ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !

தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.

‘மதச்சார்பற்ற’ கட்சி என்று சொல்லிக் கொள்ளப்படும் காங்கிரசுக் கட்சியின் முக்கியமான பிரமுகரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரனாப் முகர்ஜி, நாக்பூர் நகரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.

“திரித்ய வர்ஷ வர்க்” என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருக்கு அளிக்கப்படும் மூன்றாம் நிலை பயிற்சி முகாம் ஆகும். கோடை விடுமுறையின் போது நாடெங்கும் இத்தகைய ஒரு மாத பயிற்சி முகாம்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகிறது. அந்தந்த மாநிலங்களில் நடக்கும் முகாம்கள் முதல் வருட பயிற்சியாகும். இரண்டு மாநிலங்கள் சேர்ந்து நடத்தும் முகாம்கள் இரண்டாம் வருட பயிற்சியாகும். மூன்றாம் வருட இறுதிநிலை பயிற்சி ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமான நாக்பூரில் நடக்கும். அதில்தான் பிரனாப் முகர்ஜி பங்கேற்கிறார்.

நாங்கள் அழைத்ததுமே குடியரசுத் தலைவர் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார் என்கிறார் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்திய அமைப்பாளர்கள் நிர்வாகியான அருண் குமார். இந்த மூன்றாவது வருட பயிற்சி முகாமிற்கு இத்தைகய முக்கிய பிரமுகர்களை ஆர்.எஸ்.எஸ் அழைப்பது வழக்கும். அனேகாமாக அடுத்த வருடம் மைனர் கிழட்டுப் பேர்வழி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றாலும் கூட ஆச்சரியமில்லை.

ஆர்.எஸ்.எஸ். – மோடியின் சித்தாதங்களை ஏற்க மறுப்பதால்தான் தமிழ் சகோதர சகோதரிகள் மீது தோட்டாக்கள் பாய்கின்றன என்று காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழில் டிவிட் செய்திருந்தார். அந்த மை ஆறுவதற்குள் காங்கிரசின் முகத்தில் மை பூசியுள்ளார் பிரனாப் முகர்ஜி. கூடுதலாக காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கமே காரணமென்று ராகுல் காந்தி கூறியதால் அவர் மீது வழக்கு நடைபெறுகிறது.

இதற்கு மேல் அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவரான மோகன் பகவத்தை குடியரசுத் தலைவர் மாளிகை மதிய விருந்திற்கே அழைத்துள்ளார் பிரனாப் முகர்ஜி.

இந்திய வரலாற்றில் இரண்டு முறை தடை செய்யப்பட்ட இயக்கமும், காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இயக்கமும், 47-க்கு பிறகான இந்தியாவில் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரத்தில் பல நூறு முசுலீம் மக்களை கொன்ற இயக்குமான ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்வில் இந்தியாவின் ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார் என்றால் என்ன சொல்வது? இப்போது இருக்கும் குடியரசுத தலைவரான ராம்நாத் கோவிந்த் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் என்பது ஒரு விசயமல்ல. ஆனால் காங்கிரசு கட்சியன் ஒரு பிரமுகர் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு சென்றால் இனி இந்தியாவில் இருக்கும் அனேக கவர்னர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பகிரங்மாகவே கலந்து கொள்வர்.

ஆர்.எஸ்.எஸ் –இன் நச்சுக் கருத்துக்கள் பாடநூல்களாக, அரசு கொள்கைகளாக, திட்டங்களின் பெயர்களாக இன்னும் எண்ணற்ற வழிகளில் செயல்படுத்தப்படும் போது ஒரு முன்னாள் ரப்பர் ஸ்டாம்ப் எம்மாத்திரம் என்று நீங்கள் யோசிக்க கூடும்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோ இல்லை முன்னாள் குடியரசுத் தலைவரோ இப்படி வெளிப்படையாக மோடி அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் சொம்படிப்பதை பார்த்தால் இந்தியா எவ்வளவு பெரிய அபாயத்தை சந்திக்கப் போகிறது என்பது தெரியும்.

சந்தா