Tuesday, December 3, 2024
முகப்புஇதரவினாடி வினாதமிழ் இலக்கியம் : பொது அறிவு வினாடி வினா 9

தமிழ் இலக்கியம் : பொது அறிவு வினாடி வினா 9

-

ந்த வினாடி வினாவில் தமிழ் இலக்கியம் குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!

  1. சங்க இலக்கியத்தின் காலம் எது?
  2. கிபி 700 முதல் கிபி 900 வரை நிலவிய இலக்கியம் எது?
  3. கீழ்க்கண்டவற்றில் எது சங்க இலக்கியத்தில் இடம் பெறாது?
  4. மணிப்பிரவாள நடை என்றால் என்ன?
  5. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?
  6. கிபி 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பரின் சமகாலப் புலவர் யார்?
  7. கீழ்க்கண்டவற்றில் எட்டுத்தொகையில் இல்லாத நூல் எது?
  8. எட்டுத்தொகை நூல்களில் “அகப்பொருள் நூல்களில்” வராத நூல் எது?
  9. சங்ககாலப் புலவர்கள் கையாண்ட உள்ளுறை உவமை எனும் இலக்கிய உத்தியின் பொருள் என்ன?
  10. தமிழ்மீது பற்று கொண்ட வெளிநாட்டு அறிஞர் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடல்கள் எதில் இருக்கிறது?
  11. அகநானூறு நூலில் முல்லைத் திணைப் பாடல் ஒன்றில் இடம்பெறும் “மாச்சிறைப் பறவை”-இன் பொருள் என்ன?
  12. மலையும் மலை சார்ந்த இடத்தையம் நிலமாகக் கொண்டிருக்கும் குறிஞ்சித் திணையின் சிறு பொழுது என்ன?
  13. காடும் காடு சார்ந்த இடத்தையும் நிலமாகக் கொண்டிருக்கும் முல்லைத் திணையின் பெரும்பொழுது என்ன? இக்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரும்.
  14. திருக்குறளின் பொருட்பால் பிரிவில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
  15. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது – இந்தக் குறளில் வரும் ஞாலம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
  16. கவுந்தியடிகள் பாத்திரம் எந்த நூலில் வருகிறது?
  17. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?
  18. இத்தாலி நாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர் இயற்றிய பெருங்காப்பியம் எது?
  19. பாண்டியன் பரிசு இயற்றியவர் யார்?