privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?

தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?

-

லைநகர் தில்லியின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற ஒரு தீர்ப்பை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. 2016 -ம் ஆண்டிலும் இது போன்ற ஒரு தீர்ப்பில் சீனப் பட்டாசிற்கு தடை விதித்திருந்தது.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு எதிராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இன்று பல்வேறு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனால் தலைநகரின் காற்று மாசுபாட்டிற்கு வேறு இன்றியமையாத சக்திகளை உச்சநீதிமன்றம் தடை செய்ய முடியாது.

காற்று மாசுபாட்டில் தலைநகர் டெல்லி மாதிரிப் படம்

மோசமான காற்று மாசுபாட்டினால் நாளொன்றிற்கு சராசரியாக 8 பேர் டெல்லியில் இறக்கிறார்கள் என்று புள்ளிவிரங்கள் கூறுகின்றன. அமெரிக்க பெட்கோக் எனப்படும் ஒரு வகை நிலக்கரியை இறக்குமதி செய்வதில் உலகின் முன்னணி சந்தையாக இந்தியா திகழ்வதன் விளைபொருளாகவே உலகின் மாசுபட்ட நகரங்களில் முதன்மையான ஒன்றாக தலைநகர் டெல்லி இருக்கிறது.

நிலக்கரிப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் போக்குவரத்தை நெறிப்படுத்துவதன் மூலமும் இந்த மாசுபாட்டில் இருந்து தலைநகரைக் காப்பதற்கு அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும் பெட்கோக்கை இறக்குமதி செய்வதன் மூலம் அந்த முயற்சிகள் நீர்த்துப்போகின்றன. ஏனெனில் நிலக்கரி அல்லது டீசலை விட பெட்கோக் சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கிறது.

உலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் பயன்பாடு 23% உயர்ந்துள்ளது. 2011 –ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016 -ம் ஆண்டில் 20 மடங்கு அதிகமாக பெட்கோக்கை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.

கந்தகத்தின் அளவு அதிகபட்சம் நுண்துகள் அளவு 4000 PPM இருக்க வேண்டும் என்ற தளர்வான கட்டுப்பாடே இந்தியாவில் உள்ளது. பெட்கோக்கை எரிக்கும் போது உருவாகும் கந்தகத்தின் நுண்துகள் அளவு 72,000 PPM வரை இருக்கிறது என்று தேசிய தலைநகர் மண்டல சுற்றுச்சூழல் அமைப்பு (EPCA.) கூறியிருக்கிறது. பெட்கோக் உமிழ்வுகளில் நச்சுத்தன்மையான உலோகங்கள் குறிப்பாக வெண்ணாகம், நிக்கல் மற்றும் இரும்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. நிலக்கரியை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 10-15% கரியமில வாயுவை அதிகமாக பெட்கோக் வெளியிடுகிறது.

டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமான பெட்கோக்கை ஒன்று தடை செய்ய வேண்டும் அல்லது அதை பயன்படுத்த முடியாதவாறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2017, பிப்ரவரியில் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு கையை விரித்துவிட்டது. கடைசியாக அக்டோபர் 24 -ம் தேதிக்குள் பதில் கூற வேண்டும் என்று காகிதத்தில் நீதி மன்றம் ஒருத் தீர்ப்பையும் எழுதி விட்டது.

மூன்றாம் உலக நாடுகளில் பெட்ரோலியக் கழிவுகளை கொட்டி லாபம் பார்க்கும் அமெரிக்கா

இந்தியாவில் இருக்கும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் பெறப்படும் பெட்கோக் பற்றாக்குறையாக இருப்பதால் தான் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 86 விழுக்காடு பெட்கோக்கை இந்தியா 2016 -ம் ஆண்டில் இறக்குமதி செய்தது.

அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் கனடாவின் தார் மணல் சுத்திகரிக்கப்படும் போது இந்திய ஏற்றுமதிக்கான பெட்கோக் உருவாகிறது. மலிவான விலையின் காரணமாக நிலக்கரிக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் கடுமையான சட்டங்கள் காரணமாக பெட்கோக்கை எரிபொருளாக அங்கே பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக  சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கொள்ளை இலாபம் பார்க்கிறார்கள் அமெரிக்க நிறுவனங்கள்.

சுற்றுச்சூழலை அதிகபடியாக மாசுபடுத்துவதன் மூலம் அதிகபடியான இலாபத்தை நிறுவனங்கள் ஈட்டுவதற்கு இது ஒரு மிகச்சிறந்த சான்று என்று ஆயில் சேஞ்ச் இன்டெர்நேசனல் (Oil Change International) என்ற நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான லோர்ன் ஸ்டாக்மேன் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய பெட்கோக் இறக்குமதியாளராக 2014 -ம் ஆண்டு வரை சீனா இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடுமையான சட்டங்களைப் போட்டதன் மூலம் இறக்குமதியை பாதியாக இன்று குறைத்தும் விட்டது. இன்று சீனாவிடம் இருந்தும் இந்தியா பெட்கோக்கை இறக்குமதி செய்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவின் குப்பைக்கிடங்காகவே இந்தியா மாறிவிட்டதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (Centre for Science and Environment) தலைவரான சுனித நாரயன் குற்றஞ்சாட்டியிருந்தார். பெட்கோக்கைத் தடை செய்வதற்கு இடையூறாக கெயில்(GAIL), அதானி கேஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து பெட்கோக்கை இறக்குமதி செய்வதை அதானி உள்ளிட்ட இந்தியத் தரகு முதலாளிகளே கட்டுப்படுத்துகின்றனர். எவ்வளவு பெட்கோக் இவர்கள் இறக்குமதி செய்கிறார்கள் என்ற விவரத்தைக் கேட்பதற்கான அதிகாரம் கூட இந்தியாவில் யாருக்குமே கிடையாது என்பதே எதார்த்தம். இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தடை என்பதெல்லாம் ஒரு போங்காட்டம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க