தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார்.
இடம்:
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல்
நேரலை:
ஸ்டெர்லைட் கூடங்குளம் நெடுவாசல் கதிராமங்கலம் என்று அனைத்து போராட்டங்களையும் எடுத்து கொண்டால் அனைத்திலும் ஒரு சில குறிப்பிட்ட அமைப்புகள் மட்டுமே முன் எடுத்து கொண்டு இருக்கின்றன.
அந்த இயக்கங்களின் நோக்கங்கள் ஒன்று தான், நம் நாட்டை அனைத்து வகையிலும் பலவீனப்படுத்தி, இந்தியாவின் இரண்டாவுது பெரிய மாநிலமான தமிழகத்தை நாசம் செய்வதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது, காஷ்மீர், பல வடகிழக்கு மாநிலங்கள், ஈழம் என்று போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக வன்முறை அமைதி இன்மையை கொண்டு வந்தது போல் தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள்.
அதனால் தான் போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்படுகிறது இந்த போராட்டங்கள் தொடர்ந்தால் இலங்கையில் நடந்தது போல், காஷ்மீரில் நடப்பது போல் பெரும் எண்ணிக்கையில் மக்கள் மடிவார்கள். காரணம் அந்த இயக்கங்கள் மக்களை தூண்டிவிட்டு பின்னால் இருந்து வன்முறையை தூண்டுவார்கள் காவல்துறை மக்களை அடிக்கும் (அல்லது துப்பாக்கி சூடு நடத்தும்) பிறகு இதே இயக்கங்கள் மக்களை காக்கிறோம் என்று சொல்லி ஆயுதம் ஏந்துவார்கள், பிறகு காவலரை தாக்குவது கொல்வது பதிலுக்கு பதில் என்று பல உயிர்கள் பலியாகும்.
அதை தான் ரஜினி தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று சொன்னார்.
இந்த போராட்டங்களின் நோக்கங்களை ரஜினியால் புரிந்துகொள்ள முடிகிறது, ரஜினி இந்த வார்த்தையை மக்களிடம் சொல்லி தங்களை expose செய்கிறார் என்பதால் இந்த இயக்கங்கள் கோபம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் ரஜினி மீது கண்டபடி சேற்றைவாரி இறைக்கிறார்கள்.
ரஜினியின் இந்த வார்த்தையை எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும் ஆனால் சொல்லவில்லை
ரஜினியின் இந்த வார்த்தை ஆளும் கட்சி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சொல்லியிருக்க வேண்டும் ஆனால் சொல்லவில்லை
ரஜினியின் இந்த வார்த்தை பத்திரிகைகள் மக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை.
ரஜினியின் இந்த வார்த்தையை பத்திரிகையாளர்கள் சொல்லியிருக்க வேண்டும் ஆனால் சொல்லவில்லை.
இப்படி தமிழக மக்களை பற்றி துளி கூட கவலைப்படாமல் அனைவரும் இருக்கிறார்கள் என்பதால் கொதிப்படைந்து ரஜினி சொல்லியிருக்கிறார்.
ரஜினியின் இந்த வார்த்தைகள் சாதாரணமானது இல்லை.
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுவதை, ஏதோ சும்மா இருக்கிறதுதால வந்து போராடுற மாதிரில்ல நீங்க சொல்லுரீங்க. sterlite க்கு எதிரா போராடுனது எந்த அமைப்பும் இல்ல, மக்கள். மக்களுக்கு என்ன பதில் இந்த அரசு கொடுத்துச்சுன்னு பொருத்து தான் அவங்களோட பதில் நடவடிக்கை இருக்கும்.
நீங்க பேசுறதுதான் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக இருக்கிறது.