Wednesday, January 19, 2022
முகப்பு பார்வை இணையக் கணிப்பு மெர்சலால் டென்சனான ஹெச் ராஜா – கருத்துக் கணிப்பு

மெர்சலால் டென்சனான ஹெச் ராஜா – கருத்துக் கணிப்பு

-

ஹெச். ராஜாஅல்லது எச்.ராஜா என்று அழைக்கப்படும் ஹரிஹர ராஜா சர்மா இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அதிகம் வெறுக்கப்படும் நபரா?

“மெர்சல்” திரைப்படத்தில் வரும் காட்சிகளால் பாஜக-வின் தமிழக எடுபிடிகள் வெறுப்பானார்கள். அந்த வெறுப்பில் பெரும் வெறுப்பான ராஜா அன்றாடம் வன்மத்தோடு துப்பி வருகிறார். நடிகர் விஜய், ஜோசப் என்ற பெயரை மறைத்து வாழும் கிறித்தவர் என்றதோடு அவரது ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் ( உண்மையில் இது வாக்காளர் அடையாள அட்டை) வெளியிட்டுள்ளார். ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை அரசிடமிருந்து இந்த ஆளுக்கு எப்படிவந்தது? இதை வெளியிட என்ன ஒரு வக்கிரம் இருக்க வேண்டும்?

இதைக் கண்டு அனைவரும் கொதித்தெழுந்துள்ளனர். ராஜாவின் இளைய பங்காளியான அர்ஜுன் சம்பத்தோ இன்னும் வன்மமாக நடிகர் விஜய் தனது மனைவியையை மதம் மாற்றித் திருமணம் செய்தார் என்றெல்லாம் கள் குடித்த காட்டெருமை போல (எருமைகள் மன்னிக்க) கத்தி வருகிறார்.

இவர்களுடைய வாதப்படி கிறித்தவரான நடிகர் விஜய், இந்து கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் வேண்டும் என்று கூறக்கூடாதாம். அதையே நீட்டித்தால் நடிகர் நாசர் இந்துவாக நடிக்க கூடாது, முசுலீமான ஷகிலா ஐயராத்து பெண்ணாக நடிக்க கூடாது என்று கூட சொல்வார்கள்!

பாபர் மசூதியை இடித்த இந்த ஞானசீலர்கள் தங்களைப் போன்றே மற்ற மதத்தவரும் வெறியாக இருப்பார்கள் என்று கருதுகிறார்கள். இன்னும் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு, இராணுவம் என்று எல்லா இடத்திலும் சிறுபான்மை மதத்தவர் வரக்கூடாது என்பதே இவர்கள் பின்பற்றும் எழுதப்படாத விதி.

ராஜாவின் குற்றங்கள் இத்தோடு முடியவில்லை. மோடியை அவன் இவன் என்று பேசும் வைகோ தமிழ்நாட்டில் நடமாடமுடியாது என்றார். ஊடக சந்திப்பில் இவரை மடக்கி கேட்டால் அந்த செய்தியாளரை தேசத்துரோகி என்றார்.

பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, தி.க வீரமணி, சுப.வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசியதோடு அவர்களை தண்டிப்பதற்கான சட்டப்பிரிவுகளையும் கூறியிருக்கிறார். இது குறித்து வினவு தளத்தில் ஒரு வீடியோவே இருக்கிறது.

தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் முசுலீம்களை விமரிசிக்காதது ஏன் என்று கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூறுவது போன்ற செய்திப் படத்தை வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் என்பது தெரிந்த பிறகும் அதை தனது டிவிட்டர் பக்கத்தில் நீக்காமல் வைத்திருந்தார். மெர்சல் படத்தில் பொய், பொய் என்று கத்தும் இந்த ஜீவராசி இதை பொய் என்று தெரிந்தே கூறுகிறது என்றால் இது என்ன மாதிரியான டிசைன்?

தமிழக பாஜக மற்றும் ‘சங்கி’ பரிவாக் கும்பலின் தொண்டர்கள் இத்தகைய அடாவடி அரசியல் செய்யும் தலைவர்களை மாபெரும் சண்டைக்காரர்கள் என்று நம்புவதோடு உசுப்பேற்றியும் வருகிறது. இதன் மூலம் கோஷ்டி மோதல்களைத் தாண்டி தான் ஒரு ‘அப்பப்பாடக்கராக’ வர முடியும் என்று ராஜா மட்டுமல்ல, நாராயணன், சீனிவாசன், அர்ஜின் சம்பத் என்று பல்வேறு டிசைன்கள் பிதற்றி வருகின்றன.

ஆனால் தமிழக மக்களிடம் இந்தக் கூட்டம் மேலும் அம்பலமாகி வருவதையே மெர்சல் படத்தின் விவாதம் சுட்டிக்க காட்டுகிறது. விரைவில் தமிழத்தில் எந்த இடத்திலும் பாஜக கம்பம் பறக்க கூடாது என்ற நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள். அதை தாமதிக்க கூடாது என்றே பாஜக கூட்டம் தீயா…ய் வேலை செய்கிறது.

எனினும் எச்.ராஜாவின் இந்த இந்துமதவெறிப் பிரச்சாரம் ஓரளவுக்கு பார்ப்பன – ‘மேல்சாதி’ நடுத்தர வர்க்கத்திடமும் எடுபடலாம். அந்த செல்வாக்கும் இனி இருக்காது என்பதை நோக்கி பாஜக பீடை நடை போடுகிறது.

நமது கணிப்பு சரிதானா? ஹெச் ராஜா குறித்து மக்கள் மனநிலை என்ன? வாக்களியுங்கள்!

பதில்களில் ராஜாவுக்கு ஆதரவாக நான்கும், எதிர்ப்பாக ஐந்தும் இருக்கின்றன. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை தெரிவு செய்யலாம். அதே நேரம் எதிர்ப்பை விட ஆதரவு ஒன்று குறைவாக இருப்பதால் நீங்கள் நான்கு பதில்களை மட்டுமே தெரிவு செய்ய முடியும்!

 • சிறந்த தேசபக்தர்
 • அவரெல்லாம் ஒரு ஆளுன்னு… வாயில் வந்துரப் போகுது
 • தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர்
 • தென்னாட்டு கோட்சே
 • வாயில் வசை வந்தாலும் மனசில நல்லவரு
 • அரசியல்வாதியாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும்
 • இவரு பேசப்பேசத்தான் பாஜக வேகமாக அழியும்
 • கிறித்தவ முஸ்லீம் இடதுசாரி சதியால் கெட்டபெயர் வாங்கும் நல்லவர்
 • இந்துமதக் காவலர்

_____________

இந்த கருத்துக் கணிப்பு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. தமிழக மக்களின் நம்பர் ஒன் வில்லன் என்று எச்ச ராசா பற்றிய கருத்துக்கணிப்பில் ஒரு தேர்வை வைத்துள்ளீர்கள் இது நியாயமா?
  அகில பாரத பிரதமர் மோடி இருக்கையில்

 2. இவருக்கே அனைத்தையும் அளித்தால் மற்றவர்கள் காேபித்துக் காெள்ள மாட்டார்களா …? ஆமாம் ” சவுண்டு பார்ட்டி ” அக்காவை பற்றி எப்பாேது கணிப்பு …?

 3. கறி சாப்பிடாத இந்த சைவக்கார “பட்டர்” தான் (வெண்ணெய் என்றும் பொருள் கொள்ளலாம்) மாற்று மதத்தினரின் இரத்தம் குடிக்க அலையும் ஒரு உண்மையான “அசைவ” ஓநாய்.(மன்னிக்கவும் ஓநாய்களே)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க