Sunday, September 25, 2022
முகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் சாதி மட்டுமே ஒரே தகுதி - அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !

சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !

-

யானையைப் பானைக்குள் அடைக்கத் தடையில்லை ! – இதுதான் அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாணவர்களின் பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால், அதனைக் கொண்டாடுவது ஆபத்தானது. ஆகம விதிகளில் குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராக வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதால், ஆகமத்தின் உதவியுடனேயே அர்ச்சகர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று சிந்திப்பது, பார்ப்பனியத்துக்கு மனித முகம் வழங்குவதற்கும், இந்த அரசமைப்புச் சட்டத்துக்கு ஜனநாயக முகப்பூச்சு அணிவிப்பதற்கும் மட்டுமே பயன்படும்

பிரம்மாண்டமான கோயில்கள் எனப்படுபவை தென்னாட்டில், அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் மட்டுமே காணப்படுபவை. ஆகம விதிகள் எனப்படுபவையும் வடநாட்டில் கிடையாது. கோயில் சொத்தையும், அர்ச்சகர் பதவியையும் அபகரித்துக் கொண்டவர்கள், அவற்றைத் தங்களது பாரம்பரிய உரிமையாகப் பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் விதிகளை உருவாக்கிக் கொண்டு, அவற்றைக் கடவுள் அருளியவை என்று கூறிக்கொண்டார்கள்.

தமிழக கோவில்களில் பணிநியமனம் வழங்கக் கோரி அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கருவறை முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஆட்சிகள் மாறினாலும், பிறப்பின் அடிப்படையிலான இந்தச் சொத்துரிமையும் சாதி அடிப்படையிலான சமூக அதிகாரமும் என்றென்றைக்கும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுத்தான் கல்வெட்டுகள், செப்பேடுகளில் அவை பதியப்பட்டன. தங்களுக்கு கிடைத்திருக்கும் தகுதி என்பது மன்னன் அருளியது மட்டுமல்ல, அது இறைவன் அருளியது என்று நம்பவைக்கத்தான் ஆகமம், மரபு, சம்பிரதாயம் என்ற மதப்பூச்சாண்டிகள் காட்டப்படுகின்றன.

குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியை அல்லது வகையறாவைச் சேர்ந்த தங்களைத் தவிர, மற்ற சாதியினர் (பிற பார்ப்பனர்களையும் உள்ளிட்டு) மற்றும் பெண்கள் தொட்டால் சிலை தீட்டுப்பட்டு கடவுள் வெளியேறிவிடுவார் என்று கடவுளே சொல்லியிருப்பதாகவும், இதை இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் நம்புவதாகவும் பார்ப்பன அர்ச்சகர்கள் கூறுகிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதைக் காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு இருப்பது போல, தாங்கள் இந்த மரபைக் கூறுவதாகவும் சொல்லி, சாதி, தீண்டாமையைத் தந்திரமாக நியாயப்படுத்துகிறார்கள்.

இந்த பித்தலாட்டமான வாதத்தை உச்சநீதி மன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இன்னின்ன சாதியினர் தொட்டால் தீட்டு என்றோ, இன்னின்ன சாதியினரை நியமிக்கக் கூடாது என்றோ சொன்னால்தான் அதனைத் தீண்டாமை அல்லது சாதி அடிப்படையிலான பாரபட்சம் என்று கருத முடியும் என்று கூறுகிறது உச்சநீதி மன்றத் தீர்ப்பு. பெண்ணினம் முழுவதையுமே தீட்டாக்கி ஒதுக்கியிருப்பதையே, அரசியல் சட்டத்தின் உறுப்பு 14 கூறும் சமத்துவ உரிமைக்கு எதிரான குற்றமாக நீதிமன்றம் கருதவில்லை.

அது மட்டுமல்ல, குறிப்பிட்ட வகையறாவினர் (denomination) மட்டுமே அர்ச்சகராக முடியும் என்று கூறியிருப்பதால், இதனைச் சாதி அடிப்படையிலான ஒதுக்கலாக கருத முடியாது என்றும் கூறுகிறது தீர்ப்பு

மக்கள் கலை இலக்கியக்கழகம் நடத்திய சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தையொட்டி வெளியிடப்பட்ட பிரசுரத்தின் முகப்பு.

மேலும் மத விவகாரங்களில் குறிப்பிட்ட வகையறாவினருக்கு வழங்கப்படும் இந்தச் சிறப்பு சலுகை பொது வேலைவாய்ப்பில் சம உரிமையை மறுப்பதாகாது என்று  அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 16 -இன் உட்பிரிவு 5 கூறுவதால், அந்த அடிப்படையிலும்கூட மற்றவர்கள் அர்ச்சகர் பணியில் சம உரிமை கோர இயலாது என்று மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது இத்தீர்ப்பு.

தி.மு.க. அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கு. அந்த அரசாணையை ரத்து செய்வதாக இந்தத் தீர்ப்பு நேரடியாகக் குறிப்பிடவில்லை.  இந்த 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை.  இவர்களை நியமிக்கலாம். ஆனால், அந்த நியமனம் ஆகம விதிக்கும், மரபுகள் சம்பிரதாயங்களுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டுமென்றும் அதனை மீற முடியாதென்றும் கூறுகிறது. அதாவது யானையைப் பானைக்குள் அடைக்கலாம். அதே நேரத்தில் பானை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இத்தீர்ப்பு கூறும் செய்தி.

பானை என்பது சாதி தீண்டாமை. அந்தப் பானையை உடைக்கவேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய காரியம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

*******************************************************************************

தகுதி இருந்தால் விண்ணப்பித்துக் கொள்!

2015 -ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 206 மாணவர்களின் பணி நியமனத்துக்குத் தடை விதிக்கவில்லை என்ற அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்த மூன்று மாணவர்கள் இந்து அறநிலயத்துறக்கு விண்ணப்பம் அனுப்பினர்.

இதற்கு அறநிலையத்துறையின் துணை ஆணையர் ஞானசேகர், 1.3.2016 தேதியிட்ட தனது பதில் கடிதத்தில், 2015 தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி, கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்பது இல்லை. எனினும், திருக்கோயில் customs and usage மற்றும் ஆகம முறைப்படியே அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும்.

“திருக்கோயில்களில் அர்ச்சகர் பணியிடம் காலியிடங்கள் ஏற்படும்போது, அந்தந்த திருக்கோயில்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அப்போது அறிவிப்பில் சொல்லப்பட்டவாறு தகுதிகள் பெற்றிருப்பின் சம்மந்தப்பட்ட திருக்கோயிலுக்கு நேரடியாக விண்ணப்பித்துக்” கொள்ளுமாறு சொல்கிறார் துணை ஆணையர்.

இதை நம்பி குறிப்பிட்ட சில கோயில்களுக்கு விண்ணப்பம் அனுப்பிய மாணவர்களுக்கோ எந்தப் பதிலும் வரவில்லை. யாரும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படவில்லை.

பயிற்சி நடத்தி தகுதிச் சான்றிதழ் கொடுத்த அறநிலையத்துறையே, “உனக்கு தகுதி இருந்தால் விண்ணப்பித்துக்கொள்” என்று மாணவனிடம் கூறுகிறது. அந்த தகுதி என்பது சாதித் தகுதிதான்.

*******************************************************************************
-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. பிராமணரல்லாத அர்ச்சகர்கள் , தங்களுக்கு அர்ச்சகர் வேலை கிடைக்க வில்லை என்ற காரணத்தினால் தங்கள் பூணூலை அறுத்துவிட்டனர்.

    I don’t want to comment anything on this.

  2. பிராமணரல்லாத அர்ச்சகர்கள் , தங்களுக்கு அர்ச்சகர் வேலை கிடைக்க வில்லை என்ற காரணத்தினால் தங்கள் பூணூலை அறுத்துவிட்டனர்.
    ————————————————————
    இவா்கள் அா்ச்சகா்ககா்களாக தொண்டு செய்யும் தகுதியைப் பெறவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க