Wednesday, January 19, 2022
முகப்பு செய்தி சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !

சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !

-

ணவுப் பாதுகாப்பிற்கான சட்டங்களை ஏய்த்து கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடி டன் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன் மற்றும் கனோலா எண்ணெயையை இறக்குமதி செய்ய இந்திய அரசு ஒத்துழைத்தது தெரிய வந்துள்ளது. சோயாபீன் எண்ணை கடந்த பத்தாண்டுகளாகவும் கனோலா எண்ணை மூன்று ஆண்டுகளாகவும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

மரபீனி மாற்ற உணவுப்பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் அல்லது முறையான ஆய்வுக்குட்படுத்தி லேபிள் ஓட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அருணா ரோட்ரிகஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த உணவுப் பாதுகாப்பு ஆணையம், மரபீனி மாற்ற எண்ணையை தங்களால் கண்டறிய இயலவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியது.

சோயாபீன் மற்றும் கனோலா எண்ணைய் இரண்டும் மரபணு மாற்றப்பட்டவையா என்பதை அறிய ஏரளாமான அறிவியல் ஆய்வுகள் நடைமுறையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பாலிமரஸ் தொடர் வினை (Polymerase chain reaction) கருவியைப் பயன்படுத்தி இதை கண்டறியலாம்.

மரபீனி மாற்ற உணவுப்பொருட்களின் இறக்குமதி இந்தியாவில் இரண்டு வெவ்வேறு சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும். 1986 -ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சத்திடம் இருந்து ஒப்புகை பெற வேண்டும் என்பது ஒன்று. அடுத்ததாக மனிதர்களின் பயன்பாட்டிற்கு மரபீனி மாற்ற உணவுப்பொருட்கள் ஏற்றவையா என்று உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திலிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் மட்டுமே இறக்குமதியாளர்கள் ஒப்புதல் பெற்றுள்ளனர், சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சகத்திடம் ஒப்புகை பெறாமலேயே இத்தனை ஆண்டுகளாக உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து வந்துள்ளனர் என்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சகமும் நலத்துறை அமைச்சகமும் ஒருவர் மேல் மற்றொருவர் பழி போட்டுக்கொண்டே இந்த குற்றத்தை இழைத்திருக்கின்றனர். இந்திய மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கிள்ளுக்கீரையாக தான் இந்திய அரசு கருதுகிறது என்பதற்கு இது சான்று.

உண்மையில் இந்த பிரச்சினையை இரண்டு விதமாக நடைமுறையில் உள்ளது. மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரபீனி மாற்ற உணவுப்பொருட்கள் உகந்தனவா என்பதை அறிவியல் உலகம் ஐயந்திரிபுர நிறுவவில்லை என்பது ஒன்று.

அப்படியே மரபீனி மாற்ற உணவுப்பொருட்களை விற்றாலும் “மரபீனிய மாற்ற உணவுப்பொருட்கள்” என்று தெளிவாக எழுதி விற்க வேண்டும் என்பது இன்னொரு பிரச்சினை.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் மரபீனி மாற்ற உணவுப்பொருட்கள் என்று தெளிவாக பெயரிடப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. உலகின் பெரிய ஜனநாயகத்தின் சந்துபொந்துகள் வழியே தங்குதடையின்றி மரபீனி மாற்ற உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இங்கே இது பிரச்சினையில்லை

மரபீனிய மாற்ற கடுகு மரபுரீதியான கடுகை விட அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்றும் இது சமையல் எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்கும் என்றும் மரபீனிய மாற்ற ஆதரவாளர்கள் வாதம் புரிகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப விளைச்சலை அதிகபடுத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்றும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர். ஆயினும் இந்த கூற்று இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை என்கிறார் அருணா.

ஏற்கனவே கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு காங்கிரசு அரசு 2010 -ம் ஆண்டு பி.டி கத்திரியை தடை செய்தது. அதனைத் தொடர்ந்து அத்தடையை நீக்கச் சொல்லி மரபீனிய மாற்ற விதை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மான்சாண்டோவின் பி.டி பருத்தி விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டியது வரலாறு. மரபீனி மாற்ற உணவுப்பொருள்கள் தொடர்பான அருணாவின் மற்றொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. ஆயினும் மரபீனி பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்து இந்திய மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது இந்திய அரசு.

தன்னார்வ ஆர்வலர்களின் வழக்கில்தான் இந்த உண்மைகள் வெளி்யே தெரிய வருகின்றன என்பதிலிருந்தே நமது அரசாங்கத்தின் இலட்சணம் தெரிகிறது. சுகாதாரத்துறையின் சார்பில் மத்திய மாநில அரசுகள் மக்களை குற்றம் சாட்டி உபதேசிப்பது வழக்கம். மக்களிடம் இருக்கும் அறியாமையை விட அரசுகளிடம் இருக்கும் அலட்சியமும், திமிருமே பெரும் பிரச்சினை!

மேலும் :

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க