Tuesday, June 18, 2024
முகப்புசெய்திகுஜராத்: வாயிலேயே சுட்ட வடை !

குஜராத்: வாயிலேயே சுட்ட வடை !

-

மின்சாரத்தில் இருந்து குடிநீர் வரைக்கும் வளர்ச்சி குறித்த எவ்வித ஒப்பீடாக இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை விட மூன்று மடங்கு அதிகமாக குஜராத் முன்னிலையில் இருக்கிறது என்று சமீபத்தில் நியூஸ் -18 தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பா.ஜ.க. -வின் தேசிய தலைவரான அமித்ஷா’ஜி’ கூறியிருந்தார்.

குஜராத்தின் ‘சாதனைகள்’ குறித்து  ஏற்கனவே பலமுறை சமூக செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், சமீபத்தில் வெளியான 2015 – 16- ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் அடிப்படையில் சங்கிகளின் கோவணத்தை  உருவுவதே சாலச் சிறந்தது

மின்சாரமயப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் காங்கிரசு ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் 99.5 விழுக்காடாகவும் கர்நாடகாவில் 97.8 விழுக்காடாகவும் ஆந்திராவில் 98.8 விழுக்காடாகவும் பஞ்சாபில் 99.6 விழுக்காடாகவும் இருக்கிறது. உத்திரகாண்டில் கடந்த காங்கிரசு ஆட்சியில் கூட மின்சாரமயப்படுத்தப்பட்ட குடும்பங்கள் குஜராத்தை விட அதிகமாக அதாவது 97.5 விழுக்காடாக இருந்தது.  ஆனால் “துடிப்பான குஜராத்”-ல் 96 விழுக்காடு குடும்பங்களில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

மேம்பட்ட குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் விழுக்காட்டை எடுத்துக் கொண்டாலும் காங்கிரசு ஆளும் இமாச்சல்பிரதேசமும் (94.9%) கர்நாடகாவும் (92.9%) குஜராத்தை (90.9%) விட மேம்பட்டே இருக்கின்றன. இப்படி பெரும்பான்மையான அளவீடுகளில் ‘குஜராத் மாடல்’ என்ற குமிழி உடைந்து நொறுங்கியிருக்கிறது.

’குஜராத் மாடல்’ என்ற பெயரில் பொய்யையும் புரட்டையும் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டு இந்துத்துவ கும்பல் பரப்பி வந்துள்ளது. ஆயினும்  குஜராத் மாடல் என்பது எதார்த்தத்தில் குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியாகவும், மனித வள மேம்பாட்டின் வீழ்ச்சியாகவுமே இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன.

பாலின விகிதம், குழந்தை இறப்பு விகிதம், சராசரி ஆயுள் மற்றும் வறுமை விகிதம் என்று எதிலும் பா.ஜ.க கும்பல் ஆளும் குஜராத் மாநிலம் ஏனைய பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட பின்தங்கியே இருக்கிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குஜராத்தை 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் பா.ஜ.க கும்பல் உணர்ச்சி கூப்பாடு போடும் அளவிற்கு எதுவும் சாதிக்கவில்லை என்பதையே இவையாவும் கூறுகின்றன.

காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க-வாக இருந்தாலும் சரி வளர்ச்சி என்பது வெறும் மாய்மாலங்களே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆயினும் வெறும் வாயால் வடை சுட்டு, அதையே ஆண்டாண்டுக்கும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைப்பது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு மட்டுமே உரித்தான தனித்திறமை  !  இந்த வித்தையில் அமித்ஷா மந்திரி என்றால், மோடி தான் ராஜா !

மேலும் :

 

 1. இது சரியான அளவுகோல் அல்ல .

  பீ ஜீ பி ஆட்ச்சி அமைவதற்கு முன்னாள் குஜராத்தை எவ்வளவு விழுக்காடு இருந்தது அதன் பின்னால் எவ்வளவு வளர்ந்துள்ளது என்று பார்த்தால் மட்டுமே ஏதாவது சாதித்துள்ளார்களா என்பது தெரியும்

  • Raman,

   கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளை அப்படிப் பார்க்கக் கூடாது, இப்படிப் பார்க்கனும்னு சொல்றீங்க.

   சரி, நீங்களே அந்த ஆய்வை செய்து தரவுகளோடு மறுக்கலாமே? நீங்க சொல்ற ஆய்வு முறையை நீங்களே பின்பற்றவில்லையா?

   முட்டுக் கொடுக்குறது தான் கொடுக்குறீங்க Data வோட முட்டுக்கொடுக்கலாமே?
   உங்களோட எதிர்வாதத்துக்கும் நாங்களே தரவுகளை கண்டுபிடிச்சுக்கனுமா? இது என்ன முறையான வாதமுறை ? இந்த வாதமுறைக்கும் எதாவது பேர் இருந்துச்சுன்னா சொல்லிக் குடுங்க தெரிஞ்சுக்கறோம்.

   • அக்காகி ,

    எப்பொழுதும் உண்மையை தேட வேண்டும் . எது சரி எது தவறு என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

    அதிலும் குறிப்பாக ஸ்டடிட்டிக்ஸ் இல் இருந்து உண்மையை புரிந்து கொள்ள சரியான கேள்விகள் கேட்க வேண்டும் .

    உங்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை . உங்கள் சித்தாந்தத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு கருத்து வேண்டும் என்கின்ற ஒரு பக்தன் அளவுக்கு தான் சிந்திக்கிறீர்கள் .

    நீங்கள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது

    • இராமன்,

     உண்மையில் இந்த குறுஞ்செய்தி என்ன கூற விளைகிறது என்பதை புரிந்துக்கொண்டு தான் தாங்கள் பேசுகிறீர்களா?

     நீங்கள் சொல்வது போல உண்மையை தேட வேண்டும் என்பது சரி.ஆனால் இது பி.ஜெ.பிக்கு முன் அல்லது பி.ஜெ.பிக்கு பின் குஜராத் எப்படி இருந்தது என்றா கூறுகிறது?

     கட்டுரை சொல்லவருவது குஜராத் அப்படியொன்றும் காங்கிரசு ஆளும் மாநிலங்களை விட மூன்று மடங்கு முன்னேறி விடவில்லை என்ற ஒரே செய்தியை தான். இது ஒன்றும் ஆய்வு கட்டுரையல்ல.

     இந்த குறுஞ்செய்தி தாங்கள் முன்மொழியும் அதே முதலாளித்துவ புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தான் குஜராத் ஏனைய இந்திய மாநிலங்களை விட சிறப்பாக செயல்படவில்லை என்று அமித்ஷா கூறியதற்கு மறுப்பு கூறுகிறது அவ்வளவுதான்.

     உண்மையில் முன் பின்னுக்கான ஆய்விற்கு உண்மையில் பல்வேறு புள்ளிவிவரங்கள், ஆய்வு கட்டுரைகள், கள ஆய்வுகள், வரலாற்று பின்னணிகள் குறித்து ஆய்வு தேவைப்படுகிறது. குறுஞ்செய்தி என்ற அளவில் இங்கே இது தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.

     புரிதலுக்கு நன்றி.

    • இராமன்,

     பி.ஜெ.பி சாதித்தார்களா இல்லையா என்பது இங்கே கேள்வியில்லை.
     முதலாளித்துவ புள்ளிவிவரங்கள் பி.ஜெ.பி அரசின் நடைமுறை செயல்பாடுகளைத் தோலுரிக்கும் போது இங்கே கம்யுனிச சித்தாந்தத்தை ஒப்பிடுவது தேவையற்ற விவாத முறையாக இருக்கிறது. இது விவாதத்தை திசை திருப்பும் வழிமுறை.

    • Raman,

     நான் கேட்டகேள்விக்கு இது பதில் இல்லையே? தரவுகள் எங்கே பாஸ்?

     //உண்மையை புரிந்து கொள்ள சரியான கேள்விகள் கேட்க வேண்டும் .//

     நீங்கள் சரியான கேள்வியைத்தான் கேட்டுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கேள்விக்கான பதில்? கேள்வி நீங்கள் கேட்பீர்கள், பதிலை நாங்கள் தேடிக்கொள்ள வேண்டுமோ.

     ஆக, நீங்கள் முன்வைத்த கேள்விமுறையில் நீங்களே தரவுகளை பகுத்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது. அதனால் தான் இப்போதும் கூட தரவுகளை தராமல் (உங்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால்) நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறீர்கள். உங்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கே இல்லை என்றாகிறதே பாஸ்!

     கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கும் முன்பாகவே எப்படி ”இது சரியான அளவுகோல் அல்ல” என்ற முடிவுக்கு வந்தீர்கள் ?

     //நீங்கள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது//

     நீங்கள் முட்டுச்சந்தில் நிற்பது உங்களுக்கே புரிந்ததும், கேள்வி கேட்டவரின் மீது ஆர்வமற்றவர், பக்தர் போன்ற முத்திரைகளைக் குத்துகிறீர்கள்.

     அறிவியலையும், சித்தாந்தத்தையும் மட்டையடியாக மறுப்பதற்காவே போகிறபோக்கில் கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு போகும் உங்களை நீங்களே அறிவாளி என்று மெச்சிக்கொள்வது சரி தான்!

     உங்கள் விவாத முறைக்கும் நயவஞ்சகமானது, அவதூறு பரப்புவது அல்லது வேறு எதாவது ஒரு Definition இருக்க வேண்டுமே, அது என்ன விதமானது என்று கேட்டிருந்தேன், அதுக்கும் பதிலைக் காணும்.

    • Raman,

     ஆக, நீங்கள் முன்வைத்த கேள்விமுறையில் நீங்களே தரவுகளை பகுத்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கும் முன்பாகவே எப்படி ”இது சரியான அளவுகோல் அல்ல” என்ற முடிவுக்கு வந்தீர்கள் ?

    • ///எது சரி எது தவறு என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.///

     ஆமா.. தரவுகள் இல்லாமலேயே தெளிவாக இருக்குறாரு ராமன் சார்.

     சார், இத முன்முடிவுன்னும் சொல்லுவாங்க, அதிமேதாவித்தனத்தின் உச்சம்ன்னும் சொல்லுவாங்க சார்!

    • Raman,

     ஒரு டவுட்டு.

     இதே முன் – பின் ஆய்வை நாட்டின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பொருத்தலாமா?

     மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, பா.ஜ.க ஆட்சி – ஒப்பிட்டு அளவிடலாமா? அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது மோடி கும்பல் என்று சொல்லலாமா ராமன்?

     இல்லை அதற்கு வேறு அளவுகோல் – ஆய்வைப் பயன்படுத்த வேண்டுமா?

     • உங்கள் கனவை கலைப்பதை போன்று கேள்வி இருந்ததால் சாமியாடி இருக்கிறீர்கள் .

      உங்கள் அயோக்கிய விவாத முறைக்கு பெயர் இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்கள் .
      இருக்கிறது அதற்கு பெயர் கருப்பு வெள்ளை fallacy எனபதாகும் .

      குஜராத் வளர்ச்சியை தவறாக அளந்து ஒரு முடிவுக்கு வந்திருப்பதை கேள்வி கேட்டதற்கு , நீங்கள் மோடியை எதிர்ப்பதை கேள்வி கேட்கிறார் என்ற முடிவுக்கு வந்து , அப்படி என்றால் இவர் மோடிக்கு ஆதர்வானவர் என்று சதுரங்க கட்டம் போன்று கருப்பில் ஆடுபவர் இல்லை என்றால் வெள்ளையில் ஆடுபவர் என்பது போன்ற நிலைப்பாட்டை எடுத்து , அந்த உங்கள் சிந்தனையை எனக்கு திணித்து மோடிக்கு ஆதரவாக கருத்துக்கள் கூற எதிர்பார்க்கிறீர்கள் .

      உங்கள் எண்ணம் குஜராத்தின் வளர்ச்சி உண்மையானது தான இல்லை வேற்று கூச்சலா என்பதை அறிந்து கொள்ளுவதில் இல்லை . இதற்கு காரணம் உங்களுக்கு உள்ள வியாதி confirmatory bias என்பதாகும் .

      இந்த வியாதி உள்ளவர்களால் உண்மையை தெரிந்து கொள்ள முடியாது .அவர்களுடைய சித்தாந்தத்தை சரி என்னும் கட்டுரைகள் அதற்குள் லாஜிக் இல்லை என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள் .
      சாமியார் ஏதோ ஒரு கான்சர் பேஷண்டை குணப்படுத்தினார் என்று நம்பும் பக்தர்கள் போல ,லாஜிக் தேவை இல்லை .

      வெனிசூலாவில் இருக்கும் ஒருவர் டாகடர் மனைவியை கோல்பியாவிற்கு நடனமாட அனுப்பும் போது புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது . அப்பொழுது கூட நல்ல தலைவர் இறந்து விட்டார் ,அவர் உயிரோடு இருந்தால் , வேறு நல்ல தலைவர் கிடைத்தால் எல்லாம் சரியாக அமையும் என்பது போன்ற சிந்தனைகள் தான் இருக்கும் .

      இந்த வியாதி உள்ள பாக்ஸர்களோடு அதிகம் உரையாடுவது இல்லை . உங்களோடு எனது விவாதத்தை முடித்து கொள்கிறேன் .

      //
      இல்லை அதற்கு வேறு அளவுகோல் – ஆய்வைப் பயன்படுத்த வேண்டுமா?
      //

      கண்டிப்பாக அதே அளவுகோல் தான் . ஜீ டீ பி என்னும் அளவுகோளையே பாஜாக மாற்றி அமைத்து விட்டது . அதனால் அந்த அளவு கொலை வைத்து பாஜாகாவையும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட முடியாமல் முடக்கி விட்டது .

      • Raman,

       மற்றவர் Rationale-ஐ கேலிக்குள்ளாக்கும் நீங்கள் உங்கள் Rationale கேள்விக்குட்படுத்தப்படுவைக் கூட விரும்பவில்லை என்று தெரிகிறது. நன்றி!

       உங்கள் கேள்வி கேட்கும் உரிமையை நான் மதிக்கிறேன். தரவுகளை கொடுக்காமல் நீங்கள் வாதிட்டால் அது முன்முடிவுடன் சொல்வதாகாதா, என்ற முறையில் தான் நான் கேள்விகள் கேட்டேன்.

       நீங்கள் மற்றவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், black & white fallacy , all the blah blah எல்லாமும் உங்களுக்கும் பொருந்தும் என்பது தான் என் வாதம். அது இதுவரை உங்களுக்கு புரிந்ததாகத் தெரியவில்லை.. இன்று வரை மற்றவர்களை பகுத்தறிவில்லாத மூடர்களாகவும் உங்களை மட்டும் புத்திசாலியாகவும் நினைத்துக் கொள்வதன் விளைவு இது.

       ஆனால், உங்களை கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக எனக்கு பல பட்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இது நீங்கள் பதட்டப்படுவதைக் காட்டுகிறது.

       நீங்கள் சொன்ன பகுப்பாய்வுமுறையிலான தரவுகளை நீங்கள் இன்று வரை கொடுக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

       ///ஆக, நீங்கள் முன்வைத்த கேள்விமுறையில் நீங்களே தரவுகளை பகுத்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கும் முன்பாகவே எப்படி ”இது சரியான அளவுகோல் அல்ல” என்ற முடிவுக்கு வந்தீர்கள் ?///

      • Raman,

       //உங்கள் எண்ணம் குஜராத்தின் வளர்ச்சி உண்மையானது தானா இல்லை வேற்று கூச்சலா என்பதை அறிந்து கொள்ளுவதில் இல்லை .//

       அதற்கு தான் பாஸ் உங்களிடம் தரவுகள் கேட்டேன் இன்று வரை நீங்கள் கொடுக்கவில்லை.

       நீங்கள் கேட்டால் அது கேள்வி, நான் பதிலுக்கு உங்களை கேள்வி கேட்டால்…

       //குஜராத் வளர்ச்சியை தவறாக அளந்து ஒரு முடிவுக்கு வந்திருப்பதை கேள்வி கேட்டதற்கு , நீங்கள் மோடியை எதிர்ப்பதை கேள்வி கேட்கிறார் என்ற முடிவுக்கு வந்து , அப்படி என்றால் இவர் மோடிக்கு ஆதர்வானவர் என்று சதுரங்க கட்டம் போன்று கருப்பில் ஆடுபவர் இல்லை என்றால் வெள்ளையில் ஆடுபவர் என்பது போன்ற நிலைப்பாட்டை எடுத்து , அந்த உங்கள் சிந்தனையை எனக்கு திணித்து மோடிக்கு ஆதரவாக கருத்துக்கள் கூற எதிர்பார்க்கிறீர்கள் .//

       இது முழுக்க உங்கள் கற்பனை! உங்கள் மீது எந்த முன்முடிவுகளையும் நானாக வைக்கவில்லை.

       // உங்களோடு எனது விவாதத்தை முடித்து கொள்கிறேன் . ///

       விவாதித்தால் தானே அதை முடித்துக் கொள்வதற்கு.. பக்தன், black and white fallacy, வியாதி – இப்படி பேசுவது தான் விவாதமா?
       ரிலாக்ஸ் ப்ளீஸ்.

  • கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளை மறுத்து அப்படிப் பார்க்கக் கூடாது, இப்படிப் பார்க்கனும்னு சொல்றீங்க. சரி, நீங்களே இப்படி இப்படிப் பார்த்து தரவுகளோடு மறுக்கலாமே?

   • அக்காகி,

    இந்த ஒன்றைத் தவிர நீங்கள் ராமனுடன் நடத்திய மற்ற அனைத்துமே அக்கப்போர் வகையைச் சேர்ந்தது தான்.

  • The highest rate of growth in SDP(State Domestic Product) at 40.18% in Gujarat was achieved by Congress Chief Minister Amarsinh Choudhary in the year 1988-89.He was the first and only CM from tribals.The next best growth of SDP at 34.33% was achieved by another Congress CM Chimanbhai Patel in 1992-1993 Chimanbhai Patel only visualized Narmada Dam.Double digit growth rate was achieved 4 times in the decade between 1980-1990.Modi came to power in 2001.The best growth rate achieved by him was only 14.77% in 2003-2004.
   The SDP growth rate during 1995-2001 was virtually half of the growth rate experienced during 1990-1994.The highest growth rate was witnessed during the 15 year period of 1981-1995
   https;//counterview.org/2012/09/15/who-really-developed-gujarat-when-and-how-much-trends-in-economic-growth

 2. இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதற்கு தமிழகத்தைத் சேர்ந்த திராவிட கும்பல் தான் காரணம். இவர்கள் ஊழல் மற்றும் குடும்ப அராஜகம் மூலம் மத்தியில் இருந்த கூட்டாட்சியை கேவலப்படுத்தியதால் தான் இந்த பாஜக கும்பல் இத்தனை மெஜாரிட்டியோடு அதிகாரத்துக்கு வர முடிந்தது. இல்லை என்றால் இவர்கள் இத்தனை மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அதிகபட்சம் கூட்டணி ஆட்சி தான் அமைத்திருக்க முடியும்.

 3. வாயால் சுட்டாலாவது ஒரு அர்த்தம் இருக்கும் ” வடைக்கு ” … இவர் சைகையிலேயே சுடும் ஆளாச்சே .. !
  காேமணமே கிழிந்து தாெங்குகிறது இந்தியனுக்கு … ! ! வீராப்புக்கும் ….கையை பலவிதங்களில் காட்டுவதிலும் குறைவில்லை … !!!

 4. நான் வெளியிட்ட பின்னூட்டம் வெளியிடப்படவில்லை.
  தயவுசெய்து கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுங்கள்.

 5. More statistics given by Bhalchandra Mungekari,MP and former Member,Planning Commission in his Times of India article,”Gujarat;Myth and Reality”dated 12-6-2012.
  FDI received;-During the period 2006-2010,Gujarat signed agreements worth 5.35 lakh crore with a job potential of 6.47 lakhs.
  Maharashtra signed agreements for 4.20 lakh crore with job potential of 8.63 lakhs.
  TN signed agreements for 1.63 lakh crore with job potential of 13.09 lakhs.
  Chattisgarh and Orissa signed agreements for 3.61 lakh crore and 2.99 lakh crore respectively without any fanfare.
  CREDIT/DEPOSIT RATIO; Year-2010-Gujarat-4.70%,AP-5.42%,TN-6.20%,Karnataka-6.34%,Maharashtra-26.60%
  SHARE IN TOTAL CREDIT BY COMMERCIAL BANKS;-Gujarat-4.22%,Maharashtra-29.75%,TN-6.71%,Karnataka-9.61%
  PERCAPITA DEPOSIT/CREDIT;-
  Gujarat-37174/24168
  TN-42580/47964
  Karnataka-49598/38154
  Maharashtra-110183/89575
  Kerala-43890/27912
  PERCAPITA INCOME;-Year 2011
  Gujarat (Sixth)-63996
  Haryana-92327
  Maharashtra-83471
  Punjab-67473
  TN-72993
  Uttarakhand-68292

  INCLUSIVE GROWTH;Below the Poverty line -Gujarat-31.8%
  Punjab-20.9%
  Himachal Pradesh-22.9%
  Haryana-24.01%
  Kerala-19.7%

  In HUMAN DEVELOPMENT INDEX-Year 2008-Gujarat-0.527-10th among the major States.Kerala was first in all the three components of HDI ie Income.Health and Education-0.790
  Himachal Pradesh-0.652,Punjab-0.605,Maharashtra-0.572,Haryana-0.552 TN and West Bengal besides above States did better than Gujarat.

  INEQUALITY in Income.Education and Health in Gujarat was higher than major States.
  “STATE HUNGER INDEX”prepared by Gujarat govt itself in 2008 ranked Gujarat as 13 among 17 States.Hunger in Gujarat was worse than Orissa.,

  Women suffering from anaemia increased from 46.3% in 1999 to 55.5% in 2004 in Gujarat.
  Anaemia among children increased from 74.5% to 80.1% during the same period.
  The conditions of dalits and women have deteriorated during the last decade while those of Muslims and tribals were still worse.
  https;//timesofindia.indiatimes.com/edit-page/Gujarat-Myth-and-reality/articleshow/14032015.CMs

 6. “Growth alone is not enough for good life”screams today’s (1-12-2017)Times of India.It has published tables to reveal the change in overall social progress in 29 States from 2005 to 2016.It says that there are three component indices (Basic Human Needs,Foundations of Wellbeing and Opportunity)that make up the social progress index of individual States.Kerala is the only State in top 5 on all three component indices.TN scored 3rd rank in the overall social progress next only to Kerala and Himachal Pradesh. Gujarat scored 15th position in overall social progress way behind Mizoram,Sikkim,Nagaland,and Chhatisgarh..TN scored 2nd position under Basic Human Needs ahead of Kerala(3rd) and Gujarat(4th).TN scored 10th position much ahead of Gujarat(25th among 29 States)under Foundations of Wellbeing.Gujarat is bracketed along with UP,Bihar,Jharkhand and Rajasthan and classified as one of the worst 5 States.TN scored 3rd position under Opportunity just below Kerala(2nd) and Himachal Pradesh(1st)Gujarat is way behind at 21 under this component index.How TN managed the above good performance in spite of lack of governance for the past 6 years?Probably,the previous rulers paved good foundations for wellbeing of TN citizens.After going through these tables,one is tempted to ask,”What is the meaning of much touted “Gujarat model of development”?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க