Tuesday, December 10, 2024
முகப்புசெய்திபல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !

பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !

-

முற்போக்காளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து மக்கள் வெள்ளம்! இந்துமதவெறியர்களின் கனவைத் தகர்த்தது!

முற்போக்காளரும், மூத்தப் பத்திரிக்கையாளரும், களப்போராளியுமான கௌரி லங்கேஷ் கடந்த 05.09.2017 செவ்வாய்க் கிழமை மாலை 7:00 மணியளவில் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.   அவருக்கு 06.09.2017 புதன் கிழமை மதியம் 2:00 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்த கர்நாடகவின் பல பாகங்களிலிருந்தும்,  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளமென திரண்டு வந்திருந்தனர்.

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்ட அதே விதத்திலேயே கௌரி லங்கேஷும் கொல்லப்பட்டிருக்கிறார். தனது வாழ்நாளை இந்து மத வெறிக்கு எதிரான போராட்டத்திற்கு அர்ப்பணித்த கௌரி லங்கேஷுக்கு இந்துமதவெறியர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பலமுறை மிரட்டல்கள் வந்திருந்ததாக கவுரி லங்கேஷின் சகோதரியும் அவரது தாயாரும் தெரிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டு இந்து மத வெறியர்கள் தொடுத்த வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் இறந்த பின்னர் பல இந்துமதவெறியர்கள் அவரது மரணத்தை   சமூக வலைத்தளங்களிலும், பகிரங்கமாகவும் கொண்டாடியிருக்கின்றனர். இந்தப் படுகொலையை இந்துமதவெறியர்கள் தான் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு சாட்சிகள் எதுவும் தேவையில்லை.

இந்து மத வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, கௌரி லங்கேஷின் இறுதி அஞ்சலியில் ஆயிரக்கணக்கான  பெண்கள்  கலந்து கொண்டனர். தங்களது குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிப்பதைப் போல தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கர்நாடக கலை துறையினரும் திரளானோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் மெழுகுவர்த்தியுடனும் பூங்கொத்துகளுடனும் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், முற்போக்காளர்கள் கலந்து கொண்டது அனைவரையும் பிரமிக்க  வைத்தது.

ஒரு பத்திரிகையாளர், பெண், சமூகத்தின் அநீதிக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை உறுதியுடன் போராடிய போராளி என்ற வகையில் அவரது முழு ஆளுமையையும் மக்களிடம் அவர் பெற்றிருந்த மரியாதையையும் மதிப்பையும் மக்கள் அவர் மீது காட்டிய அன்பும் நம்மைக் கண்கலங்கச் செய்துவிட்டது.

கௌரி லங்கேஷின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒசூரிலிருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர்.பரசுராமன், மக்கள் அதிகாரம் பாகலூர் பகுதியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தரராஜ், தோழர் ரவிச்சந்திரன், தோழர் இராஜகுரு என திரளான தோழர்கள் இந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக வரிசையில் நின்று கௌரி லங்கேஷுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த கௌரி லங்கேசின் பணிகள் குறித்து அங்கு வந்திருந்த செய்தியாளர்களும் நண்பர்களும் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் என்ற வகையில் புஜதொமு தோழர்களை பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டு வெளியிட்டனர்.

கர்நாடக அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கௌரி லங்கேசின் இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்த இந்தக் கூட்டம் என்பது பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. துப்பாக்கிக் குண்டுகளாலும், தீவைப்புகளாலும் பார்ப்பன எதிர்ப்புணர்வை மாய்த்துவிட முடியாது என்ற நம்பிக்கையை இந்த கூட்டம் உருவாக்கியது.

அவர்கள் ஒரு கௌரியைக் கொன்றிருக்கலாம், ஆனால், கௌரியின் இறுதி ஊர்வலம் ஓராயிரம் போராளிகளை உருவாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– தகவல் : புஜதொமு, ஓசூர்

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடி வரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. கௌரி லங்கேஷின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்களைக்கண்டும் பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கு வயிறு கலங்யிருக்கும் என்ன செய்வது மக்களுக்கான போராளிகள் இருந்தாலும்,இறந்தாலும் பல்லாயிரம் வீரர்களை விதைத்கொண்டே செல்வர்.ஆயிமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘ஸ்ப்பாட்டகஸ்’ பற்றிய நாவலைக்கண்டு அமெரிக்கஏகாதிபத்தியம் பயந்து நடுங்கியது வரலாறு. பு.ஜ.தொ.மு.ன்பாட்டாளி வர்க்க கடமைக்கு வாழ்த்துக்கள்…

  2. இந்து மத வெறியன் பால்தாக்கரே இறந்து போன போது பந்த் பற்றிய பதிவு செய்தற்க்காக வன்முறையில் ஈடு பட்டு அந்த பெண்களை தேடி கைது செய்தது ஜைஹிந் போலீஸ் ஆனால் இன்று கௌரி கொலையை வெளிப்படையாக கொண்டாடும் கும்பலை தண்டிக்க ஜைஹிந்த் போலீஸ்க்கு துப்பில்லை. இதுதான் மோடி சொல்லும் சமத்துவ இந்தியாவா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க