத்தத் துப்பில்லை! இதற்குப் பெயர் ஆவணப்படமாம்! புர்சியாம்! ஹா ஹா

  • பாஸ்கரன்,

   திவ்யா கக்கூஸ் ஆவணப்படம் வெளியிடுவடுதற்கு முன் அதற்கு டீசர் எதாவது வெளியிட்டாரா ?. படம் வெளி வருவதற்கு முன்னரே அவர் பள்ளர் சமூகத்தினரையும், மலம் அள்ளுபவராகக் காட்டினார் என்பது உங்களுக்கு எப்போது தெரியும் ? ஒரு வேளை பள்ளர் சமூகத்தினரை நேரடி பேட்டி எடுக்கும் முன்னர் பள்ளர் சமூகத்தின் ஒரே பிரதிநிதியான பாஸ்கரன் அவர்களிடம் பெர்மிசன் கேட்க வந்தாரா ?. அப்போது தான் பாஸ்கரன், உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரைப் பற்றி எடுங்கள் என்று அவரிடம் சொன்னாரோ ?.

   சரி.. பொய்யை எத்தனை முறை ஜாக்கி வைத்து தூக்கினாலும் சில சமயங்களில் அது பல்லக்கில் ஏறாது.

   சித்திராசெல்வி விவகாரத்திற்காகத் தான் திவ்யபாரதியை குறி வைக்கிறீர்கள் என்பது தான் இங்கு பேசவேண்டிய விவகாரமே ..

   சித்ரா செல்வி என்ற கிரிமினலின் எச்சில் காசிற்கு எவ்வள்வு கூவ முடியுமோ கூவுங்கள் ..

   பள்ளர் சமூகத்தினர் மலமள்ளும் தொழிலைச் செய்கிறார்களா இல்லையா என்பதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையும் உங்களைப் போன்ற காசுக்குக் கூவும் கும்பலோடு எப்படி விவாதிக்க முடியும்?

   சித்ராசெல்வியின் அயோக்கியத்தனங்கள் வீடியோவாக ரிலீசான பிறகு மட்டுமே கக்கூஸ் ஆவணப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட மர்மத்தை முடிச்சவிழ்த்து விட்டு பள்ளர் சமூகத்தினரின் பிரதிநிதியாய் பேச முன்வாருங்கள் …

   சுருக்கமாகச் சொன்னால்,

   புதிய தமிழகம் கிருஸ்ணசாமி என்ற கிரிமினலின் பாஜக சார்பான மக்கள் விரோதக் கருத்துக்களுக்காக (நீட்டுக்கு ஆதரவு, மாட்டுக்கறி தடைக்கு ஆதரவு, வந்தே மாதரம் ஆதரவு, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவு)வருத்தமோ வெட்கமோ படாமல், மனித மலத்தை மனிதனே அள்ளும் மோசமான நிலையை (இத்தொழிலில் பறையர், அருந்ததியர், பள்ளர் இன மக்கள் இன்றளவும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர், இன்னும் சில பகுதிகளில் நாயுடு சாதியினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்) ஆவணப்படமாக்கிய திவ்யபாரதியின் முகநூலிலும், அலைபேசியிலும் சித்ராதேவியின் எச்சில் காசிற்காக ஆபாசத் தாக்குதல் நடத்தியதற்காக வருத்தம் தெரிவிக்காமல், உங்களுக்கு பறையர் இன மக்களின் சார்பாகப் பேச எந்த அருகதையும் கிடையாது.

 15. பாஸ்கரன் சார் உங்களை காவிக்கும்பலோடு ஒப்பீட்டால் கோபம் கொள்கிறீர்கள்.தவறில்லை செயலிலும் வேண்டுமல்லவா அது ?அருள்கூர்ந்து நீங்கள் வழங்கியிருக்கும் மறுப்புரைகள் அனைத்தையும் ஒய்ன்ரு விடாமல் தொகுத்து நீங்களே படித்துப்பாருங்கள்.எத்துனை முரண்பாடுகள்?காவிகளின் பிறப்புரிமையான அந்த்த்தகுதியை நீங்கள் வரீத்துக்கொள்ள வீரும்புகீறீர்காளா?கருவறை முதல் கக்கூஸ் வரை எல்லா சாதீக்காரர்களும் செய்ய வேண்டும் என்பதே நம் அவா.இதை நீங்கள் உணராமல் அவாள் போல் சீந்தித்தால் சாதியொழியீக்க எப்படி இயலும்.இறுதிதியாக ஒன்று.ஜமுக்காளம் விரித்து அதன்மேல் சம்மணமிட்டு அமர்ந்து தொடை தட்டி பாட்டு பாடுவதால் புஸ்பவனம் குப்புசாமி அவர்களை திருவையாறு உன்ற்சவத்தில் யாரும் உள்ளே விட்டு விடப்போவதில்லை.தொடர்ந்து பரிசீலியுங்கள்
  ஒன்னுபடுவோம் காவிகள் போற்றும் சாதியம் ஒழிப்போம்.

  • நண்பர் நெப்போலியன்,

   பாஸ்கரன் – புதிய தமிழகம் மற்றும் பாஜகவின் எடுபிடி. ”எங்கள் சமூகத்தை எப்படி மலமள்ளுபவர்களோடு ஒப்பிட முடியும்?” என்ற ஆண்டைகளின் பாசையைப் பேசுபவரிடம் போய், காவியை ஒழிப்போம் வாருங்கள் என்று கூறுகிறீர்களே ?
   மோடிக்கு மாமா வேலை பார்த்த அமித்ஷாவை அழைத்து பொதுக்கூட்டம் நடத்திய வெட்கங்கெட்டவர்கள் அல்லவா இவர்கள் ?

 16. C. Nepolian // கருவறை முதல் கக்கூஸ் வரை எல்லாச் சாதியினரும் செய்து வருகின்றனர் என்பதே உண்மை.

  பூசாரி என்றால் அது பார்ப்பான் மட்டும் செய்வதாகவும், கழிப்பறைத் தொழிலை பட்டியல் சாதிக்காரன் மட்டும் செய்வதாக ஏன் பொய்யுரைக்க வேண்டும்.

  பார்ப்பான் மட்டும் பூசை செய்றானு, எவனும் கம்புசுத்தாத! பிள்ளை, பறையர்,பண்டாரம் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் பூசைத் தொழில் செய்கிறார்கள். சிறுகோவில், பெருகோவில்னு டாபிக் மாத்திட வேணாம்! இதப் பத்தி வேற பதிவுல பேசலாம்.

  கழிவகற்றும் பணியின் போது நான்கு மாதங்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் ஒரு சூத்திர பிள்ளை சாதியைச் சேர்ந்த இளைஞன் பலியானது தெரியாதா?

  கடலூரில் இதே பணியின் போது இறந்த மூவரில் ஒருவர் நாயுடு எனத் தெரியாதா?

  மறைமலைநகரில் துப்புறவுத்தொழிலில் நாயுடு சாதியினர் உள்ளனரே!

  தமிழகம் முழுமையும் சூத்திர இடைநிலை சாதியினரும் இப்பணியில் உள்ளபோது, இப்பணி ஏதோ பட்டியல் சாதிக்காரன் மட்டும் செய்வதாக இந்த சூத்திர திவ்யா பாரதி ஆவணப்படுத்திய நோக்கமென்ன?

  பட்டியல் சாதியினர் மட்டுமே இத்தொழில் ஈடுபடுவதாகப் பரப்புவது, பொதுபுத்தி சூத்திர இடைநிலைச் சாதி வெறியர்களின் மனதில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, ஒரு புர்சியாளனுக்கும் கேள்வி எழாதது வியப்பு!

  ஏற்கனவே, இந்தப் புர்சியாளர்கள் பரப்புன பரப்புல இட ஒதுக்கீட்டைப் பட்டியல் சாதிக்காரன் மட்டுந்தான் பயன்படுத்துவதாக, (இட ஒதுக்கீட்டை அதிகம் பயன்படுத்தும்) சூத்திர இடைநிலைச் சாதியினர் நினைத்துக் கொண்டு, பட்டியல்சாதிக்காரனை கேலி பேசுறது தெரியாதா இந்த வெங்காயப் புர்சியாளர்களுக்கு?

  கழிவகற்றும் தொழிலில் இந்த இந்தச் சாதிக்காரன் செய்றான். அதில் முகம்சுழிக்க வைக்கும் கஷ்டம் இருக்குனு சொல்றதுக்கு ஒரு ஆவணப்படம் வேண்டுமா? ஏன், எவனுக்குமே அது தெரியாதா என்ன? எல்லா சூத்திர சாதிக்காரய்ங்க பெரிய பில் கேட்சு பேரனுங்க! இவைங்கலாம் இத நேர்ல பாத்தே இருக்கமாட்டாய்ங்க!

  பட்டியல் சாதிக்காரன்தான் இத்தொழிலச் செய்றான். சூத்திர திவ்யா பாரதி சாதிக்காரன் அந்தத் தொழில் செய்யல. இதத்தான படம் சொல்ல வருது ? இத்தொழிலில் காண்டிராக்ட் எடுத்து ஊழல் செய்யும் சாதிக்காரன் பெரும்பாலானவர்கள், கக்கூஸ் திவ்யாபாரதியின் சாதிக்காரைங்கதான? அவைங்கல ஒருத்தன் பேரக்கூட படத்துல அடையாளப்படத்தல? ஆனா, அம்மணி பட்டியல் சாதிக்காரன் தப்பக் கண்டுபுடிக்க திண்டுக்கல் பறப்பாக! புர்சிடோய்! ?

  சொந்த சாதிக்காரன் செய்யும் தவற வெளியிடத்துப்பில்ல. இதுல புர்சி! புண்ணாக்கு!

  நல்லவேல அம்மணி, விபச்சாரத் தொழிலாளிகள ஆவணப்படம் எடுக்குறேனு கிளம்பல! கிளம்பி இருந்தா, அந்தத்தொழிலையும் பட்டியல் சாதியினர்தான் ஈடுபடுவதா ஆவணப்படுத்தி இருக்கும்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சா, இந்தப் புர்சிப்புண்ணியவான்கள் ஏன் பட்டியல் சாதியினர் இதில் இல்லவே இல்லைனு சொல்றியாம்பானுக! என்னமோ, சூத்திர இடைநிலைச் சாதியினர் இதில் இல்லாதமாதிரியே கம்பு சுத்துவாய்ங்க!

  இழிவைப் பட்டியல் சாதிக்காரய்ங்க மேல சுமத்தி, சூத்திர சாதிகள் தங்கள் மீதுள்ள இழிவை மறைத்து, உசந்த சாதி, ஆதிக்க சாதினு, சூத்திர இடைநிலைச் சாதிக்காரய்ங்க பீலாவுடுறதுதான உங்க வேலை?

  அடேய், புர்சி புண்ணாக்குகளா! திவ்யா, தன்னுடைய சாதியில் மலமள்ளும் நபர்களை ஏன் ஆவணப்படுத்தலனு கேட்டுச் சொல்லுங்கடா? இந்த ஒத்தக் கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப், பிறகு புர்சி! புடலங்கா! வெங்காயம்! Bjp, Rss னு புலம்பலாம்.

 17. அனான்யன் //
  திவ்யா கக்கூஸ் ஆவணப்படம் வெளியிடுவடுதற்கு முன் அதற்கு டீசர் எதாவது வெளியிட்டாரா ?. படம் வெளி வருவதற்கு முன்னரே அவர் பள்ளர் சமூகத்தினரையும், மலம் அள்ளுபவராகக் காட்டினார் என்பது உங்களுக்கு எப்போது தெரியும் ? ஒரு வேளை பள்ளர் சமூகத்தினரை நேரடி பேட்டி எடுக்கும் முன்னர் பள்ளர் சமூகத்தின் ஒரே பிரதிநிதியான பாஸ்கரன் அவர்களிடம் பெர்மிசன் கேட்க வந்தாரா ?. அப்போது தான் பாஸ்கரன், உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரைப் பற்றி எடுங்கள் என்று அவரிடம் சொன்னாரோ ?. //

  இதை நீங்கள் கக்கூஸ் திவ்யாவிடமே கேட்கலாம். இப்படத்தில் பட்டியல்சாதியினரை மட்டும்தான் அடையாளப்படுத்துவார்னு கணிச்சுதான், இவரிடம் என் அண்ணன் ஒருவர் இதைச் சாதி ரீதியாகப் பிம்பப்படுத்த வேணாம்னு 2016லேயே சொன்னார்.

  அப்படியே காட்டணும்னு நினச்சா, சூத்திர சாதிகளையும் ஆவணப்படுத்தவும், கக்கூஸ் திவ்யாவின் கள்ளர் சாதியைச் சேர்ந்த மலமள்ளும் தொழில் செய்பவர்களையும் ஆவணப்படுத்த சொன்னதுக்கு, நட்பை துண்டித்து பயந்து ஓடிவிட்டார். இதை அந்த**** திவ்யாவிடமே கேள்.

  தவிர மற்றொன்றையும் இதே வினவில் முன்கூட்டியே பதிகிறேன். இந்தச் ****** திவ்யா அடுத்த படமாக மாட்டிறைச்சி தடையைப்பத்தி எடுக்கும் படத்திலாவது, மாட்டிறைச்சி உண்பர்களாக இசுலமியரையும், பட்டியல் சாதிக்காரைங்களையும் மட்டும் ஆவணப்படுத்தாம, மாட்டுக்கறி திங்கும் சூத்திர இடைநிலைச் சாதிகளையும் பதிய சொல்லுங்க. 🙂

  பிறகு அதென்ன தாழ்த்தப்பட்ட என்ற சொல்? அட அறிவு! பட்டியல்சாதினு மொழிபெயர்ப்ப ஒழுங்கா செய்.

  1. குடும்பன் SC(35)
  2. மூப்பன் BC (65)
  3. காலாடி BC (35)
  4. காலாடி DNC (28)
  5. பண்ணாடி MBC (16)

  இப்படி பள்ளர்கள் BC, MBC, DNC என அனைத்துப்பிரிவிலும் உள்ளார்கள். இதைப்பற்றியாவது தெரியுமா? சும்மா, தலித், குலித், புலித்னு கூவ வேணாம்!

  சித்திரைச் செல்வி விவகாரத்தில், தவறிழைத்தவர்கள புடி. சுடு. கொல்லு. அதப்பத்தி எனக்குக் கவலையில்ல.

  ஆனா, கக்கூஸ் திவ்யா, படத்தில் கக்கூஸ் காண்ட்ராக்ட் ஊழல் செய்யும் தன்னுடைய கள்ளர் சாதியைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருத்தனக்கூட ஆவணப்படுத்தவில்லையே ஏன்? என்பதற்குப் பதிலென்ன?

  மறுபடியும் கேள்விக்கு பதில் சொல்லாம, அதே கிருஷ்ணசாமி, bjp, rss முத்திரைக்குத்தல்! ஹா ஹா. பதிலில்லையா?

  அட ஈரோட்டு வெங்காயமே!, இசுலாமியர தீவிரவாதிகளா காட்டின, “உனக்குள் ஒருவன்” கமல்ஹாசன் படத்தை இசுலாமியர்கள்ஏன் எதிர்த்தனர்?

  இசுலாமியரில் ஒரு தீவிரவாதிகூட இல்லையானு யாரவது உறுதி குடுக்க முடியுமா? அந்தத் தீவிரவாதிங்கள திருத்திபுட்டா, படத்தை எதிர்த்தனர்?

  சிறு எண்ணிக்கையிலான இசுலாமியத் தீவிரவாதிகளை ஊடகத்தின் வழியாகப் பொதுமைப்படுத்தினால், இசுலாமியர் என்றாலே தீவிரவாதிகள்தான் என்ற கண்ணோட்டம் மக்களின் மனதில்பொதுபிம்பமாக கட்டமைத்துவிடும் அபாயம் இருப்பதால்தான, அப்படத்தை இசுலாமியர்கள் எதிர்த்தனர்?

  அதேபோலத்தான், துப்புரவுப் பணி செய்யும் சிறு எண்ணிக்கையிலான பள்ளர்களைப் பொதுமைப்படுத்தி, பொதுமக்களின் மனதில், பள்ளர்கள் என்றாலே துப்புரவுப் பணியாளர்கள் என்ற இழிவைத் திட்டம் போட்டு திணிக்கவேணாம்னு சொல்வதில் என்ன தவறு?

  இல்ல, காட்டியேதான் ஆவேனு சொன்னா, கக்கூஸ் திவ்யா பாரதியின் கள்ளர் சாதியில் உள்ள துப்புரவுப் பணியாளர்களையும் ஆவணப்படுத்துனு சொல்றதுல என்ன தவறு?

  எந்தக் கேள்விக்கும் பதில் தரப்போவதில்ல. இப்படித்தான் கக்கூஸ் திவ்யா பாரதியும் பயந்து ஓடுது. நியாயமான வினாவிற்குப் பதிலளிக்காம, உணர்ச்சிவசத்தில் சிலர் பேசக்கூடிய வசவுச் சொற்களை எடுத்து, மூஞ்சிப்புத்தகத்தில போட்டு, பரபரப்பத்தூண்டுது இந்ந விளம்பரப் மோகம் கொண்ட சூத்திர திவ்யா!

  தில் இருந்தா, ஒரு பொதுவிவாத மேடையில் இதைப்பற்றிய விவாதத்தை அவர் சார்ந்த அமைப்பு நடத்தும்படி கூறிக்கொள்கிறேன்.

  மலமள்ளும் தொழில் இழிவில்லனு சொல்றவன், தன்னுடைய பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் அத்தொழில் செய்வதற்குப் பழக கிளாஸ் போங்க. செய்ங்க. யார் வேணானு சொன்னது?

  முடிவா சொல்லிக்கிறேன். இனிமேலும் பட்டியல் சாதிக்காரன் மேல இழிவை சுமத்தி, இந்துமதச் சொம்பு தூக்கிகளான இடைநிலைச் சூத்திர சாதிகள், புரட்சி புண்ணாக்குனு பேசி, பட்டியலில் உள்ள மக்களை உளவியல் ரீதியா தாழ்த்தவும், சூத்திர சாதிகளை உளவியலா உயர்த்திக்காட்டவும் கனவில கூட நினைக்கக்கூடாது!

  அதுக்கு முன்னோட்டமே, இந்தக் கக்கூஸ் திவ்யா பாரதிக்கான படவெதிர்ப்பு! 😛

 18. தோழர் அனானியன்,

  பாஸ்கரன் அவர்களின் 10 கேள்விகளுக்கு தங்களின் விடைகள் அருமை.

 19. இரண்டாயிரமாண்டுகளாக இந்த இழி நிலை க்கு காரணமான வருணாசிரம மனுதர்ம இந்து சமூக அமை ப்பை உங்களால் ஒழிக்க முடியவில்லை .
  உங்களுக்குள்ளே அடித்துக் ொள்கிறீர்கள்.
  பார்ப்பனீயம் வென்று விட்டது.

 20. அனானியன் நன்றாக பதிலுரைத்து இந்த பாஸ்கரனின் உண்மை முகத்தை காட்ட வைத்திருக்கிறார். அவற்றின் கமெண்டுகளின் பரிணாமத்தை பாருங்கள், முதலில் ஏன் பள்ளனை மட்டும் சொன்னாய்? உன் சாதியனை சொல்லவில்லை. ஏதோ அந்த பெண்ணுக்கு பள்ளரை கேவலபடுதுவதே கோடி ரூபாய்களை கொட்டி கொடுக்கும் என்பது போல். இந்த படத்தை பார்த்து இடைநிலை சாதிகள் எல்லாம் பள்ளரை காரி துப்பிவிட்டது போலவும் உள்ளது உங்கள் கதை. பாருங்கள் வருணாசிரம கட்டமைப்பை வெளிப்படையாக ஆதரிகிரீர். கொண்டை தெரிகிறது பாஸ்கரன். அடுத்தது பாருங்கள் மிக சுவாரசியமானது –

  //மாட்டிறைச்சி தடையைப்பத்தி எடுக்கும் படத்திலாவது, மாட்டிறைச்சி உண்பர்களாக இசுலமியரையும், பட்டியல் சாதிக்காரைங்களையும் மட்டும் ஆவணப்படுத்தாம, மாட்டுக்கறி திங்கும் சூத்திர இடைநிலைச் சாதிகளையும் பதிய சொல்லுங்க.//

  ஹிஹி பாஸ்கரன், ஐயா, அப்போ உங்களுக்கு மாடுக்கறி உண்பது இழிவு? காவிகளின் நரித்தனத்தை அப்படியே எதிரோலிக்கிரீரே? உண்மையில் மாட்டுக்கறி உண்பதை பெருமையாக பார்க்காமல் ஏன் அதை இழிவுபோல் சூத்திரனையும் மாட்டுக்கறி தின்கிறான் என படம் எடு என்கிறீர்?
  இப்படி அம்பலப்பட்டு போனீரே..

  அப்படியே நீங்கள் சொல்வது போல் திட்டம் போட்டு இந்த இழிவை பள்ளர் மேல் திணித்து மற்ற சாதிகளுக்கு என்னையா அப்படி கிடைத்து விட்டது விட போகிறது? இதனால் மாயயாலமாக அதானிக்கு ஐயாயிரம் கோடி கிடைக்கும் என்ற அடி முடி இல்ல கதையை கூட நம்பி விடலாம், அனால் உங்கள் கதை…அப்பா. சொல்லுங்கள் பாஸ்கரன்…அப்படி கஷ்டப்பட்டு படமெடுத்து பள்ளரை கேவலப்படுத்தி இடைநிலை சாதி எல்லாம் மோட்சம் பெற சதி செய்கிறார்களா?

  யாரையா இப்போது மலம் அள்ளுவது இழிவில்லை என்றது, நன்றாக சங்கி வேலை செய்கிறீர். பொது விவாத மேடையில் என்ன விக்ரம் போல் ‘தலைவா நம்ம சாதியை பத்தி தப்ப பேசிட்டான் தலைவா’ முயற்சி பண்ணவா? அதெல்லாம் அந்த காலம் பாஸ்கரன். இப்போ மக்கள் ரொம்ப தெளிவு. ஒரு சங்கி பீஜேவை போல் ஆகிவிட்டீரே ஹிஹிஹி.

  பாருங்கள் , கடைசியாக அந்த புரட்சி என்ற வேப்பங்காயாக கசக்கும் வார்த்தையை இரண்டு போடாமல் இவர்களுக்கு அடங்காது. தயவுசெய்து இவருக்கு இனி யாரும் சீரியசாக பதில் அளித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். பிறகு மறுபடியும் என்ன கைய புடிச்சு இழுத்தியா என்பாரு.

  ஜான் பாண்டியன்,
  நண்பரே ஒருவரும் அடித்து கொள்ளவும் இல்லை, பார்ப்பனியம் வெல்லவுமில்லை. ஒரு சிலர் தான் குழப்ப முயன்று அம்பல பட்டுகொண்டிருக்கிரார்கள். இது போன்ற எட்டப்பன்கள் அக்காலத்திலிருந்தே இருக்கிறார்கள் தானே.

 21. அனானியன் நண்பா பாஸ்கரனின் பத்து கேள்விகளுக்கும் முகத்தில் அறைந்தாற் போல் நீங்கள் சிறப்பாக பதிலுரைத்ததும் அவர் மேல் பாரத மாதா இறங்கிவிட்டது போலும்.என்ன ஒரு நேர்மையற்ற பிதற்றல் பார்த்தீர்களா?எதீரியின் வஞ்சக வலையில் பாஸ்கரன்கள் வீழ்ந்து விடக்கூடாதே என்ற அரசியல் பார்வையினாலேயே பாஸ்கரனிடத்தில் வேண்டுகோள் வைத்தேன்.அவரோ தான் அமித்ஷாவின் நெஞ்சாங்கூட்டில் குடியிருப்பதையே விரும்புகின்றார் போலும்.விட்டுவிடுவோம்.பாஸ்கரனுக்கு நந்தன் கதை தெரியாதா என்ன?

 22. பாஸ்கரன் நீங்கள் தருவித்த ஒட்டு மொத்த பிதற்றல்களின் சாரம் என்ன தெரியுமா?அண்ணல் அம்பேத்கரை ஏனய்யா யாரைக்கேட்டு எங்களுக்காக போராடினீர் என்று கேட்டு அவரை இழிபுகழீல் நிறுத்தியுள்ளதுபோலவே ஆகிவிட்டது.தோழர் திவ்யபாரதிகள்தான் இந்தியா முழுக்க எழ வேண்டும் என அண்ணல் முதல் ஈரோட்டுக்கிழவன் வரை தேசப்பற்றாள்ர்கள் விரும்பினார்கள்.நீங்களோ திவ்யபாரதிகளை கள்ளர் சாதியாக பார்த்து மலத்தை உங்கள் மனதில் அல்லவா வழியவிடுகிறீர்கள்.மலம் கூட பரவாயில்லை.சீர்கெடும் சிந்தனையை பேணுங்கள்.உங்கள் முதுகின் வழி பூணுல் படர்ந்துவருகிறது எச்சரிக்கை.

 23. ஹா ஹா. கேள்விக்கு பதில் இல்லையா சூத்திரர்களே?

  கக்கூஸ் திவ்யா பாரதி, தன்னுடைய கள்ளர் சாதியில் உள்ள மலமள்ளும் தொழிலாளர்களை என்ன நோக்கத்திற்காக ஆவணப்படுத்தவில்லையென்ற, ஒத்த கேள்விக்கு, இங்கே எந்தப் புர்சிப்புடலங்காய்களும் பதில் சொல்லல?

  இதில, என்னைய வர்ணாசிரமம் பாக்குறதா சொல்றாய்ங்க!

  உண்மையில் இந்த சூத்திர திவ்யாதான், வர்ணாசிரமத்த இத்தொழிலில் கட்டமைக்கலானு நினச்சு, பட்டியல் சாதிகள கோர்த்துவிட்டு, இப்ப அசிங்கப்பட்டு நிக்கிறாங்க!

  துப்புரவுத் தொழிலென்றால், அது பட்டியல் சாதிக்காரன் மட்டும் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் சூத்திர சாதி பொதுபுத்தி புண்ணாக்குகளே! உங்களுக்கு விளக்கி பாடம் எடுக்கணும்னா ஒருநாள் போதாது.

  அதனால, இக்கேள்விக்கு பதிலளிச்சிட்டு, மேற்கொண்டு என்ன பட்டம் வேணுனாலும் எனக்கு கொடுக்கலாம். மற்றதை விவாதிக்கலாம். 🙂

  ///கக்கூஸ் திவ்யா பாரதி, தன்னுடைய கள்ளர் சாதியில் உள்ள மலமள்ளும் தொழிலாளர்களை என்ன நோக்கத்திற்காக ஆவணப்படுத்தவில்லையென்ற, ஒத்த கேள்விக்கு, இங்கே எந்தப் புர்சிப்புடலங்காய்களும் பதில் சொல்லல? //

  சின்னா, C.nepolian, அனான்னியன், ராஜன் etc etc

  • பாஸ்கரன்,
   தோழர் திவ்யா தன் சாதி மக்களை விட தலித் மக்களின் விடுதலையை முக்கியமாகக் கருதியிருக்கிறார். அதுதான் உண்மை.

 24. S.s. கார்த்திகேயன் //பாஸ்கரன்,
  தோழர் திவ்யா தன் சாதி மக்களை விட தலித் மக்களின் விடுதலையை முக்கியமாகக் கருதியிருக்கிறார். அதுதான் உண்மை. ///

  ஹஹா ஹா ஹா! இதவிடக் காமிடி எதுவுமே இல்ல சகோ! ஹா ஹா. அப்ப கள்ளர்கள் தலித் இல்லையா? ஹா ஹா. முதலில் தலித் என்பதற்கு பொருள் என்னனு படிச்சு தெரிஞ்சுட்டு, புர்சி பேச வாங்க சகோ! ஹா ஹா கள்ளர் தலித் இல்லையாம்! ஹி ஹி மரண காமிடி. 🙂

 25. பாஸ்கரன்,
  தோழர் திவ்யா தன் சாதி மக்களை விட தலித் மக்களின் விடுதலையை முக்கியமாகக் கருதியிருக்கிறார். அதுதான் உண்மை. //

  இந்தப் பீலாவையெல்லாம் குழந்தைங்ககிட்ட சொல்லுங்க. நம்பும்.
  முதலில் தலித் என்றால் என்ன? யார் தலித்னு தெரிந்து கொள்ளவும்.

  பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எல்லாருமே தலித்துதான். இதில் சாதி ஒரு பொருட்டே அல்ல. வெறும் பட்டியல்சாதிக்காரன் மட்டுந்தான் தலித்னு காமிடி பண்ணாதீங்க! ?

  கள்ளர் சாதியிலுள்ள மலமள்ளும் ஏழைத் தொழிலாளிகளும் தலித்துகள்தான். பாதிக்கப்படும் மக்களுள் புர்சி செய்ய, சாதியைத்தேடிப்பிடித்து புர்சி செய்வதற்குப் பெயர் கம்யூனிசமா?

  கள்ளர் சாதியை அல்லது வேறெந்த fc,bc,mbc சாதியை இவ்வாவணப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தால், என்ன நடந்திருக்குமென உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

  படம் அரசால் தடைபட்டிருக்கும். படமெடுத்தவர் கம்பியெண்ணனும். Without bail. இப்ப மாதிரி நாடகக் கைதெல்லாம் இல்ல. இப்பகிடச்சமாதிரி ஈஸியா பெயில்கிடைச்சுடும்ணு கனவுல கூட நினைக்கக்கூடாது! ☺

  தோழர் வளர்மதியின் கைது சிறைவாசத்தையும், கக்கூஸ் திவ்யா பாரதியின் கைது நாடகத்தையும், இவருக்கு தரப்பட்டுள்ள ஊடக வெளிச்சத்தையும் ஒப்பிட்டுபாருங்க உங்களுக்கே உண்மை புரியும்.

  இனியும் சூத்திர சாதியினர் இழிவை பட்டியல் சாதியினர் மீது நேக்கா புர்சி புண்ணாக்குன்ற பேர்ல திணிக்க முயற்சிக்க வேண்டாம்.

 26. சின்னா //ஹிஹி பாஸ்கரன், ஐயா, அப்போ உங்களுக்கு மாடுக்கறி உண்பது இழிவு? காவிகளின் நரித்தனத்தை அப்படியே எதிரோலிக்கிரீரே? உண்மையில் மாட்டுக்கறி உண்பதை பெருமையாக பார்க்காமல் ஏன் அதை இழிவுபோல் சூத்திரனையும் மாட்டுக்கறி தின்கிறான் என படம் எடு என்கிறீர்?
  இப்படி அம்பலப்பட்டு போனீரே..///

  மாட்டுக்கறி உண்பதை இழிவுனு சொல்லியிருக்கேனா கெட்டி பொம்மு?

  மாட்டுக்கறியையும் பட்டியல் மற்றும் இசுலாமியருக்கானதுனு போலிப்பிம்பப்படுத்தி, சூத்திர இடைநிலைச் சாதிகளிடம் இழிவா பரப்புவதை நிறுத்தி, மாட்டுக்கறி அனைவருக்கும் பொதுவானதுனு பரப்ப சொல்றேன் சங்கி!

  பிகாஸ், பட்டியலிலும் மாட்டுக்கறி திங்காத சாதிகளும் இருக்கு. Bc,mbc இல் மாட்டுக்கறி திங்கும் சாதிகளும் இருக்கு.

  தவிர, பள்ளர்கள் சாதியில் மாட்டுக்கறி சமூக விலக்கம் செய்யப்பட்ட ஒன்று.
  இந்துத்வாகாரய்ங்க சொல்லும் பசு புனிதம் என்பதற்காகவல்ல. உழவுத் தொழிலில் உற்ற தோழனாய் இருந்தமையால், பள்ளர்கள் மாட்டுக்கறி உண்ண மாட்டர்.

  கழிப்பறைத் தொழில் இழிவு. சரி, இழிவான அத்தொழில் செய்யக்கூடிய bc,mbc சாதிகள ஏன் படத்தில் காட்சிப்படுத்தலைனு கேட்டதுக்கு, இப்படி பதறவேண்டிய அவசியமே இல்லையே.

  முட்டாள்த்தனமா படம் எடுத்திட்டதா சொல்லிடலாமே! இதுக்குப்போய் ஏன் இவ்வளவு முட்டுக்கொடுத்து அசிங்கப்படணும் புர்சிபுண்ணாக்குகளே!

  **சூத்திர பாய்ஸ்! உங்களுக்கெல்லாம் இதச் சொல்லித்தந்த தலைமைச் சூத்திரன் யார்னு தெரியும்!

  *******”பறையர் பட்டம் ஒழியாமல் சூத்திரப்பட்டம் ஒழியாதுனு” பேசிப்பரப்பி சூத்திர*****சாதியின் இழிவை, சூத்திர சாதியே இல்லாத, பறையர் மீது திணித்த ******* ராமசாமி ( க.வெ.ரா) வழியினர்தான நீங்கெல்லாம்!

  இந்துத்வா சொம்பு தூக்கி சூத்திரர்களே! இனியும் பட்டியல் சாதிக்காரய்ங்களுக்காகப் புர்சி பேசுறேன்ற பேர்ல, அவைங்க மேல பொதுபுத்தி இழிவக் கட்டமைச்சு, உங்க சூத்திசாதிகளின் உண்மையான இழிந்த நிலையை மறைச்சு, உசந்த சாதி ஆகிடலானு கனவுல கூட நினைக்கக்கூடாது.

  இப்படி பேமஸ் ஆகலானு நினச்சுதான் சூத்திர திவ்யா பாரதி, தன்னோட சாதிய துப்புரவுத் தொழிலாகளா காட்டாம, பட்டியல் சாதிக்காரய்ங்களக் காட்டி, சூத்திர சாதி வெறியரா அம்பலப்பட்டுப் போய் இருக்கு.

  இந்த விளம்பரம் இந்த *****சூத்திர திவ்யாவிற்குத் தேவையா? ?

 27. அப்பா என்னமா பிளேட திருப்பி போடுகிறீர், முதலில் சூத்திரனையும் மாடுக்கறி தின்கிறான் என்று எடு என வேண்டியது (இது அதை இழிவாக்கும் எண்ணம் அன்றி வேறென்ன ஐயா?) நாம் அதை சொன்னவுடன் அப்படியே சூத்திரருக்கும் மாடுக்கரி பொது என்ற நல்லெண்ணத்தில் சொன்னாராம். அப்படியானால் உமது வாதப்படி மலமள்ளும் இழிவை போன்றே மாட்டுக்கறியையும் நினைத்து இருந்தீர். அதனால்தான் ‘சூத்திரரையும் மாட்டுக்கறி உண்பவராக ஆவணப்படுத்து’ என்றீர் முதலில். இப்போ அப்படியே மாற்றி போடுகிறீர். அதுக்கு சப்போர்ட்டு உழவு உற்ற தோழன், விதண்டா வாதத்துக்கு கொஞ்சம் உப்பு?

  பிகாஸ், பிசுக்கோத்து, உமது எண்ணமே குழப்பமே. இதில் நாம் என்ன சொன்னாலும் நீர் மீண்டும் ‘ஒத்த கேள்வி ஓத்த கேள்வி என்றுகொண்டேஇருப்பீர்.

  அதெல்லாம் போகட்டும், இந்த என்ன கைய பிடிச்சி இழுத்தியா விளையாட்டில் ஏன் அடிக்கடி புரட்சி, அந்த தளமி சூத்திரனை எல்லாம் பாய்ந்து பாய்ந்து கடிக்கிறீர்? காமிடி காமிடி என்கிறீர் உமது பேச்சு தானையா பெரிய காமிடி பாருங்கள் பட்டியல் சாதிக்காரமேல் சூத்திரர் இழிவை திணித்து “உசந்த சாதி” ஆக பார்கின்றோமாம். பாஸ்கரன் வேண்டுமென்றால் ஆசைக்கு ஐந்தாறு கெட்ட வார்த்தையை கொட்டிவிட்டு போங்கள், இப்படி கலைஞானி ரேஞ்சுக்கு முயற்சி பண்ணி காமிடி பீசாக போகிறீரே.

 28. சின்னா// ஐயோ பாவமே! அந்த ஒத்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா? இதுக்குப் பெயர்தான் நரித்தனம். ஹி ஹி. அம்பலப்பட்டது நானா? நீங்களா? ஹா ஹா

 29. சின்னா //// அப்பா என்னமா பிளேட திருப்பி போடுகிறீர், முதலில் சூத்திரனையும் மாடுக்கறி தின்கிறான் என்று எடு என வேண்டியது (இது அதை இழிவாக்கும் எண்ணம் அன்றி வேறென்ன ஐயா?) நாம் அதை சொன்னவுடன் அப்படியே சூத்திரருக்கும் மாடுக்கரி பொது என்ற நல்லெண்ணத்தில் சொன்னாராம். அப்படியானால் உமது வாதப்படி மலமள்ளும் இழிவை போன்றே மாட்டுக்கறியையும் நினைத்து இருந்தீர். அதனால்தான் ‘சூத்திரரையும் மாட்டுக்கறி உண்பவராக ஆவணப்படுத்து’ என்றீர் முதலில். இப்போ அப்படியே மாற்றி போடுகிறீர். அதுக்கு சப்போர்ட்டு உழவு உற்ற தோழன், விதண்டா வாதத்துக்கு கொஞ்சம் உப்பு? //

  அதாவது சின்னா, யாரையும் சுடுசொல் கொண்டு பேசுவது என் எண்ணமல்ல. நான் சொல்லவருவதில் உள்ள logic புரிஞ்சு பேசுங்க. நான் மாட்டுக்கறியை இழிவாகக் கருதவில்லை.

  இந்த மாட்டுக்கறியை, இந்த சூத்திர இடைநிலைச் சாதியினர் எப்படி இழிவாக்குவாங்கனு சொல்வது புரியவில்லையா?
  எப்படினு சொல்றேன் கேளுங்க.

  மாட்டுக்கறி தின்பது இழிவென, ஒரு காலத்தில் மாட்டுக்கறியை தின்ன பார்ப்பனன், புத்தமதத் தாக்கத்தால், மாட்டுக்கறியுண்பதை கைவிட்டு, அதை விலக்கி வைத்தான்.
  காலப்போக்கில், அவ்வாறே மாட்டுக்கறி உண்போரையும் விலக்கி வைத்தான். இதையெல்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு, “பசு புனிதம்” என்ற கருத்தியலைக் கட்டமைத்ததன் மூலமாகச் சாதித்தான்.

  மாட்டினை உண்ணக்கூடிய சாதிகள் பல இருப்பினும், மாட்டுக்கறியை உண்பதை பொதுச் சமூகத்தில் இழிவானதாகவே கருதப்பட்டு வந்தது.ஆனால், தமிழ்நாட்டில் இந்தச் சாதியினர்தான் என இல்லாமல், அனைவருமே மாட்டுக்கறியைத் தின்றுதான் வருகிறார்கள்.

  ஆனால், இந்த முற்போக்கு புர்சியாளர்கள் என்போர்கள் மாட்டுக்கறியை தின்பவர்கள் பட்டியல் சாதியினரும் மற்றும் இசுலாமியரே என ஆவணப்படுத்துவர். இதைப்பார்க்கும் சாமானிய சூத்திரன் மனதில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள மாட்டுக்கறி இழிவென்ற புத்தியோடு, மாட்டுக்கறி தின்னும் பட்டியல் மற்றும் சிறுபான்மை சமூகத்தை இழிவென்றும், தன்னுடைய சூத்திர சாதியானது, பட்டியல் மற்றும் இசுலாமியரவிட உசந்தசாதின்ற கருத்து மனப்பான்மைக்கு வந்திடுவான்.

  ஆனா, உண்மையென்னனு பாத்தா, bc,mbc சாதிகளில் மாட்டுக்கறித் தின்பவர்களும் உள்ளார்கள் என்ற செய்தி மறைக்கப்படுதலே, சூத்திர சாதியினரின் சாதிவெறி மனப்பான்மைக்குக் காரணம்.

  அதாவது, தான் பட்டியல் சாதியினரைவிட உயர்ந்தவன்ற கருத்தாக்கத்த, இந்த மாதிரி ஆவணப்படம், கட்டுரை, ஊடகம் வழியாக சூத்திர திவ்யா போன்ற விளம்பரப் புர்சிக்கள் பொதுமக்களிடம் பட்டியல் சமுதாயத்தின் உணவெனப் பரப்புவார்கள்.

  இப்பக்கூடப் பாருங்க, இந்த சூத்திர திவ்யா தன்னோட ஆவணப்படத்துல துப்புரவுத் தொழிலாளிகளா, பட்டியல் சாதியினர மட்டும் காட்டி, bc,mbc சாதியினர மறச்சது மாதிரி.

  நீங்க எனனதான் புரட்சியா பேசினாலும், இது மாதிரியான தொடர்ச்சியான போலிப் பரப்புரைகளால், சூத்திரன் என்றுமே தம்மை, பட்டியல் சாதிக்காரனுக்கு நிகரா கருத மாட்டான்.

  இதுக்கு உதாரணம்தான், துப்புரவுத் தொழிலில் ஈடுபடக்கூடிய திவ்யா பாரதியின் கள்ளர் சாதியைச் சேர்ந்த தொழிலாளர்களை திவ்யா அப்படத்தில் ஆவணப்படுத்தாது. ஆவணப்படுத்தி இருந்தா, நான் ஏன் அவர் நோக்கத்தை குறை சொல்லப் போகிறேன்?

  இதுமாதிரியான போலிப் பரப்புரைகளால்தான் பட்டியல் சாதினாலே இழிவாகச் சூத்திரன் கருதுகிறான். இப்போதாவது சொல்வது புரிந்ததா? இல்ல மறுபடியும் என்ன rss, bjp etc etc முத்திரை குத்தப் போறீங்களா?

  இதற்குமேல் என்னால் விளக்கம் கொடுக்க முடியாது சகோ.

 30. திவியா அந்த ஆவண படத்தில் உள்ள சாதி சார்த்த கருத்துகளை எடிட் செய்து விட்டு அடுத்த வேலையை பார்பதில் அவருக்கு என்ன பிரச்சனை? அல்லது பிற்பட்ட சாதியினரும் தான் அந்த தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்று ஒரு வாக்கியத்தை சேர்த்து தன் சுய சாதியை சார்ந்த கள்ளர் சாதியையும் இணைத்து கொண்டால் என்ன தவறு? செய்வாரா வினவு?

 31. கைகளால் மலம் அள்ளுவது என்பது சட்டத்துக்கு புறம்பான வேலை மட்டும் அல்ல, அது இழி தொழில் தான். அடுத்தவன் மலத்தை நான் அள்ளுகிறேன் என்றால் அதில் எப்படி சமுக நலன் இருக்க முடியும்? அந்த கையால் மலம் அள்ளும் தொழிலை புறக்கண்பத்தும், அதில் ஈடுபடும் மக்களை அந்த வேளையில் இருந்து விடுவிப்பதும் தான் சரியான செயல்.

  அந்த தொழிலில் ஏதோ ஒரு தேவேந்திர சமுகத்து மனிதர் ஈடுபடுகின்றார் என்பதற்க்காக ஒட்டு மொத்தமாக தேவேந்திரர் அந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுவது அதனை ஆவண படுத்துவது என்பது கள்ளர் சமுகத்தை சேர்ந்த திவியாவின் உள்நோக்கம் கொண்ட தவறான செயல் தான். அதற்கும் ,திவியாவுக்கும் வினவு போன்ற முற்போக்கு இணைய முகவரிகள் ஆதரவு கொடுப்பது என்பது தேவையற்ற ஒன்று மட்டும் அல்ல… முன்னேற துடிக்கும் ஒரு சமுகத்தை,தேவேந்திரர் சமுகத்தை மேலும் மேலும் மட்டம் தட்டும் செயலும் கூட….

  மேலும் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற அவர்கள் விரும்புவது இன்று நேற்று நடக்கும் விசயம் அல்ல… என்று நாடார் மக்கள் (சாணார் மக்கள்) பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறினார்களோ அன்றே தேவேந்திர குல மக்களும் வெளியேற தான் போராடினார்கள்… நாடார் மக்களுக்கு அரசியலில் இருந்த செல்வாக்கு தேவேந்திர குல மக்களுக்கு இல்லாத காரணத்தில் அன்று அது சாத்தியம் ஆக வில்லை… இன்று முயலும் போது அடக்கு முற்போக்கு சக்திகள் குறுக்கே நிற்க வேண்டாம்.

  //மலம் அள்ளுகிறவர்கள் இழிந்த தொழிலைத்தான் செய்கின்றனர். என் சாதிக்காரர்கள் அந்தத் தொழிலில் இல்லை என்று சொல்வது தீண்டாமைக் குற்றம். //

 32. திவியா அவரின் முக நூல் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் BC MBC என்று எழுதிவிட்டு அந்த பிரிவுகளில் உள்ள சாதி பெயர்களை குறிப்பிடாமல் விட்டது ஏன் என்று அவருக்கு ஆதரவு தரும் வினவு விளக்கம் அளிக்குமா? BC மற்றும் MBC சாதி பெயர்களை வெளிப்டையாக கூற அவருக்கு என்ன பிரச்சனை? பட்டியல் இனம் என்றால் மட்டும் சாதியை கூற வேண்டும் , மற்ற பிரிவுகள் என்றால் சாதியை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ? வினவு விளக்க வேண்டும்!

  //துப்புரவு பணியாளர்களை தெருத் தெருவாக சென்று தமிழகம் முழுக்க சந்தித்து பாருங்கள். அப்போது தான் கள நிலவரம் புரியும். அதில் Bc mbc இருப்பதாக தொடர்ந்து கூறப்படட்டு வருகிறது. ஆம் உண்மை தான் யாரும் மறுக்க வில்லை. தங்கள் ஆதிக்கத்தை பயன்படுத்தி Sweeper என கிட்டதட்ட 20000ரூ சம்பளம் வரக் கூடிய அரசு பணியை பெற்றுக் கொண்டு வரும் ஆதிக்கத் சாதியினர், பெரும்பாலும் துப்புரவு பணி செய்வதில்லை. அந்த சம்பளத்திலிருந்து 6000 ரூபாயை ஒடுக்கப்பட்ட சாதியை சார்ந்த மக்களுக்கு அளித்து மேல் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, தங்களுக்கு பதில் ஆளாக அவர்களை தான் துப்புரவு பணி செய்ய வைக்கிறார்கள், அவர்கள் வேறு வேலை செய்து கொள்கிறார்கள். தமிழகம் முழுக்க துப்புரவு பணியில் இருக்கும் “பதில் ஆட்கள்” ஏதோ ஒரு Bc, Mbcன் sweeper என்கிற அரசு பணியை 5000, 6000 கூலிக்கு செய்து கொண்டு வருகிறார்கள் என்பதை களத்தில் இறங்கி தெரிந்து கொள்ளுங்கள். ஆதிக்க சாதியினரின் இந்த ஆதிக்கம், அயோக்கியத்தனமானது.இந்த கள எதார்த்தம் புரியாமல் பேசுவது துரதிஸ்டவசமானது.
  ( கக்கூஸ் Rti Report களை, அரசு மற்றும் Ngo தரும் பொய் அறிக்கைகளை மட்டும் நம்பாமல் களம் கண்டு எடுக்கப்பட்டது.)//

 33. பாஸ்கர் B , திவியாவின் மீது மதுரை ஒத்தகடை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மற்றும் புதிய தமிழகத்தில் முக்கிய பதவியில் உள்ளவர் புகார் மனுவின் அடிப்டையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கபட்டு உள்ளது. என்ன என்ன பிரிவுகள் என்றால் 153A, 505(I) (b)IPC and பிரிவு 66F of IT ACT-2006 ஆகிய பிரிவுகள். இந்த பிரிவுகள் கீழ் தொடுக்கப்ட்ட வழக்குகள் எல்லாமே இட்டு கட்டபட்ட பொய்யானவை என்பதாவது நண்பர் பாஸ்கருக்கு தெரியுமா தெரியாதா? இவ்வளவு அருமையாக விவாதம் செய்யும் பாஸ்கர் B அவர்கள் இந்த வழக்குகள் பற்றி என்ன நினைகின்றார் என்றாவது கூறமுடியுமா?

  153A பிரிவில் (இரு பிரிவினருக்கு எதிராக பகைமையை தூ ண்டுதல்)மட்டுமே தொடுக்கபட வேண்டிய வழக்கு பிற பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டு உள்ளதே ஏன் பாஸ்கர் B ? இந்த ஆவண படத்துக்கு அதன் இயக்குனர் மீது போடபடும் இந்த பிரிவின் கீழான வழக்குகள் நீதி மன்றத்தில் ஒன்றும் இல்லமால் ஆகபடும் என்பது ஒரு புறம் இருதாளும் என்னுடைய கேள்வி என்னவென்றால் இந்த வழக்குகளை கையப்பம் இட்டு பதிவு செய்த ஒத்தகடை காவல நிலைய இன்ஸ்பெக்டர் உங்கள் சாதி காரர் என்பதால்தானே? பதில் அளிக்க முடியுமா பாஸ்கர்?

  இதுவரையில் புதிய தமிழகம் கட்சி தென் மாவட்டங்களில் உள்ள எந்த சாதி வெறியர்கள் மீதும் இப்படி பட்ட வழக்குகளை தொடுக்காத நிலையில் திவியா மீது மட்டும் வழக்கு தொடுக்க புகார் மனு அளிததமைக்கான காரணம் என்ன பாஸ்கர்?

  உங்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரின் பொருளற்ற பத்து கேள்விகளை வினவில் பேஸ்டு செய்ய முடிந்த உங்களால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலுமா ?

 34. ஐயா பாஸ்கரன் உமக்கு எத்தனை முறைதான் சொல்வது, அத்தோழர் சாதியத்தையே புறக்கணித்து இப்பிரச்சினையை படமாகியிருப்பதே இவ்விழிவை நன்றாக அம்பலபடுத்த வேண்டுமென்றே என பதிலுரைத்தும் , ஆனால் நீங்களோ எச்சாதியம் நம்மை போட்டு மிதிக்கிறதோ அதை தலைமேல் தூக்கி வைத்துகொண்டு என் சாதியை சொன்னாய் உன் சாதியை சொல்லு பார்போம் ஒத்த கேள்வி என்று கூத்தாடிகொண்டிருக்கிரீர்.

  பாரும் முதலில் மாடுகரி இழிவில்லை என கூறிவிட்டு பிறகு நீராகத்தான் ‘சாமானிய சூத்திரன் மனதில் மாட்டுக்கறி இழிவென்ற’ என உமது எண்ண கிடக்கையை போட்டு உடைக்கிறீர், எல்லா சூத்திரனும் வந்து சொன்னானா உம்மிடம்?

  சரியாக புரிந்து கொள்ளவும் , பார்பனன் புத்தமத தாக்கத்தால் அவனும் இழிவென கருதி ஒதுக்கவில்லை, ஏன் இப்போதுள்ள பயல்களுக்கு கூட தெரியும் மாட்டுக்கறி அற்புத வஸ்து என்று, ஆனால் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் அந்த ஆரிய மூளையின் வேலை. புத்த மதத்தின் ‘கொல்லாமை’ அப்பீலை தணிப்பது மற்றும் உழைக்கும் மக்களை படிப்படியாக உழைக்க மட்டுமே போதுமானளவு சவலைகளாகவே மன அளவில் வைத்திருப்பது. ஏனெனில் அவனுக்கு தெரியும் ஆரிய மூளை விருத்தியில் மாட்டின் இரத்த வாடையே உண்டென்று. மாட்டுக்கறி இழிவென பார்பனன் கருதினானாம்..ஹிஹிஹிஹி அப்படி உங்களிடம் இங்கு வந்து அளக்க சொன்னானா?

  யோவ் என்னையா நீர் , முற்போக்குவாதிகள் மாடுக்கறி பட்டியலும் இசுலாமியனும் மட்டும் தின்பதாக காட்டுகிறார்களா? அதைபார்த்து ‘சூத்திரர்’ நன் உயர்தவர் என நினைப்பார? இதுதான் மிகப்பெரிய காமிடி, நண்பரே உதாரணமாக வினவின் கட்டுரைகளே எடுத்து பாருங்கள், மாட்டுக்கறியை அனைவரும் உண்ணவேண்டிய உணவு முக்கியமாக உழைக்கும மக்களின் உணவு தடை போடுவதை எதிர்ப்பதையே நோக்காக கொண்டது . நீர் தூகிபிடிப்பது போல குறிப்பிட சாதி மத துக்காக கத்துவதில்லை நாம். சில இஸ்லாமிய வாதிகளும் உம்மை போல்தான் எதோ தமக்காக பேசுவதாக நினைப்பார்கள். இதில் சூத்திரர் இதை பார்த்து தாம் உயர்தவர் என நினைத்து விடுவாராம். போமையா உம்மோடு சேர்ந்து நானும் சூத்திரன் பள்ளன் என புலம்ப தொடங்கி விட்டேன். நம்மை எல்லாம் சேர்த்து போட்டு மிதித்து கொண்டிருக்கார்கள்.

  மீண்டும் சொல்கிறேன் நீர் இதே போல் சூத்திரர் எல்லாரும் பட்டியல் சாதியரை விட தாம் உயர்ந்தவர் என நினைப்பது என சொல்வது நீர் சாதியத்தை கட்டிப்பிடித்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது.

  சரி அப்படி நாங்க புரட்சியா பேசியும் நீர் குற்றம் சாட்டும் இந்த ‘போலி பரப்புரை’ படத்தால் சூத்திரர் பட்டியலுக்கு நிகராக கருத மாட்டார்கள் என்று நிருபித்து நீங்கள் எதை புடுங்க போகிறீர் பாஸ்கரன்? சொல்லுங்கள். எந்த சாதியையும் எந்த சாதிக்கும் நிகராக்குவது எமது வேலையல்ல. சாதியத்தையே உடைத்து உழைக்கும் மக்களை ஒன்று படுத்துவதே எமது நோக்கம். ஆம் நீங்கள் புர்ச்சி புர்ச்சி என்று இங்கு நக்கலடிப்பதும் அங்கே பெண்கள் மதுக்கடைகளை உடைப்பதை பார்த்து லேசாக பதறுவதும் எமக்கு மணக்கிறது பாஸ்கரன். மக்கள் ஒன்று கூடினால் தானே சாதியத்தை தூக்கி பிடிக்கும் உங்களுக்கு கலக்கும்.

  சரி குமாருடன் கும்மியடிப்போம்

  குமாரு, யார் இப்போது மலம் அள்ளுவதை இழிவில்லை என சொன்னது? நீங்கள் தான் ‘ஒட்டுமொத்த’ தேவேந்திர சமூகமும் செய்வதாக சொல்கிறீர், அதாகப்பட்டது ஒரு விடுப்பை நீங்களாக உருவாகிகொள்கிரீர் . மீண்டும் மீண்டும் சொல்கிறேன், அந்த பெண்ணுக்கு நீங்களே கூறுவதை போல் உள்நோக்கம் இருந்தால் , அதாவது தனது கள்ளர் சாதியை உயர்த்திக்காட்ட பள்ளரை பீ அள்ளுவதாக காட்டிவிட்டார், ஆனால் நாமோ அம்பானியை போல் இல்ல இந்திய நடுத்தர வர்க்கத்தை போல் முன்னேற துடிக்கும் சாதி நம்மையும் போய் பீ அள்ளுவதாக காட்டிவிட்டாளே, கபாலியின் கண்ணாடியை புடுங்கி எரிவதை போல் அவமானபடுத்தி விட்டாளே, இதை போன்ற கபாலியை போன்ற ‘முன்னேற்றங்கள்’ தானே நமக்கு தெரியும். காள்ளர் சாதியை உயர்த்திக்காட்ட திவ்வியயா என்ன பள்ளரை பீயே தான் அள்ள வைக்க வேண்டுமா? அவருக்கென்ன பெட்ரோமாக்சே தான் தெரியுமா? பந்தமெல்லாம் கொளுத்திக்க தெரியாது அவருக்கு? சிறு பிள்ளைத்தனமாக யோசிக்க வேண்டாமே.

  அ ய்யோ அய்யோ, நண்பர்களே நீங்கள் அவ்வாறு ‘கீழ்மையில் மேன்மை காணும்’ அறிவுசுடர்களாய் இருந்தால் நீங்கள் தூக்கி பிடிக்கும் உங்கள் சாதி பெருமையை அறிவாளிதனத்தை இதைவிட கேவலபடுத்த முடியாது (இப்போ என்னையும் சாதி வெறியன் என கூவவும் இதற்குத்தானே ஆசை பட்டீர்கள் தேவேந்திர குமாரர்களே)
  நண்பர்களே இறுதியாக ஒன்று குமார் கேட்பதை போல முற்போக்கு சக்திகள் யாருடைய கபாலியேற்றத்திற்கும் …அதாங்க முன்னேற்றதிட்கும் குறுக்காக நிற்க மாட்டார்கள் அதற்கு நேரமும் இல்லை அவர்க்கு. ஆனால் தனி முன்னேற்றம் என்று மக்களை பிரித்து குளிர்காய மக்களை குறுக்கு வழியில் கொண்டுசெல்ல முயன்றால் நிச்சயம் குறுக்கே நிற்பார். அவ்ளோ தாங்க.

  • சின்னாவுக்கு ..,

   சின்னா : யார் இப்போது மலம் அள்ளுவதை இழிவில்லை என சொன்னது?

   வினவு : மலம் அள்ளுகிறவர்கள் இழிந்த தொழிலைத்தான் செய்கின்றனர். என் சாதிக்காரர்கள் அந்தத் தொழிலில் இல்லை என்று சொல்வது தீண்டாமைக் குற்றம்

   மலம் அள்ளுவது சட்டத்துக்கு புறம்பானது என்ற நிலையில் அது எப்படி இழிவில் லை என்று வினவும் , சின்னாவும் தான் விளக்க வேண்டும்.

   பட்டியல் இன மக்களின் முன்ன்னேர்ரதுக்கு நீர் குறுக்கே நிற்பது உண்மை எனில் இந்த பெண் திவியாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஆவண படத்தில் இருந்து சாதி பெயர்களை நீக்க வேண்டும்.

   அடுத்து தினம் தினம் தமிழ் நாட்டில் அமெரிக்காவில் திரையிட படும் அந்த ஆவண படத்தில் இருந்து சாதி பெயர்களை விலக்கிகொண்டால் யாரு குடி முழுகி போகும்? பதில் சொல்லுக்க பாஸ்…!

  • என்னுடைய எந்த கேள்விக்கும் நீங்க பதில் அளிக்கவே தயாராக இல்லை சின்னா. வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்ய ? இந்திய கம்ம்யுநிடுகள் என்போர் என்றுமே பிரச்சனைகளை நேரடியாக பார்த்து அதற்கு பதில் அளித்தும் இல்லையே! அதே ஆளுமையில் தானே நீங்களும் பேசிக்கொண்டு உள்ளீர்கள். தேவேந்திர குல மக்கள் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? அந்த ஆவண படத்தில் இருந்து சாதி பெயர்களை திவ்யா நீங்குதில் என்ன பிரச்னை உங்களுக்கு? நேரடியாக பதில் அளிக்க முயலுங்கள் சின்னா.

   மேலும் நான் உங்களுக்கு அளித்த முந்தைய பதிலில் “பட்டியல் இன மக்களின் முன்ன்னேர்ரதுக்கு நீர் குறுக்கே நிற்கவில்லை என்பது உண்மை எனில் இந்த பெண் திவியாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஆவண படத்தில் இருந்து சாதி பெயர்களை நீக்க வேண்டும்.” என்று மாற்றி படியுங்கள் நண்பரே.

 35. குமார்// எனக்கு இந்தச் சட்டப்பிரிவுகளைப் பற்றித் தெரியாது. இதைப் பற்றி முகநூலில் அவரிடம் விசாரிக்கிறேன்.

  தவிர நான் புதிய தமிழகம் கட்சி இல்லை.

  பிறகு இந்த சின்னாவின் வாயை அடைக்க ஒரு கேள்வியே போதும்.

  ஏன் சின்னா, கக்கூஸ் படத்தில் மலமள்ளும் கள்ளர் சாதியினரை ஆவணப்படுத்தவில்லை? என்பற்குப் பதிலளித்துவிட்டு, வேறென்ன புலம்புவதா இருந்தாலும் புலம்பு.

 36. சின்னா //
  இங்க நீங்க நினைக்கிறதப் பத்தியோ, இல்ல நான் நினைக்கிறதப் பத்தியோ பேசல. பொதுபுத்தி மக்களின் எண்ணம் மற்றும் அதன் விழைவுகளப்பத்திதான் பேசுறோம்.

  சின்னா மாதிரி பொதுபுத்திக்காரர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது. சோ, இக்கேள்வி வினவிற்கு.

  படத்தில் துப்புரவுத் தொழிலை சக்கிலியர் மட்டுந்தான் செய்கின்றனர் என்பதே ஆகப் பெரிய பொய்யும், இவ்வாறு பரப்புவதே ஒரு தீண்டாமைனு சொல்லும் கக்கூஸ் திவ்யா, இத்தொழில் செய்பவர்களாக பட்டியல் மற்றும் பழங்குடி சாதியினரை மட்டும் ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தணும்?

  இவ்வாறு வலிந்து திணிப்பதற்குப் பெயர் தீண்டாமையில்லையா?

  சக்கிலியர் மட்டும் ஈடுபடவில்லை, மற்ற சாதிகளும் இதில் ஈடுபடுகின்றனர் எனச் சொல்லி, சக்கிலியர்கள் மீதான தவறான பிம்பத்தை உடைக்க நினைத்திருப்பது சரிதான் என்றால், இத்தொழிலில் ஈடுபடக்கூடிய எல்லாச் சாதியினரையும் (fc,bc,mbc,sc,st) அல்லவா ஆவணப்படுத்தி இருக்கணும்?

  இத்தொழில் சக்கிலியர் மட்டுமே செய்வதாக பொதுச் சமூகம் நினைப்பதே தீண்டாமைனு சொல்லும் கக்கூஸ் திவ்யாவின் இப்படம், அதேபோல் இத்தொழிலை பட்டியல் மற்றும் பழங்குடியினர் மட்டுமே செய்வதாகப் பிம்பப்படுத்தி இருப்பது தீண்டாமைக் குற்றம் இல்லையா?

  ஏன் வினவு இம்மாதிரியான சாதி வெறிபிடித்தவர்களுக்கு ஆதரவாய் நடந்து கொள்கிறீர்களோ? வினவிற்கு வாயில்லையா? வெறும் கட்டுரை மட்டுமே பதிவீர்களா? கேள்விக்குப் பதில் சொல்லால் இருப்பதுதான் வினவின் கம்யூனிச சனநாயகமோ?

 37. குமாரு சரியாக புரிந்து பேசவும். நானும் வினவும் கூறுவது திணிக்கப்பட்ட ஒரு அவலத்தை, நீரும் பாஸ்கரனும் (உங்கள் நீண்ட வியாக்கியானங்களை விடுத்து மொட்டையாக சொல்வதாக இருந்தால் ) – இல்லை இல்லை பட்டியல் சாதி மற்றும் சூத்திரர் மலம் அள்ளவே பிறந்தது போலவும், அதில் சூத்திரர் மட்டும் தம்மை தவிர்த்து பள்ளரை படமெடுத்து அவமானபடுதுவதாகவும் கருத்து கொள்கின்றீர்கள். அதில் அவனே திணித்து விட்டு இப்போ அவனே சட்டம் போட்டுவிட்டு இந்த அவலத்துக்கு மக்களை இன்னும் திணிப்பதை தொடர்கின்றானே…நீங்கள் சாதியம் மூலம் இதை திணித்தவனோடு கூட்டு சேர்ந்துகொண்டு இதை அம்பல படுத்துவோர் மீது அதே சாதியத்தை கொண்டு பாய்கிறீர்களே? என்ன லாஜிக் இது?

  இவ்வாறு கூத்தாடுபவர்கள் ஒத்துக்கொள்ளுங்கள், நாம் வருணாசிரம கட்டமைப்பை ஆதரிக்கிறோம், சாதியத்தை சாக விடாமல் காப்பதே உங்கள் வேலை என்று. இந்த விதண்டா வாதங்களை வினவில் வந்து கக்க என்ன அவசியம்?

  மீண்டும் உங்களுக்கு விளக்குகிறேன், விளக்கெண்ணெய் போல் பிறகும் விதண்டாவாதம் பேச வேண்டாம்,

  //வினவு : மலம் அள்ளுகிறவர்கள் இழிந்த தொழிலைத்தான் செய்கின்றனர். என் சாதிக்காரர்கள் அந்தத் தொழிலில் இல்லை என்று சொல்வது தீண்டாமைக் குற்றம்//

  இங்கே வினவு சொல்வது புரியவில்லையா? மலமள்ளுவதை என்ன பாக்கியமென்றா சொல்லுகிறோம்? மலமள்ளுவது ஒட்டிப்பிறந்த இழிவில்லை திணிக்கப்பட ஒன்று.இதை ஒட்டுமொத்தமாக எதிர்த்து தூக்கி எறியாமால் எதோ சமுகத்துக்கு தேவையான ஒன்று போலவும், ஆனால் நம் சாதி அதை செய்யவில்லை என்பதே இந்த அவலத்தை தொடர அனுமதிப்பதே அன்றி வேறென்ன??? நடுத்தர வர்க்கம் போல் நழுவி சென்றாலும் பரவாயில்லை , நீங்கள் இந்த அவலம் தொடர முட்டு கொடுக்கிறீர்கள் – சாதியத்தை தூக்கி பிடிப்பதன் மூலம்.

  \\பட்டியல் இன மக்களின் முன்ன்னேர்ரதுக்கு நீர் குறுக்கே நிற்பது உண்மை எனின்..\\

  ??? என்ன உண்மை இல்லை என சொல்ல வந்தீரோ? பிழை இல்லாமல் சொல்லவும். ஏற்கனவே இங்கே ஏகப்பட்ட குழப்பம்.

  //அடுத்து தினம் தினம் தமிழ் நாட்டில் அமெரிக்காவில் திரையிட படும் அந்த ஆவண படத்தில் இருந்து சாதி பெயர்களை விலக்கிகொண்டால் யாரு குடி முழுகி போகும்? பதில் சொல்லுக்க பாஸ்…!//
  ஆஹா அமெரிக்காவில் கூட பீ அள்ளும் அவலத்தின் கதையில் பள்ளன் பெயர் வரக்கூடாது???
  கபாலியேற்றம்….சாரி முன்னேற்றம் ..சிறப்பு போங்கள். சாதி பெயர்களை போட்டால்தானே தெரியும் பாஸ் இவர்களின் caste system? bbc aljazzera போன்றவற்றில் கூட இந்த கக்கூஸ் பிரச்சனை பேசும்போது சொல்லுவார்கள் caste system தான் கரணம் என்று, ஆனால்அதன் விளக்கம் தெரியாது இப்படி தெளிவாக ஆவணப்படத்தில் போட்டால்தானே இந்த அநியாயம் உலகுக்கு தெரியும் பாஸ்?

  • உங்க கிட்ட பேச பத்து சொம்பு ஆர்லிக்ஸ் குடிச்சிட்டு தான் வரனும் போல சின்னா. நேரடியாகவே பேசியே உங்களை போன்ற கம்ம்யுநிடுகளுக்கு பழக்கம் கிடையாதா? நல்லாவே புரியும் படி பேசுறேன்.கேடுகுங்க.

   1.எண்ணத்துக்கு சாதி பெயர்களை அதுவும் பட்டியல் இன சாதி பெயர்களை மட்டும் அந்த ஆவண படத்தில் வெளிகாடனும்? அப்படி வெளிக்காட்டுவதாக இருந்தால் BC மற்றும் MBC வகுப்பினரும் அதே வேலையை தானே செயராங்க? அவங்க சாதி பெயரை வெளியே சொல்வதில் ஆவண பட இயக்குனருக்கு என்ன பிரச்னை? //பட்டியல் சாதி மற்றும் சூத்திரர் மலம் அள்ளவே பிறந்தது போலவும், அதில் சூத்திரர் மட்டும் தம்மை தவிர்த்து பள்ளரை படமெடுத்து அவமானபடுதுவதாகவும் கருத்து கொள்கின்றீர்கள்//

   2.சரி பிரச்சனையை வர்க்க ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைபாடு எடுத்து இருந்தால் எந்த சாதி பெயரும் அங்கே வரவேண்டிய தேவை இல்லை தானே? //இவ்வாறு கூத்தாடுபவர்கள் ஒத்துக்கொள்ளுங்கள், நாம் வருணாசிரம கட்டமைப்பை ஆதரிக்கிறோம், சாதியத்தை சாக விடாமல் காப்பதே உங்கள் வேலை என்று. இந்த விதண்டா வாதங்களை வினவில் வந்து கக்க என்ன அவசியம்?//

   3.நீங்க கேட்டது என்ன சின்னா? “யார் இப்போது மலம் அள்ளுவதை இழிவில்லை என சொன்னது?” அதற்கு பதில் நேரடியாக வினவின் கருத்துகளில் இருந்து கொடுத்துகிட்டு இருக்கேன். மேலும் சந்தேகம் என்றால் அவிங்களையே கேட்டுக்குங்க… என்னிடம் எண்ணத்துக்கு நீங்க நீட்டி முழங்கணும்? நான் தான் சொல்றேன் அல்லவா அடுத்தவன் பேன்ட மலத்தை நான் அள்ளுவதில் எங்க சமுக சேவை இருக்கு என்று கேட்கின்றேன் அல்லவா? புரியவில்லையா உங்களுக்கு இல்ல புரியாத மாதிரியே ந்டிகிரிங்க்களா?

   4. என்ன மயித்துக்கு வரனும் என்கிறேன்? என்ன வெங்காயத்துக்கு வரனும் என்கிறேன்? ஆசைபட்டால் நீர் உமது சாதி பெயரை திவியா விடம் கூறி அந்த மலம் அல்லும் வேளையில் உன் சாதியையும் தான் செய்கிறது என்று இடை சொருகல் செய்து கொள்ளவும்…

   இன்ன மயித்துக்கு அடுத்தவன் சாதியை அசிங்க படுத்தி அதில் சுயஇன்பம் காணுகின்றீகள் நீரும் இந்த ஆவண பட இயக்குனரும் ?
   //ஆஹா அமெரிக்காவில் கூட பீ அள்ளும் அவலத்தின் கதையில் பள்ளன் பெயர் வரக்கூடாது???//

 38. ஆவண பட இயக்குனர் திவியா மீது தொடரும் குற்றசாட்டுகள் :

  ”தோழர் திவ்யா பாரதி மீதான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியது. ஆனால் இந்தப் படம் வெளியானதிலிருந்தே, அருந்ததியரைத் தவிர (ம)பள்ளர் சமூகத்தினரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது தவறானது; சமூகப் புறக்கணிப்பிலிருந்து மேலெழுந்து வரும் சமுதாயத்தினரை, மீண்டும் மீண்டும் இழிதொழில் செய்பவர்கள் எனச் சித்தரிப்பது தவறு. துப்புரவுத் தொழிலில் மற்ற பல சமூகத்தினரும் ஈடுபட்டுள்ள நிலைமையில், பட்டியல் சாதியினர் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக ஏன் குறிப்பிடவேண்டும்?” எனக் கேட்கிறார்.

  -இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனர் மறைந்த மலைச்சாமியின் மகனும் ஆவணப்பட இயக்குநருமான வினோத்

 39. ஆவண பட இயக்குனர் திவியா மீது தொடரும் குற்றசாட்டுகள் : II

  இந்த ஆவணப்படமானது, இரண்டு சேதிகளை முன்வைக்கிறது. ஒன்று துப்புரவுத் தொழிலாளர்களை கையால் மலமள்ளும் தொழிலாளர்களாக(manual scavenging)அங்கீகரிக்கவேண்டும் என்பது; பாதுகாப்புக் கருவிகளோடு பணியாற்றுபவர்களை(manual scavenger) கையால் மலமள்ளும் தொழிலாளர்களாகக் கணக்கில்கொள்ள வேண்டும்; இதற்காக சட்டத்தைத் திருத்தவேண்டும்; அப்படிச் செய்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பும் நிவாரணம் கிடைக்கும் என இந்தப் படம் சொல்கிறது. இது ஒரு என்.ஜி.ஓ. பார்வை. பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் எனப் படம் சொல்கிறது; தலித் தலைவர்களின் பேட்டிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் படத்தில் தங்களுக்கு பாலியல்சீண்டல் தரும் ஒப்பந்தகாரர்களைப் பற்றி துப்புரவுத் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். பழனியில் துப்புரவுத் தொழிலாளர்களை மொத்தமாக வேலைநீக்கம் செய்தபோது, ஒரு தொழிலாளர் தீக்குளித்தார். இவற்றில் எல்லாம் காரணமாக இருக்கும் அதிகாரிகள், ஒப்பந்தகாரர்களிடம் கேமரா போயிருக்கவேண்டும். அப்படிப் போகவில்லையே? துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பெரும்பாலாக எதிராகச் செயல்படும் சாதி இந்துக்களின் மீதான குற்றச்சாட்டுக்குள் இந்தப் படம் போகவில்லை.

  பழனியில் தீக்குளிப்புக்குக் காரணமான அரசு அதிகாரிகளை, ஒப்பந்தகாரரை இந்தப் படம் கேள்விக்கு உட்படுத்தவில்லை. ஆனால், படத்திலும் பின்னர் வெளியிலும் மலக்குழிக்குள் இறங்கி இறந்துபோனவரின் மைத்துனர் விடுதலைவீரன் என்பவர், இழப்பீட்டில் கமிசன் வாங்கிக்கொண்டார் என்று அம்பலப்படுத்தி, அதை ஒரு இயக்கமாக எடுக்கிறார். துப்புரவுத் தொழிலாளர்களைச் சுரண்டும் பிரச்னையில், தலித்துகளை மட்டும் இலக்காக வைத்து அம்பலப்படுத்தி இயக்கம் எடுப்பது தலித் விடுதலை அரசியலை அழித்தொழிக்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். தலித்திய அரசியலில் குறைகள் உண்டு; அவை சரிசெய்யப்படவேண்டும். ஆனால், தலித் அடையாள அரசியல் மீது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்போதுமே காழ்ப்புணர்வு உண்டு. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ஐவிட அம்பேத்கரை வீழ்த்துவதில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

  –எழுத்தாளர் மாலதி மைத்ரி

 40. ஆவண பட இயக்குனர் திவியா மீது தொடரும் குற்றசாட்டுகள் : III

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவுப் பணியை 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த முறைக்கு மாற்றிவிட்டார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மாறும். அதன் பிறகு இன்றுவரை முன்னேறிய சாதி என்பவர்களும் துப்புரவுப் பணியில் ஈடுபடுகிறார்கள். எனக்குத் தெரிந்து பல மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் இந்தப் பணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஓர் ஆவணப்படத்தில் அருந்ததியர்கள், பள்ளர், பறையர், ஒட்டர்கள் மலமள்ளும் தொழிலில் இருக்கிறார்கள் என்று படம் சொல்கிறது. ஆனால் பிற சாதி இந்துக்களும் மலமள்ளும் தொழிலில் இருப்பதை ஏன் காட்டவில்லை என பள்ளர் சமூகத் தோழர்கள் கேள்வி எழுப்புவதை சரி என்றே நினைக்கிறேன். இந்தப் படம், பத்தோடு பதினொன்றாகப் போகக்கூடியது அல்ல; இணையத்தில் எங்கோ ஒரு நாட்டில் இதை ஆவணப்படமெனப் பார்ப்பவர்களுக்கு, முழுமையான சித்திரம் காண்பிக்கப்படவேண்டும். சில குறைகள் நீங்கலாக, இந்தப் படத்தை எடுத்த முயற்சியைப் பாராட்டுகிறேன்” என்கிறார் எழுத்தாளர் மாலதி மைத்ரி

  -–எழுத்தாளர் மாலதி மைத்ரி

 41. ஆவண பட இயக்குனர் திவியா மீது தொடரும் குற்றசாட்டுகள் : IV

  திவ்யாவுக்கு முன்னோடியாகவும் தமிழகத்தின் முக்கிய ஆவணப்பட இயக்குநருமான ஆர்.பி. அமுதன், திவ்யாவுக்கு எதிரான ஆபாச, வன்முறை தாக்குதல்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறார். அவரே, ”படம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டியது இயக்குநரின் கடமை; இந்தக் கேள்விகள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருகின்றன”என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.

 42. குமார் உமக்கும் பாஸ்கரனுக்கும் அளித்த விளக்கங்களே அவர்களுக்கும். சாதியத்தை தூக்கி பிடித்து கொண்டு கொண்டை தெரிவது கூட தெரியாமல் பள்ளர் சாதிக்காக பேசுவதுபோல் உங்களின் “ஒத்த” கேள்வியே அவர்கள் கேட்கிறார்கள், அதை இங்கே பேஸ்ட் செய்து என்ன நிறைவேற்ற போகிறீர், முடிந்தால் எங்கள் பதில்களை அவர்களுக்கும் பேஸ்ட் செய்து விடுங்கள். நன்றி.

  ஆஹா யாரப்பா அது மாலதி மைத்திரி?
  \\தலித் அடையாள அரசியல் மீது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்போதுமே காழ்ப்புணர்வு உண்டு. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ஐவிட அம்பேத்கரை வீழ்த்துவதில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.\\

  ஹிஹிஹ் இது ஒன்றே போதுமே, நானும் அவரை எதோ சீரியஸ் பேர்வழி என்று நினைத்து விட்டேன். உண்மை கம்யூனிஸ்ட்டுகள் பற்றி அவரின் புரிதல் இவ்ளோ தானா? ‘எழுத்தாளர்’ ஜெயமோகன் இதை விட சிறப்பாக புரிந்து வைத்திருக்கிறாரே.

  • சின்னா அவர்களே ,

   அம்பேத்கரை வீழ்த்த /அவரின் கொள்கைகளை நீர்த்து போக செய்ய வீழ்த்த so called கம்யுனிஸ்டுகள் கடந்த நூறு ஆண்டு காலத்தில் செய்த வரலாற்று சதி வேலைகளை பட்டியல் இட்டால் அவற்றை வினவு வெளியிடாது என்றே நினைகின்றேன். அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்த எதிர்ப்பை விடகம்ம்யுநிடு கட்சியில் இருந்து அதன் தொழில் சங்கத்தில் இருந்து வந்த எதிர்ப்புகளை /சதி திட்டங்களை தேடி படியுங்கள். அப்ப தான் நிதர்சனம் உங்களுக்கு புரியும் சின்னா.

   இன்றைய நிலையில் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு கருத்தாகங்கள் மீது கம்யுனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் விளக்குவீர்கள் என்றால் உங்கள் மீது எமக்கு நம்பிக்கை பிறக்கும். ஆனால் அது நடக்காது தானே ? மேலும் திருப்பூர் குணா கம்யுனிச கோழ்டிகளும் , கொற்றவை போன்ற கம்யுனிச உதிரிகளும் அம்பேத்கார் மீது வன்மத்துடன் ,உள்நோக்கத்துடன் விமர்சனம் வைப்பதும், புத்தகம் எழுதுவதும் எந்தவகையில் சேரும் என்று முடிந்தால் பதில் அளியுங்கள்.

  • சின்னா,பொது வெளியில் இந்த பிரச்னை சார்ந்து பேசுவோர் எல்லாம் உங்களுக்கு நகைப்புக்கு இடமானவர்கள் என்றால் அதில் உங்களின் திமிர் தனம் ,இறுமாப்பு, ஜனநாயக மறுப்பு மட்டுமே வெளிப்டுகிறதே தவிர உங்களின் கொள்கைகள் வெளிப்டவில்லையே சின்னா! கொஞ்சம் நிதானத்துடன் எதிராளியை அணுகுங்கள். ஜெயமோகனுக்கும் கூட இந்த விசயத்தில் பதில் அளிக்க உரிமை உண்டு. அவரின் கருத்து எப்படி பட்டது என்பதனை விமர்சிக்கலாமே தவிர முன் கூட்டியே பேசுவது என்பது தவறு தானே?

 43. சின்னா //குமாரு சரியாக புரிந்து பேசவும். நானும் வினவும் கூறுவது திணிக்கப்பட்ட ஒரு அவலத்தை, நீரும் பாஸ்கரனும் (உங்கள் நீண்ட வியாக்கியானங்களை விடுத்து மொட்டையாக சொல்வதாக இருந்தால் ) – இல்லை இல்லை பட்டியல் சாதி மற்றும் சூத்திரர் மலம் அள்ளவே பிறந்தது போலவும், அதில் சூத்திரர் மட்டும் தம்மை தவிர்த்து பள்ளரை படமெடுத்து அவமானபடுதுவதாகவும் கருத்து கொள்கின்றீர்கள். ///

  இதுதான் உண்மை. இப்படியான நோக்கில்தான் சூத்திர திவ்யா, தன்னுடைய சாதியை விட்டுவிட்டு, பட்டியல் மற்றும் பழங்குடிகளைப் பதிந்துள்ளார் என்பதுதான் குற்றச்சாட்டு.

  இந்த தொழிலை எவனும் திணிக்கல. வறுமையே இத்தொழிலைச் செய்யும்படி மக்களை தூண்டியுள்ளது. வறுமைக்கு சாதி இல்லாத போது, இத்தொழல் செய்யும் அனைத்துச் சாதியினரையும் ஆவணப்படுத்துவதே சரியான செயல்.

  மாறாக, இதில் பட்டியல் மற்றும் பழங்குடிகளை மட்டும் ஆவணப்படுத்துவதுதான், தொழிலில் வர்ணத்தை புகுத்தும் ஆரிய வர்ணாசிரமத் தத்துவம். பள்ளர்கள் மீதான இயக்குநரின் சுயசாதி வெறி.

  இது இருக்கட்டும். மேலே கேள்வி எழுப்பியுள்ள சமூக முற்போக்குவாதிகளின் கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்காமல், கக்கூஸ் திவ்யா ஓடி ஒளிய வேண்டிய தேவை என்ன?

  வினவும் என் முன்னர் நான் எழுப்பி இருக்கும் வினாக்களுக்குப் பதிலளிக்காமல் இருப்பதன் காரணமென்ன?

  • வினவு/சின்னா மற்றும் திவியாவின் சாதி வெறியை (சாதிய நுண் அரசியலை)ஆதரிப்போர் B.பாஸ்கரின் நியாயமான வாதங்களுக்கு பதில் அளிக்கவும். போன மாதம் கூட சென்னை உயர் நீதி மன்றம் இட ஒதுக்கீட்டுடன் தான் துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க விளம்பரம் செய்து உள்ளது. அப்படி எனில் அதில் பட்டியல் சாதி மக்கள் மட்டும் தான் அந்த வேலைக்கு மனு போட்டு உள்ளார்களா? உண்மையை கூறுவது என்றால் BC பிரிவில் கிராமணி சாதியை சேர்ந்த உள்ள நான் அந்த வேலைக்கு மனு போடலாம் என்று இருந்த போது வயது வரம்பு தடுத்து விட்டது.(என் வயது 46). படித்தும் சரியான வேலை கிடைக்கலை. குடும்ப சூழல். அது அரசு வேலை என்றால் கிடைத்தால் செய்வதற்கு என்ன என்று தான் மனம் இப்போதும் கூறுகின்றது. அடுத்து தனியார் நிறுவனங்களில் துப்புரவு தொழிலை ஹவுஸ் கீப்பிங் என்ற பெயரில் செய்வோர் எல்லாம் என்ன பட்டியல் சாதி மக்கள் மட்டும் தானா? இந்த எளியோனின் கேள்விகளுக்கு நியாயமா பதில் சொல்லுங்க.

 44. பாஸ்கரன்,குமார் உங்களின் கோரீக்கையின்படீயே பள்ளர் மட்டுமல்ல கள்ளரும் மலமள்ளுவதாக அந்த ஆவணப்படத்தீல் தோழர் திவ்யா காட்சீபடுத்தியிருந்தால்…நேர்மையாக பதீல் சொல்லுங்கள்.கக்கூஸ் படம் பற்றீ உங்கள் விமர்சனம் என்ன?
  பள்ளர் கள்ளர் பூச்சு இன்றீ படம் பற்றி வீமர்சியுங்களேன் ஒரு பார்வையாளனாக

  • இல்லாத ஊருக்கு வழியை கேட்டா எப்படி பதில் சொல்வது நெப்போலியன்? இந்த ஆவண படத்தின் இயக்குனர் சமுகத்தில் எழுப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இறுமாப்புடன் இருபதற்கு என்ன காரணம் என்று கேட்டு சொல்லுங்கள். வினவும் இங்கே எழுப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கின்றது. இயக்குனரும் பேசவே மாட்டேன் என்கின்றார். இது என்ன மாதிரியான அணுகுமுறை. வர்க்கமாக அணுகப்பட வேண்டிய இந்த மலம் அள்ளும் சட்ட விரோத அவலத்தை சாதியமாக அணுகியது ஏன் என்று முதலில் நீங்கள்/வினவு/திவியா தான் பதில் அளிக்கவேண்டும். குழப்பிக்கொண்டு இருக்காதீங்க நெப்போலியன். என் தரப்பில் நான் வைத்து உள்ள வாதங்களுக்கு பதில் சொல்லுங்க.நடக்காத ஒன்றுக்கு எல்லாம் பதில் சொல்வது என்பது என்ன மாதிரியான விவாத/வாத முறை சொல்லுங்க பார்க்கலாம்?

 45. பாஸ்கர் B,

  ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை :

  ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் திவ்யா என்ற திவ்யபாரதி. இவர் மீது புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் திவ்யபாரதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கக்கூஸ் என்ற தலைப்பிலான எனது ஆவணப்படம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும், இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

  என் மீதான புகார் தவறானது. நான் வழக்கறிஞர் படிப்பை முடித்து பதிவு செய்வதற்காக காத்திருக்கிறேன். கையால் மலம் அள்ளும் முறைக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இப்பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க போராடி வருகிறேன். தவறான நோக்கத்தில் குறும்படத்தில் எதையும் பதிவு செய்யவில்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்குப்பின், திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

  ————– * ——————-
  பாஸ்கர்,

  குறிப்பு : திவியா மீது போடப்பட்ட வழக்கு பிரிவுகளை பற்றிய கேள்வியை உங்களுக்கு எழுப்பி இருந்தேன். இன்னும் உங்களிடம் இருந்து பதில் இல்லை. அவர் மலம் அல்லும் வேளையில் தேவேந்திர குல மக்களும் ஈடுபடுகிறார்கள் என்பதால் மேலும் அவர் கள்ளர் பிரிவை சேர்தவர் என்பதால் அவர் மீது 153A பிரிவில் (இரு பிரிவினருக்கு எதிராக பகைமையை தூண்டுதல்)என்ற பிரிவின் கீழ் வழக்கு போடுவது என்பது ஏற்க்ககூடியதே… அதிலும் கூட அவர் அதனை நீதி மன்றத்தில் எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுபட சாத்தியங்கள் அதிகம் உண்டு.

  அதே நேரத்தில் மற்ற இரு பிரிவுகளில் அவர் மீது வழக்கு எதற்கு? பழிவாங்கும் நோக்கமா? மற்ற இரு பிரிவுகளும் என்னவென்றாவது நீங்கள் அறிவீர்களா?

  505 1(b) of IPC மற்றும்66F ஆகிய பிரிவுகள் என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா? என்ன கொடுமை சார் ?

  5051(b)=with intent to cause, or which is likely to cause, fear or alarm to the public, or to any section of the public whereby any person may be induced to commit an offence against the State or against the public tranquility

  66F = Punishment for cyber terrorism. ( Whoever commits or conspires to commit cyber terrorism shall be punishable with imprisonment which may extend to imprisonment for life)

  இந்த பிரிவுகளில் எல்லாம் போலிசு வழக்கு தொடுக்குது என்றால் போலீசிடம் மனு கொடுத்த உங்கள் சாதிக்காரர் பழிவாங்கும் நோக்கத்துடன் தானே செயல்படுகின்றார்? வாழ்நாள் சிறை தண்டனை கொடுக்கபடும் அளவுக்கு திவியா அப்படி என்ன குற்றத்தை செய்து உள்ளார் பாஸ்கர்B? விளக்க முடியுமா ?

 46. C.nepolien //
  பாஸ்கரன்,குமார் உங்களின் கோரீக்கையின்படீயே பள்ளர் மட்டுமல்ல கள்ளரும் மலமள்ளுவதாக அந்த ஆவணப்படத்தீல் தோழர் திவ்யா காட்சீபடுத்தியிருந்தால்…//

  சகோ. முதலில் அந்த திவ்யா பாரதியின் சுய சாதி வெறியை பொதுவெளியில் ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள்.

  ஆவணப்படத்தில் எந்தவொரு சாதியையும் அடையாளப்படுத்துவதை திருத்தச் சொல்லுங்கள்.

  இதுவரை ஆவணப்படத்தை பொதுமக்களிடம் தவறான கருத்தாக்கத்தை விதைத்ததற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்.

  இவையெல்லாவற்றையும் விட, திவ்யா பாரதி செய்தது தவறென, இதே வினவுத்தளத்தில் ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிடச் சொல்லுங்கள்.

  அடக், குறைந்தது c.nepolian அவர்களாவது, திவ்யா பாரதியின் சாதி வெறியைக் கண்டித்து, இதே தளத்தில் ஓரெதிர்ப்புப் இடுகையாவது (comment ) பதிவிடுங்கள்.

  இதற்குப் பிறகு, படம் பற்றிய விவாதத்திற்குள் நாம் செல்வோம்.

  வினவு மூச்சே விடாம இருப்பது ஏனோ? இதுதான் காரல் மார்க்ஸ், லெனின் மூலதனமோ?

  பாத்துங்க இப்பவே CPI ( ML) – ******** Liberation னு சொல்லிட்டு இருக்காங்க.
  இந்த திவ்யாவின் சாதிவெறியை ஆதரிச்சு,****** Liberation அப்டீன்றத உண்மையாக்கிடாதீங்க தோழர்களே!

 47. குமார் உங்கள் 38.1 பதிலை விட்டுவிட்டேன்,
  உங்கள் முதல் 3 பாயிண்டுகளுக்கும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான்காவது ,பாருங்கள் சாதியத்தை அம்பலபடுத்த முயற்சி செய்பவர்களிடம் உன் சாதி என்சாதி என்று படங்களில் வரும் பஞ்சாயத்து சாதி சண்டை போல் பாய்கிறீர்? அதுதான் முன்னமே சொல்லிவிட்டேனே சாதியை தூக்கி பிடிப்பவர்கள்தான் இந்த அவலம் தொடரவே காரணம் என்று? பச்சை சுயநலமாக சாதிவேறியரகவும் பேசிக்கொண்டு உங்களால் எப்படி மற்ற கட்டுரகைளில் மணிகண்டன் போன்றோரை கேள்வி கேட்க முடிகிறது? ஒரு வகையில் நீங்களும் அவர் போல்தானே??

  உண்மையில் முதலாளித்துவ அறிஞர்களுக்கு தான் பல நைச்சியமான விதண்டாவாதங்களை உருவாக்கி கம்மியூனிஸ்ட்ட்டுகள் மீது சேறடிக்க அவசியம் உண்டு. இலக்கிய வாதிகள் மற்றும் உங்களை போன்ற சாதிவெறியர்கலும் கூட . எங்களுக்கு ஒளிக்க ஏதுமில்லை ஐயா, மக்களை நேசிப்பவர்கள். எங்களுக்கு நுண் அரசியல் பண்ண தெரியாது பண்ணவும் தேவை இல்லை, நரிகளுக்கே நுண் அரசியல். மக்கள் நலனை முன்னிருத்துபவர்களை ஆதரிப்போம், மக்கள் நல விரோதி என்று தெரிந்தால் எதிர்ப்போம். எளிமை. வேறொன்றும் இல்லை, இங்கே அதை யாரும் தமது சாதி மதத்தை பாதிப்பதாக எடுத்து கொண்டு வந்தால் அவர்கள் மக்கள் நல விரோதிகளே. ஆனால் பாருங்கள் உங்கள் வழக்குகள் வாதங்களுக்கு நிச்சயமாக ஆளும் அதிகார வர்க்கத்திடம் இருந்து ஆதரவு வரும். அதுதானே பிரித்தாளும் குயுக்தி. கபாலி முன்னேற்றம். மகிழ்ச்சி.

  இப்பொழுதே திவ்வியயா ‘ஆம் கள்ளர் பள்ளரை விட உயர்தவர் என்று காட்டவே படமெடுத்தேன்’ என சொல்லட்டும், எதிர்க்கும் முதல் ஆள் நான் தான் .உங்கள் குற்றச்சாட்டான பள்ளர் சாதியை கேவலபடுத்தி நாம் அப்படி என்ன சாதிக்க போகிறோம்? இல்லை நான் கேட்டதில் என்ன தவறு? அமெரிக்காவில் எல்லாரும் பள்ளர் கள்ளர் ஒப்பீட்டிலேயே பங்குச்சந்தை நிலவரத்தை கணிக்க போவது போல் ? குறுகிய சாதிப்ப் புத்தியை விடுங்கள். ச்சே வெறுப்பாக இருக்கிறது.

  • உங்களிடம் சேர்ந்து கும்பியடிக்கும் அளவுக்கு எனக்கு நேரமோ, சக்தியோ இல்லை சின்னா . மன்னித்து விடுங்கள் என்னை. அதே நேரம் இறுதியாக நான் கூறவிரும்புவது என்னவென்றால் சாதி என்ற இழிவான நிலை சமுகத்தில் இருக்கும் வரைக்கும் ஒடுக்கபட்ட சாதி மக்களை சிறுமை படுத்தும் வேலைகளை கம்ம்யுநிடுகளாகிய நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கூட செய்யாதீர்கள். நன்றி

 48. 505 1(b) of IPC மற்றும்66F ஆகிய பிரிவுகள் என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா? என்ன கொடுமை சார் ?

  5051(b)=with intent to cause, or which is likely to cause, fear or alarm to the public, or to any section of the public whereby any person may be induced to commit an offence against the State or against the public tranquility

  66F = Punishment for cyber terrorism. ( Whoever commits or conspires to commit cyber terrorism shall be punishable with imprisonment which may extend to imprisonment for life)

  இந்த பிரிவுகளில் எல்லாம் போலிசு வழக்கு தொடுக்குது என்றால் போலீசிடம் மனு கொடுத்த உங்கள் சாதிக்காரர் பழிவாங்கும் நோக்கத்துடன் தானே செயல்படுகின்றார்? வாழ்நாள் சிறை தண்டனை கொடுக்கபடும் அளவுக்கு திவியா அப்படி என்ன குற்றத்தை செய்து உள்ளார் பாஸ்கர்B? விளக்க முடியுமா ? //

  குமார் : என்னைப் பொறுத்தவரை சாதி வெறியர்களுக்கு என்ன தண்டணை வேண்டுமானாலும் கொடுப்பது தவறில்லை.

  இவ்வளவு பிரச்சனைகளைத் தூண்டிவிட்டு, கமுக்கமாக தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பரப்பிரியைக்கு எப்படி வேண்டுமானாலும் பதிலடி தரலாம் என்பதே என் நிலைப்பாடு.

  “பள்ளர்களின் எதிர்ப்பு வினைக்கு எதிர்வினையென்பதை” இங்கே யாரும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை!

  சும்மா இருந்த பெண்ணையா, கைப்பேசியில் காசு செலவழித்து ஆபாசமாகத் திட்டினர்?

  இதைவிடுங்க. முதலில் தொடர்பே இல்லாத சித்திரைச் செல்வி விவகாரத்தை புதிய தமிழகத்துடன் கோர்த்துவிட்டனர்.

  இப்போது அது முற்றிப் போய் அண்ணன் ஜான் பாண்டியனையும் இப்பிரச்சனையை வைத்து தனிமைப்படுத்தப் பார்க்கிறாரபார்க்கிறார்களென்றால்,நோக்கம் என்னவென்தை நாங்கள் அறியாமலில்லை.

  குமரன் அண்ணன். எங்களுக்கு ஏற்கனவே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது, கக்கூஸ் திவ்யாவின் இப்பிரச்சனை வேற!

  இப்பிரச்சனையில் பள்ளர்களை தலித்தியம், கம்யூனிசம், சுயசாதி வெறியர்கள், திராவிடர்கள், தமிழ்த்தேசியவாதிகள், ஆளும் அரசு என அனைவரும் எதிர்க்கும் போது, அதற்கெதிராக என்ன செய்தாலும் தவறேயில்லை.

  ஆளுமரசு என்றைக்கும் பள்ளர்களை அழிப்பதில்தான் முனைப்பு காட்டும் என்பதே வரலாறு மற்றும் அரசின் இயங்கியலே அதுதான்.

  அதனால், 100% இந்த வழக்கில் பள்ளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது. தீர்ப்பு ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவான கருத்தியலை உருவாக்கிய கக்கூஸ் திவ்யாவிற்குச் சாதகமாகத்தான் வரும்.

  அதன் முதல்படிதான் இந்த வழக்கு விசாரணைத்தடை. 🙂 So Dont Worry.

  • நண்பர் பாஸ்கர் B ,

   குற்றம் என்னவோ அதற்கான சட்ட பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டால் தான் வழக்கில் பிராசிகியுசன் தரப்பு வெல்ல முடியும் என்பது அடிபடையான சட்டத்தில் உள்ள பாடம்.ஒத்த கடை போலிஸ் இன்ஸ்பெக்டர் உங்கள் சாதிகாரர் என்பதற்காக மனு கொடுத்தவரின் மனுவில் உள்ள விசங்களை பற்றி குறைந்த பட்ச அளவு கூட விசாரிக்காமல் FIR போடுகின்றார் என்றால் அது நீதி மன்றத்தில் அந்த வழக்கு நீதி மன்றத்தில் எப்படி நிற்கும் என்று உங்களுக்கு தெரிந்த சட்ட வல்லுனர் “அண்ணா” விடமே கேட்டு தெளிவு பெறுங்கள் நண்பரே.! எனக்கு தெரிந்த சட்டவாதம் என்னவென்றால் 153A பிரிவில் (இரு பிரிவினருக்கு எதிராக பகைமையை தூண்டுதல்)என்ற பிரிவின் கீழ் வழக்கு போடுவது என்பது மட்டுமே நீதி மன்றத்தில் வாதாடுவதற்கு உரிய பிரிவு.

   //சும்மா இருந்த பெண்ணையா, கைப்பேசியில் காசு செலவழித்து ஆபாசமாகத் திட்டினர்? // இது பெண்களின் மான்பிர்ற்கு எதிரான செயல் என்பதால் இதற்கும் போலிசு திட்டியவர்கள் மீது வழக்கு தொடுக்க சாத்தியம் இருந்தும் ஏன் ஒரு வழக்கு கூட பதியபட வில்லை என்று எண்ணிப்பாருங்கள். போலிஸ் யார் பக்கம் இருக்கிறது என்றும் எண்ணிப்பாருங்கள்..திவியா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்தும் அசிங்கமாக திட்டியவர்களில் ஒருவர் கூட வழக்கு பதியபடவில்லையே ! ஏன் ?Section 294 of the Indian Penal Code lays down the punishment for obscene acts or words in public.
   போலிஸ் மற்றும் அரசு இன்று உங்களுக்கு சாதகமாக இருப்பது மட்டுமே காரணம்.

 49. இல்லாத ஊருக்கு வழி கேட்பதாக எப்படி குமார் நீங்கள் அதை அணுகமுடியும்?நீங்கள் கேட்பது என்ன?மலமள்ளும் சாதியாக
  ஏன் இயக்குனரால் கள்ளர் சாதியினரையும் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதுதானே?சரி அப்படி காட்சீப்படுத்தியீருந்தால் நீங்கள் அமைதீயாக போய்வீடுவீர்களா என்பதே என் கேள்வீ.பதில் சொல்லுங்கள்.இந்தத்திணிக்கப்பட்ட மலமள்ளும் அவலத்தை எந்த சாதியீனர் செய்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டீயதா இல்லையா?அதற்காக நாம் போராட வேண்டுமா கூடாதா?இந்தக் கோணத்தீல் நீங்கள் பதில் அளீத்திருக்கலாம் அல்லவா?இப்போது சொல்லுங்கள் என் கேள்வி தவறா?இன்னுமொரு பார்வை.கமல் தேவர்மகன் படம் எடுத்தார்.இளையராஜாவோ அதைப்போற்றிப்பாடச் சொன்னார்.கமலையும் இளையராஜாவையும் சாதியத்தைப்போற்றுவதற்காக கடும் கண்டணம் தெரீவித்து சாதி ஒழிப்பிற்காக போராடுவீர்களா அல்லது தேவர்மகன் எடுத்தால் என்ன பள்ளர் மகன் என்றும் ஒரு காவியம் படையுங்கள் என்று இளையரிஜா இசையில் கிறங்குவீர்களா?ஆவணப்படத்தின் மீது நீங்கள் காட்டும் எதிர்ப்பானது அந்த வகைப்பட்டதாகவே இருக்கின்றது.பரீசீலியுங்கள் தொடர்வோம்.

  • நெப்போலியன், முதலில் அந்த ஆவண படத்தை யுடியுபில் பார்த்துவிட்டு பேசுங்கள்….கையால் மலம் அள்ளும் தொழிலை செய்பவர்கள் இன்ன இன்ன சாதியினர் என்று கூறிவிட்டு அடுத்தாக நகர் புற ஏழைகள் என்று கூறுகின்றார் இந்த ஆவண படத்தின் இயக்குனர். BC மற்றும் MBC வகுப்புகளில் உள்ள சாதி பெயர்கள் எல்ல்லாம் இந்த இயக்குனருக்கு தெரியாதா? கூறுவதில் என்ன தயக்கம். முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சனையை வர்கமாக பார்த்தால் அங்கு சாதி வரவேண்டிய தேவையே இல்லை… பிரச்சனையை சாதி ரீதியாக பார்த்தால் அந்த தொழிலில் உள்ள அனைத்து சாதிகளையும் தானே குரிபிடவேண்டும்? இந்த எளிய நியாயம் கூட தெரியாமல் இளையராஜா, கழுதை, கமல் என்று எண்ணத்துக்கு தொடர்பின்றி பேசிகிட்டு இருகீங்க?

   இன்னும் கூட என்னால் கூற முடியும்… அருததியர் சமுக மக்கள் அனைவரும் அந்த வேலையை செய்வது இல்ல. அப்படி இருக்க அவிங்க சாதி பெயரையும் இணைத்து பேசியது திவியாவின் சாதி வெறி நுண் அரசியல் தான்.

 50. பாஸ்கரன் சகோ சாதிவெறி என்பதற்கு பொருள் புரியாமல் உண்மையிலேயே உள்ளீர்களா அல்லது தெரிந்தும் மறைக்கிறீர்களா?இரண்டாவதற்குதான் வாய்ப்பு உள்ளது அதிகமாய்.பள்ளர்கள் சக்கிலியரோடும் பரையரோடும் கொண்டுஇருப்பது சாதிவெறீ இல்லையாம்.கள்ளராயினும் (மன்னிக்கவும் தோழர் திவ்யபாரதி) பீ நாற்றத்தை வீடவும் கேவலமாய் நாரும் சாதீய நாற்றத்தை பதிவு செய்தவர் சாதீ வெறியராம்.நீங்கள் காவிக்கஸ்டடியீல் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி.முதலீல் உங்கள் சிந்தையில் துறீர்க்கும் தாமரையை வெட்டி வீசுங்கள்.துர்நாற்றம் தாங்க இயலவில்லை.

 51. சின்னா//இப்பொழுதே திவ்வியயா ‘ஆம் கள்ளர் பள்ளரை விட உயர்தவர் என்று காட்டவே படமெடுத்தேன்’ என சொல்லட்டும், எதிர்க்கும் முதல் ஆள் நான் தான் .உங்கள் குற்றச்சாட்டான பள்ளர் சாதியை கேவலபடுத்தி நாம் அப்படி என்ன சாதிக்க போகிறோம்? இல்லை நான் கேட்டதில் என்ன தவறு? அமெரிக்காவில் எல்லாரும் பள்ளர் கள்ளர் ஒப்பீட்டிலேயே பங்குச்சந்தை நிலவரத்தை கணிக்க போவது போல் ? குறுகிய சாதிப்ப் புத்தியை விடுங்கள். ச்சே வெறுப்பாக இருக்கிறது //

  கொஞ்சம் கூட சிந்திக்கும் புத்தி கிடையாதா சகோ?

  கள்ளர், பள்ளரை விட உயர்ந்தவர் என்று நேரடியாகச் சொல்வதை எதிர்ப்பீர் என்கிறீர்கள்! சரி.

  இதே கருத்தைத்தான், இப்படமும் சொல்கிறது என்பதை உங்களால் உணர முடியவில்லையா?

  இத்தொழிலில் சக்கிலியன் மட்டுமே இருப்பதாய் சொல்வது தீண்டாமைனு படத்திலேயே சொல்லப்பட்டுள்ளதே!

  அதைப் போலவேதான், இத்தொழிலில் பட்டியல் சாதிக்காரய்ங்க மட்டும் இருப்பதா சொல்வதும், அச்சாதிகளை பதிவு செய்ததும் தீண்டாமையா படவில்லையா?

  ” நாயுடு பட்டம் ஒழியாமல், சூத்திரப் பட்டம் ஒழியாதுனு” சொல்லாம

  “பறையர் பட்டம் ஒழியாமல் சூத்திரப் பட்டம் ஒழியாதுனு”

  சூத்திரப்பட்டத்தில் இல்லாத பறையர் சாதியை சூத்திர சாதியாகக் கோர்த்துவிட்டு, தன்னுடைய சூத்திர நாயுடு சாதியை காப்பாற்றிக் கொண்ட இராமசாமியின் நுண்ணரசியலை அன்றைக்கே உணர்ந்திருந்தால்,

  இன்னைக்கு நாயுடு சாதிக்காரனெல்லாம் தன்னுடைய சூத்திர சாதியை, உசந்த சாதினு நினச்சிட்டு திரிய முடியுமா?

  // எங்களுக்கு ஒளிக்க ஏதுமில்லை ஐயா, //

  ஒளிக்க எதுவும் இல்லையெனில், கள்ளர் சாதியில் மலமள்ளும் தொழிலாளர்களை ஆவணத்தில் ஒளிக்க வேண்டிய தேவையென்ன?

  அதெப்படி சகோ, நுண்ணரசியல் செய்து கொண்டே, நுண்ணரசியல் உங்களுக்குத் தெரியாதுனு பீலா விடுறீங்க? ஹி ஹி ஹி. செம்ம காமிடி.

  இதுல நரி புலினு ஒப்பீடு வேறு! ?

  • சாதிப் படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் இழிவு ஒழியாமல், அதற்கு மேல் இருக்கும் இழிவு ஒழியாது…

   தனக்கு ஒரு சமூகப் பிரிவை இருத்தி வைப்பதும், அவர்களை ஒடுக்குவதும் ஒழியாமல், தன் மீதான சாதி ஒடுக்குமுறை ஒழியாது.

   சூத்திரர்களின் ஒடுக்குமுறை ஒழியாமல், சூத்திரர் மீதான ஒடுக்குமுறை ஒழியாது..
   – பெரியார் சொன்னதை இப்படி தான் நான் புரிந்து கொள்கிறேன்.

   ///தன்னுடைய சூத்திர நாயுடு சாதியை காப்பாற்றிக் கொண்ட இராமசாமியின் நுண்ணரசியலை ///

   நீங்க மெத்தப்படித்தவர் என்பதால் எங்கே இருந்து இதை படித்து கற்றுக் கொண்டு வந்தீர்கள்? இதையெல்லாம் எங்க இருந்துங்க கத்துகிட்டு வர்ரீங்க?

   ஆர்.எஸ்.எஸ்-காரன்கிட்டயா? இல்ல பின்நவீனத்துவத்துல இருந்தா? இல்லன்னா இது தான் தலித் அடையாள அரசியலா?

  • உளறிகிட்டு இருக்கீங்க பாஸ்கர் B. “சூத்திரர்” என்ற சொல்லுக்கு பொருள் “வேசி மகன்” என்ற விசயத்தை ஊர் ஊராக பேசியவர் எங்க பெரியார் அவர்கள். அப்படி பட்டவர் சூத்திர நாயிடு” பட்டதுடன் அலையவேண்டிய அவசியம் கொஞ்சம் கூட அவருக்கு இல்லை.மேலும் ரெட்டியார், நாயுடு ஆகிய சாதியினர் தம்மை “சத் சூத்திரர்கள்” என்று கூறி பெருமை பட்டுக்கொண்டு இருந்த தருணத்தில் பெரியார் கூறியது என்ன தெரியுமா? போங்கடா வெங்காயம்….. “சத்சூத்திரர்” என்றால் நல்ல “தெவுடியாபையன்” என்று கூறி சாதிய பெருமை பட்டுக்கொண்டு இருந்த ரெட்டியார்,நாயுடு போன்ற ஆண்டை சாதியினரின் பெருமிதத்தை அடித்து நொறுக்கியவர் எங்க பெரியார்.

   ஆமாம் எல்லாத்துக்குமே தலை கீழ தான் சிந்திபிங்க்லா நண்பரே? தமிழ் நாடே நீட் வேண்டாம் என்றால் புதிய தமிழகம் மட்டும் வேண்டும் என்பது போல பெரியாரின் கருத்தாக்கத்தையும் தலை கீழா தான் சிந்திப்பிங்களா நண்பரே?

   மேலும் எந்த சூழலில் இந்த கருத்துகளை பெரியார் அவர்கள் எங்கு இவற்றை பேசினார் என்றாவது உங்களால் உணரமுடிகின்றதா? உணர இயலாவிட்டால் அடுத்த பின்னுத்தில் விரிவாக சொல்கின்றேன் சகோ…
   //” நாயுடு பட்டம் ஒழியாமல், சூத்திரப் பட்டம் ஒழியாதுனு” சொல்லாம

   “பறையர் பட்டம் ஒழியாமல் சூத்திரப் பட்டம் ஒழியாதுனு” //

 52. C.nepolian //பாஸ்கரன் சகோ சாதிவெறி என்பதற்கு பொருள் புரியாமல் உண்மையிலேயே உள்ளீர்களா அல்லது தெரிந்தும் மறைக்கிறீர்களா?இரண்டாவதற்குதான் வாய்ப்பு உள்ளது அதிகமாய்.பள்ளர்கள் சக்கிலியரோடும் பரையரோடும் கொண்டுஇருப்பது சாதிவெறீ இல்லையாம்.கள்ளராயினும் (மன்னிக்கவும் தோழர் திவ்யபாரதி) பீ நாற்றத்தை வீடவும் கேவலமாய் நாரும் சாதீய நாற்றத்தை பதிவு செய்தவர் சாதீ வெறியராம்.நீங்கள் காவிக்கஸ்டடியீல் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி.முதலீல் உங்கள் சிந்தையில் துறீர்க்கும் தாமரையை வெட்டி வீசுங்கள்.துர்நாற்றம் தாங்க இயலவில்லை. //

  சகோ, எனக்குத் தெரியும். நான் சொன்னேன்ல. இந்த மாதிரியான சிந்தனைகள் பொதுபுத்தியில் வருமென.

  ” அதென்ன கள்ளராயினும்? ” என்ன சொல்ல வாறீங்க சகோ? கள்ளரா இருந்தாலும் பீ அள்ற பட்டியல் சாதிக்காரைங்களப் பத்தி பேசுறாங்கனு சொல்றீங்க! ஆகா. அருமை அருமை!

  நான் சொல்ல வருவதும் இதைத்தான். கள்ளரும் பீ அள்றத மறைச்சா, இந்த நெப்போலியன் மாதிரியான பொதுபுத்தி மக்கள்
  “கள்ளராயிணும்” போன்ற சாதி வெறிப் பேச்சுக்களை தவிர்க்க இயலாது.

  ஹி ஹி. தாமரை யார் மண்டைக்குள்ள இருக்குனு உணருங்க நெப்போலியன்.

  பள்ளர், பறையர், சக்கிலியருக்கிடையேயான சாதிப் பாகுப்பாடுகளை மூடி மறைச்சு கம்பு சுத்த நா ஒன்னும் தலித்தியவியாதி இல்ல சகோ.

 53. அக்காகி// இப்படித்தான் பிளேட்ட மாத்தி பேசுவீங்கனு முதலிலேயே தெரியும்.

  //சாதிப் படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் இழிவு ஒழியாமல், அதற்கு மேல் இருக்கும் இழிவு ஒழியாது… //

  சாதிப் படிநிலையில் பறையர்கள் கீழ்நிலையில் இருப்பதாக நினைக்க, *** யார் அதிகாரம் தந்தது?

  • சாதிய படிநிலையில் அவர்கள் பஞ்சமர் என்ற நிலையில் இருபதனை நீங்களும் நானும் ஏற்றுகொண்டு இருக்கும் ஹந்து மத தர்மம் கூறுகிறது பாஸ்கர். அதனை ஏற்றுகொண்டு தான் ஹந்து சமுகம் அவர்களை சமுக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கி வைத்து உள்ளது. அதற்கு எதிராக தான் தமிழ் நாட்டில் தொல்குடி தமிழர் சமுகத்தில் அபிரகாம் பண்டிதர் ,தோழர் திருமா உட்பட பல்வேறு தலைவர்கள் இன்று வரையில் போராடிக்கொண்டு உள்ளார்கள்.

   ஆனால் ஒன்று பாஸ்கர், சூத்திரர்(வேசி மகன்) என்ற சொல்லை விட பஞ்சமர்* என்ற சொல் அவ்வளவு இழிவான சொல் அல்ல பாஸ்கர். ஹிந்து மத வருண அமைப்பில் வராதவர்கள் தான் பஞ்சமர்கள். எனவே சாதி பெருமை அடித்துக்கொள்ளும் சூத்திரர்களும் , சூத்திர பட்டியலுக்கு வர துடிக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதற்காக வருத்தப்ட வேண்டும். நாம் அல்ல பாஸ்கர்.

   பஞ்சமர்->நால்வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்

  • ///நினைக்க///

   ஓ நினைப்பதால் தான் கீழ் நிலையா? மேல் நிலையாக நினைத்துக் கொண்டால் மேல் நிலையா?

   பிளேட்டை மாத்திப் போடவில்லை.. ஒரு புரிதலுக்காக தான் கேட்கிறேன்..

   இதையெல்லாம் எங்க இருந்துங்க கத்துகிட்டு வர்ரீங்க? ஆர்.எஸ்.எஸ்-காரன்கிட்டயா? இல்ல பின்நவீனத்துவத்துல இருந்தா? இல்லன்னா இது தான் தலித் அடையாள அரசியலா?

 54. கக்கூஸ் படத்தில் ஆட்சேபணைக்குரிய கருத்து ஏதும் இல்லை!
  – உ