Saturday, May 25, 2024
முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைதிருச்சி பாஜக பொதுக்கூட்டம் ! - தமிழ் ஃபேஸ்புக் - ட்விட்டர் வறுவல் !

திருச்சி பாஜக பொதுக்கூட்டம் ! – தமிழ் ஃபேஸ்புக் – ட்விட்டர் வறுவல் !

-

திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 09-09-2017 அன்று பாஜக -வின் நீட் ஆதரவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள், நூற்றுக்கணக்கான ஒளி விளக்குகள், பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள், இவற்றையெல்லாம் தாண்டி பிரம்மாண்டமான மேடை என அனைத்தும் பிரம்மாண்டமாக இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்திரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் என பாஜக -வின் ‘பெரும்’தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்டு ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.

பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள் குவிக்கப்பட்டு இருக்கையில், பொதுக்கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் சுமார் 1000 பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். பொதுக்கூட்டம் ஆரம்பித்து ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கவும் பலர் வரிசையாகக் கிளம்பத் தொடங்கினர்.

வழக்கமான ஓட்டுக் கட்சிகளின் பாணியில் பணம் கொடுத்துத்தான் இந்த பொதுக் கூட்டத்துக்கும் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் குறைந்தபட்சம் என்ன கூட்டம் என்பதைக் கூட சொல்லாமல் அழைத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் கூட போடப்பட்ட இருக்கைகள் அனைத்தும் நிறையவில்லை.

அதிலும் பலர் நீட் ஆதரவு கூட்டம் எனத் தெரிந்ததும் கிளம்ப ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கிளம்பிய ஒரு பெண்மனியிடம் அவரை அழைத்து வந்த நபர் “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா பணத்த வாங்கிகிட்டு போயிடலாம்” என்று கூறியிருக்கிறார். அவரிடம், “உன் பணமெல்லாம் வேண்டாம், ஒழுங்கா என்னை ஊருக்கு கூட்டி போய் விட்டுடு” என அந்தப் பெண்மணி கூறியிருக்கிறார்.

‘முக்கியத்’ தலைவர்களான தமிழிசை சௌந்திரராஜன், எச். ராஜா ஆகியோர் பேசும் போது படிப்படியாக கூட்டம் குறைந்து இறுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பேசும் போது வெறும் 150 பேர் மட்டுமே இருந்திருப்பார்கள். அதிலும் மைக் செட்காரர்கள், கேமெரா மேன்கள், எலக்ட்ரிசியன்கள், சுண்டல் விற்பவர்கள், டிஜிட்டல் திரைக்காரர்கள் எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட்டம் முடியும் சமயத்தில் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தவர்களில் அதிகபட்சம் 100 பேர் தான் பாஜக அடிபொடிகளாக இருந்திருக்க முடியும்.

அக்கூட்டத்தில் தமிழிசை பேசும்போது, தமிழகத்தில் கல்வியின் ‘தரம்’ மிகவும் கீழே இருப்பதாகவும், அதற்குக் காரணம் திமுக தான் என்றும் கூறிப் பேசியுள்ளார். என்ன இருந்தாலும் தமிழிசைக்குத் தைரியம் அதிகம் தான். ஏனெனில் ஒரு பொது இடத்தில் எச்.ராஜாவை அருகில் வைத்துக் கொண்டே, ‘தரம்’ குறித்துப் பேசி அவரையே எள்ளல் செய்யகிறார் என்றால், எவ்வளவு ‘கெத்து’ வேண்டும்?

அவரைத் தொடர்ந்து பேசிய எச்.ராஜா வழக்கம் போல தனது ‘தரத்தை’ நாலாந்தர வார்த்தைகள் மூலமும், கம்யூனிச வெறுப்புப் பேச்சு மூலமும் வெளிப்படுத்தி விட்டுப் போய் அமர்ந்தார்.

சுண்டல் விற்பவர் கூட கிளம்பியிருந்த சூழலில் கடைசியில் மைக்கைப் பிடித்த பொன்னார், பாஜக அலுவலகங்களைக் குறிவைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்பவர்கள் கடும் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்றும் மிரட்டி விட்டு, அந்தக் காலத்தில் நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடியவர்களைத் ’துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று தாம் ஓடவிட்டதாகக் கூறினார்.  கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், “வடிவேலு காமெடியப் பாக்குற மாதிரியே இருக்குய்யா” என்றார். அவர் குறிப்பிட்டது “எல்லாம் அவன் செயல்” படத்தில் வக்கீல் வண்டு முருகன் மேடையில் பேசும் காட்சியைத் தான் என்பதை பொன்னாரின் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

ஆவேசமாகப் ‘பொரி’ந்த பொன்னார்

ஒருவாறாக தமிழகத்தில் தனது ‘பலத்தை’ நிரூபித்துள்ளது பாஜக. பொதுக்கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் கூட, அதன் நோக்கத்தை அறிந்ததும் காறி உமிழ்ந்து விட்டுச் சென்ற பெருமை, பாஜக -வையே சேரும்.

பாஜக -விற்கு வெளியில் தான் இத்தகைய ‘தனி மரியாதை’ என்றால், முகநூலிலும், ட்விட்டரிலும் ‘வைத்துச்’ செய்திருக்கிறார்கள் இணையவாசிகள். பாஜகவின் பொதுக்கூட்டத்தின் காலி நாற்காலிகள் அணிவகுப்புப் புகைப்படத்தைப் போட்டு இணையவாசிகள் போட்டிருக்கும் பதிவுகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்

***

முகநூலில்

“திருச்சியில் நடைபெற்ற சேர் கண்காட்சியின் ஒரு பகுதி…”

மோகன்தாஸ் மருதமுத்து.

__________

பெரியோர்களே..! தாய்மார்களே…!! மற்றும்…?! இங்கு பெருந்திரளாக கூடியிருக்கும் “நாற்காலிகளே”..

ராஜ் தேவ்.

__________

பெருமதிப்பிற்குரிய நாற்காலி அவர்களே, அந்த நாற்காலியில் படிந்திருக்கும் தூசுதும்புகளே, நீட் வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு ஆளரவம் இல்லாமல் நீட்டாக இருக்கும் காலி மைதானம் அவர்களே!

ஆதவன் தீட்சண்யன்.

__________

கோவையில் அண்டாவக் காணோம். திருச்சியில் ஆளையே காணோம்!

வெண்புறா சரவணன்.

__________

“ஏண்டா கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரமாவது  உக்கார  வேணாமாடா” ( எச்* ராஜா  மைன்ட் வாய்ஸ்)

சாருவாகன்.

__________

ஏம்பா! தனியா ஒக்காந்து இருக்கியே பயமா இருக்காது?

ஏங்க மீட்டிங் முடிஞ்சா வாடகைக்கு விட்ட சேர்லாம் எடுத்துட்டு போகனுங்க.

“நீட்டுக்கு ஆதரவாக திருச்சியை மிரட்டும் பிரமாண்ட மாநாடு”.

பெரியார் குமார்.

__________

பாஜக பொதுக்கூட்டத்த பத்தி கிண்டலடிச்சி போடுற பதிவ பார்த்தா கடுப்பாருக்கு. இதுக்கு முன்னாடி இத்தனை சேர்கள் தன்னெழுச்சியா கலந்து கொண்ட கூட்டத்த எங்கயாச்சயும் பார்த்திருக்கிங்களா?

ஜெயச்சந்திர ஹஷ்மி.

__________

பொன்னாரும், தமிழிசையும் எவ்வளவு ஆக்ரோசமாக பேசினாலும் காலி சேர்களில் இருந்து கைதட்டல் வராத காரணத்தால் கோயில்களில் மின் இயந்திரத்தின் வாயிலாக மத்தள, நாதஸ்வர இசை ஒலிக்கபடுபது போல , இனி ஒவ்வொரு பாஜக கூட்டத்திலும் இயந்திரங்கள் மூலம் கைதட்டல் ஓசை ஒலிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

யுவான் சுவாங்.

__________

மூச்சு விடுவதற்கே இடமில்லாத நெரிசலில் கடும் தள்ளு முள்ளுக்கு இடையே நடந்த பாஜக மாநாடு. ஆக்சிஜனுக்கு அரை கிலோ மீட்டர் ஓடிய தொண்டர்கள்.

வாசுகி பாஸ்கர்.

__________

வாங்கியது 12000 சேர்கள்.. பயன்படுத்தியது 120 சேர்கள்.

just “00” தான் வித்தியாசம். இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா பொரி உருண்டை?

செந்தில்குமார் நாத்திகன் சீர்காழி.

__________

கட்டுக்கடங்காத இந்த கூட்டத்த வச்சி தான் அக்கா தமிழிசை கழகங்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க போறாங்களாம். ஆம்வே காரன் மீட்டிங்குக்கு கூட இதவிட அதிக கூட்டம் வருமே. காலி சேர்களுக்கு மாநாடு நடத்தி அரசியல் மாநாடுன்னு சொல்லி அரசியல் மாநாடுகளுக்கு இருக்கும் மரியாதைய கெடுக்குறாங்க. ஆனா இந்த தமிழ்நாட்டு பிஜெபி காரங்களுக்கு மோடிஜி அளவுக்கு போட்டோஷாப் நாலேட்ஜும் பத்தல. சோ… சேட்….

பிரியதர்ஷினி.

__________

தமிழக மக்களே, இன்று மாலை வீடுகள், கட்டடங்கள் லேசாகக் குலுங்கியதை உணர்ந்திருப்பீர்கள்.. பொருட்கள் ஆடியிருக்கும். ஆடு மாடுகள் அலறியிருக்கும். நிலநடுக்கமாக இருக்குமோ, சுனாமி வந்திருக்குமோ என அச்சம் கொண்டிருப்பீர்கள்.

விசாரித்ததில், நீட் தேர்வை ஆதரித்துத் திருச்சி திமிறத் திமிற, கதறக் கதற, help help என கூக்குரல் இட, கோடிக்கணக்கான தொண்டர்கள் அலை அலையாகச் சங்கமிக்க, பாஜக நடத்திய மிகப் பிரமாண்டமான மா……பெரும் கண்டன பொதுக்கூட்டம் தான் தமிழகம் முழுக்க இந்த நடுக்கத்திற்கெல்லாம் காரணம் என தெரிய வருகிறது.

ஆகவே, பதற்றம் வேண்டாம்!
இந்த நூற்றாண்டின் இணையற்ற பொருளாதார மேதை ஆர்.ஜே பாலாஜியின் விழுதுகளான நாம் அவரின் புகழ்பெற்ற வாசகமான “Don’t panic!”ஐ மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.

தாமரை மலர்ந்தே தீரும்.
ஜெய் ஹிந்த்!!

பாலா அருண்

__________

திருச்சியை திணறடித்த மாஆஆஆஆஆஆஆ பெரும் மாநாடு இல்ல பொதுக்கூட்டம், இல்ல இல்ல தெருமுனை பிரச்சாரம், இல்ல இல்ல இல்ல கலந்துரையாடல்…….. அய்யயோ… எப்படி பார்த்தாலும் நாளஞ்சு பேர வச்சு நடத்துற கூட்டத்துக்கு என்ன பேரு வச்சி கூப்பிடறதுன்னு கண்பூசனா இருக்கே…..!

பி.கு: அந்த நாளஞ்சு பேரும் சேர் வாடகைக்கு கொடுத்தவர், பந்தல் வாடகைக்கு கொடுத்தவர், மைக் செட் வாடகைக்கு கொடுத்தவர்களும் அவர்களது பணியாளும் என்று அய்யாசாமி சொல்லிங்.!

“ஏண்டா ஆளில்லனா” அதிமுக காரங்களையாச்சும் கூப்டிருக்கலாம்ல???

பார்ப்பனிய பாஜக அடிமைகள்!

ரீகன் நே.

__________

“மிஸ்டு கால் வழியாக பிஜேபியில் சேர்ந்த அந்த ஒருகோடி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கண்கொள்ளாக் காட்சி”.

ஜோதிமணி சென்னிமலை.

__________

நீட் தேர்வினை ஆதரித்து பாஜக நீட்டி முழங்கிய திருச்சி பொதுக்கூட்டத்தில் ..? ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்…. காற்று வாங்கிய நாற்காலிகள்.

சங்கரதாஸ்

__________

“அந்த கீழ உக்காந்துருக்க  20 பேரையும் கூப்பிட்டு மேடையிலேயே உட்கார வச்சிருந்தா சேர் வாடகை மிச்சம். இத சொன்னா நம்ம ஆண்டி இன்டியன்பாங்க.

பூபதி முருகேஷ்

__________

தமிழகத்தில்
பாஜகவிற்கு #நாற்காலி ஓட்டு தான் அதிகம்

சரவணன் காந்தி

__________

மேடையில இருந்தவங்கள கீழ உக்கார வச்சிருந்தாலாவது கூட்டமிருந்ததைப் போல ஒரு சீனாவது போட்டிருக்கலாம்… மொத்தமா காலியாயிருந்தது இப்போ தெரிஞ்சிப்போயிடுச்சு எல்லோருக்கும்…

மலையமான் தே.கி.

__________

#திருச்சியை_திணறடித்த……….
பாஜக பொதுக்கூட்டம்….!!!

மைக் செட் கடைக்காரர் மருதமுத்து அவர்களே
நாற்காலி கடைக்காரர் நாகராஜ் அவர்களே
சீரியல் பல்ப் கடைக்காரர் சிங்கராஜ் அவர்களே
தேனீர் கடைக்காரர் தேவராஜ் அவர்களே
சுண்டல் கடைக்காரர் சுப்புலட்சுமி அவர்களே
சமோசா கடைக்காரர் சடையப்பன் அவர்களே

#அனைவருக்கும்_வணக்க்க்கம்…..!!!!

விடுதலை வேந்தன்

__________

நாளை திருச்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால் நகரிலுள்ள அனைத்து பிரியாணி கடைகளும் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது என்று பிரியாணி உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

ரஹீம் கசாலி

ட்விட்டரில்

உயிர் இல்லா சேர்களை பிடித்து உட்கார வைத்து பொதுக்கூட்டம் போட்டதை பார்த்திருக்கியா? இதோ திருச்சி #பாஜக பொதுக்கூட்டம் @drtamilisaibjp

ஜேகே

__________

@drtamilisaibjp உலகத்திலயே ஆளுங்கட்சிய விட்டுட்டு எதிர்கட்சிக்கு எதிரா போராட்டம் நடத்துர ஒரே கோஷ்டி நம்ம பாஜக கோஷ்டி தான் #பாஜக கரகாட்டம்.

பரத்குமார்

__________

மக்களுக்கு இடையூறு இல்லாம போராட்டம் நடத்தலாம்னு #உச்சநீதிமன்றம் சொன்னத இந்தியாவிலயே ஏன் உலகத்திலயே கடைபிடிக்கற ஒரே கட்சி #பாஜக மட்டும்தான்

பயங்கர கோபக்காரன்

__________

பூத் ஏஜென்ட் கூட இல்லாத கட்சிக்கு புத்தி சொல்லி என்ன பயன்? யாரும் இல்லாத கடையில ஏன்டா டீ ஆத்துரிங்க

நவீன்

__________

”திமுக கூட்டத்திற்கு மழை வந்தது, ஆனால் எங்கள் கூட்டத்திற்கு மழை வரவில்லை”
–  தமிழிசை

”அதுவும் வரலையா….”

க்ரிஷ்

__________

பிஜேபி பொதுக்கூட்டத்துல காத்தடிக்கும்னு தெரியும், திருச்சில என்னனா புயலே அடிக்குதுபோல #BJPKilledAnitha

கார்த்தி

__________

எவ்வுளவுதான் முக்குனாலும் செல்ப் எடுக்காது பாஸ், இது திராவிட ரத்தம் ஓடுற பூமி. நுங்கம்பாக்கத்துல மாணவிகள் கூடிய கூட்டம் கூட இல்லையே #BJPFails

நவீன்

***

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. வினவுவை போல் ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து கூட்டம் நடத்தி அதிக பேர் கலந்து கொண்டது போல் பிலிம் காட்ட பிஜேபிக்கு தெரியவில்லை…. பாவம் பிஜேபி ரொம்ப அப்பாவியா இருக்காங்க

 2. எவ்வுளவுதான் முக்குனாலும் செல்ப் எடுக்காது பாஸ், இது திராவிட ரத்தம் ஓடுற பூமி. நுங்கம்பாக்கத்துல மாணவிகள் கூடிய கூட்டம் கூட இல்லையே #BJPFails

  நவீன் நம்மாணவிகளின் போராட்டம் வீரம் செறிந்த போராட்டம் இதோடு அந்த “கழிசடை”கும்பலை கூட்ட எண்ணிக்கைக்காககூட ஒப்பிட வேண்டாம்…..

 3. சோகமும், கோபமும்
  சமயத்தில் கொஞ்சம் விரக்தியும்
  அலைமோதும் மனதுக்கு
  ஆறுதலும் நம்பிக்கையும் அளித்திருக்கிறார்கள்
  ‘பாராட்டுங்கள்’

 4. இதில் ஒரு சந்தோசம் தமிழகத்து ஃபேஸ்புக் முட்டாள்களுக்கு ..

  பெரியார் எல்லாம் ஓல்ட் ஃபேசன். . விரைவில் இங்கும் இந்து ராஸ்டிரம் அமையும் …

 5. வணக்கம் திரு மணிகண்டன் அவர்களே. பார்பனியத்தின் சொம்பு என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தான் இருக்கீறீர்கள் நீங்கள் ஆனால் மற்றவர்களுக்கு தான் புரியவில்லை. திருச்சியில் நடந்த பா ச க வின் நீட் ஆதரவு கூட்டம் என்பது யாருக்காக என்பது புரியவில்லை நீட் ஆதரவு என்ற பெயரின் நடத்திய கூட்டத்திற்கு வந்தவர்கள் தான் நீட் ஆதரவு என்றால் நீட் எதிர்ப்பு என்பது தமிழகம் தழுவிய போராட்டம் நடந்து கொண்டிருக்கின்ற வேலையில் நீங்கள் நடத்தும் நாடகம் என்பது வேடிக்கயைானது தான். தமிழகத்தில் இருந்துக்கொண்டு தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பர்டு தான் அனிதாவின் மரணத்திற்கெதிரான போராட்டம் மற்றும் நீட்டுக்கு எதிரான போராட்டம் ஆனால் நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றே தெரியவில்லை. இதிலிருந்து ஒரு செய்தி தெளிவாக தெரிகின்றது. பா.ச.க பற்றியும் பார்பனியம் பற்றியும் இவர்கள் அனைவரும் தமிழருக்கு எதிரானவர்கள். தமிழகத்திற்கு எதிரானவர்கள் இவர்களுக்க தமிழகத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. வெல்க தமிழ்

  • உங்களை போன்ற ஆட்களை விட்டால் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றவர்கள் மீது கூட வெறுப்பை வளர்ப்பீர்கள். பக்தி இலக்கியங்கள் இல்லையென்றால் தமிழ் இந்தளவுக்கு வளர்ந்து இருக்காது.

   உங்கள் பெரியார் தமிழையும் தமிழர்களையும் காட்டுமிராண்டிகள் என்று சொன்னவர் ஆனால் அப்பர் போன்றவர்கள் மக்களின் மனத்தை பக்குவப்படுத்தினார்கள், பண்பை வளர்த்தார்கள், ஆனால் பெரியார் பெண்களுக்கு ஏன் கற்பு என்று கேட்டு மக்களை மீண்டும் காட்டுமிராண்டித்தனத்திற்கு தள்ளியவர்.

   ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆன்மா என்பதை உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் இன்றுவரையில் புரிந்துகொள்ளாமல், இந்தியாவிற்கு சம்பந்தமே இல்லாத மேற்கத்திய கம்யூனிஸ்ட் கொள்கைகளை பொய்கள் வெறுப்பு மற்றும் வன்முறைகள் திணிக்க பார்க்கிறீர்கள்.

   என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் தேசிய கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும்… திராவிட கட்சிகளின் கொள்கைகள் தமிழகத்தை மேலும் மேலும் அழிவில் தான் தள்ளுகிறது, அதற்கு சிறந்த உதாரணம் நீட் தேர்வு எதிர்ப்பு 2ஜி ஊழல் போன்றவைகள்.

 6. பெரியார் ஓல்டு பேசன் இல்லை. நீங்கள் சொல்லும் கருத்து தான் ஓல்டு பேசன் நண்பரே இது பெரியார் பிறந்த மண் இங்கு பார்பனியத்திற்கும் மதவெறியர்களுக்கும் இங்கு வேலை இல்லை. சரி இந்து ராட்டிரம் மலரும் என்கிறீர்களே. அப்படின்னா என்ன என்பதை சொல்லுங்கள் அதற்கும் தமிழர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் என்ன பயன்பாடு என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

 7. பெரியாரை கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று இப்போதாவது தெரிகிறதா. பெரியார் உருவாக்கிய பார்பனிய எதிர்ப்பு என்பது என்பது இந்து மதத்தின் உண்மை முகம் வெளிச்சம் போட்டுக்காட்டினார் அதனால் தான் பெரியாரை பார்த்து மதவாதிகள் பயம் கொள்ளுகிறார்கள். எதற்கெடுத்தாலும் பெரியாரை இழுக்கிறார். அவர் என்ன அப்படி தீங்கு இழைத்து விட்டார் தமிழக மக்களுக்கு என்று சொல்லுங்கள் பா(ர்பனிய) ச க நண்பர்கள்

 8. திருச்சியை_திணறடித்த……….
  பாஜக பொதுக்கூட்டம்….!!!

  மைக் செட் கடைக்காரர் மருதமுத்து அவர்களே
  நாற்காலி கடைக்காரர் நாகராஜ் அவர்களே
  சீரியல் பல்ப் கடைக்காரர் சிங்கராஜ் அவர்களே
  தேனீர் கடைக்காரர் தேவராஜ் அவர்களே
  சுண்டல் கடைக்காரர் சுப்புலட்சுமி அவர்களே
  சமோசா கடைக்காரர் சடையப்பன் அவர்களே

  #அனைவருக்கும்_வணக்க்க்கம்…..!!!!

 9. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் நாட்டில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் ஒரே கட்சி பா ஜ க வாகத்தான் இருக்கும்.தமிழிசை,பொன்ரா தலைகளைப் பாருங்கள் தெளிவாகத் தெரிகிறது.ஒன்று விரிகோலமும் மற்றொன்று தெறி கோலமுமாக நிற்கிறது!

 10. பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பெரியார் பூமியை காவியாக்கத் துடிக்கிறார்கள்.அதற்காக எல்லாவிதமான விஷமான இழி செயல்களையும் மேற்கொள்கிறார்கள்.காவிகளின் பயங்கரவாத பொதுக்கூட்டத்திற்கு ஆள் இல்லை எனும் விஷயத்தை நாம் எள்ளல் செய்து மட்டும் மகிழ்ச்சியுறாமல் இந்த விஷத்தாமரைகளை தடம் தெரியாமல் அழித்தொழிப்பதையும் செயல்வடிவம் பெறச்செய்ய வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க