Wednesday, July 24, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசம் வெல்லும் ! - புதிய ஜனநாயகம் நவம்பர் 2017 மின்னூல்

கம்யூனிசம் வெல்லும் ! – புதிய ஜனநாயகம் நவம்பர் 2017 மின்னூல்

-

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. கம்யூனிசம் வெல்லும் !

உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.

2. தொழில்துறை முதலாளிகள் பிறந்த கதை !

முதலாளித்துவத்தின் தாயகமான இங்கிலாந்திலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் முதன்முதலில் தோன்றிய தொழில்துறை முதலாளிகள் என்ற வர்க்கத்தினரின் ஆதி மூலதனம் திரட்டப்பட்ட வரலாற்றை, அதாவது மூலதனத்தின் ரிஷி மூலத்தைத் தனது மூலதனம் நூலில் வெளிக்கொணர்கிறார் மார்க்ஸ்.

3. மூலதனத்தின் தத்துவஞானம் !

மார்க்ஸின் மூலதனம் ஒரு பொருளாதார ஆய்வு நூலா, வரலாற்று ஆய்வா, தத்துவஞானங்களின் ஆய்வு முறையிலிருந்து மார்க்சியம் எப்படி வேறுபடுகிறது, ஏன் வேறுபடுகிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

4. ஏன் சோசலிசம் ?

உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்த கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் ( மே 1949 ) வெளியிடப்பட்டது.

5. செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !

ரசிய சோசலிசப் புரட்சியின் நேரடி சாட்சியாக இருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜான் ரீடு எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலில், புரட்சியின் வெற்றி தோற்றுவித்த மகிழ்ச்சிக்கிடையே, உயிர் துறந்த தொழிலாளர்கள், படைவீரர்களின் உடல்களைச் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்த நிகழ்வினை விவரிக்கிறது இப்பகுதி. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க வாசகர்களை அழைக்கிறார் ஜான் ரீடு.

6. வளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு

தனியார்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கண்ட பலனோ, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு மிக வக்கிரமாக வளர்ச்சி அடைந்து கொண்டே செல்வதைத்தான்.

7. மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்தி நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

8. ஜேப்படிக்கு நோபல் பரிசு !

முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதாரம் சார்ந்த நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart


 

 1. வெல்லும் வல்லம் னு சொல்லிகிட்டே இருக்க வேண்டியது தான் 100 ஆண்டுகள் கூட தாக்குபிடிக்கவில்லை கம்முனிசத்தால்

  • அப்படியா அஷாக் ?..

   உங்கள் முதலாளித்துவம் 10 வருஷம் கூட தாக்குப் பிடிக்க முடியலியே ,,, என்ன பண்ணலாம் ?.. எல்லாரும் கும்பலா போய் அல்லாவிடம் கேப்போமா ?. அவரு ஒரு 500 வருசத்துக்காவது தாங்குற மாதிரி நல்ல தீர்வா சொல்லலாம்.

   ஆமா,, பல ஆண்டுகளா முசுலீமா இருக்கீங்களே, உங்களுக்கு அல்லா கண்டிப்பா சொல்லியிருக்கனுமே.. அந்த இரகசியத்தை அப்படியே கொஞ்சம் சொன்னேள்னா வசதியா இருக்கும்
   நானும், அப்புறம் நம்ம வினவு அப்புறம் வினவுக்கார நண்பர்கள் எல்லாரும் உங்ககூட சேந்துக்கலாம்ல …

   அப்படியே அல்லாகிட்ட , இந்த அமெரிக்கா காரன அடக்கி வைக்க நல்லா ஐடியாவா வாங்கிட்டு வாங்க பாய் ..

   வருவீங்கன்னு எதிர்பாக்குறேன் …

 2. சேச்சே என்னானாலும் கேளுங்க , ஆனா அமேரிக்காகாரனை மட்டும் ஒன்னும் புடுங்க வேணாம்னு அல்லா சொல்லிபுட்டாரு, ஏன்னா அமெரிக்ககாரன் இல்லன்னா சொந்தமா சிந்திக்க நம்ம சவூதி சேக்கு பாய்ங்க மூளைக்கு எங்க போவாங்க? ஐ போனுக்கு எங்க போவாங்க? கேடிலாக் காருக்கு எங்க போவாங்க பாவம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க