Wednesday, June 3, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் - படங்கள்

அனிதா படுகொலையைக் கண்டித்து புமாஇமு போராட்டம் – படங்கள்

-

ரியலூர் மாணவி அனிதாவின் படுகொலைக்குக் காரணமான  மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகமெங்கும் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை – அண்ணாசாலையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரியில் மக்கள் அதிகாரம்  மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் இன்று (02-09-2017) தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசு ஆர்ப்பாட்டம் நடத்த விதித்திருந்த தடையை மீறி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தர்மபுரி ஆர்ப்பாட்டம்

வலுக்கட்டாயமாகக் கைது செய்யும் போலீசு

மாணவி அனிதாவின் படுகொலைக்கு மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் தான் காரணம் என மக்கள் முன் அம்பலப்படுத்தும் விதமாகவும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


மதுரையில் மக்கள் அதிகாரம் சார்பாக இன்று 2/9/2017(சனி) அன்று காலை மதுரை பெரியார் பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் மருது தலைமை தாங்கினார். இது பாஜக, எடப்பாடி கும்பல் இணைந்து நடத்திய பச்சைப் படுகொலை என்றும்,   ஏழை மாணவர்களை உயர்கல்வி, மருத்துவ கல்வி, ஆகியவற்றிலிருந்து அப்புறப்படுத்தி அதை மேடுக்குடி, பார்ப்பன, உயர்சாதிகளுக்கு மட்டுமேயான துறையாக மாற்ற வேண்டும் என்கின்ற பார்ப்பன பாசிசத்தின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதி தான் நீட் தேர்வு என்றும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினர்.

திருப்பூர் மக்கள் அதிகாரம் சார்பாக, திருப்பூரில் இன்று (02-09-2017) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. சகோதரன் ரோகித் வெமுலாவின் பாதையைத் தேரிந்தெடுத்தாயே. களத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ய உன் நெஞ்சுரம் எங்கே. வேறுபடிப்பை தெரிந்தெடுக்க ஒருவருடம் காத்திருக்கச் சொல்லும் துரோகிகளை அடையாளம் காட்டிச்சென்றாயே. பகல்பூரில் வஞ்சகத்துடன் படுகொலை செய்த கூட்டத்துடன் கைகோர்த்துள்ள நீதிமன்றத்தைக் கண்டு ஏமாந்தாயோ. உன் மீளா உறக்கம் எங்களை வீதியில் தள்ளியுள்ளதே நெஞ்சில் கனலோடு.

 2. உலகின் எந்த ஒரு இடத்தில் அநியாயங்கள் நடந்தாலும் கொதிப்பவன் எவனோ?… அவனே போராளி! என்ற சேகுவேராவின் வரிகளுக்கு உயிர் கொடுக்க அனிதாவின் ரூபத்தில் வாய்ப்பு வந்திருக்கின்றது.புரட்சியாளர்களே!… புறப்படுங்கள். வாய்ப்புகளைத் தவற விடுபவன் புரட்சியாளனாக இருக்க மாட்டான்.
  இறந்த நம் தங்கை அனிதாவிற்காக இதை நாம் செய்ய வேண்டாம்…இன்னொரு தங்கையும், தம்பியும் உருவாகக் கூடாது நம் மண்ணில்…போராட்ட குணமுள்ளவர்களே இணயுங்கள்.

 3. உன்
  இறுதிநிமிட
  வலிகள்,
  நீ ஏங்கி தாகித்த
  உன் கனவுகள்,
  அத்தனைக்கும்
  இந்த மத்திய மாநில
  அரசுகள்
  பதில் சொல்லியே
  தீரவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க