அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ

7

சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த உண்மைச் சம்பவம் இது! இப்படியெல்லாம் நடக்குமா என்று எவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் அநீதியும் கூட!

நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை அப்பல்லோவில் சேர்க்கிறார் திரு.ஹேமநாதன். சேர்க்கும் போது அந்த தாயாருக்கு மூக்கில் இருந்து கொஞ்சம் ரத்தம் வந்தது, அவ்வளவே. பிறகு தலைக்கு எம்.ஆர்.ஐ-ஸ்கேன், இலட்ச ரூபாய்களில் நடந்த பல்வேறு சோதனைகள், அந்த தாயாரின் கபால ஓட்டை பிரிக்கும் அறுவை சிகிச்சை, நினைவு தவறுதல், வீட்டுக்கு அனுப்பி மீண்டும் சேர்த்தல், அதில் 150 நாட்கள் சிகிச்சை அனைத்தையும் விவரிக்கிறார் ஹேமநாதன்.

ஆரம்பத்திலேயே அப்பல்லோ மருத்துவமனை பெரிய தவறு ஒன்றை சிகிச்சையின் போது செய்திருக்கிறது. அதை மறைத்து கூடுதல் சோதனைகள் செய்து வசூலித்திருக்கிறார்கள். பிறகு தவறு நடந்ததை ஒத்துக் கொண்டு சிகிச்சை இலவசம் என்று பேரம் பேசியிருக்கிறார்கள். கடைசியில் மகனுக்கு தெரியாமலேயே அந்த தாயாரை சென்னை மருத்துவமனையில் அனாதை என்று சேர்த்திருக்கிறார்கள்.

அம்மாவைத் தேடி அப்பல்லோ வார்டுக்கு சென்ற ஹேமநாதனை அரசு மருத்துவமனைக்கு போகுமாறு விரட்டியிருக்கிறார்கள். காரணம் கேட்டால், அவ்வளவுதான், யாரிடமும் புகார் செய்தாலும் ஒன்றும் நடக்காது, நீதிபதிகள், போலீஸ்காரர்கள், அதிகாரிகள் அனைவரும் எங்களிடம் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்று பாதுகாப்பு அதிகாரி பேசியிருக்கிறார்.

சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு சுகாதாரத் துறை செயலர் பெயரில் கடிதத்தை வழங்கியிருக்கிறது அப்பல்லோ நிர்வாகம். ஐந்தாறு மாதங்கள் எப்படியாவது தாயாரை காப்பாற்ற வேண்டும் என்று போராடிய ஹேமநாதனை விதவிதமாக சித்ரவதை செய்திருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை. அத்தனை விவரங்களையும் அவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அது தெரிந்ததும் 2 கோடி ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள்.

நண்பர்களே, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!

இது குறித்து புகாரைக் கூட போலீசு பதிவு செய்யவில்லை. தற்போதுதான் செய்திருக்கிறது என்கிறார் ஹேமநாதன். அப்பல்லோவை சட்டப் போராட்டத்தில் வெல்ல முடியுமா என்பது அப்பல்லோவோடு கூட்டணி வைத்திருக்கும் அரசு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், நீதிமன்ற பிரமுகர்கள், அமைச்சர்களின் அசுர பலத்தோடு மோதுவது !

ஒருவேளை ஹேமநாதனால் நீதிமன்றத்தில் வெல்ல முடியாமல் போனாலும், மக்கள் மன்றத்தில் அவரை வெற்றிபெற வைப்பது நமது கடமை. இந்த விவரத்தை வெளியே கொண்டு வந்து அம்பலத்தில் ஏற்றிய நக்கீரன் இதழுக்கு வாழ்த்துக்கள்!

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

7 மறுமொழிகள்

 1. அறுவை சிகிச்சை யாரவது பணக்கார ‘சர்மா’ அல்லது யாரவது ‘ஷ்’ என முடியும் பெயருள்ள ஒருவன் செய்திருப்பான், அவன் ஜாலியாக மருத்துவம் படித்த ‘தரமான’ மருத்துவராக இருந்திருப்பான்.

  அனிதாக்கள் எல்லாம் மருத்துவர் ஆகி இப்படியான மக்களை அரசு ஆஸ்பத்திரியில் குணபடுத்தினால் , அந்த லட்சங்கள் வசூலாகுமா?

  இந்த மருத்துவ பெயர் கொண்டுள்ள ஒட்டுண்ணியை தமிழ் நாட்டிலிருந்தே அடித்து துரத்த வேண்டும், மக்கள் , குறிப்பாக நடுத்தர வர்க்கம், சாகும் நிலை வந்தால்கூட இந்த நாய்களிடம் போய் விடாதீர்.

 2. // , யாரிடமும் புகார் செய்தாலும் ஒன்றும் நடக்காது, நீதிபதிகள், போலீஸ்காரர்கள், அதிகாரிகள் அனைவரும் எங்களிடம் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்று பாதுகாப்பு அதிகாரி பேசியிருக்கிறார். // என்ன ஒரு ” திமிரான .. காெழுப்பெடுத்த ” வார்த்தைகள் …. எந்தளவுக்கு இந்த நாடு இது பாேன்ற கார்பரேட் பண முதலைகளிடம் சிக்கிக் காெண்டு இருக்கிறது …. ஆளும் வர்க்கம் அவர்களின் காலை நக்கி … அவர்கள் அளிக்கும் பிச்சை காசுக்காக அலையும் பாேது வேறு எதை எதிர்பார்க்க முடியும் இவர்களிடம் ….?

 3. தனியார் மருத்துவமனைகள் தரம் மிக்கவை என்று ஓலமிடுபவர்கள் அங்கு இருவேறு மருத்துவமுறைகள் இருப்பதை மறைக்கிறார்கள் அல்லது குருட்டாம் போக்காக பேசுகிறார்கள். இந்தியாவிலேயே தரமான மருத்துவமனை என்று பெயரின் பின்னல் இப்படியான சதிவேலைகள் இருக்கின்றன.

  போலி என்கவுண்டர் வழக்கில் ஒரு அமித்ஷாவை விடுவித்ததில் ஒரு சதாசிவத்திற்கு கவர்னர் பதவி கிடைத்தது. அதுபோல நீதிபதிகள், போலிசு, கலெக்டர், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு தரமான இலவசமான மருத்துவம் பார்த்துவிட்டு ஹேமநாதன் போன்றவர்களை வஞ்சிக்கிறது ‘தரமான’ தனியார் மருத்துவம்.

  அரசு மருத்துவமனைகள் தரம் குறைந்தவை தான். ஆனால் அதற்கு காரணமாக இருப்பவர்கள் தான் இந்த அதிகார வர்க்கத்தினர். அதே அதிகார வர்க்கம் தான் அரசு மருத்துவமனைகளை தரம் குறைந்ததாக வைத்தொருக்கிறது. இதன் மூலம் அதை அழித்தொழிக்க நினைக்கிறது. இதற்கு தான் நீட் கொண்டு வர துடிக்கிறது அதிகார வர்க்கம்.

  அணிதாக்கள் இங்கே வர வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளும் சுகாதார நிலையங்களும் இங்கு காக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அணிதாக்களுக்காக
  நடந்த நடக்கும் போராட்டங்கள் கானல் நீர் போலாகிவிடும்.

  அணிதாக்களை போலவே அரசு மருத்துவமனைகளும் காக்கபட வேண்டும் அதற்காக நாம் போராட வேண்டும் என்பதையே ஹெமனாதனின் துயரக்கதை நமக்கு உணர்த்துகிறது.

 4. கொடுமை…
  கொள்ளைக் கூட்டம்!!
  தக்க தண்டனைக்குள்ளாக வேண்டும் இந்த திமிரெடுத்த கூட்டம்..
  தூத்துக்குடி – வே.பாண்டி…

 5. தவறான சிகிச்சை , மெத்தனம் ,நிர்க்கதியானநிலையில் நோயாளியை வெளியேற்றுதல் -ஹேமநாதனின் அம்மாவிற்கு நடந்தது கொடுமை – அவர்க்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

  அப்பொல்லொ போன்ற ஆசுபத்திரிகளில் பணம் கொடுத்து சிகிச்சை பெறும் சக்தி பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை. நம்நாட்டிற்கு ஏற்றது அதிகமாக ,பரவலாக தரமான அரசு ஆசுபத்திரிகள். ஆனால் நல்ல அரசு ஆசுபத்திரிகள் அமைந்தால் அங்கும் அரசியல்வாதிகள் அரசு உயர் அதிகாரிகள் இவர்களுக்கு ஸ்பெசல் ட்றீட்மெண்ட் இருக்கும் என்று தோன்றுகிறது. அங்கும் இரண்டு “தரம்” வந்து விடும்.காரணம் சுயநலம் .

  கக்கன் போன்றவர்கள் இப்போது அரசியலில் இல்லை.

 6. அப்பலோவில் இருந்த ஜெயா எப்படி செத்தார் எப்படி செத்தார்னு போட்டு பிணாத்துகிறார்கள்.அது எப்படி செத்திருந்தாலும்
  மக்களுக்கு இப்ப என்ன வந்துச்சு?ஹேமநாதனின் தாயாரை எப்படிக் கொன்றீர்கள் மருத்துவ பயங்கரவாதிகளே?அனிதா(வின்)க்களீன் ஆளுமைக்குள் மருத்துவ கட்டமைவு வராமல் இங்கே எதுவும் சாத்தியமில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க