Tuesday, September 22, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மதுரை காமராசர் பல்கலை - தில்லு முல்லுக்களை அம்பலப்படுத்தும் மு.ராமசாமி

மதுரை காமராசர் பல்கலை – தில்லு முல்லுக்களை அம்பலப்படுத்தும் மு.ராமசாமி

-

துரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பி.பி. செல்லதுரை துணைவேந்தருக்குரிய தகுதி இல்லாத நிலையில் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு லயனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.  அந்த வழக்கில் 5-வது எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள முனைவர் முருகதாஸ். அவர் தனது சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் முனைவர் மு.ராமசாமி மீது சில குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

முனைவர் மு.ராமசாமி , மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குப் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்காக முதலாவதாகத் தேர்வு செயப்பட்ட மூவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். குழுவின் கூட்டுனரான முருகதாஸின் தில்லுமுல்லுகளை எதிர்த்துப் பத்து மாதங்களுக்கு மேல் போராடியும் பயனளிக்காத நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தனக்கும் கூட்டுநர் முருகதாசுக்கும் இடையே நடைபெற்ற போராட்ட அனுபவங்களை முறையாகத் தொகுத்து உரிய ஆவணங்களுடன் ஒரு நூலாக.03.10.17 அன்று மதுரையில் செய்தியாளர்கள் அரங்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த செய்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது :-

‘அறம்செயவிரும்பு’

‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ எனும் இந்நூல், ‘மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவிற்கான மூவரின் பெயர்ப்பட்டியலை மேதகு ஆளுநரிடம் பரிந்துரை செய்யும் குழுவில், பேரவை சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தும், நான் ஏன் தேடுதல் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து 101/2 மாதங்களில் விலக வேண்டி வந்தது’ என்பதை விளக்குகிறது.

இதை நூலாக்கியதற்கான காரணம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில்,  மதுரையைச் சேர்ந்த திரு. இலயோனல்அந்தோணிராஜ், மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக,  உயர் நீதிமன்றம் சென்றிருக்கிற நிலையில்,  அதில் எதிர் மனுதாரர் எண் 5  ஆகச் சேர்க்கப்பட்டுள்ள பரிந்துரைக் குழுவின் கூட்டுநர் முனைவர் முருகதாஸ்,  அவரின் எதிர்மனுவில்  – புதிய தேர்வுக் குழுவில்,  துணைவேந்தர் தேர்விற்கான பரிந்துரைப் பட்டியலை உருவாக்கியதில் எந்தவகையிலும் இடம் பெற்றிருக்காத என் மேல் –பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது தான் !

இந்த நூல், ஒருவகையில்,  தவறுக்குத் துணை போகாத என்னின் தன்னிலை விளக்கமாயும், இன்னொருவகையில்,  கூட்டுநர் முனைவர் முருகதாஸின் அறக்கேடான பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதுமாக அமைந்திருக்கிறது. அவரின் எதிர் மனுவில், நீதிமன்றத்திற்கு அவர் சொல்லியிருக்கிற தகவல்களை, என்பக்கச் சான்றுகளைக் கொண்டு அம்பலப்படுத்தும் நோக்கில் அவருக்கான எதிர்க் கேள்விகளை இதில் முன்வைத்திருக்கிறேன்.

அவரின்குற்றச்சாட்டு 1 : ‘I state that at the first meeting that was held on 24-04-2015, it was unanimously decided to follow the search process in a transparent manner and to invite eligible candidates through notification in the dailies and the website of the Madurai Kamaraj University’.- இது கூட்டுநர் முனைவர் முருகதாஸ் தன் எதிர் மனுவில் 5 -ம் பத்தியில் குறிப்பிட்டிருப்பது. இதை மேலோட்டமாகப் படிக்கையில் இதில் என் மேல்குற்றச்சாட்டு எதுவும் இருப்பதாய்த் தெரியாது. ஆனால், மிகப் பெரும் உண்மை கவனமாக மறைக்கப்பட்டுள்ளது.

என்பதிற்கேள்வி : அண்ணாமலைப் பல்கலை கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவிலும் அப்போது உறுப்பினராகச் செயல்பட்ட முனைவர் முருகதாஸ், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேடுதல் குழுவை அடியொற்றியே, சிற் சில மாற்றங்களுடன் அவரே முன்வைத்த விதிகளை, இந்நூலின்பக்கம் 68 முதல் 76 வரைக்கும் உள்ள ஆவணங்கள் தெளிவுபடுத்தும்.

அதிலிருப்பது அவரின் / என்னின் கையெழுத்துகள் மட்டுமே! பக்கம் 91 -இல் காணும் முனைவர் முருகதாஸ் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட விளம்பரவாசகம் 26-04-2015 இல் ஏன் வெளிவரவில்லை என்பதன் பின்னிருக்கிற அரசியலை, அவரின் வெளிப்படைத் தன்மையற்ற, மூடிமறைத்த நடவடிக்கைகளுக்குள்ளிருந்தே இந்த நூல் பேசுகிறது.

மதுரைகாமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவின் முதல் கூட்டத்தில் (24-04-2015), விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதி நாளாக 01-06-2015 மாலை 5 மணி என்பதாக முடிவுசெய்து, 26-04-2015 -இல் அதை, The Hindu, தினமணி, தினத்தந்தி ஆகிய மூன்று நாளிதழ்களிலும் விளம்பரமாய் வெளியிடுவதாய்க் குழு உறுப்பினர்கள் மூவரும் எடுத்த ஒருமித்த முடிவு, (பக்கம்73-75), கூட்டுநரால் தன்னிச்சையாக நிறுத்திவைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதும்.

நிகழ்வுப் பதிவில் குறிக்கப்பட்டிருக்கிற, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தேடுதல் குழுவின் விதியில் இருக்கிற ‘குற்ற வழக்குகள் எதுவும் என் மீது இல்லை’ என்கிற விண்ணப்பதாரரின் ஒப்புதல் பதிவை நீக்க,  எங்களிடம் பொய்க்காரணம் கூறி, ஒரு மாதம் கழித்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு விதி திருத்தப்பட்டு, அப்பதிவு நீக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதிநாள் 29-06-2015 மாலை 5 மணி என்பதாகவும் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன என்பதும், நூலின் பக்கம் 15-17 இல், அவற்றின் பின்னிணைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.

விளக்கம் : இந்நூலின் பக்கங்கள் 13 முதல் 17 வரையும், பின்னிணைப்புப் பக்கங்கள் 92 முதல் 96 வரையுமான, மே 1 முதல் மே 8 வரையுமான அவருடனான என்னின் மின்னஞ்சல் பதிவுகளும், முனைவர் முருகதாஸின் இந்த அறக்கேட்டையே விளக்குகின்றன.

அவரின்குற்றச்சாட்டு 2 : ‘In the meeting held on 22-08-2015, the decision to short list a panel of three names was evolved. In the same meeting, a hard copy of the consolidated list of 142 applications along with their details was provided to all the members of the search committee’. – இது அவரின் எதிர்மனுவின் 8 ஆம்பத்தியில் (நூலின்பக்கம் 137) குறிப்பிடப் பட்டுள்ளதாகும்.

என்பதிற்கேள்வி : மூவரும் கையொப்பமிட்டிருக்கிற 22-08-2015 நாளிட்ட நிகழ்வுப்பதிவு இந்நூலில் பக்கம் 103 இல் உள்ளது. அதில் இந்த நிகழ்வுகள் எதுவும் பதிவாகவில்லை. ஏனெனில் அப்படி எதுவுமே நிகழவில்லை.

அந்த நிகழ்வுப் பதிவில் ‘It is resolved to engage Thiru.IssacMohanlal, Advocate for WP no. 22565/2015 & 22566/2015 filed in the Madras High Court’ என்று மட்டுமே பதிவாகி உள்ளது.

24-07-2015 அன்று தான், விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கான இறுதி நாள் எனில், வந்திருந்த விண்ணப்பங்கள் பற்றிய பதிவு, அந்த நாளுக்குப் பின் நடக்கின்ற இந்தக் கூட்டத்தின் நிகழ்வுப் பதிவில் பதிவாகி இருக்கவேண்டுமா இல்லையா? பதிவாகியிருக்கவில்லை.

விளக்கம் : இந்நூலின் 19 இலிருந்து 23 வரையுமான பக்கங்கள், முனைவர் முருகதாஸின் இந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

அவரின்குற்றச்சாட்டு 3 : ‘In the subsequent meeting held on 10-10-2015, the process of short listing was almost completed. In the course of the meeting, Dr.Mu.Ramaswamy wanted to include one unqualified applicant in the panel. As his demand was not conceded to, there was apparently a change in the attitude of Dr. Mu. Ramaswamy’.- இது அவரின் 9 ஆவது பத்தியின் (நூலின்பக்கம் 137) என் மேலான குற்றச்சாட்டாகும்.

என்பதிற்கேள்வி : மூவரும் கையொப்பமிட்டிருக்கிற 10-10-2015 நாளிட்ட நிகழ்வுப்பதிவு இந்நூலில் பக்கம் 106 இல் உள்ளது. ‘Resolved to fix the norms’ என்று மட்டுமே உள்ளது. நீண்டநாள் விவாதத்திற்குப் பிறகு, அன்றுதான் விதிமுறைகள் வகுப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

எப்படி வகுப்பதென்று, மூவரும்கூடி எந்த முடிவும் எடுக்கவில்லை. விதிமுறைகள் வகுக்கிற பொறுப்பும் என்னிடம்தான் கொடுக்கப்பட்டிருந்தது.  பக்கம் 107 இன், 16/17/18-10-2015  நாளிட்ட மின்னஞ்சல் பதிவுகளும், பக்கம் 108 இன் 21-10-2015 நாளிட்டு நான் வகுத்து, மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பியிருந்த மதிப்பெண் விதிமுறைகளும் இதைத் தெளிவுபடுத்தும்.

இதைத் தொடர்ந்து 17-11-2015 வரையும் எனக்கும் அவருக்குமான மின்னஞ்சல் பதிவுகளில் எந்த இடத்திலும், தகுதியற்ற ஒருவரை நான் பட்டியலில் சேர்க்கச் சொன்னதாக எங்குமே பதிவில்லை.

யார் பெயரைச் சொன்னேன் என்பதை இப்போதாவது வெளியிட்டிருக்கலாமே! ஆனால் முனைவர் முருகதாஸ், இறுதி நாளான 24-07-2015 -க்குப் பிறகு, 10-10-2015 அன்று முனைவர் மாணிக்கவாசகம் என்பவரிடமிருந்து தன் விவரக்குறிப்பு விண்ணப்பத்தை வாங்கி உறுப்பினர்கள் இருவருக்கும் தெரியாமல், பல்கலைக்கழக விண்ணப்பதாரர் பட்டியலில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார் என்பதுதான் அவர் மீதுள்ள இன்னொரு குற்றச்சாட்டு!

இந்நிலையில் அவர், ‘Please also note that I am not sponsoring anyone from my community or from my native place as against the impression created by certain persons in the university’ என்று, குற்றம் உள்ள நெஞ்சாக 09-02-2016 இல் மின்னஞ்சல் கடிதம் வழி குறுகுறுத்திருப்பதன் (நூலின்பக்கம் 129) நோக்கம் என்ன?

விளக்கம் : இந் நூலின் பக்கங்கள் 24 முதல் 28 வரை இந்த முறைகேட்டை விளக்குகிறது.

அவரின் குற்றச்சாட்டு 4 : ‘In the next meeting on 17-11-2015, Dr. Mu. Ramaswamy want only raised unwarranted issue of number of applications based upon a non–existent register purportedly maintained by the Registrar’s office. He want only stated that only 112 applications were received instead of the actual number of 142 applications’.-இது அவரின் எதிர்மனுவின் 10 -ஆம் பத்தியில் (நூலின்பக்கம் 138) கூறப்பட்டுள்ள என் மீதான குற்றச்சாட்டாகும்.

என்பதிற்கேள்வி : 17-11-2015 நாளிட்ட நிகழ்வுப்பதிவு என்ன சொல்கிறது என்பதைப் பக்கம் 117  -இல் காணலாம்.  அதில், ‘The committee met on 17-11-2015 at 11.00 am and the meeting was inconclusive due to the differences noticed in the number of applications received in office’ என்றுள்ளது. அதில் நான், ‘applications submitted before the advertisement and after the deadline should not be considered. 112 applications received by the office of the search committee after the advertisement should be taken into account for the search process’ என்று பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் இந்தக் கூட்டத்தைப்பற்றி நான் மேதகு ஆளுநரிடம் 31-12-2015 -இல் முறையிட்ட நிலையில், 07-01-2016  -இல் கூட்டுநர் முனைவர் முருகதாஸ், மேதகு ஆளுநரின் முதன்மைச் செயலருக்கு, என் 31-12-2015 நாளிட்ட கடிதத்திற்குப் பதில் எழுதியிருக்கிற அவரின் கடிதத்தில், பக்கம் 125  -இல் குறிப்பிட்டிருக்கிற, ‘as far as the meeting of the search committee held on 7-11-2015 is concerned I wish to state that the meeting had to be closed earlier due to inclement weather’ என்பது உண்மையை மறைத்திருக்கிற மிகப்பெரும் பொய்யில்லையா?

இன்னொன்று, அந்தக் கடிதத்தில் பக்கம் 123 -இல் அவர் சொல்லுகிற, ‘including those applications sent to the residential address of the convener besides some applications forwarded to the convener by the office of the Excellency as well as the Higher Education Department’ என்பது எப்படிச் சரியானதாகும்?

24-04-2015 -இல் ஒருமித்து எடுத்திருந்த தீர்மானம் (நூலின்பக்கம்74/ 75) ‘ Three copies of application should be submitted. The application should be submitted to the convener, Search committee for recommending the panel for appointment as Vice-Chancellor, Office of the Search Committee, Madurai Kamaraj University, Madurai 625021, Tamilnadu…. Delay due to the postal delivery/ any other reason beyond the due date will not be accepted’ என்பது கூட்டுநருக்கும் சேர்த்துத்தானே?

அவர் வீட்டிற்கு வந்ததையும் மேதகு ஆளுநர் அலுவலகத்திற்கு வந்ததையும் உயர் கல்வித்துறைக்கு வந்ததையும் எந்தத் தேடுதல் குழுக் கூட்டத்திலாவது வைத்து விவாதித்திருக்கிறாரா? கூட்டுநர் அவர் விருப்பத்திற்கேற்ப, காலம் கடந்தும், விண்ணப்பங்களை மற்றைய உறுப்பினர்களுக்குத் தெரியாமல் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற விதி எங்குள்ளது?

அந்த உரிமை, அவருக்கு எங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது? இன்னொன்று, தேடுதல் குழு அலுவலகத்தில் தேடுதல் குழுவால் அனுமதிக்கப்பெற்று பெறப்பட்ட விண்ணப்பங்களின்பதிவேட்டை, ’பதிவாளர் அலுவலகத்தில் உள்நோக்கத்தோடு தயாரிக்கப் பெற்ற, தேடுதல் குழுவிலேயே இல்லாத பதிவேடு’ என்று கூட்டுநர் கூறினால் (நூலின்பக்கம் 138),தேடுதல்குழு அலுவலகத்திற்  குவந்திருந்த விண்ணப்பங்களை நாள் வாரியாகப் பதிவு செய்த பதிவேடு எங்குள்ளது? யாரிடமுள்ளது?

அப்படி எதுவும் இல்லாமல், எங்கு, எப்படி, யாரால், எதைக் கொண்டு விண்ணப்பதாரர் பட்டியலானது தயாரிக்கப் பெற்றது? வானத்திலிருந்து தானாக வந்து சேர்ந்து கொண்டதா? இவை எதற்கும் கூட்டுநரிடமிருந்து நம்பத்தகுந்த பதில் இல்லை.

விளக்கம் : இவை யாவும் இந் நூலின் பக்கங்கள் 48 முதல் 53 வரையும் விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கூட்டுநர் முனைவர் முருகதாஸ் தேடுதல் குழுவில் நீடிப்பது சரியில்லை என்று மேதகு ஆளுநருக்கு 31-12-2016 இலும் கடிதம் அனுப்பியிருந்தேன். (பக்கம் 120-121). எதுவும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்ற நிலையில், என்னைக் கூட்டுநர் முனைவர் முருகதாஸே பொய்கூறி இப்பொழுது என்னை வம்பிற்கு இழுத்திருக்கிற நிலையில், நான் நடந்த உண்மைகளைக் கூறாதிருப்பது சரியல்ல என்பதால்,  இந்த நூலின் மூலமாய் என் விளக்கங்களை ஊடகத்தவர் முன்பு வைக்கின்றேன். உண்மையைக் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

நாள் : 03-10-2017
(மு.இராமசுவாமி)

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க