privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியை எதிர்த்து ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !

மோடியை எதிர்த்து ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !

-

“மானிய  சிலிண்டருக்கு துப்பில்லை! ரேசன் அரிசிக்கு வக்கில்ல! இது யாருக்கான  அரசு?” என்ற முழக்கத்தின் அடிப்படையில்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.08.2017 அன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது.  ஆனால் ஆர்ப்பாட்டம் தினத்தன்று சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கையில், உதவி ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்  இருவரும்  ஆர்ப்பாட்டம் இங்கு நடத்தக் கூடாது என்றனர்.

ஏன் என்று கேட்ட போது இடம் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லி தொலைவில் உள்ள சுங்கச்சாவடி அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தை காட்டி அங்கு நடத்திக் கொள்ளுங்கள் என்றனர்.

புஜதொமு-வின் மாவட்ட செயலாளர் தோழர் சிவா இதற்கு நீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என சொல்லி விடலாம் என்ற போது, தற்போது இடத்தை மாற்றிவிட்டோம் என்றனர். வேண்டுமானால் AC–யிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றனர் இதற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய (சட்டம் – ஒழுங்கு) ஆய்வாளரிடம்  நமது நோக்கத்தை  வலியுறுத்தியதுடன், ஏற்கனவே புஜதொமு சார்பாக பணமதிப்பழிப்பு மற்றும்  IT துறையில் சட்ட விரோத வேலை பறிப்புக்கெதிராக, IT பிரிவு பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தியதை சுட்டிக்காட்டி, நீங்கள்  சொல்லும் இடத்தில் ஆர்ப்பாட்டம்  நடத்த முடியாது, என  கறாராக  கூறிய பிறகு போலீசு பணிந்தது.

பேருந்து நிலையம் அருகே துவங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு புஜதொமு -வின் மாவட்ட பொருளாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், கார்ப்ரேட் முதலாளிகளின் கைக் கூலிதான் மோடி என்பதை  பல்வேறு விவரங்களில் இருந்து  சுட்டிக் காட்டி இதற்கெதிராக அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் போராட வேண்டும் என அறை கூவினார்.

அவரைத் தொடர்ந்து கண்டன  உரையாற்றிய தோழர் சிவா, “சாப்பிட அரிசியும்  இல்லை! சமைப்பதற்கு சிலிண்டரும் இல்லை! யாரை வாழ வைப்பதற்கு  இந்த திட்டம்? மக்களை  பட்டினிக்கு தள்ளுவதற்கு  பெயர் உணவு பாதுகாப்பு சட்டமா? சிலிண்டருக்கு மானியமும், ரேஷன் மூடலும் மட்டும் அல்ல நாட்டு மக்கள் அனைவரது  உரிமைகளையும் வாழ்வதாரத்தையும் பறிப்பதும்தான் மோடி சொல்ல வரும் வளர்ச்சி என்றார்.

ஆர்ப்பாட்டதிற்கிடையே தோழர்கள் மோடி, எடப்பாடி மற்றும் இந்த அரசு கட்டமைப்பு எவ்வாறு மக்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதனை  அம்பலப்படுத்தும் விதமாக முழக்கமிட்டனர். இது பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதில்  பு.ஜ.தொ.மு -வின் கிளை சங்கங்கள், இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்  மாவட்டம். தொடர்புக்கு : 88075 32859.
_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி