Sunday, March 26, 2023
முகப்புசெய்திபணமதிப்பழிப்பு : கருப்புப்பணமும் வரவில்லை ! இணைய வர்த்தகமும் நடக்கவில்லை !!

பணமதிப்பழிப்பு : கருப்புப்பணமும் வரவில்லை ! இணைய வர்த்தகமும் நடக்கவில்லை !!

-

ணமதிப்பழிப்பு நடவடிக்கை இந்திய ஏழை எளிய மக்கள் மீது திணிக்கப்பட்டு ஓராண்டு முடிந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து சரக்கு சேவைகள் வரியும் சேர்த்து இந்தியப் பொருளாதாரத்தின் மென்னியைப் பிடித்து உலுக்கியெடுத்து விட்ட நிலையில், நவம்பர் 8 -ம் தேதியை கருப்புப்பண ஒழிப்பு நாளாக இந்துத்துவ வானர கும்பல்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தும் விட்டன.

மோடியின் பணமதிப்பழிப்பு அஸ்திரம் கருப்புப்பணத்தையும் ஒழிக்கவில்லை கள்ளப்பணத்தையும் ஒழிக்கவில்லை என்பது பழைய செய்திதான்.  கிட்டத்தட்ட 99 விழுக்காட்டிற்கும் அதிகமான பணம் வங்கிகளுக்கே திரும்பிவிட சாயம் வெளுத்துப்போன மோடியின் பக்தர்கள் “இணைய வர்த்தகம்” தான் மோடியின் உண்மையான திட்டம் என்று அடித்துவிட தொடங்கினர். அதிலும் இப்பொழுது ஆப்படிக்கப்பட்டுவிட்டது.

ஓராண்டிற்குப் பிறகு ஒட்டுமொத்த பணப்புழக்கம் கிட்டத்தட்ட 91 விழுக்காடு அதாவது 16.35 இலட்சம் கோடி ரூபாயை எட்டிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு முன்னதாக சென்ற ஆண்டு நவம்பரில் இருந்த பணப்புழக்கத்தின் அளவு 17.97 இலட்சம் கோடி ரூபாய்.

இது ஒருபுறமிருக்க முன்னதாக 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 94 இலட்சம் கோடி ரூபாயாக இணைய வர்த்தகம் இருந்தது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு 33 விழுக்காடு இணையப் பொருளாதாரம் அதிகரித்து 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 124.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இது மார்ச்,2017-ல் 149  இலட்சம் கொடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்டோபர் 29 ல் தடாலடியாக 99.3 இலட்சம் கோடி ரூபாயாக விழுந்துவிட்டது.

கருப்புப்பணமுமில்லை. கள்ளப்பணமுமில்லை. இணைய வர்த்தகமும் இல்லை. ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துவிட்டது. எனில், வானரங்களின் இந்த கொண்டாட்டத்திற்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா என்ன?

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க