Sunday, March 26, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விபுரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !

புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !

-

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு, ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம்,  கடந்த நவம்பர் 19, 2017 அன்று சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் இரசியப் புரட்சியின் சிறப்பு குறித்த இத்திரைச்சித்திரம் வினவு இணையதளத்தின் சார்பில் திரையிடப்பட்டது.

இப்படத்தில் உலகம் முழுவதும் முதலாளித்துவத்தின் அகோர இலாபவெறிக்காக சூறையாடப்படும் உலக மக்களின் நிலை குறித்து விளக்கி அதிலிருந்து தப்புவதற்கான வழி என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறது. சோசலிசப் புரட்சிக்கு முந்தைய இரசியாவின் நிலையையும் அதன் தொடர்ச்சியாக அங்கு தோழர் லெனின் தலைமையில் நடைபெற்ற புரட்சியையும் கண் முன் நிறுத்துகிறது.

மேலும், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்திலிருந்து இந்த உலகைக் காத்ததையும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது.

இப்படம் நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தி ரசிய சோசலிசப் புரட்சியைப் போன்று நம் நாட்டில் எப்போது வரும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

பாருங்கள் பகிருங்கள் !


இந்த திரைச் சித்திரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. மாற்றுக் கருத்துகள் பல இருந்தாலும் அருமையான தொகுப்பு
    பல தெரியாத வரலாற்று விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

  2. ஓன்றுபடுவோம் வென்றெடெடுப்போம்.
    தோழர்களுக்கு செவ்வணக்கம்.

  3. அரங்கத்தின் மின்னணு திரையில் திரையிடப்பட்ட திரைச்சிததிரத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மேலிடலால் கதறி அழ வேண்டுமாய் தோன்றியது. நூறாண்டுகளுக்கு முன்னமே எதிரியை வீழ்த்திக்காட்டிய பெருமிதம் கர்வம் மகிழ்ச்சி இந்தியப்புரட்சியை நினைத்து ஏங்கும் கோபம் ஏமாற்றம் என ஒட்டுமொத்த உணர்ச்சிகளும் ஒன்றாய் கலந்து வழிந்தோடிய கண்ணீர்.ஒய்எம்சிஏ அரங்கம் முழுமையுமே அன்று அப்படித்தான் இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.வினவின் இந்த சிறப்பான திரைச்சித்திர தயாரிப்பிற்கு நிறைவான நெகிச்சியானப் பாராட்டுக்கள்.ஆம் பிரச்சாரம் இல்லாமல் கலை இல்லை.வென்றது வினவின் கலை.

  4. கம்யூனிசம், சோசலிசம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலே வெறுக்கப் பழக்கி கொண்டிருக்கும் ஊடக இணைய விஷமிகளுக்கு மத்தியில் இது போன்ற ஆக்கங்கள் மிக அவசியம். எதிரியின் முழு பலமுமே நேரடி மற்றும் மறைமுக அவதூறுகளை பரப்புவதுதான். உதாரணத்துக்கு யூ டியூபில் சம்பந்தமே இல்லாத விடியோக்களில் கூட வந்து கம்யூனிசத்தை பற்றி அவதூறு கம்மேண்டுகள் இடுகிறார்கள். இவர்கள் எல்லாம் யார்? இதே வேலையாக இருக்குமளவு இவர்கல் பயமுற காரணம் என்ன? மக்கள் தெரிந்து கொண்டுவிடுவார்கள், உலகப்போர் முடிவுடன் தொடங்கிய மறைமுக பிரச்சாரம் இன்னும் தொடர்கிறது, அந்தளவு பயம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க