Saturday, September 18, 2021
முகப்பு பார்வை இணையக் கணிப்பு பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து - கருத்துக் கணிப்பு

பாபர் மசூதியை ராமர் பிறந்த இடமாக தீர்ப்பளித்த தமிழ் தி இந்து – கருத்துக் கணிப்பு

-

தமிழ் தி இந்துவின் ஆசிரியர் சு.சாமியா ?

“அயோத்தியில் ராமர் பிறந்த இடம் யாருக்கு சொந்தம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்” இது இன்றைய (5.12.2017) தமிழ் தி இந்து நாளேட்டின் 10 -ம் பக்கத்தில் வந்துள்ள செய்தியின் தலைப்பு. விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் தொடங்கப்போகிறது. ஆனால் “அது ராமர் பிறந்த இடம்தான்” என்று இன்றைக்கே தீர்ப்பளித்து விட்டது தமிழ் இந்து.

“பாபர் மசூதியை சங்க பரிவாரத்திடம் ஒப்படைப்பதுதான் நீதியானது” என்பது தமிழ் தி இந்து நாளேட்டின் கருத்தாக இருந்தால், அதனை தலையங்கத்தில் எழுதுவதுதான் “பத்ரிகா தர்மம்”. NEWS -க்கும் VIEWS -க்கும் இடையிலான வேறுபாடு பற்றி இந்து ஆசிரியர் குழுவுக்கு நாம் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

இதே செய்திக்கு இன்று தினமணி கொடுத்திருக்கும் தலைப்பு இது – “அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை”

செக்யூலர் “இந்து”வின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள தினமணி தலைப்பு ஒரு உரைகல்.

நமக்குத் தெரிந்தவரை, பாபர் மசூதி இடிப்பை எதிர்ப்பதுதான் இந்துவின் தலையங்க நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. தற்போது “சங்க பரிவாருக்கு ஜே” என்று “எடிட்டோரியல் பாலிசி” மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக, சொந்த தன்மானத்தையோ சொந்த சொத்துகளையோ அடுத்தவனுக்கு உரிமையாக்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை இந்து ஆசிரியர் குழுவுக்கும் உண்டு. அடுத்தவன் உடைமையை பிடுங்கிக் கொடுக்கும் தொழிலுக்குப் பெயர் நிச்சயமாக ஊடகவியல் அல்ல.

“டிசம்பர் 5 ஆம் தேதியன்று விசாரணை தொடங்குகிறது” என்ற இதே செய்தி ஆகஸ்டு 12 -ம் தேதியன்றும் தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. அப்போது அதன் தலைப்பு கீழ்க்கண்டவாறு இருந்தது.

“ராமஜென்ம பூமி – பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம்? – உச்ச நீதிமன்றம் டிசம்பர் 5 -ம் தேதி விசாரணை” அதிலும் முதலில் ராமஜென்ம பூமி, அப்புறம்தான் பாபர் மசூதி. இன்றைக்கு அதே செய்தியின் தலைப்பு தலைகீழாக மாறி, அந்த இடத்தின் பெயர் ராமர் பிறந்த இடம் என்று ஆகிவிட்டது. நான்கே மாதத்தில் இந்த “முன்னேற்றம்”.

இவையெதுவும் தற்செயல் நிகழ்வாகத் தெரியவில்லை. “அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு தீபாவளி: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை” என்று தலைப்பிட்டு நேற்று ஒரு செய்தி வெளியானது. ஒரு செய்தி என்ற முறையில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. முஸ்லீம் மக்களை அவமானப்படுத்தி ஆத்திரமூட்டுவதுதான் அந்த “செய்தி”யின் நோக்கம்.

ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, சு.சாமியின் இத்தகைய அறிக்கைகளை வெளியிட மறுத்த காரணத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலைகளைப் பற்றி சித்தார்த் வரதராஜன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இன்று சு.சாமி வகையறாக்களே தமிழ் இந்துவின்  DEFACTO ஆசிரியர் குழுவாகி விட்டார்கள் போலும்!

தெற்கில் சூரியன் – வடக்கில் பார்ப்பனியம். சாமர்த்தியம்தான்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த செய்திக்கு இந்து நாளேடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இப்படி ஒருசெய்தி வெளியானதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் ஊடக அறத்திலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் தமிழ் தி இந்துவுக்கு தங்களது கண்டனத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இது தமிழ் இந்து தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இன்று இதனை கண்டிக்கத் தவறினால் இந்த நோய் பரவும். மற்ற ஊடகங்களும் கூச்சமின்றி மதவெறியப் பரப்பத் தொடங்குவார்கள். பிறகு ஏதாவது சொல்லி அதற்கு சப்பை கட்டுவார்கள்.

காவி இருள் தமிழகத்தின் மீது கவியத் தொடங்கியிருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!

இன்றைய கருத்துக் கணிப்பு:

பாபர் மசூதி இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதும் தமிழ் தி இந்துவின் கருத்து ….

 • சரியானது
 • கண்டனத்திற்குரியது

 

 1. கடந்த கால வரலாற்றில் முஸ்லிம் மக்கள் அவர்கள் பெற்று இருந்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஆக்கிரிமிப்பு செய்த ஹிந்து மத தளங்களை மீண்டும் ஹிந்துகளுக்கே விட்டுக்கொடுத்து ஹிந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை வளர்க்க முயலலாம் என்பதே என் கருத்து. (எனக்கு செருப்படியா பதில்கள் வரும் என்றும் தெரியும்!)நீண்ட விவாதத்திக்கு தயாராயிட்டேன்.!

  • Hi Law student Kumar,

   What do you think about Hindus giving up the worship places and the land, wealth and other things who occupied and captured by force from Jain, Vaisnav, Bhudists and Saiva religions.

   You are are trying to rewrite the history by soft power. (There is a difference between imagination and stupidity but there is no limit for stupidity)

  • முஸ்லீம்கள் அடைந்த இந்துஇடங்களை மீண்டும் இந்துக்கள் வசம் அவர்களே ஒப்படைத்துவிடலாம் என்பதே சட்டக் குமாரின் வாதம் SUPER வாதத்திற்க்காக ஏற்ப்போம்… இந்துக்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் என்பதே விவாதத்திற்குறிய விவகாரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்துக்கள் என்போருக்கு முன் அந்த இடங்கள் யாருடையது என்ற அறிவியல் ஆய்வில் சமண, பௌத்த, சித்தர் மரபுகளுக்கும் அதற்கும் முன் பழங்குடியினருக்கும் சொந்தமானதாகவேயிருக்கும்.ஆயிரமாயிரம் தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன.சமீபத்திய உதாரணம் கீழடி.அதன் உண்மைகள் வெளிவந்தால் இந்து என்று கூறிக்கொள்கிற “பார்ப்பன பாசிச” கும்பல்களின் உண்மைகள் அம்பலமாகிவிடும். மாணவர் குமார் அவர்களே சிந்தனையை கிழடுதட்ட விடாதீர்கள்… எப்பொருளாயினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு!

   • ஆமாம் முரளி .., நான் கெழவன் தான் ஆனாலும் என் சிந்தனைகளில் முதுமை தட்டாது ஆனால் முதிர்ச்சி இருக்கும் !நன்றி முரளி.

    உங்கள் பின்னுட்டமும் என்னுடையை பின்னுட்டம் 5ம் எந்த இடத்தில் ஒருங்கிணைகிறது என்று நீங்கள் அறிவிர்கள் என்றே நம்புகிறேன். நம் கருத்துக்கள் ஒருங்கிணையும் இடத்தில் இருந்து மேலும் ஒரு பரிகாரமும் கிடக்கத்தான் செய்கிறது. ஆமாங்க முதலில் இந்தியாவை ஆக்கிரிமிப்பு செய்ததது ஆரிய பார்பன வந்தேறிகள் தான். அவர்கள் தான் இந்திய பூர்வகுடிகளின் நிலங்களை, கலாச்சார வாழ்வியல் முறைகளை சிதைத்தார்கள்…. வரலாற்று கொடுமைகளுக்கு பரிகாரம் நியாய அடிப்டையில் தேடவேண்டும் என்றால் எங்கிருந்து தொடங்கவேண்டும்? ஆம் ஆரிய பார்பன வந்தேறிகளின் கொடுரங்களில் இருந்தது தானே தொடங்கவேண்டும் பரிகாரங்களை!?

    முதலில் இந்திய பூர்வகுடி மக்களுக்கு இழக்கப்பட்ட கொடுமைகளுக்கு, இன்னும்ஹிந்துதுவாகளால் இழக்க்பட்டுகொண்டு உள்ள கொடுமைகளுக்கு என்ன பரிகாரம் என்று முதலில் ஹிந்துத்டுவாகள் பதில் கூறட்டும். அடுத்து இஸ்லாமியர்களின் ப்டைஎடுப்புகளால் நிகழ்த்தப்பட்ட இழப்புகளுக்கு பரிகாரம் தேடலாம் என்பதே எனது கருத்து.

    உங்க பின்னுட்டம் December 6, 2017 at 12:05 pm நேரத்தில் அளிக்கபட்டது என்பதனையும் எனது பின்னுட்டம் 5 அதற்கு முன்பே December 6, 2017 at 11:34 am நேரத்தில் அளிக்கப்பட்டது என்பதனையும் கருத்தில் கொள்ளுங்க முரளி…

    • உங்களின் முதல் பதிவிலிருந்ததே எனது பதிவு மேலும் உங்கள் இரண்டாவது பதிவு நான் பதிவிடும் போது வெளிவரவில்லை.அனைத்தையும் விட உங்கள் முதல் பதிவிர்க்கும் இரண்டாம் பதிவிற்க்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன.ஏன் இந்த அந்தர் பல்ட்டி?

     • பல்டி எல்லாம் இல்லைங்க… இதுக்கு பேரு தான் வலையவிரிச்சி ஹிந்துத்துவா மீன பிடிக்கற தொழில் நுட்பங்க…!

      இப்ப ஹிந்த்த்துவாக்களை வந்து பெசசொல்லுங்க பார்கலாம்…. இஸ்லாமிய படைஎடுப்புகளால் அஆகிரிமிப்பு செய்தவற்றை இன்றைய இஸ்லாமியர்கள் திருப்பிகொடுக்க தயார் என்றால் அதே நியாயப்படி பார்பன பாசிஸ்டுகள் ஆரிய படையெடுப்புகள் ஊடாக இந்திய பூர்வ குடிகள் மீது நிகழ்த்திய கொடுமைகளுக்கு குறைந்த பச்சம் பதிலாவது சொல்வார்களா?

 2. திருவாளர் ஆர் மற்றும் ராஜ் அவர்களுக்கு,

  எங்கேயும் எப்போதும் இரண்டு வகையிலான ஹிந்துதுவாகளை பார்க்கமுடியும் என்பதற்கு இங்கு பதில் அளித்துள்ள திருவாளர் ஆர் மற்றும் திருலாளர் ராஜ் இருவருமே சாட்சி… ஆர் அவர்கள் பழி தீர்க்கும் மனநிலையிலும் , ராஜ் அவர்கள் சமரசமாக போகும் மன நிலையிலும் தான் உள்ளார்கள்.

  வரலாற்றை ஆய்வு செய்கையில் ஆர் குறிபிட்டது போன்று ஹிந்துகளின் வழிபாட்டு தளங்கள், சொத்துகள், நிலங்கள் என்று பலவும் இஸ்லாமிய ஆகிரிமிப்பு ஆலர்களால் போரின் கூடாக கையகப்டுத்தப்பட்டு உள்ளதனை நாம் மறுக்க முடியாது. அந்த வரலாற்று காலகட்டத்துக்கு சென்று நடந்த கொடுமைகளை மீண்டும் நம்மால் மாற்றவும் முடியாது. ஆனால் நிகழ்காலத்தில் பரிகாரத்தை வேண்டுமானால் தேடலாம்.

  அப்படி ஹிந்துகளால் இழக்கப்பட்டவற்றை திரும்ப பெரும் நிலையில் அதே வந்தேறி ஆரியர்களால் ஹிந்து மதத்தில் வலுகட்டாயமாக அடிமைப்டுத்தப்ட்டு இணைக்கபட்டு உள்ள இந்தியாவின் பூர்வகுடிகளுக்கு(தலித் மற்றும் பழகுடி மக்களுக்கு) ஹிந்து மதத்தின் பெயரால் இழைக்கபட்ட , இன்றும் இழைக்கப்ட்டுகொண்டு உள்ள கொடுமைகளுக்கும் பரிகாரம் தேடியே ஆகவேண்டிய நியாய நிலைக்கு ஹிந்துகள் தள்ளபட்டு உள்ளார்கள்.

  இன்னும் ஹிந்து கோவில்களில் கூட அனைவரும் அர்சகராகும் உரிமை மறுக்கபட்டுகொண்டு தான் உள்ளது. இன்னும் பூர்வகுடி மக்கள் முகமதியர்களை போன்றே வந்தேறிய ஆரியர்களால் இழந்த்த வற்றை கூறிக்கொண்டே போகலாம்.

  இந்திய பூர்வகுடிகள் வந்தேறி ஆரியர்களிடம் இழந்தவற்றுக்கும் சேர்த்தே நாம் பரிகாரம் தேடவேண்டியுள்ளது. நியாயம் என்று வந்தால் எல்லாருக்கும் நியாயம் கிடைக்கணும் அல்லவா? கிடைக்குமா?

  • “ஆர் அவர்கள் பழி தீர்க்கும் மனநிலையிலும்”

   Mr. Student,

   Why are you saying that i am in a mood to take revenge ? Please, simply try to understand my logic. My position is that we can’t go back to the stone ages.

 3. மாணவன் குமார். ஆக மொத்தம் நீங்கள் மிகவும் குழம்பி பொய் உள்ளீர்கள் என்று தெரிகிறது. இங்கே கமெண்டு போட்ட ராஜ் மற்றும் R இருவரை வைத்தே முடிவு செய்யும் தங்களது ஆய்வு முறை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது….நடக்கட்டும்.

  • செல்வம் குழப்பம் ஏதுமில்லை… என்னுடைய லாஜிக் மிக எளியது… வர்க்க எதிரிகளை மட்டும் அல்ல அவர்கள் மத கலாச்சார ,பண்பாட்டு தளத்தில் மக்களுக்கு எந்தவிதமான எதிரிகளாக இருப்பினும் முதலில் அவர்களை பேசவைத்து அதன் பின் நாம் பேசி மக்கள் முன் அவர்களை அம்பலப்டுத்தனும்… அதனை தான் நான் இங்கே செய்துகொண்டு இருக்கேன். பொறுமை தேவை செல்வம்..!

 4. மிஸ்டர் மாணவன் குமார்….

  //கடந்த கால வரலாற்றில் முஸ்லிம் மக்கள் அவர்கள் பெற்று இருந்த ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஆக்கிரிமிப்பு செய்த ஹிந்து மத தளங்களை மீண்டும் ஹிந்துகளுக்கே விட்டுக்கொடுத்து ஹிந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தை வளர்க்க முயலலாம் என்பதே என் கருத்து. //

  //முதலில் இந்திய பூர்வகுடி மக்களுக்கு இழக்கப்பட்ட கொடுமைகளுக்கு, இன்னும்ஹிந்துதுவாகளால் இழக்க்பட்டுகொண்டு உள்ள கொடுமைகளுக்கு என்ன பரிகாரம் என்று முதலில் ஹிந்துத்டுவாகள் பதில் கூறட்டும். அடுத்து இஸ்லாமியர்களின் ப்டைஎடுப்புகளால் நிகழ்த்தப்பட்ட இழப்புகளுக்கு பரிகாரம் தேடலாம் என்பதே எனது கருத்து.//

  இதுல மத்தவங்க உங்களுக்கு செருப்படி கொடுப்பாங்கனு வேற சொல்றீங்க….உங்க மொத கருத்த ரெண்டாவது கருத்தால் செருப்படி நீங்களே கொடுக்கும் போது மத்தவங்களுக்கு அங்க என்ன வேல?

  • உங்களுக்கு பதில் என்னுடைய பின்னுட்டம் 6.1ல் இருக்குங்க… இன்னும் புரியல என்றால் அதுக்கும் கோனார் உரை எழுத முயற்சிகின்றேன். நன்றி செல்வம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க