“தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை ! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல; கோடிக்கால் பூதம் என்பதை நிலை நாட்டுவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் வேலூர் மாவட்டம், ஆம்பூர் பத்திர பதிவு அலுவலகத்தின் முன் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செயலாளார் தோழர் சுந்தர் தலைமையேற்று பேசும்போது “விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மோடியின் ஆட்சியில் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டும்.” என தனது உரையில் கூறினார்.
அதன் பிறகு மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன், கண்டன உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் “மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிரானவைகளாவே உள்ளன.
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, நிலம் கையகப்படுத்தும் மசோதா மேலும் மீத்தேன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.
அந்த வரிசையில் தற்போது கார்ப்பரேட்களின் நலனுக்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான, 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு விதிமுறைகளாக மாற்றப்படவுள்ளன.
இது தொழிலாளிகளை மீண்டும் கொத்தடிமை நிலைக்கு மாற்றும் என்பதையும் நிதி ஆயோக் பற்றியும் விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டம் கடைகள் நெருக்கமாக இருந்த பகுதியில் நடைபெற்றதால் திரளான வணிகர்களும், பொதுமக்களும் கவனித்து சென்றனர். மேலும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அப்பகுதி தொழிலாளிகள் நின்று கவனித்து சென்றனர்.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர் மாவட்டம்.
***
தீவிரமடைகிறது கூலியடிமை முறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்! என்கிற தலைப்பில் 11.11.2017 மாலையில் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமையேற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டம்.
***
தீவிரமடைகிறது கூலி அடிமை முறை தொழிலாளி வர்க்கம் புழுவல்ல ! கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்! என்ற முழக்கத்தின் கீழ் 11.11.17 அன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரிலும், திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கும்முடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
கும்முடிப்பூண்டியில் மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் தோழர் ரமேஷ் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
திருவொற்றியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…
திருவொற்றியூரில் தோழர் ஆனந்தபாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணலி SRF எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்தின் இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு செய்தார். மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் கண்டன உரையாற்றினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்