ன்பார்ந்த பெரியோர்களே,

ஆள்பவர்களும், அதிகாரிகளும் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மக்கள் எதுவும் செய்யக் கூடாது. அடிமாடு போல் கிடந்து சாக வேண்டும். இதுதான் ஆள்பவர்களின் எதிர்பார்ப்பு. விளை நிலங்களை அழித்து, விவசாயிகளை அகதிகளாக்கி, காடு, மலை, நீர் ஆதாரங்களை அழித்து சுற்று சூழலை நாசமாக்கி எட்டுவழிச்சாலை எதற்கு? என பேசினால் அவன் தேசதுரோகி. குருவி போல் கட்டிய வீடு பறிபோகிறது பிள்ளை குட்டிகளோடு நாங்கள் எங்கே செல்வோம்? என தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழும் தாய்மார்களின் கண்ணீரை துடைக்க யாரும் செல்லக்கூடாது. சென்றால், அவன் வெளியூர்காரன், சமூக விரோதி, நக்சலைட் என போலீசு தடுத்து கைது செய்கிறது. இந்த அக்கிரமம் வெள்ளைக்காரன் ஆட்சியில்கூட கிடையாது.

சாலையின் முக்கிய பயன்பாடு பொருள்களை கொண்டு செல்வதுதான். சேலத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகாத போது, எதற்காக பத்தாயிரம் கோடி செலவில் சேலம் சென்னை எட்டுவழிச்சாலை? விரைவாக சென்னைக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்? சுங்க கட்டணம் வசூல் செய்து கொள்ளை அடிக்கவும், ஆம்னி பஸ்களும், சொகுசு கார்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும்தான் பயணிப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள் கஞ்சமலை, கவுத்தி வேடியப்பன் மலைகளை பிளந்து இரும்பு தாதுக்களை கொள்ளையடிக்கதான் எட்டுவழிச்சாலை. சென்னை சேலம் இடையே ஏற்கனவே உள்ள மூன்று வழித்தடங்களை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள் என்ற மக்களின் நியாயமான கேள்விகளுக்கு அதிகாரிகள் அமைச்சர்கள் பதில் சொல்ல முடியவில்லை.

நிலம், நீர், காற்று நஞ்சாகி எதிர்கால தலைமுறைகளை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு என நடந்த நூறாவது நாள் முற்றுகை போராட்டத்தில் எடப்பாடி அரசாங்கம் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக யார் போராடினாலும் இதுதான் கதி என தூத்துக்குடிமாடல் படுகொலையை, அடக்குமுறையை தமிழகம் முழுவதும் அமுல்படுத்த முயலுகிறது தமிழக போலீசு. இதைப் பற்றி பேசினால் தேசத்துரோக வழக்கு. பேசுவதற்கு இடம் கொடுத்த அரங்கத்தின் மீது வழக்கு. எதிர்கட்சிகள் ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு“ என சட்டமன்றத்தில் பேச அனுமதி கிடையாது. அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்டால், முழக்கமிட்டால், பிரசுரம் கொடுத்தால், போஸ்டர் ஒட்டினால், கார்ட்டூன் வரைந்தால், கருப்பு கொடி காட்டினால் கைது, சிறை. பொதுக்கூட்டம் இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும். இரண்டு பேர்தான் பேச வேண்டும். அதிக மக்கள் வரக்கூடாது. மாற்று கட்சி நபர்கள் பேசக்கூடாது என எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் கை கால்கள் வெட்டப்படுகின்றன. இம் என்றால் சிறை ஏன் என்றால் என்.எஸ்.ஏ., குண்டாஸ். இந்த நிலை நீடிக்கலாமா? இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து, என பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள்.

விவசாயம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி, வளர்ச்சித்திட்டம், ஊழல் ஒழிப்பு, கருப்பு பண மீட்பு, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, சுவட்ச் பாரத், என அனைத்திலும் மோடி அரசு படு தோல்வியை அடைந்துள்ளது. தோற்றுப்போன பிரதமரை தூக்கி நிறுத்த அரசின் விளம்பர செலவு ரூபாய். 4343 கோடி. ஸ்விஸ் வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை. படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கருப்புபணம், கள்ள நோட்டு ஒழியவில்லை. ஜி.எஸ்.டி.யால் விலைவாசி குறையவில்லை. பல ஆயிரம் சிறு தொழில்கள்தான் அழிந்தன. பல இலட்சம் பேர் வேலையிழந்தார்கள். ஸ்விஸ் வங்கியில் ஒன்றரை மடங்கு கருப்பு பணம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல், மின்சாரம், சாராயம் கொண்டுவர முடியவில்லை. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறையும் நிலையில் இந்தியாவில் தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. வாங்கும் சக்தியே இல்லாத இந்தியாவில் மேக் இன் இந்தியா என்ற முழக்கம் அர்த்தமற்றதாகிவிட்டது. கல்யாணமே ஆகாத ஒருத்தனுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு கல்வி கடன் கொடுத்தது போல் கட்டிடமே இல்லாத அம்பானி பல்கலைகழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை மோடி அரசு அள்ளி கொடுப்பதுதான் கல்விக் கொள்கை.

ஜனநாயகத்தில் ஓட்டுப்போடுவதோடு மக்களின் பங்களிப்பு முடிவதல்ல. பெரும்பான்மை மக்களை பாதிக்கும் வளர்ச்சி திட்டங்களை வேண்டாம் என முடிவு செய்யும் உரிமையும்,  போராடும் உரிமையும் மக்களுக்கு உண்டு.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடி ஆட்சியில்தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக விளை நிலங்கள் பறிப்பு, விவசாயிகள் தற்கொலைகள், எண்ணற்ற போராட்டங்கள் நடக்கின்றன. நான்கு ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது விவசாய விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை உயர்வு என்ற அறிவிப்பால் பயனில்லை. அரசு கொள்முதல் செய்யாமல் விலை உயர்த்தி என்ன பயன்? குஜராத்தி, பனியா, பார்சி, சிந்தி, மார்வாடி  வகுப்புகளைச் சேர்ந்த அதானி, அம்பானி, அகர்வால், நீரவ் மோடி, லலித் மோடி,  டாடா, பிர்லா போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவு முதலாளிகளின் நலனுக்காகத்தான் மோடி அரசு சேவகனாக செயல்படுகிறது. அவர்களின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என முன்னிறுத்திருகிறது. அவர்கள் தான் இந்தியாவை ஆள்கிறார்கள். அவர்களின் எடுபிடிகள்தான் ஆர்.எஸ்.எஸ்.யும், பி.ஜே.பி.யும். இந்த முதலாளிகளுக்கு அரசு கொடுத்த பத்து இலட்சம் கோடி வங்கி கடன் இன்று வாராக்கடனாகி நிற்கிறது. பொதுத்துறை வங்கிகள் திவாலாகும் அபாய நிலையில் எல்.ஐ.சி. பணத்தை அவற்றில் முதலீடு செய்து எல்.ஐ.சி.யையும் ஒழிக்க முயல்கிறது மோடி அரசு.

பா.ஜ.க. மோடி அரசு தனது தோல்விகளை மறைத்து, மக்களை திசை திருப்பி தலித்துக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக சாதி மத கலவரங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் வாக்கு வங்கியை அடைய விரும்புகிறது. மேலும் அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பதற்றத்தில் தான்தோன்றித் தனமாக அடக்குமுறைகளை ஏவுகிறது நீதித்துறை உட்பட அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். சார்புடையவர்களை நியமித்து அரசு கட்டமைப்பையே இந்துத்துவ பாசிசமயமாக்கி வருகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற இந்துத்துவா வெறியூட்டப்பட்ட குண்டர்படை தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்கிறது. பிணையில் வந்த கொலையாளிகளுக்கு பா.ஜ.க. அமைச்சர் மாலை போட்டு வரவேற்கிறார்.

உ.பி., பா.ஜ.க., எம்.ஏல்.எவும் அவன் சகோதரனும் மனு கொடுக்க வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதல்வர் எந்த நடவடி்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்திரவில்தான் சி.பி.ஐ. அவர்களை கைது செய்தது. ஜம்முவில் ஆசிபா என்ற எட்டு வயது சிறுமியை போலீசார், பூசாரி உட்பட பலர் வல்லுறவு செய்து கொலை செய்த கொடூரம் நமது இரத்தத்தை உறைய செய்தது. ஆனால் பா.ஜ.க. அமைச்சர் தலைமையில் குற்றவாளிகளை கைது செய்யக்கூடாது என சங்பரிவார் ஜம்முவில் ஊர்வலம் நடத்தியது. மராட்டியத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பீமா கோரேகான் விழாவில் இந்தாண்டு தலித்துக்கள் மீது சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு கலவரத்தை நடத்தி உள்ளது.

கவுரி லங்கேஷ், கல்புர்க்கி, பன்சாரே, தாபோல்கர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள் இந்துத்வா சங்பரிவார் அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மொழி பேசும், வேறுபட்ட கலாச்சாரங்களை உடைய பல மாநில மக்கள் கூட்டமைப்பாக இணைந்து வாழும் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே கட்சி, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ். இந்துத்வா கொள்கைய அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொள்ளையடித்த ஊழல் சொத்துக்களை பாதுகாக்க மோடியின் அடிமைகளாக மாறிய அ.தி.மு.க., பா.ஜ.க.வின் கூலிப்படையாக போராடும் மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது. விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ், எடப்பாடி சம்பந்தி சுப்பிரமணி, கருர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், டி.டி.வி., கிறிஸ்டி. எஸ்.பி.கே என நடத்தப்பட்ட ரெய்டுகள் மூலம் அ.தி.மு.க.வையும் தமிழக ஆட்சி அதிகாரத்தையும் பா.ஜ.க. கைபற்றி உள்ளது. டி.ஜி.பி. மீது குட்கா வியாபாரிகளிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு, ஆளுநருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் எதிராக பாலியல்  குற்றச்சாட்டுகள்..! எதற்கும் குற்ற வழக்கில்லை, யாரும் சிறை செல்லவில்லை, எல்லாக் குற்றவாளிகளும் பதவியை அலங்கரிக்கிறார்கள். தூத்துக்குடியில் போலீசு நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், எட்டு வழிச்சாலைக்கு நிலத்தைப் பறிகொடுக்கும் விவசாயிகளின் கதறலையும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. போராட்டச் செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு அரசு கேபிள் துண்டிக்கப்படுகிறது. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் மோடியே திரும்பிப் போ என ஒட்டு மொத்த தமிழகமும் கருப்புக்கொடியுடன் முழங்கியது. தமிழகம் இந்துத்துவ பாசிசத்தின் எதிர்த்துருவம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவை ஆத்திரம் கொள்ள வைக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கி, டாஸ்மாக் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, காவிரி உரிமை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோகெமிக்கல் மண்டலம், நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு என்பன போன்ற மக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு தடையை ஏற்படுத்துகிறது.

அதிகரித்துவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு அடக்குமுறைதான் ஒரே வழி என மோடி அரசு செயல்படுத்துகிறது. அ.தி.மு.க. எடப்பாடி அரசு கூலிப்படையாக செய்து முடிக்கிறது. பிரதமர் இந்திராகாந்தி அவசரநிலையை திடீரென்று நாட்டின் மீது திணித்தார். இன்று கருத்துரிமை மறுப்பு, கைதுகள், ஊடகங்களின் இருட்டடிப்பு, ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் நடத்தும் தாக்குதல்கள், கொலைகள்  முதல் எல்லாவிதமான அதிகார முறைகேடுகளும் அன்றாட நடப்புகளாக நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றன. இவற்றை எதிர்த்து விடாப்பிடியாகப் போராட முடியாமல், கைதுக்கும் சிறைக்கும் அஞ்சிக் களைத்துச் சோர்ந்து விடுவோம், பாசிசக் கொடுங்கோன்மைக்கும், அடிமைத்தனத்துக்கும் நாம் பழகிவிடுவோம் என்ற மோடி, எடப்பாடி அரசுகளின் எதிர்பார்ப்பை முறியடிக்க ஒன்றிணைவோம். ஆர்.எஸ்.எஸ் பாசிசத்திற்கும், கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிரான போராட்டத்தில் தமிழகத்தை முன்னணியில் நிறுத்திக் காட்டுவோம். இது மக்கள் நலனில் அக்கறை கொண்ட எல்லா கட்சிகள் அமைப்புகள் செயல் வீரர்களின் கடமை.

ஜனநாயகத்தில் ஓட்டுப்போடுவதோடு மக்களின் பங்களிப்பு முடிவதல்ல. பெரும்பான்மை மக்களைப் பாதிக்கும் வளர்ச்சி திட்டங்களை வேண்டாம் என முடிவு செய்யும் உரிமையும்,  போராடும் உரிமையும் மக்களுக்கு உண்டு. படித்தாலும் உழைத்தாலும் சொந்த ஊரில் வாழ முடியாது என்றால் நாங்கள் எங்கே செல்வது? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழமுடியவில்லை அடக்குமுறைதான் ஜனநாயகம் என்றால் பா.ஜ.க மோடி, அ.தி.மு.க. எடப்பாடி அரசுகள் அதிகாரத்தில் தொடர அனுமதிக்கக்கூடாது.

பிரசுரம் பி.டி.எஃப். கோப்பு – PP_TRICHY SPECIAL CONVENTION

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

__________________________________________________________________

IS IT NOT REPRESSION IN THE NAME OF DEMOCRACY?

COMMON FOLK CANNOT EVEN LIVE BY LAW!
CAN THIS SAD TREND BE ALLOWED TO GO ON?

SPECIAL CONVENTION

2018 SEPTEMBER 8, SATURDAY – 5 PM ONWARDS

  • PEOPLE’S PARTICIPATION IN DEMOCRACY DOES NOT END WITH JUST CASTING THEIR VOTES.
  • PEOPLE HAVE THE RIGHT TO DECIDE AGAINST DEVELOPMENT SCHEMES WHICH ADVERSELY AFFECT A MAJORITY OF THEM, AND THE RIGHT TO PROTEST AGAINST THEM.
  • IF WE CANNOT LIVE ON OUR OWN NATIVE SOIL WHETHER FOR STUDIES OR FOR WORK, WHERE CAN WE GO?
  • COMMON FOLK CANNOT EVEN LIVE BY LAW.

IF IT IS BRUTAL REPRESSION IN THE NAME OF THE DEMOCRACY, THE MODI AND EDAPPADI REGIMES SHOULD NOT BE ALLOWED TO CONTINUE.

Dear Friends,

The powers that be and the bureaucracy can do whatever they want; but people should do nothing; they must suffer and perish like cattle – this is what our rulers expect. Why destroy fertile land, displace peasants, and trample upon mountains, forests and sources of water and spoil environment for the sake of the Chennai-Salem Eight-Lane Road project? – whoever raises this question is branded anti-national. Whoever reaches out to wipe the tears of mothers, who wail in anguish over losing their houses built by them like sparrows build their nests and having nowhere to go after being rendered homeless, is branded an outsider, anti-social and naxalite, stopped in his tracks and thrown into prison. An outrage unheard of even under the British Raj.

The primary utility of a road is transport of goods. No new industries have come up in Salem to warrant a Salem-Chennai eight-lane road at a cost of Rs. 10,000 crores. What is anyone going to do by speeding breakneck from Salem to Chennai or vice versa? Only one thing is certain: the toll plazas en route are going to give a bonanza of a collection. Omnibuses and luxury cars, ministers and bureaucrats would gleefully take the road. The Multi-National Companies, the Corporates, thirsting to slit open the Kanjamalai and Gauti Vediyappan Hills to mine iron ore would aspire to carry the loot swiftly along the projected eight-lane road. The ministers or the bureaucrats do not reply when people ask: What did the authorities do to improve the existing three-lane roads between Salem and Chennai?

The people of Thoothukkudi waged a protracted, yet peaceful struggle demanding the closure of the Sterlite Copper Smelting factory which was polluting land, water, and air and therefore was a threat to future generations. On the hundredth day the struggle took the form of a symbolic siege on the District Collectorate when the Edappadi Government resorted to firing on the protesting people and killed 13 people in a coldblooded and treacherous manner. The Government of Tamilnadu carried out this operation gun down in order to terrorize people who dare to challenge corporate interests. The Tamilnadu police is seeking to employ the Thoothukkudi model of repression all over Tamilnadu by slapping sedition charges against those who speak about it and foisting cases against those who let out halls for meetings.

The opposition is disallowed from raising the Thoothukkudi firing issue on the floor of the assembly. If you post something against the government on the Facebook, raise slogans or distribute pamphlets, stick posters, draw a cartoon, or show black flags in order to protest against the government you may possibly land in prison. If at all a public meeting is permitted to be held it should be finished within two hours, only two speakers can speak and not too many people should attend, people belonging to other parties should not speak – such unjust and unreasonable restrictions are unheard of in a free land. The limbs of democracy have been cut off. For a mere murmur u could be imprisoned and for a mere why u could be detained under the Goondas’ Act. Can this state of affairs be allowed to perpetuate? Senior sitting justices of the Supreme Court have met the media to warn the countrymen against the danger of the grave threat to Indian democracy.

The Modi government has dismally failed in every respect, be it agriculture, economy, employment, price line, development plan, eradication of corruption, unearthing of black money, Skill India, Make in India, or Swach Bharath! Miserable failure all the way! In order to lift the down-and-out Prime Minister, public money to the tune of 4343 crores of rupees has been spent on advertisements. No recovery of black money from the Swiss banks has materialized. The promise of two crore new jobs per year has not been fulfilled.  The PM advises educated youth to sell ‘pakoda’. Demonetization declaring 500 and 1,000 rupee notes invalid has failed to tackle the problems of black money and counterfeit currency. The price line has not come down on account of the GST. Many thousands of small-scale industries perished and many lakhs of workers lost their employment. The quantum of black money actually increased one and a half times. Petrol and diesel, electricity and liquor could not be brought into the GST net. The price of petrol in India has been steadily rising in spite of the down trend over the rest of the world. The Make in India slogan has proved to be meaningless in India, a country of little purchasing power. The Government’s education policy is such that it has given away one thousand crore rupees to Ambani’s University which so far has no building to house it, just as sanctioning an education loan for a child yet to be born of someone yet to be married.

We will leave no stone unturned in our endeavor to make Tamilnadu stand in the forefront of the fight against corporate looting and RSS fascism, This is the bounden duty of the activists of all the parties and organizations who are concerned with the interests of the people.

Contrary to Modhi’s promise of doubling the income of farmers, it is under his regime that farmlands are being grabbed for the sake of corporate capitalists, famers have been committing suicide, and innumerable protests are the order of the day. After doing nothing for the past four years now the announcement of raising the support price one and a half times for agricultural produce can only be a futile exercise. What is the use of merely announcing a price rise without government procurement of the produce? The Modi government is only serving the interests of Adhani, Ambani, Agarwal, Neerav Modi, Lalit Modi, Tata, Birla and other capitalists belonging to a certain section comprising Gujarathi, Bania, Pharisee, Sindhi and Marwari clans. It portrays their development as the country’s development. It is they who rule India, The RSS and the BJP are only their agents. The loan of ten lakh crores of rupees the government gave these capitalists is now unrealized debt. The public sector banks are on the wedge of insolvency. The government is trying to salvage them by investing LIC money in them, thereby endangering the LIC, too.

The BJP government led by Modi is trying to cover up its failure, diverting the attention of the people by inciting caste and communal riots against Daliths and Muslims and seeking to secure a vote bank. It unleashes indiscriminate measures of repression due to the fear of being defeated and losing power. It is appointing RSS loyalists everywhere including the judiciary and thereby turning the state structure itself into a Hindutva-fascist one. In the states ruled by the BJP, bigotist Hindutva goons in the name of Cow Guards assault Dalits and  Muslims causing many a death. The murderers released on bail are warmly welcomed with garlands by a BJP minister.

When a BJP minister in UP and his brother molested a girl who had come to them with a petition, the UP Chief Minister did not take any action in the case  The CBI arrested the culprits only after judicial intervention. In Jammu the blood-chilling outrage of the eight-year-old Asifa having been sexually assaulted by the police, the priest and several others and finally killed shocked the whole country. But the Sangh Parivar took out a rally in Jammu led by a BJP minister demanding not to arrest the accused. In Maharashtra during the annual Bhima Koregaon festival the Sangh Parivar deliberately assaulted two Dalits, inciting violent riots.

Historians, rationalists and writers like Gauri Lankesh, Kalburgi, Bhansare and Tabolkar were shot dead by Hindutva Sangh Parivar outfits. There have been countrywide protests against implementing the RSS Hindutva ideology of one nation, one leader, one party, one election, one language, one culture in India which comprises people of several states living jointly together in a collective with their many languages and different cultures.

The ADMK rulers who have turned into henchmen of the BJP rulers for safeguarding their ill-gotten wealth earned through corruption are out crushing the people’s struggles. The BJP has usurped the ADMK party and the government power in Tamilnadu through raids conducted on Vijayabaskar, Sekar Reddy, Rammohan Rao, Edappadi’s co-father-in-law Subramani, Karur Anbunathan, Natham Viswanatthan, TTV, Christie, SPK and others. The DGP has himself been accused of accepting bribes from Gutka peddlers. There are sex-related charges against the Governor of the State, and Vice Chancellors of Universities themselves! No criminal case! No imprisonment! All the criminals are not only scot-free, but decorating their posts as ever.

The media in general are blacking out the truth of the spree of violence by the police in Thoothukkudi, and the cries of anguish from the farmers being robbed of their land. The TV channels broadcasting news of the protests and the struggles are denied the State Cable service. Media persons are being threatened.

The whole of Tamilnadu united to raise the slogan “Go back Modi” with black flags. Tamilnadu is the oppositre pole of Hindutva fascism. And this fact angers the RSS and the BJP. Beginning with the Jallikkattu struggle, the anti-Tasmac, the anti-Neet struggles, the Cauvery Rights, the opposition to the Hydrocarbon and Methane extractions, to the Petro-Chemical zone, to the Neutrino project and the anti-Sterlite uprising, the resistance to the Eight-Lane Road – all these and other spontaneous struggles of the masses go to put a spanner in the Corporate wheel of exploitation.

The Modi Government is of the view that the only solution to the problems lies in repression. The Edappadi government being a mercenary is carrying out the writ of the former. Prime Minister Indhra Gandhi imposed emergency all of a sudden. But we are now being acclimatized and accustomed as daily affairs to the denial of the right to freedom of thought and expression, to the arrests, to media blackouts, to the assaults and murders by the RSS fascists and to all sorts of abuses of power. Let us unite to frustrate the Modi-Edappadi expectation of making us lose faith in carrying on the struggle, getting exhausted and tired due to fear of arrest and prison. Let us unite to falsify their hope of getting us accustomed to fascist tyranny and slavery. We will leave no stone unturned in our endeavor to make Tamilnadu stand in the forefront of the fight against corporate looting and RSS fascism, This is the bounden duty of the activists of all the parties and organizations who are concerned with the interests of the people.

MAKKAL ADHIKARAM, TAMILNADU  9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க