Tuesday, October 15, 2024
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் - ஏன் ?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன் ?

-

துமிதா பாண்டே இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி. இங்கிலாந்தின் ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர், தான் பயிலும் குற்றவியல் துறை ஆராய்ச்சிக்காக இந்தியாவைச் சேர்ந்த பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகள் 100 பேரைச் சிறையில் சந்தித்துப் பேட்டி கண்டுள்ளார். 2013 -ம் ஆண்டு தில்லியில் நிர்பயா எனும் பெண் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் அதற்கெதிராக நடந்த போராட்டங்களே தனது ஆராய்ச்சிக்கான முதற் தூண்டல் என்கிறார் மதுமிதா.

மதுமிதா பாண்டே இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி.

“இந்தக் குற்றவாளிகளைத் தூண்டியது எது? எந்த சூழலில் இப்படியான ஆண்கள் உருவாகி வருகின்றனர்? அவர்களையே கேட்டுவிடுவது என முடிவு செய்தேன்” எனும் மதுமிதா, “ஏன் இந்த ஆண்கள் (பாலியல் குற்றமிழைத்தவர்கள்) இந்தக் காரியத்தை செய்தார்கள்? நாம் அவர்களை கொடூரமானவர்கள் என நினைக்கிறோம். எந்த மனிதனும் இது போன்ற காரியங்களைச் செய்ய முடியாது என்று நினைக்கிறோம்” எனக் குறிப்பிடுகிறார்.

தனது ஆராய்ச்சியின் துவக்கத்தில் பொது புத்தியில் இருப்பதைப் போன்றே பாலியல் குற்றவாளிகளை கொடூர மிருகங்கள் என நினைத்து அணுகியதாகவும், பின்னர் பலரிடம் பேசத் துவங்கிய பின் அவர்கள் ஒவ்வொருவரும் நமது சூழலில் இருந்தே உருவான சாதாரண மனிதர்கள் என உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார் மதுமிதா. அவர்கள் ஒவ்வொருவரும் தாம் வளர்ந்த சூழலில் இருந்தே பெண்களைக் குறித்த கண்ணோட்டங்களைப் பெற்றுக் கொண்டனர் என்கிறார் மதுமிதா.

இந்தியக் குடும்பங்களில் பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைகளே ஆண்களின் சிந்தனையை வடிவமைப்பதாக குறிப்பிடும் மதுமிதா, மனைவிமார்களே கணவனின் முதற் பெயரைக் கொண்டு விளிப்பதில்லை எனவும், இந்தியக் குடும்பங்களின் அமைப்பே பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக்குகின்றன எனவும் குறிப்பிடுகிறார். இந்தச் சூழலில் இருந்து வளர்ந்து வருகிறவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை குற்றமாகவே கருதுவதில்லை எனவும், குற்றமிழைத்து தண்டனை பெற்றுள்ள கைதிகள் பலரும் தான் குற்றவாளியல்ல என சாதிப்பதுடன், நடந்த குற்றத்திற்கான பொறுப்பை பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே சுமத்துவதாக குறிப்பிடுகிறார் மதுமிதா.

அவர் சிறையில் சந்தித்த குற்றவாளி ஒருவன், ஐந்து வயது பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்ததற்காக தண்டனை பெற்றவன். மதுமிதாவிடம் அவன் பேசும் போது இனி பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை எவரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்றும், தான் சிறையில் இருந்து வெளி வந்ததும் அச்சிறுமிக்கு வாழ்க்கை கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளான். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவரான மதுமிதாவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை தொடர்பு கொண்ட போது குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள விவரமே அக்குடும்பத்துக்கு தெரிவிக்கப்படாததை அறிந்து மேலும் அதிர்ந்து போகிறார்.

மத்திய குற்றவியல் பதிவகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, 2015 -ம் ஆண்டு மட்டும் சுமார் 34,651 பெண்கள் பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர். 2016 -ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. மதுமிதாவின் பேட்டி வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அவரது ஆய்வுக் கட்டுரை இன்னமும் சமர்பிக்கப்படவில்லை. பாலியல் குற்றவாளிகளை இந்தியக் குடும்பங்களின் பிற்போக்கு கலாச்சாரமே உருவாக்குவதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ள மதுமிதா, அந்தப் பிற்போக்கு கலாச்சாரத்தின் வேர்மூலம் எதுவென்பதைத் தனது ஆய்வில் விளக்குவார் என நம்புவோம்.

உண்மையில் இந்திய குடும்பங்களின் பிற்போக்குகளின் வேர்மூலமாக இருப்பது இந்து பார்ப்பனிய சமூக அமைப்பு தான். இச்சமூக அமைப்பு தான் பெண்களை சக உயிர்களாக பார்ப்பதை மறுத்து வெறும் உடைமையாக கையாளும் தடித்தனத்தை ஆண்களின் பொதுபுத்தியில் நிறுவியுள்ளது. பார்ப்பனிய சமூக கட்டமைப்பைத் தகர்த்தெறிவது ஒன்றே இந்தியப் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான முதற்படி.

நிலவுடைமை பிற்போக்குத்தனங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான அடிப்படையாக இருப்பது இந்தியாவில் பார்ப்பனிய சமூக கண்ணோட்டமாக இருக்கிறது என்றால், மத்திய கிழக்கு நாடுகளில் மத்திய கால கடுங்கோட்பாட்டுவாத சமூக கண்ணோட்டமாக உள்ளது. இவற்றை ஒழித்து மெய்யான ஜனநாயக உறவுகள் வளர்ந்துள்ள சமூகங்களில் தான் பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.  பார்ப்பனீயத்தில் ஊறிப்போன இந்திய சமூகத்தில் தான் திருமணத்திற்குப் பின்னர் மனைவியைக் கணவன் வல்லுறவு கொள்வது பாலியல் வன்முறை ஆகாது என மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. தே வதாசி முறை யால் ஹிந்து தர்மத்தின்படி கே ாயில் பூசாரிகளால் கூட்டுப் பாலியல் கும்பல் வன்முறைக்கு ஆளாகி வேசியாகிப் பே ான பல இலட்சம் ஹிந்துப் பெ ண்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

  2. //பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன் ?//

    The MAHA BHARATHAM and RAMAYANAM-the so called holy books

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க