மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை வைப்பு – கோவை காவி + காக்கிகளின் கள்ளக்கூட்டு !

2
36

மோடியின் GST வரிவிதிப்பால் திருப்பூர் – கோவை மாவட்டங்களில் உள்ள அனைத்து குறு, சிறு தொழில்களும் அழியும் நிலையில் உள்ளன. ஜி.எஸ்.டி வரியின் பாதிப்பு பற்றி இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்து, கடந்த 27.09.2017 அன்று கோவையில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்ற 11.10.2017, புதன் கிழமை மாலை 5:00 மனியளவில்  அன்று கோவை பாப்பநாயக்கன் பாளயம் – காய்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதற்காக திருப்பூர் – கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் சுவரொட்டி ஒட்டியும், துண்டறிக்கைகள் விநியோகம் செய்தும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் கோவை – இராமநாதபுரம் பகுதியில் 08.10.2017 ஞாயிறு மாலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் இந்து முன்னணி கும்பலின் ரஞ்சித்குமார் என்பவர் இப்பகுதியில் மோடியை – BJP யை எதிர்த்து பிரச்சாரம் செய்யக்கூடாது. இது எங்கள் ஏரியா நீங்கள் வெளியேறுங்கள் என தகராறு செய்துள்ளார்.

இந்து முன்னணி கும்பலின் ரஞ்சித்குமார்

தோழர்கள் இது தொழிலாளி வர்க்கத்தின் கோட்டை BJP – இந்து முன்னணிக்கு இங்கு ஒருவேலையும் இல்லை, அதுமட்டுமல்ல இங்குள்ள அனைத்து மக்களும் GST யால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து உள்ளனர், வியாபாரம் இல்லாமல்  அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து விட்டது எனக் கூறி பகுதியில் பிரச்சாரம் செய்யாமல் செல்லமாட்டோம் என உறுதியாக நின்றனர்.

இந்து முன்னணி – BJP ஆட்கள் அங்கிருந்து நைசாக கிளம்பி மேற்படி ரஞ்சித் குமார், தனது மனைவியின் பெயரில் கோவை – D1 இராமநாதபுரம் காவல் நிலையத்தில் அனைத்து  வீட்டிலும் நோட்டீஸ் கொடுத்து கட்டாய வசூல் செய்கிறார்கள் என புகார் கொடுத்துள்ளார்.

மக்கள் அதிகாரத்தின் மீது எதாவது ஒரு புகார்  வராதா என எதிர்பார்த்த போலீசு உடனடியாக 8  தோழர்களை கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர்.

IPC 384 -ன் படி ஜாமினில் விடாமல் சித்தார்த்தன், மகேஸ்(எ) பழனிச்சாமி, தமிழ் உரியன், சரவணக்குமார் என்ற 4 தோழர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இறக்கும் தருவாயில் துடிக்கும் அட்டைபோல நாடு முழுவதும் BJP – இந்து முன்னணியினர் நாட்டுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வருகின்றனர்.

உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மக்களைப் பிளந்து உறிஞ்சும் இந்து மதவெறி  கும்பலையும் அதற்கு துணை போகும் அரசு கட்டமைப்பையும் அடித்து நொறுக்க அணி திரள்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை – 95858 22157. 

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

2 மறுமொழிகள்

  1. கோவை நகரம் இப்படி மாறிப்போனதில் “காக்கி” காவிகளின் பங்கு மிக அதீகம்.”தியாகி”சசிக்குமாரின் சாவின் துக்கத்தில் பங்கெடுத்து பிரியாணி திருடர்களுக்கு “அமைதி”ஊர்வலம் போக அனுமதி தந்தவர்கள் அல்லவா?ஒருபுறம் இந்த காக்கிகளின் பொய் வழக்குகள், இன்னொருபுறம் காவிகளின் மிரட்டல்கள் இப்படி எந்த அநீதி கண்டும் அஞ்சாமல் மக்கள் நலனே உயிர்மூச்சு என்று நெஞ்சுரமாய் நேருக்குநேராய் போராடும் தோழர்களைக் காணும்மோது காக்கிகள் இம்மாதிரியான இழி செயல்களை செய்கிறார்கள்.தயவுசெய்து கண்ட இடங்களீல் வைத்திருககும் உங்கள் வீளம்பர பலகைகளை மாற்றுங்கள்.”காவல்துறை காவிகளின் நண்பன்”என்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க