Monday, March 27, 2023
முகப்புபார்வைஇணையக் கணிப்புகருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?

கருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?

-

வினவு தளத்தில் அன்றாடம் கருத்துக் கணிப்பு போடுவதில்லையே ஏன்?

து ஒரு வாசகரின் கேள்வி. என்ன கருத்துக் கணிப்பு நடத்துவது? திணறி வருகிறோம். அ.தி.மு.க காமெடி அக்கப்போர்கள் ஓ.பி.எஸ். தியானத்தில் இருந்த போது ஆரம்பித்தது… இன்றும் நிற்கவில்லை. வளைத்து வளைத்து ஒரே விசயத்தை பேசுவதோடு, காதுகளே நாணப்படும் அளவுக்கு ஃபோன் ஒயர் அந்து போன வார்த்தைகளை சலிக்காமல் வீசுகிறார்கள்.

மோடி அரசின் பொருளாதார ஒடுக்குமுறையும், அதனோடு கூட சேர்ந்து வரும் பார்ப்பனிய அடக்குமுறையும் அன்றாடம் நடக்கின்றன. இடங்களும் காலமும் மாறினாலும் இந்த ஒடுக்குமுறையின் கரு ஒன்றுதான். பிறகு ஊடகங்கள் பாஜக -விற்கு சொம்படிக்கின்றன. சமூகவலைத்தளங்களில் அந்த வார சினிமா செய்திகள் பேசப்படுகின்றன.

இந்நிலையில் கருத்துக் கணிப்பிற்கு நீங்கள்தான் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு :

இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை?

  • என்னை ‘டுமிலிசை’ என்று அழைப்பதில் கவலை இல்லை – தமிழிசை சௌந்தர்ராஜன்
  • சூர்யாவுக்கு கார்த்தி கடும் போட்டியாக இருக்கிறார் – சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பாராட்டு
  • உலகின் மிகமிக சுவையான உணவு கருவாடுதான் – இயக்குநர் மிஷ்கின்
  • ‘தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்க திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் பாமக தலைமையை ஏற்க வேண்டும்’ – டாக்டர் ராமதாஸ்
  • யூனிசெஃப்பின்குழந்தைகள் உரிமை தூதராக த்ரிஷா நியமனம்
  • கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது – அமைச்சர் ஜெயக்குமார்

( பதில்களில் ஏதேனும் இரண்டைத் தெரிவு செய்யலாம் )


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. அனைத்து தெரிவுமே ஒன்றை ஒன்று சளைத்தவையில்லை என்றாலும், சூர்ய கார்த்தி பற்றியது சினிமா போலீசு போன்றவை எந்தளவு அதிகார வர்க்கத்தை பாதுகாப்பதில் ஒன்றை ஒன்று தழுவி தாங்கி நிற்கின்றன என்பதற்கு சான்று. மக்களை குதறும் போலீசை உயர்த்தி காட்டும் சினிமா ********** வேட்டை நாய் ஒன்று பாராட்டுவதில் அதிசயம் ஒன்றுமில்லைதான்.

    மிஷ்கினின் கருவாடு கதையில் கூட பீசா படத்தில் மழை வந்தால் சேரி ஏழைகள் குதூகலிப்பது என காட்டும் மற்றும் கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணி பார்க்க சொல்லும் நரித்தனம் உள்ளது. ஏன் நீங்க கருவாடையே திங்க வேண்டியது தானே மிஷ்கின்? கருவாடு சுவையானதுதான்.எத்தனை மக்கள் கருவாடே கதியென இருக்கின்றனர்? மக்களின் அவல நிலையையே எதோ கிராமத்து சந்தோசங்கள் என சொல்லவேண்டியது மக்கா.. இது எம் ஜி ஆர் காலமில்லை, இந்த ஓட்டலுக்கு மயங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க